Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

நுரையீரல் புற்றுநோய்க்கு புதிய சிகிச்ச&a


Discussions on "நுரையீரல் புற்றுநோய்க்கு புதிய சிகிச்ச&a" in "General Health Problems" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  நுரையீரல் புற்றுநோய்க்கு புதிய சிகிச்ச&a

  நுரையீரல் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை!

  உடலில் உள்ள செல்கள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், இயல்புநிலைக்கு மாறாக வளரும் நிலையை புற்றுநோய் என்கிறோம். இது ஆரம்பத்தில் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு உருவாகி, நாளடைவில் விபரீத வளர்ச்சி அடைந்து, உயிருக்கே ஆபத்து தருமளவுக்குக் கொடூரமான நோயாக உருவெடுக்கிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் புதிதாக ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப் படுவதாக புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன.

  மரபுரீதியான காரணங்களால் முதுமையில் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுப்பது கடினம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் புகைப்பழக்கம், மதுப் பழக்கம், உடல் பருமன், நார்ச்சத்து குறைந்த மேற்கத்திய உணவுமுறை போன்ற காரணங்களால் ஏற்படும் புற்றுநோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது.
  ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இன்னமும் சாதாரண மக்களுக்கு முழுவதுமாக எட்டவில்லை என்பதால், பெரும்பாலானோர் புற்றுநோய் பாதிப்பின் இறுதிக்கட்டத்தில்தான் பரிசோதனைக்கும், சிகிச்சைக்கும் வருகின்றனர். இதனால், இதயநோய், நீரிழிவு நோய்க்கு அடுத்தபடியாக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

  இதில் நுரையீரல் புற்றுநோய்தான் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. உடலைப் பாதிப்பதிலும் சரி, உயிரிழப்பை ஏற்படுத்துவதிலும் சரி, இதுவே முதலிடம் வகிக்கிறது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் புகைப்பழக்கம்தான். இது தவிர, மாசடைந்த சூழலில் வசிப்பது, மாசு கலந்த காற்றைச் சுவாசிப்பது, சில வேதிப்பொருள்கள், கதிரியக்க ரேடான் வாயு என்று வேறு பல காரணங்களாலும் இது வரலாம்.

  வலது அல்லது இடது பக்க நுரையீரலில் ஏதாவது ஒரு பகுதி யில் சிறு கட்டியாக ஆரம்பிக்கும் இந்த நோயை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை பெறத் தவறினால், பெரிதாக வளர்ந்து, எல்லா பகுதிகளுக்கும் பரவுகிறது. நிணநீர்க்குழாய் மற்றும் ரத்தக் குழாய்கள் வழியாக உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி விடுகிறது. எலும்பு, மூளை, முதுகுத்தண்டுவடம் ஆகியவை இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்படும் முக்கிய உறுப்புகளாகும்.

  நோயின் ஆரம்பத்தில் கடுமையான இருமல் தொல்லை கொடுக்கும். இருமல் மாதக்கணக்கில் நீடிக்கும். இது சாதாரண சிகிச்சைகளுக்குக் கட்டுப்படாது. இதைத் தொடர்ந்து நெஞ்சு வலிக்கும். இருமலில் சளி வெளியேறும்; சளியில் ரத்தம் கலந்து வரும். பசி குறையும். உடல் எடை குறையும். மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகும். அதிக சோர்வு உடலை வாட்டும்.

  நெஞ்சுப்பகுதியை எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், பெட் ஸ்கேன் எடுத்துப் பார்ப்பதன் மூலம் நுரையீரல் புற்று பாதிப்பை அறிந்துகொள்ள முடியும். இந்த நோயில் பல வகைகளும் பல நிலைகளும் உள்ளன. எனவே, இது பாதித்துள்ள நுரையீரல் பகுதியிலிருந்து சிறு பகுதியை பயாப்சி எடுத்து திசுப் பரிசோதனை செய்து, நோய் வகை அறிந்து, நிலை அறிந்து, சிகிச்சை கொடுக்க வேண்டும். அப்போதுதான் சிகிச்சை முழுப் பலன் தரும்.

  இந்த நோய்க்கு அறுவை சிகிச்சை, ரேடியேஷன், கீமோதெரபி என மூன்று விதங்களில் சிகிச்சை தரப்படுகிறது. இந்த மூன்றிலுமே பல பக்க விளைவுகள் உண்டு. முக்கியமாக, ரத்த அணுக்கள் குறைந்து போவது, முடி கொட்டுவது, உடல் வெளிறிப்போவது, உணவுக் குழாய் அழற்சி, குமட்டல், வாந்தி, சாப்பிட முடியாத நிலைமை, சோர்வு போன்றவை நோயாளியைப் படுத்திவிடும். இதற்குப் பயந்து பல பேர் இதற்குரிய சிகிச்சையை முழுவதுமாக எடுத்துக்கொள்வதில்லை.

  இனி கவலை வேண்டாம். நுரையீரல் புற்றுநோய்க்கு பக்க விளைவுகள் இல்லாத புதிய சிகிச்சை முறை வந்துவிட்டது. ‘போட்டோ டைனமிக் தெரபி’ (Photodynamic therapy) இதுதான் இந்தப் புதிய சிகிச்சைமுறைக்குப் பெயர். லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் சாம் ஜேன்ஸ் என்பவர்தான் இந்த சிகிச்சைக்கு முதன்முதலில் பச்சைக்கொடி காட்டியுள்ளவர். அவர் சொல்கிறார்:

  ‘‘நுரையீரல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் 100 சதவீதம் குணப்படுத்தலாம். இதற்கு நாங்கள் கண்டுபிடித்துள்ள புதிய சிகிச்சை முறை மிகவும் பலன் தருகிறது. போர்ஃபைமர் சோடியம் (Porfimer sodium) எனும் போட்டோசென்சிட்டைசர் என்ற வேதிப்பொருள்தான் புற்றுநோயை அழிக்கின்ற ஆயுதம்.

  இதை நோயாளியின் சிரை ரத்தக்குழாய் வழியாக உடலுக்குள் செலுத்துவோம். இது உடலெங்கும் பரவிச் செல்லும். அடுத்த இரண்டு நாட்களில் உடலில் மற்ற செல்களில் பரவியிருக்கிற வேதிப்பொருள் எல்லாமே சிறுநீரில் வெளியேறிவிடும். ஆனால், நுரையீரலில் புற்று நோயுள்ள இடத்தில் மட்டும் இது நிரந்தரமாக தங்கிக்கொள்ளும்.

  இது புற்றுநோயை அழிக்கும் விதத்தை ஒரு தீக்குச்சிக்கு ஒப்பிடலாம். தீக்குச்சி பற்றி எரிய வேண்டுமானால் அதைத் தீப்பெட்டியில் உரச வேண்டுமல்லவா? அதுமாதிரிதான் இந்த வேதிப்பொருள் தானாக புற்றுநோய் செல்களை அழிக்காது. இதன் செயல்திறனை இன்னொரு பொருளால் தூண்ட வேண்டும்.

  அப்போதுதான் இது புற்றுநோய் செல்களை அழிக்கும். இதற்கு லேசர் கதிர்கள் பயன்படுகின்றன. பிராங்காஸ்கோப் கருவியை நுரையீரலுக்குள் செலுத்தி, அங்குள்ள புற்றுநோய்ப் பகுதியை மட்டும் குறிவைத்து அதிகபட்சமாக 40 நிமிடங்களுக்கு லேசர் கதிர்களைச் செலுத்துவோம்.

  அப்போது அங்குள்ள வேதிப் பொருள் லேசர் கதிர்களால் தூண்டப்பட்டு புற்று செல்களை அழிக்கத் தொடங்கும். இப்படி ஒரு வாரத்தில் புற்று செல்கள் எல்லாமே அழிக்கப்பட்டுவிடும். அதன் பிறகு பிராங்காஸ்கோப் கருவி கொண்டு அழிக்கப்பட்டிருந்த அந்த நுரையீரல் பகுதியை அகற்றிவிடுவோம்.

  நுரையீரல் புற்றுநோயைத் தவிர உணவுக்குழாய் புற்றுநோய், மூச்சுக்குழாய் புற்றுநோயையும் இந்த வழியில் குணப்படுத்த முடியும். இதற்கு வேறு எந்தப் பக்கவிளைவும் இல்லை. முன் எப்போதையும் விட நோயை முற்றிலும் குணப்படுத்த முடிகிறது. இந்தச் சிகிச்சைக்கு நோயாளியை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமும் இல்லை. வெளிநோயாளியாகவே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இதற்கான சிகிச்சை செலவும் குறைவு’’ என்கிறார் சாம் ஜேன்ஸ். ஆனாலும் இதுபோன்ற நோய்களை வருமுன் காக்கும் விதமாக, தீய பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது நல்லது!  டாக்டர் கு.கணேசன்


  Similar Threads:

  Sponsored Links
  Last edited by chan; 22nd Mar 2015 at 01:17 PM.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter