Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By chan

நகச்சுற்று - How to treat Naga Suthi?


Discussions on "நகச்சுற்று - How to treat Naga Suthi?" in "General Health Problems" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    நகச்சுற்று - How to treat Naga Suthi?

    அழுக்கில் தொடங்குது அசௌகரியம்!
    அறிவோம்
    நகச்சுற்றுக்கு அறிமுகம் தேவையில்லை... நம்மில் எல்லோரும் அந்தப் பிரச்னையை கடந்துதான் வந்திருப்போம். சூலாயுதத்தில் குத்தப்பட்டிருப்பது போல நகச்சுற்று ஏற்பட்டுள்ள விரல்களிலும் எலுமிச்சைப்பழத்தைக் குத்திக் கொள்வதே நாம் அறிந்த தீர்வு. விரல்களில் மருதாணி வைத்துக் கொள்ளுதல் கூட நகச்சுற்றைப் போக்கும் என்கிறது நாட்டு மருத்துவம்.





    நகச்சுற்று ஏன் வருகிறது? இதற்கு முறையான தீர்வு என்ன? எலுமிச்சைப்பழம் குத்துவது எதற்காக? இந்தக் கேள்விகளுக்கான தெளிவும் நம்மில் பலரிடம் இல்லை. அதை விளக்கும் முயற்சியாக தொற்றுநோய் மருத்துவர் ராமசுப்ரமணியத்தை அணுகினோம்...

    ‘‘நகத்தைச் சுற்றி ஏற்படும் பூஞ்சை மற்றும் கிருமித்தொற்றே நகச்சுற்று. இது ஏற்படும்போது நகத்தைச் சுற்றிலும் சீழ் கோர்த்து வலி ஏற்படுத்தும். நகம் வெட்டும் போது நகத்துக்கும் சதைக்கும் இடையில் இருக்கும் இணைப்புச் சதையில் ஏற்படும் சிதைவு நாள்பட நாள்பட நகச்சுற்றாக மாறிவிடும்.

    நகத்துக்கு வெளியே இருக்கும் பாக்டீரியா போன்ற கிருமிகள் உள்ளுக்குள் நுழைந்து விடுவதன் மூலம் கிருமித் தொற்றுக்கு ஆளாகும். அது நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக சீழ் கோர்க்க ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் நகச்சுற்றாக மாறிவிடுகிறது.

    நகச்சுற்று என்பது யாருக்கு வேண்டுமானாலும் எக்காலத்திலும் ஏற்படும் பொதுவான பிரச்னைதான். இதனால் பயப்படும் அளவுக்கு பெரிய பாதிப்புகள் இல்லையென்றாலும், விரல் வீக்கத்தினால் ஏற்படும் வலி நம் அன்றாட இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். அதனால், இப்பிரச்னை குறித்து அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

    நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சைப்பழம் குத்திக் கொள்கிற பழக்கம் பரவலாக இருக்கிறது. அப்படிக் குத்திக் கொள்வதன் மூலம் விரல்களில் வலி ஏற்படாமல் இருக்குமே தவிர, நிரந்தரத் தீர்வாக அமையாது. நகச்சுற்று ஏற்பட்டவுடன் சீழ் கோர்த்திருப்பதால் விரலில் வீக்கம் இருக்கும். நாம் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால், குறிப்பிட்ட காலத்தில் வீக்கம் வெடித்து சீழ் வெளியாகி விடும்.

    அந்த நிலைக்குச் செல்வதை விட மருத்துவத் தீர்வை நாடுவதே சிறந்தது. விரலில் இருக்கும் சீழை ஒட்டுமொத்தமாக வெளியேற்றி விடுதலே இதற்கான தீர்வு. சிலர் ஆன்டிபயாடிக் பயன்படுத்துவர். ஆனால், சீழை வெளியேற்றி விட்டாலே பிரச்னை முடிந்து விடும். அதைத் தாண்டிய சிகிச்சை எதுவும் தேவையில்லை.

    நகங்கள் வளரும்போது இடுக்குகளில் அழுக்குகள் தேங்க வாய்ப்பிருக்கிறது. அவ்வப்போது இணைப்புச் சதைக்கு பாதிப்பில்லாத வகையில் நகங்களை வெட்டிக் கொள்ள வேண்டும். பாக்டீரியா, பூஞ்சைகள் தேங்காத வண்ணம் அடிக்கடி கை கழுவி சுத்தமாக இருக்க வேண்டியது மிக அவசியம்...’’


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 23rd Mar 2015 at 01:40 PM.
    kkmathy likes this.

  2. #2
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: நகச்சுற்று - How to treat Naga Suthi?

    Very useful info, friend.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter