பிராங்கைடீஸ்

பிராங்கைல் குழல்கள் மூச்சுக் கிளைக் குழாய்கள். இவை மூச்சுக்குழாயிலிருந்து இரண்டு கிளைகளாக பிரிகின்றன. ஒரு கிளை வலப்புற நுரையீரலுக்கும் மற்றொன்று இடப்புற நுரையீரலுக்குமாக செல்கின்றன. பிராங்கைல் குழல்கள் நுரையீரலுக்கு காற்றை எடுத்துச் செல்லும் வழிப்பாதைகளில் தொற்றாலோ, ஏதாவது தூசியினால் (அ) மாதுபடிந்த காற்றினாலோ பிராங்கை குழாய்கள் பாதிக்கப்படுவது பிராங்கைடீஸ் (Bronchitis) எனப்படும்.




பிராங்கை குழல்கள் விரிவடைந்து, திடமான கெட்டியான சளி உண்டாகும். மூச்சுவிடுவது கடினமாகும். இந்த பாதிப்புகள் 90 நாட்களுக்கு மேல் நீடித்தால் அது தீவிர ப்ராங்கைடீஸ் (Acute Bronchitis) எனப்படும். குளிர்காலத்தில் தொற்று பிராங்கைடீஸ் அதிகம் ஏற்படும். வைரஸ்களால் ஏற்படும் தொற்றை குணப்படுத்தினாலும், அதன் பாதிப்பு பல நாள் நீடிக்கும். வைரஸ் போதாதென்று பாக்டீரியாவும் பிராங்கைடீஸை உண்டாக்கும்.

காரணங்கள்

மாசு படிந்த சுற்றுப்புற சூழ்நிலை, தூசி குளிர்காலத்தில் அதிகம் நேரிடும். பாக்டீரியா, தொற்றுMycoplasma, Pneumoniae, Chlamytin நுண்ணுயிர்களால் இளைஞர்களை தாக்கும். பாக்டீரியாக்கள் பிராங்கைடீஸை உண்டாக்கும். வைரஸ் கிருமி இன்ப்ளூயன்சா வைரஸ். சிலருக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்கம் இரண்டும் சேர்ந்தே இருக்கும்.

புகை பிடிப்பவர்களுக்கும், பலவீனமான நுரையீரல் உள்ளவர்களுக்கும், மார்புச்சளி லேசில் குறையாது.

ஊட்டச்சத்து குறைபாடு சுவாச கோளாறுகளை உண்டாக்கும். குறிப்பாக குழந்தைகளும் வயோதிகர்களுக்கும் சுலபமாக பாதிக்கப்படுவார்கள்.

நாள்பட்ட சைனஸ் தொற்று, ஒவ்வாமைகள், ப்ராங்கைடீஸை தூண்டி விடும்.
அமிலங்கள், அம்மோனியா, அமிலங்கள், குளோரின், சல்ஃபர் டை ஆக்சைட், ஹைட்ரஜன் சல்ஃபட், ப்ரோமைன் போன்ற ரசாயனங்கள் எரிச்சலை உண்டாக்கி, அழற்சி ப்ராங்கைடீஸை ஏற்படுத்தும்.

கடுங்குளிர், தவறான உணவுப் பழக்கம், குளிர்காலத்தில் அதிகமாக வெண்ணிற உணவுகள் வெள்ளை ப்ரெட், மைதா, மாமிசம், சர்க்கரை முதலியவற்றை உண்பதும் பிராங்கைடீஸை உண்டாக்கலாம்.

தீவிரமான ப்ராங்கைடீஸ் பெரும்பாலும் வைரஸ்களால் உண்டாகின்றன. அதுவும் ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸ்களே ப்ராங்கைட்டீஸையும் உண்டாக்கலாம்.

ஆயுர்வேத காரணங்கள்

வாததோஷம் கபத்தால் பாதிக்கப்படும் போது சுவாசம் கோளாறாகிறது. சுவாச மண்டல ஸ்ரோதாவான உடல் நாளங்கள் ஸ்ரோதா எனப்படும் பிராணவாஹா ஸ்ரோதா, வளர்சிதை மாற்ற ஸ்ரோதவான அம்புவாக ஸ்ரோதா மற்றும் வயிற்றில் ஸ்ரோதாவான அன்னவாக ஸ்ரோதாவும் சீர்குலைகின்றன.

கப சீர்கேட்டால் சுவாச மண்டலத்தின் உள்ளும் வெளியும் காற்று பயணிப்பது தடை பெறுகிறது.

கிலேடக கபத்தின் இருப்பிடமான வயிற்றில் கபம் சேர்ந்து சுவாச மண்டலத்தில் பரவுகிறது. பரவி காற்றுப் சுவாசப் பாதையை அடைக்கிறது. கெட்டியான பாகு போன்ற கபம், மூச்சுக்கிளை குழல்களில் (Bronchi) படர்ந்து விடுகிறது.

இதை விலக்குவது கடினம். கெட்டியான சளி மூச்சுக் குழல்களில் ஒட்டிக் கொண்டிருப்பதால், சுவாசிப்பது சிரமமாகிறது. நுரையீரல் காற்றுக்காக திணறுகிறது.

அறிகுறிகள்



தொற்றினால் ஏற்படும் பிராங்கைடீஸ், சாதாரண ஜலதோஷத்தை போலவே, மூக்கில் ஒழுகுதல், தொண்டைப்புண், குளிர், களைப்பு, முதுகு, உடல் தசைவலிகளுடன் ஆரம்பமாகிறது. லேசான ஜுரம் இருக்கலாம். இருமல் ஆரம்பிக்கும் போது பிராங்கைடீஸ் வந்து விட்டதின் அறிகுறி.

இருமலும் வெள்ளையான சளி வந்தால் வைரஸ் ப்ராங்கைட்டீஸாக இருக்கலாம். சளி (கபம்) பச்சை (அ) மஞ்சள் நிறமாக இருந்தால் பாக்டீரியா தொற்று காரணமாகும்.

தீவிர அழற்சியில் ஜுரம் 101 (அ) 102 டிகிரி தி வரை போகும். ஆன்டி பையாடிக் கொடுத்தும் 3 லிருந்து 5 நாட்கள் நீடிக்கும். மற்ற அறிகுறிகள் மறைந்த பின் கடைசியாக நீங்குவது இருமல் தான். அதுவும் பல வாரங்கள் கழித்து மறையும்.

இரைப்பு

மூச்சு விட சிரமம்.

களைப்பு, ஆயாசம்.

ஜுரம், மார்பில் அசௌகரியம்.

டாக்டரை அணுக வேண்டிய தருணம்
ஒரு மாதத்துக்கு மேல் அறிகுறிகள் (குறிப்பாக இரைப்பு, இருமல்) நீடித்தால்
இருமலுடன் ரத்தம் வந்தால்
படுத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டால்
கால்கள் வீங்கினால்

Similar Threads: