வலி நிவாரணிகள்
காலையில் பத்திரிகையில் படிக்கும் ஒவ்வொரு செய்தியிலும் நமக்கு ஒரு சிறிய தகவலோ அல்லது எச்சரிக்கையோ இருக்கும். அது யாருக்கோ நடந்தது, நமக்கு நடக்காது என்று நாம் மிகவும் முன்னெச்சரிக்கையாக இருப்பதாக நினைத்து அலட்சியப்படுத்துவோம்.

பேருந்துப் படிகளில் பயணம் செய்த மாணவன் விழுந்து இறந்து போன சம்பவத்தை படிக்கும் போது படிகளில் பயணம் செய்தால் கீழே விழுந்தோ அல்லது அடிபட்டோ இறந்து போகும் அபாயமுண்டு என்பதை செய்தியை வாசிக்கும் ஓவ்வொருவரும் உணர வேண்டும். ரயில் நிலையங்களிலோ, ரயிலை கடக்கும் போதோ, சிக்னலை கவனிக்காமல் செல்லும் ஒவ்வொருவருக்கும் மரணம் நிச்சயம் என்பதை அந்தந்த செய்திகள் உணர்த்தி இருக்க வேண்டும்.




குரோம்பேட்டையில் Combiflame என்ற வலி மருந்தை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக் கொண்ட நோயாளிக்கு உடல் முழுவதும் கொப்புளங்கள் ஏற்பட்டன. இது போன்ற பக்கவிளைவு, ஒவ்வாமை நமக்கும் ஏற்படலாம். எனவே, ஒவ்வாமை குறித்த கேள்விகளுக்கு மருத்துவமனையில் தவறாமல் சரியாக பதில் அளிக்க வேண்டும். வலி மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

2 ஆண்டுகளுக்கு முன் திருச்சியில் உயிர் இழந்த ஒருவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட கிட்னி (சிறுநீரகம்), சிறுநீரகக் கோளாறுடன் இருந்த இளம் நோயாளியின் உயிரை காப்பாற்றிய செய்தியைப் படித்திருப்பீர்கள்.

மாற்று சிறுநீரகம் பொருத்தி காப்பாற்றப்பட்ட இளம் நோயாளி முட்டி வலிக்காக தொடர்ந்து டைக்லோஃபினக் (Diclofenac) என்ற வலி மருந்தை மருத்துவரின் பரிந்துரையில்லாமல் உட்கொண்டதே காரணம் என்பதை எல்லோருக்கும் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும்.

நோயாளிக்கு வலி மருந்துகளால் சிறுநீரகம், ஈரல், மற்ற உறுப்புகள் பாதிக்கப்படவில்லை என்பதை முகத்தை, கால்களை, உடலை பார்த்தே சந்தேகப்படுவது... அதோடு, ரத்தப் பரிசோதனை (Clinical Diagnose)

மூலம் அவ்வப்போது வலி நிவாரணிகளாலும் மற்ற நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகளாலும் சிறுநீரகம், ஈரல், இரைப்பைக்கு ஏற்படும் பாதிப்புகளையும் பக்க விளைவுகளையும் மருத்துவர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.ழிஷிகிமிஞி (NON Steroidal Anti Inflammatory Drugs) எனப்படும் வலி நிவாரணிகள் எல்லாத் துறையை சேர்ந்த மருத்துவர்களாலும் அதிகம் எழுதப்படும் மருந்துகளில் ஒன்று. இந்த மருந்துகளே மருந்துக் கடைகளில் மருத்துவரின் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் மிக அதிகமாக (Schedule H) விற்பனை செய்யப்படுகின்றன.

வலி வந்த பிறகு எப்படியாவது அந்த வலியை போக்குவதற்கு யார் என்ன கொடுத்தாலும் சாப்பிட்டு வலியைப் போக்கிக் கொள்ள மட்டுமே தோன்றும். கொடுப்பவர் நவீன மருத்துவரா? நவீன மருந்தாளுனரா? மருந்துக் கடையில் மருந்து கொடுக்கும் கடைப் பையனின் கல்வித் தகுதி என்ன? இவையெல்லாம் வலிக்கும் போது தெரிவதில்லை. ஆனால், Indian drugs - Cosmetic Act படி(rules 65 - 97) இவை Schedule பி என்ற பிரிவின் கீழ் மருத்துவரின் பரிந்துரையின் கீழ் மருந்து சீட்டில் மட்டுமே தரப்பட வேண்டும்.

Prescription drugs
Diclofenac
Ibuprofen
Indomethacin
Naproxen
Nimesulide
Etodolac

இந்த மருந்துகள் சிறந்த வலி நிவாரணிகளாக இருந்தாலும் எடுத்ததற்கெல்லாம் சாதாரண களைப்புக்கெல்லாம் இவற்றை உட்கொள்ளக் கூடாது. அடிபட்ட, இடித்துக் கொண்ட, விழுந்து ஏற்படும் காயம், அசைக்க முடியாத கை, கால், இடுப்பு வலி, சுளுக்கு என நம் இயல்பான வாழ்க்கைக்கு தடையாக இருக்கும் இயலாமைக்கு மட்டுமேயான வலி மருந்துகளுக்கு கூட மருத்துவரை நாடுவது தான் சரி.

சராசரியாக பத்துக்கு நான்கு பேர் 30, 35 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் மருத்துவரை அணுகுவது காரணம் இல்லாத வலிகளுக்குத்தான். மன அழுத்தம், தாங்க முடியாத பொருளாதார பிரச்னைகள், உறவுகளுக்கு இடையிலான சச்சரவுகள் மற்றும் பூதாகரமாக்கப்பட்ட நாளைய பிரச்னைகளுக்கான பயம் போன்ற உள்ளுணர்வுகளும், உடல் வலியாக (Psychosomatic pain) உணரப்பட்டு சித்தரிக்கப்படுகின்றன.

உடல் வலி மருந்துகள் ஒவ்வொன்றுக்கும் என்று தனித்தனியாக ஒரு நாளுக்கான அளவுகள், உட்கொள்ளும் ஒரு வேளைக்கான அளவுகள் மருந்துக்கு மருந்து மாறுபடும். சில மருந்துகள் 50னீரீ இருக்கும். ஒரு வேளை அளவு (dosage) சில மருந்துகளுக்கு 400னீரீம் ஒரு சில மருந்துகளுக்கு 100mg எனவும் இருக்கும்.

வலி மருந்துகள் அனைத்தும் தனியாகவோ, பாரசிட்டமால் சேர்த்தோ தரப்படுகின்றன. அதனால், மருத்துவரிடம் ஓவர் டோஸ் கொடுக்க வேண்டாம் என்று கூறுவது போல் முட்டாள்தனம் இருக்க முடியாது. அந்தந்த மருந்துகளுக்கான டோஸில் மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருவதால் ஓவர் டோஸ் எழுத முடியாது.

வலி மருந்துகளை முக்கியமாக வெறும் வயிற்றில் தண்ணீர் இல்லாமல் உட்கொள்ளும் போது உணவுக்குழாய் புண்ணானால் நெஞ்சுகரிச்சலும், இரைப்பை புண்ணானால் வயிற்றுவலியும், புண் ஆழமானால் ரத்தக்கசிவும் ஏற்படலாம்.ஒரு வேளைக்கான, ஒரு நாளுக்கான வலி மருந்துகளை அளவைத் தாண்டி எடுத்துக் கொள்ளக் கூடாது. பல்வேறு வலி மருந்துகளை சேர்த்தும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

வலி மருந்துகள் எல்லா உறுப்புகளிலும் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். எந்த விளைவையும் ஏற்படுத்தாமல் ஒத்துக் கொள்ளும் பெரும்பாலானவர்களுக்கு பிரச்னை இல்லை. ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் ஈரல், சிறுநீரகம், நுரையீரல், உணவுக் குழாய், ரத்தம் மற்றும் தோல் என எல்லா உறுப்புகளிலுமே பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

வலி மருந்துகளுக்கு என்று மிக மோசமான பக்க விளைவுகள் உண்டு. முக்கியமாக வயிற்றுவலி, இரைப்பை புண், குடல் புண், தோல் அலர்ஜி மற்றும் உயிரைக் கொல்லக்கூடிய உடனடியாக மருத்துவ உதவியை நாடக்கூடிய ஷாக் (Anaphylactic shock) போன்ற பக்கவிளைவுகளும் வரலாம்.

மூச்சுத் திணறல் ஏற்படலாம். ஆனால், இது யாருக்கு ஒத்துக் கொள்ளவில்லையோ அவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆகவே முதல் முறை ஒவ்வாமை ஒரு மருந்துக்கு ஏற்படும் போது அந்த மருந்தின் ரசாயன பெயரை தெரிந்து எழுதி வாங்கி வைத்துக் கொள்வது, பிறகு மருத்துவரிடமோ, மருந்து ஆளுனரிடமோ, மருத்துவமனை சேவகர்களிடமோ, அதை மீண்டும் மீண்டும் கேட்கும் இடங்களில் எல்லாம் சொல்லுவது அவசியம்.

நோயாளிகள் மருந்தின் அலர்ஜி பற்றி தெரிந்தும் சொல்லாமல் விட்டால் அது நோயாளியின் தவறு. சொல்லியும் மருந்து தரப்பட்டால் தருபவர் மீது தவறு. தவறு யாருடையதாக இருந்தாலும் ஒவ்வாத மருந்தை மீண்டும் எடுத்துக் கொண்டால் நோயாளிகளுக்கு பக்க விளைவுகள் மிக மோசமாகலாம்.

வலி மருந்துகளை ரத்தக் கொதிப்பு மருந்துகளுடன் உட்கொள்ளும்போது ரத்தக் கொதிப்பை குறைக்கும் திறன் குறையும். இவ்விரு மருந்துகளுக்கும் இடைவெளி அவசியம்.வலி மருந்துகளை கர்ப்பிணிகளுக்குத் தரவே கூடாது. முதல் மூன்று மாதங்களுக்கு கர்ப்பிணி பெண்களுக்கு அவ்வாறு தரும்போது அன்னப்பிளவு (cleft plate) என்ற பிளவுற்ற மேல்தாடை நோய் குழந்தைகளுக்கு ஏற்படலாம். மருத்துவர்கள் இதில் கவனத்துடன் இருப்பார்கள்.

ஆனால், மற்றவர்கள் தரும்போது குழந்தைகளுக்கு வலி மருந்துகளில் சில மருந்துகளே பரிந்துரைக்கப்பட்டுள்ளன. முதியோருக்கு அதற்கு முன் ஒத்துக் கொண்ட வலி மருந்துகளை அதே அளவில் உட்கொண்டால்கூட கை, கால்களில் வீக்கம், முகத்தில் வீக்கம் என வருமானால் சிறுநீரகம், ஈரலும் பாதித்திருக்கின்றன என்று அர்த்தம். இதை மருத்துவரிடம் உடனடியாக தெரிவிப்பதும் வலி மருந்துகளை தவிர்ப்பதும் அவசியம்.

வலிக்கு நிவாரணம் கிடைத்து விட்டால் பலரும் மருத்துவரை அணுகுவதை தவிர்த்து விடுகிறார்கள். இதனால் சில தோல் கட்டிகள் மருந்துகளால் குணமாவதைத் தாண்டி அறுவை சிகிச்சை நோய்களாக மாறிவிடுகின்றன. நெஞ்சுவலி போன்ற நோய்களுக்கு வலிநிவாரணி எடுத்துக் கொண்டு மாரடைப்பு போன்ற மீள முடியாத இழப்புகளும் ஏற்படுகின்றன.

தோல் அலர்ஜி முதல் உறுப்புகள் செயல் இழப்பு வரை எதுவும் ஏற்படலாம். உடனடியாக மருத்துவரை அணுகுவது மிக மிக முக்கியம்.சுய மருத்துவம் செய்து கொள்ளும் போது வலி மருந்துகளால் வலி குணமடைந்து நிவாரணம் அடைந்தாலும் மருத்துவரை ஆலோசித்து வலிக்கான காரணங்களை தெரிந்து கொள்வது அவசியம்.அன்றாடம் உடற்பயிற்சி செய்தால் வலி நிவாரணிகளை தேட வேண்டியது இருக்காது. உணவால் வலி வராது... அன்றாட உடற்பயிற்சி இன்மையால் வலி வரும்.

கர்ப்பிணிகளுக்குவலி மருந்துகள் கொடுத்தால், அவர்களுக்கு அன்னப்பிளவுப் பிரச்னையுடன் குழந்தைகள் பிறக்கலாம்...

டாக்டர் மு.அருணாச்சலம்





Similar Threads: