Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree29Likes

Back pain/ache and remedies - முதுகுவலி!


Discussions on "Back pain/ache and remedies - முதுகுவலி!" in "General Health Problems" forum.


  1. #11
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Back pain/ache and remedies - முதுகுவலி!

    Thanks for the details


    Sponsored Links
    chan likes this.
    Jayanthy





  2. #12
    janu23 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    New Delhi
    Posts
    323

    Re: Back pain/ache and remedies - முதுகுவலி!

    Thanks for sharing such a great article on back pain, really valuable information about causes and precaution and the remedies.

    chan and Dangu like this.

  3. #13
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Back pain/ache and remedies - முதுகுவலி!

    Very useful suggestions.

    chan likes this.

  4. #14
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  5. #15
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Chennai
    Posts
    57

    Re: Back pain/ache and remedies - முதுகுவலி!

    Thanks for sharing the info

    chan likes this.

  6. #16
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Back pain/ache and remedies - முதுகுவலி!

    முதுகெலும்பைக் காக்க 10 வழிகள்
    மூளையும் மற்ற உறுப்புகளும் தகவல் தொடர்புகொள்வதற்கான பாதையாக இருப்பது முதுகுத் தண்டுவடம். முதுகெலும்புத் தொடர்களுக்கு மையத்தில் மிகப் பாதுகாப்பாக இந்தப் பாதை உள்ளது. இதில், இருந்து வரும் நரம்புகள், உடல் முழுவதும் பரவியுள்ளன. லட்சக்கணக்கானோர், இந்த முதுகெலும்புத் தொடரில் வரும் வலியால் அன்றாடம் அவதியுறுகின்றனர். முதுகு வலியிலிருந்து விடுபட்டு, உடலை ஆரோக்கியமாகவைத்துக்கொள்வதற்கான 10 வழிகள் இதோ...

    நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமரும்போது, முதுகுத் தண்டுவடத்தில் 40 சதவிகித அழுத்தம் ஏற்படுகிறது. எனவே அவ்வப்போது எழுந்து நடந்து முதுகெலும்புக்கு ஓய்வுகொடுக்க வேண்டும். நாற்காலியில் அமரும்போது முதுகின் அனைத்துப்பகுதிகளும், குறிப்பாக கீழ் முதுகு நாற்காலியில் படும்படி அமர வேண்டும்

    தினமும் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி, யோகா பயிற்சிகள் செய்யலாம்.

    முதுகெலும்புத் தசையைத் தளர்வாக்கி, உறுதிப்படுத்தும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள், முதுகெலும்பை வலுப்படுத்தும் பயிற்சிகள் செய்ய வேண்டும்.

    பெண்களுக்கு முதுகு வலி ஏற்பட, ஹை ஹீல்ஸ் ஒரு முக்கியக் காரணம். ஹை ஹீல்ஸ் அணியும்போது, அது முன்னங்காலில் அழுத்தத்தை ஏற்படுத்தி முதுகெலும்பைப் பாதிக்கிறது.

    அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்கும்போது கவனம் தேவை. நின்றபடியே முதுகை வளைத்துத் தூக்கினால், முதுகெலும்பு பாதிக்கப்படும். எடையுள்ள பொருட்களைத் தூக்கும் முன், அதன் அருகில் சென்று, முட்டியைக் கொஞ்சம் மடக்கி, முதுகை நேராகவைத்து, தூக்க வேண்டும்.

    அதிக எடைகொண்ட பொருளை, பையை ஒரு கையில் மட்டும் அல்லது ஒரு பக்க தோளில் மாட்டித் தூக்கிச் செல்வதும் தவறு. 10 கிலோ எடை கொண்டதாக இருந்தால், ஐந்து, ஐந்து கிலோவாகப் பிரித்து இரண்டு கைகளில் தூக்கிச் செல்ல வேண்டும்.

    மிகவும் கடினமான அல்லது மிகவும் மென்மையான மெத்தைக்குப் பதில், நடுத்தரமான அளவு மென்மையான மெத்தையில் படுக்க வேண்டும்.

    உடல் எடையைக் கட்டுக்குள்வைத்து, எப்போதும் துடிப்பான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவது, முதுகு வலி வருவதைத் தவிர்க்கும்.

    அதிக உடல் எடை, தொப்பை இருந்தால், அதிக அழுத்தத்தால் கீழ் முதுகு வலி வரக்கூடும்.

    போதுமான அளவு நீர் அருந்துவது முதுகெலும்பைப் பாதுகாக்கும்.

    முதுகெலும்புத் தொடரில் உள்ள டிஸ்க் மற்றும் மென்மையான திசுக்களுக்கு நீர்ச்சத்து அவசியம். உடலில் நீர்ச்சத்து குறையும்போது டிஸ்க்குகளின் அளவு சுருங்கி, பாதிப்பை ஏற்படுத்தும்.

    வலியைப் புறக்கணிக்கக் கூடாது. எப்போதாவது ஒரு முறை முதுகு வலி வந்தால், பிரச்னை இல்லை. நான்கைந்து நாட்களுக்கு நீடித்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். வலியைப் பொறுத்துக்கொண்டு இருந்தால், முதுகு வலி மேலும் அதிகரிக்கும்.




  7. #17
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Back pain/ache and remedies - முதுகுவலி!

    முதுகுவலி தவிர்க்க 6 வழிகள்!

    நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள், குறிப்பாக கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து வேலை செய்பவர்கள் சந்திக்கும் முக்கியப் பிரச்னை முதுகுவலி. சரியான முறையில் அமர்ந்து வேலை செய்தால், முதுகுவலியைத் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

    தலையை நேராக வைக்க வேண்டும்
    கணிப்பொறியின் திரைக்குச் சரியான உயரத்தில் தலை (பார்வை) இருக்க வேண்டும். தலையை உயர்த்தியோ, தாழ்த்தியோ, திரையைப் பார்க்குமாறு உட்காரக் கூடாது. எனவே, அதற்கேற்ற வகையில் மேசையும் சாய்வு நாற்காலியும் இருக்க வேண்டும். கழுத்துக்கு அழுத்தம் தருவது முதுகுவலிக்குக் காரணமாகிவிடும்.

    சற்று சாய்ந்து உட்காருவது சிறப்பு
    நாற்காலி 110 டிகிரி அளவுக்குச் சாய்வாக இருக்கட்டும். இருக்கைக்கு ஏற்றவாறு, இடுப்புக்கு அழுத்தம் தராமல் சற்று சாய்ந்து உட்கார வேண்டும். கணிப்பொறி இருக்கும் பக்கம் முன்னோக்கி சாய்வதோ, அளவுக்கு அதிகமாகப் பின்நோக்கிச் சாய்வதோ கூடாது.

    பிரத்யேக சாய்வு நாற்காலியைப் பயன்படுத்த வேண்டும்
    கணிப்பொறியில் அமர்வதற்கு ஏற்ற, பிரத்யேக சாய்வு நாற்காலி (Computer chair) இருக்க வேண்டும். எழுதுவதற்கு, சாப்பிடுவதற்கு என மற்ற செயல்களுக்கு இந்த நாற்காலியைப் பயன்படுத்தக் கூடாது. மேசையின் உயரத்துக்கும் உங்களின் உயரத்துக்கும் ஏற்றவாறு அட்ஜஸ்ட் செய்யயும் வசதியுள்ள சாய்வு நாற்காலிகளைப் பயன்படுத்த வேண்டும். உடல் எடைக்குத் தகுந்த, முதுகைக் குறிப்பாக கீழ்முதுகைத் தாங்குவது போன்ற நாற்காலியைத் தேர்வு செய்வது அவசியம்.

    கைப்பிடிகளைப் பயன்படுத்த வேண்டும்
    நாற்காலியில் இருக்கும் கைப்பிடியின் மேல் கைகளை வைக்க வேண்டும். கைப்பிடிகளின் உயரத்துக்கு இணையாக, விசைப்பலகை (கீபோர்டு) இருக்க வேண்டும். கைப்பிடிக்கு உயரமாகவோ அல்லது கைப்பிடிக்கு கீழாகவோ விசைப்பலகை இருக்கக் கூடாது.

    தொடைகளுக்குப் பக்கபலம் அவசியம்
    நாற்காலியின் நுனியில் உட்காரக் கூடாது. தொடைகள் முழுவதுமாக நாற்காலியில் இருக்குமாறு அமர வேண்டும். தொடைகளைத் தொங்கப்போடக் கூடாது. தரைக்கு இணையாக தொடைகள் இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

    பாதங்களைத் தொங்கவிடக் கூடாது
    பாதங்கள் படத்தில் காட்டியுள்ளபடி சாய்வாக இருக்க வேண்டும். பாதங்கள் தொடைக்கு செங்குத்தாகவோ, கெண்டைக்காலை மடக்கி உள் இழுத்தோ வைக்கக் கூடாது. பாதங்கள் மற்றும் கெண்டைக்கால் சரியான நிலையில் இல்லை எனில், இடுப்புப் பகுதியில் அழுத்தம் ஏற்படும்.


  8. #18
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    முதுகுவலிக்கு முற்றுப்புள்ளி

    முதுகுவலிக்கு முற்றுப்புள்ளி !

    அதிகாலையில், அலாரம் வைத்து எழுந்து, அவசர அவசரமாகச் சமையல் முடித்து, குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கும்... கணவரை அலுவலகத்துக்கும் அனுப்பிவிட்டு, அரக்கப் பரக்க தனது அலுவலகத்துக்குக் கிளம்பிப் போய்ச் சேர்வதற்குள்ளாகவே... ஒருநாள் முழுமைக்குமான வேலைப் பளுவை அனுபவித்து விடுகிறாள் பெண்! அதன்பிறகும் அலுவலகத்தில் எட்டு மணிநேரம் சுற்றிச் சுழல்பவள்... மாலையில் வீடு திரும்பியதும் வீட்டைச் சுத்தம் செய்வது, இரவு சாப்பாடு தயாரிப்பது... என்று எல்லாம் முடித்து, 'அப்பாடா’ என்று படுக்கையில் சாயும்போதுதான் முதுகுவலி முறுக்கி எடுக்கும்!

    'ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரையும் முதுகுவலி வாட்டி எடுத்தாலும்... பெரும்பாலும் அதிக வலியால் அவதிப்படுவது பெண்கள்தான்’ என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.

    'இதிலிருந்து தப்பிக்க என்ன வழி?' என்று தேடுபவர்களுக்காக பல்வேறு தகவல்களை இங்கே விளக்குகிறார் சென்னை எலும்பு மூட்டு நிபுணர் டாக்டர் எம்.பார்த்தசாரதி.

    ''மருத்துவ ரீதியாக முதுகுத்தண்டின் கீழ்ப்பகுதியில் ஏற்படும் வலியைத்தான் முதுகுவலி என்கிறோம். இந்த வலியைப் பற்றி தெரிந்து கொள்வதற்குமுன் முதுகெலும்பைப் பற்றிய அடிப்படை விஷயங்களைப் பார்ப்போம். பிற உயிரினங்களிடமிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவதும், அவன் நிமிர்ந்து நிற்க உதவுவதும் முதுகெலும்புதான்.

    இது ஒரு தனி எலும்பு கிடையாது. 33-எலும்புகள், தசைகள், தசை நார்கள், நாண்கள், தண்டுவடம் இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து மிகவும் நேர்த்தியுடன் அமைந்த ஒரு சங்கிலித் தொடர்! உடலின் பல பகுதிகளில் இருக்கும் முதுகெலும்பைச் சார்ந்த நரம்புகள், உணர்ச்சிகளை தண்டுவடம் மூலமாக மூளைக்கு எடுத்து செல்கின்றன.

    நேராக நிமிர்ந்து நிற்பது, வளைவது, நெளிவது போன்ற செய்கைகளைச் சிறப்பாகச் செய்வதற்கு, முதுகெலும்பைச் சார்ந்த தசை, நார், ஜவ்வுகளே காரணம். இந்த ஜவ்வு, நரம்பு, எலும்புகளில் ஏற்படுகிற சின்னச் சின்னப் பிரச்னைகளால்தான் முதுகுவலியும் உண்டா கிறது.



    முன்பெல்லாம் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் பெரும்பாலும் முதுகுவலி நோயாளிகளாக இருப்பார்கள். அந்தக் காலம் மலையேறி, இப்போது 20 வயது நிரம்பாத பெண்களும்கூட முதுகுவலியால் அவதிப்படுகின்றனர். ஹை ஹீல்ஸ் எனப்படும் குதிகால் செருப்புகள் அணிவதால் பின்புற எடை முன்னோக்கித் தள்ளப்படுகிறது.

    இந்த எடையை பேலன்ஸ் செய்தபடியே ஒழுங்கற்று நடப்பதாலும் பெண்களுக்கு முதுகுவலி ஏற்படலாம். முதுகுவலிக்கும் உடல் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் முதுகுவலி வரலாம். உடலின் நடுப் பகுதியில் எடை அதிகரிப்பதால், முதுகுத் தண்டு வடத்தில் வலி உண்டாகும். கர்ப்பக் காலத்தில் பல பெண்களுக்கு முதுகுவலி வருவதற்கு இதுவே காரணம்.

    முதுகெலும்புகளுக்கு நடுவில், ஜெல்லி போன்ற பிசுபிசுப்பு திசுக்களால் ஆன ஜவ்வுகள் அமைந்திருக்கும்.

    எலும்புகள் உராய்வதைத் தடுக்க உதவும் இந்த ஜவ்வுகள், நாளடைவில் தேய்ந்து நரம்புகள் விலகுவதாலும் முதுகு வலி ஏற்படும். சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளாமல் போவதாலும்கூட எலும்புகள் விரைவில் தேய்மானம் அடைந்து, முதுகு வலியை உண்டாக்கும். சட்டென குனிந்து அதிகமான எடையைத் தம் கட்டித் தூக்க முயலும்போது முதுகெலும்பை நிலை நிறுத்தியுள்ள தசைகள் போதிய இணக்கத்தைத் தர தவறிவிடுகின்றன. இதனாலும் வலி ஏற்படலாம். தைலம், களிம்பு தடவுவது தற்காலிகத் தீர்வைத்தான் கொடுக்கும்.

    முதுகுத் தண்டுவடத்தின் கீழ் பாகத்தில், ஏதேனும் பிரச்னை இருந்தால் தொடையிலிருந்து கால் வரை கொக்கி போட்டு இழுப்பது போன்ற வலி உணர்வு ஏற்படும். இந்த வலி கணுக்கால் வரையிலும் பரவும். முதுகை லேசாகத் திருப்பினாலோ, குனிந்து வேலை செய்தாலோ வலி அதிகமாகும்

    .
    'ஸயாடிகா’ (Sciatica) என்னும் இந்த வலி... தும்மல், இருமல் வரும்போது இன்னும் அதிகரிக்கும்'' என்றெல்லாம் விளக்கங்கள் தந்த டாக்டர் பார்த்தசாரதி, அடுத்து சிகிச்சை ஏரியாவுக்குள் நுழைந்தார்.

    ''மாத்திரைகள், பிசியோதெரபி மூலமாக இந்த வலியைக் குறைக்க முடியும். லேசான வலி இருந்தால் 'எபிடியுரல் ஸ்டீராய்ட்’ (Epidural steroid) எனும் ஊசி மருந்தை செலுத்தி கால் வலியைக் குறைக்க முடியும். உடம்பில் தேவை இல்லாமல் இருக்கும் ஊளைச் சதையை குறைத்தாலே சிலருக்கு முதுகுவலி தானாகவே சரியாகி விடும். வலி மிகவும் அதிகமாக இருந்தால்... முதலில் எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பது நல்லது. அதிலும் தெளிவாகவில்லையெனில், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்யவேண்டும்.

    இதில், முதுகெலும்புகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு விலகி இருந்தாலோ, நரம்புகள் வெளியேறும் துவாரம் நெருக்கப்பட்டிருந்தாலோ எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். அதன்பிறகு, முதுகெலும்பில் இருந்து குறிப்பிட்ட அந்த நரம்பு வெளியேறும் துவாரத்தை அடைத்திருக் கும் திசுக்களை அகற்றி, துவாரத்தை சற்று பெரிதாக்குவதன் மூலம் கால் மற்றும் இடுப்புப் பகுதியில் ஏற்படும் வலியை முற்றிலும் குறைக்க முடியும்'' என்று முதுகுவலிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் டாக்டர் பார்த்தசாரதி!


    வலியைக் குறைக்க வழி!
    கம்ப்யூட்டர், டி.வி-யின் முன்பு முதுகை வளைத்த நிலையில் மணிக்கணக்கில் உட்காருவதை தவிர்க்கவும். ஒரே இடத்தில் தொடர்ந்து உட்காரும்போது, முதுகெலும்பை தாங்கும் தசைகள் பலவீனமாக வாய்ப்பு இருக்கிறது. இடையிடையே எழுந்து செல்வது நல்லது.

    சேரில் உட்காரும்போது முதுகின் பின்புறம் சிறிய தலையணையை வைத்துக் கொள்ளலாம்.

    முதுகெலும்பை ஒரே நேராக வைத்திருப்பது போல் படுக்கை அமைந்திருக்க வேண்டும்.

    சக்திக்கு மீறிய சுமைகளைத் தூக்குவது, இறக்குவதைக் கட்டாயம் தவிர்க்கவும்.

    மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே எளிய பயிற்சிகளை செய்து முதுகுவலியைப் போக்க முயற்சிக்கலாம்.


    Last edited by chan; 20th Sep 2015 at 01:56 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter