Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree97Likes

Heart Care- இதயத்தை காப்போம்


Discussions on "Heart Care- இதயத்தை காப்போம்" in "General Health Problems" forum.


  1. #11
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Heart Care- இதயத்தை காப்போம்

    இதய துடிப்பை சீராக்கும் கிவி பழம்




    கிவி பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும். மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கிவி பழம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது. இந்த பழத்திற்கு சீனத்து நெல்லிக்கனி என்றொரு பெயரும் உண்டு. கிவி பழத்தின் தோல் பச்சை நிறத்துடனும், பழத்தின் உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும். இதை கேக் மீது அழகுக்காக வைத்திருப்பதை நாம் பார்த்து இருப்போம்.

    கிவி பழத்தில் ஏராளமான மினரல்கள், விட்டமின் சத்துக்கள் உள்ளன. சிட்ரஸ் ரக பழ வகையை சார்ந்த கிவி பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ அதிகம். இது தோல் நோய்கள், இதயநோய், புற்றுநோய், உடல் பருமன் போன்ற நோய்கள் தாக்காமல் இருக்க வைட்டமின் சியை பயன்படுகிறது. கிவி பழத்தில் உள்ள நார்சத்துகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுபடுத்துவதால் டயாபடீஸ் நோய் குணமாகும். மேலும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சிறைப்பு, சளி போன்றவற்றிலிருந்து கிவி பழம் பாதுகாக்கும்.

    கிவி பழமானது குறைந்த அளவு கொழுப்பு சத்துகளை கொண்டுள்ளதால் எடை குறைக்க விரும்புபவர்கள் கிவி பழத்தை சாப்பிடலாம். விட்டமின் ‘சி’ யை அதிக அளவில் கொண்டுள்ள கிவி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது. நமது உடலில் கட்டுப்பாடு இல்லாமல் திரியும் ‘ரேடிக்கிள்கள்’தான் பல்வகையான சிதைவு நோய்களுக்கும், செல்களின் சிதைவிற்கும் அடிப்படைக் காரணங்களாக அமைகிறது. இத்தகைய ரேடிக்கிள்களின் வன்தன்மையை அழித்து நோயின்றி நம்மை காக்கும் ஆற்றல் கிவி பழத்திற்கு உள்ளது.

    முதுமைக் காலத்தில் ஏற்படக்கூடிய கண் புரை, விழித்திரை சிதைவு, கண் நோய்களைத் தடுக்க தேவையான அளவு வைட்டமின் சி சத்துகளை கொண்டுள்ளதால் முதுமையில் இந்நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இதயத்துடிப்பின் சீரற்ற நிலையை தடுத்து சீரான இயக்கத்திற்கு உதவி புரிகிறது. உடலில் பொட்டாசியத்தின் அளவானது குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி பழத்தில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

    மாரடைப்பிற்கு முன்னர் ஏற்படக்கூடிய நோய்களில் முக்கியமானது இரத்தக் குழாய்களிலுள்ள இரத்த சிவப்பணுக்கள், தட்டகங்கள் இவை யாவும் ஒன்றாகக் குழுமி, கட்டியாக அடைப்பாக மாறி, இதய தமணிகளில் இரத்தம் சீராக செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்பிற்கு (Heart Attack) வழிவகுக்கின்றது. இதய தமணிகளில் இரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் ‘கிவி’ பழத்திற்கு உண்டு. வளரும் இளம் குழந்தைகளுக்கு கிவி பழத்தை சாப்பிடக்கொடுத்தால் மூளை நன்கு வளர்ச்சியடையும்.

    ‘ஃபோலேட்(FOLATE) என்ற சத்தும், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற பழங்களை விட மிகவும் அதிகமான அளவில் கிவி பழத்தில் உள்ளது. இத்தகைய சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சிறந்த பழமாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.



    Sponsored Links
    Last edited by chan; 4th May 2015 at 10:50 AM.
    jv_66 and Dangu like this.

  2. #12
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    Wonderful informations.

    chan and Dangu like this.
    Jayanthy





  3. #13
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    உடல்நலத்தை அறிய உதவும் நாடித்துடிப்பு



    நமது உடலின் இயக்கத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது இதயமே. ஆதலால் நமது இதயத்தின் துடிப்பை, உடலின் பல்வேறு பாகங்களிலும் நன்கு உணர்ந்துகொள்ளமுடியும். ஆனால் நம்மில் பலருக்கு தெரிந்திருப்பது துடிப்பை மணிக்கட்டில் மட்டும் தான் உணர முடியும் என்று. ஆனால் அந்த துடிப்பை கழுத்து மற்றும், கால்களில் கூட உணர முடியும். இப்போது உடலில் உள்ள நாடித்துடிப்பு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ துடித்தால், உடலில் ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். சொல்லப்போனால், உடலில் ஏதேனும் ஒரு நோய் ஏற்பட்டாலும், மருத்துவர்களிடம் சென்றால், அவர்கள் முதலில் அந்த துடிப்பை பார்த்து தான் மற்ற முடிவுகளை எடுப்பார்கள்.

    துடிப்பின் அளவை எவ்வாறு அறியலாம்

    ஒரு ஆரோக்கியமான உடல்நிலைக் கொண்ட இளைஞனுக்கு ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும். ஆனால் அந்த துடிப்பு, பாலினம், வாழ்க்கை முறையை பொறுத்து மாறுபடும். ஒரு விளையாட்டு வீரர் என்றால் அவர்களுக்கு நிமிடத்திற்கு 50 முதல் 60 வரை துடிக்கும். கைக்குழந்தைகளுக்கு அதிகமாக 100 முதல் 160 வரையில் துடிக்கும். சிறு குழந்தைகளுக்கு 100 முதல் 120 வரை துடிக்கும். சற்று பெரிய குழந்தைகள் என்றால் 70 முதல் 80 வரை துடிக்கும். ஆனால் இயற்கையாகவே சாப்பிடும் போது, உடற்பயிற்சி செய்யும் போதெல்லாம் நாடித்துடிப்புகள் அதிகரிப்பதை நாம் உணர்ந்திருப்போம்..

    அதிகமான எடை இருந்தால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். மேலும் உடலில் அதிக அளவு கொழுப்புக்கள் சேர்வதால், இதயத்திற்கு அதிக அளவு அழுத்தம் ஏற்படும். இதனால் அவர்களால் சரியாக மூச்சு விட முடியாத அளவு போய்விடும். அதனால் தான் குண்டாக இருப்பவர்களுக்கு விரைவில் இதய நோய் வந்துவிடுகிறது.

    கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு நாடித்துடிப்புகள் ஒரு நிமிடத்திற்கு 150 துடிப்புகள் ஏற்படும். பழைய காலத்தில் எல்லாம் கர்ப்பமாக இருக்கிறார்களா என்று அறிய எந்த ஒரு டெஸ்ட்களும் இருக்காது. அப்போது அவர்கள் நாடித்துடிப்பை வைத்து தான் கர்ப்பத்தை அறிவார்கள். ஏனெனில் அந்த நேரத்தில் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரிக்கும். மேலும் இதயம் உடல் முழுவதும் இரத்தத்தை செலுத்துவதற்கு சற்று கடினமாக வேலை செய்யும். இது மிகவும் சாதாரணமானது தான். இருப்பினும் கர்ப்பமாக இருக்கும் போது இரத்த அழுத்தத்தை அறிய வேண்டும்.

    உடலில் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், மருத்துவர்கள் புகை பிடிப்பதை நிறுத்த சொல்வார்கள். ஏனெனில் அதில் இருக்கும் நிக்கோட்டின் மற்றும் புகையிலை, இதயத்துடிப்பை அதிகரிக்கும். இதனால் உடலில் சாதாரணமாக இருக்கும் இரத்த அழுத்தம், இதைப் பிடிப்பதால், நாடித்துடிப்புகள் மிகவும் அதிகரிக்கும்.


    pet and Dangu like this.

  4. #14
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    ஆபீசில் டென்ஷன் கூடினால் ஹார்ட் அட்டாக் வரும் அபாயம்



    அலுவலகத்தில் மன அழுத்தம் நீடித்தால் உடலில் கெட்ட கொழுப்புச்சத்தின் அளவு அதிகரித்து இதய நோயால் இறக்க நேரிடும் என்று ஒர் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் மலாகா நகரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையும், சான்டியாகோ கம்போஸ்டெலா பல்கலைக்கழகமும் இணைந்து சமீபத்தில் ஓர் ஆய்வை மேற்கொண்டன.

    பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றும் 90 ஆயிரம் ஊழியர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அன்றாட அலுவலக சூழ்நிலையால் மன அழுத்தம் கூடியுள்ளதாகவும், அலுவலகம் சென்று வருவதே மன சுமையை ஏற்படுத்துவதாகவும் 7,800 பேர் கூறினர். அவர்களிடம் ரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்டிரால் ஆகியவை அளவிடப்பட்டன. ஆய்வு முடிவுகள் குறித்து தொழில்சார் மன அழுத்தங்கள் ஆராய்ச்சியாளரும், பிரபல மனநல மருத்துவருமான கார்லஸ் கேடலினா கூறியது:

    அலுவலகத்தில் மன உளைச்சல், மன அழுத்தம் ஏற்படும்போது, உடலில் வளர்ச்சிதை மாற்றங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. ரத்தத்தில் கெட்ட கொழுப்புச்சத்து, லிப்போ புரோட்டின் அளவுகள் அதிகரிக்கின்றன. எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பு சத்து இதயத்துக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுத்து விடும் தன்மை கொண்டது. சாதாரண அளவிலான கெட்ட கொழுப்புச்சத்தை தானாகவே ஒழிக்கக்கூடிய திறன் உடலுக்கு உள்ளது. ஆனால், அது அளவு மீறுகிறபோது பாதிப்பு ஏற்படுகிறது. இவ்வாறு கார்லஸ் கேடலினா கூறினார்.


    pet and Dangu like this.

  5. #15
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    Very very informative. Thanks Lakshmi. Continue this thread with more & more information.

    chan likes this.

  6. #16
    pet
    pet is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    cochin
    Posts
    303

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    Nice information. Thanks for sharing.

    chan likes this.

  7. #17
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    இதயத்துக்கு ஈசி எக்ஸ்ட்ரா டிப்ஸ்



    * வேக வைக்கப்பட்ட உணவே எப்போதும் இதயத்துக்கு நல்லது. கொழுப்பு, உப்புச் சத்துள்ள உணவுப்பொருட்கள் ஆகாது.

    * மாதுளம் பழச்சாறு கொழுப்பைக் குறைக்கும் என்பதால் அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம். உலர் கொத்தமல்லி, சீரகத்தைக் கலந்து பொடி செய்து சாப்பிடும்போதும் கொழுப்பு சேர்வது தடுக்கப்படுகிறது.

    * இதயக்கோளாறு இருப்பதை அறிந்தால், அடுத்த 72 மணி நேரம் கட்டாயம் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம்.

    * சிலர் வேப்பங்கொழுந்தை நல்லதென அடிக்கடி சாப்பிடுவர். அது தவறானது. அதிகப்படியான கசப்புச் சுவை இதயத்துக்கு நல்லதல்ல.

    * அளவுக்கதிகமான சிரிப்பும் இதயத்தைப் பாதிக்கிறது. விழுந்து விழுந்து சிரிக்கும்போது சுருக்கென நெஞ்சில் வலிவந்து நீங்குவதும் கண்களில் நீர் வருவதும் இதயம் பாதிக்கப்படுவதின் அறிகுறியே. எனவே, ஓவரா சிரிக்காதீங்க.


    Dangu likes this.

  8. #18
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    இதயத்தை பாதுகாக்கும் ஏழு படிகள்

    தய நோய் மற்றும் புற்றுநோய்க்கான வாய்ப்பு எந்த அளவுக்கு நம்மை அணுகாமல் தவிர்க்கப்படுகிறது என்பதைக் கண்டறியவேண்டுமா? இந்த பாதுகாப்புப் படிகளில், எவற்றை எல்லாம் பின்பற்றுகிறோம் என்பதைப் பொருத்து தெரிந்துகொள்ளலாம்.


    1. அதிகம் நடப்பது.

    2. உயரத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான எடையை அறிந்து, அதைப் பராமரிப்பது.

    3. சரிவிகித, சத்தான உணவை உட்கொள்வது.

    4. ரத்தத்தில் கொழுப்பு அளவைக் கட்டுப்படுத்தி பராமரிப்பது.

    5. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது.

    6. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது.

    7. புகைப் பழக்கம் இன்மை.



    Dangu likes this.

  9. #19
    kavithasankar is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    kanchipuram
    Posts
    508

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    Very useful information for the heart patients which is the main problem occurs in our country.

    chan likes this.

  10. #20
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    ரத்த அழுத்தக் கட்டுப்பாடு பின்பற்ற 5 ஆலோசனைகள்




    ரத்தக்கொதிப்பை அதாவது உயர் ரத்தஅழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் இதயக் கோளாறுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் சில பொதுவான நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அது தொடர்பாக ‘இரத்த மிகை அழுத்தமும் உங்கள் இதயமும் ‘ நூல் தரும் ஆலோசனைகள்
    :

    உப்பின் அளவு
    டின்களில் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளைக் குறைப்பதே சோடியம் (உப்பு) எடுத்துக் கொள்வதைக் குறைப்பதற்கான சிறந்த வழி. ஆனால், இது மேலை நாட்டினருக்கு முழுமையாகப் பொருந்தும். இந்தியாவில் வீட்டில் தயாரிக்கப்படும் எல்லா உணவுப் பொருட்களிலும் சுவைக்காகச் சேர்க்கப்படும் உப்பின் அளவைக் குறைப்பதே நல்லது.

    பொதுவாகச் சாதாரண உப்புக்கான மாற்று பொட்டாசியம் குளோரைடு. என்றாலும் இதைப் பயன் படுத்துவதற்கு முன், உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து விடுங்கள்.

    வீட்டிலேயே ரத்த அழுத்தம்
    மருத்துவரை அடுத்த முறை சந்திப்பதற்கு இடையிலான இடைவெளியில் வீட்டிலேயே ரத்த அழுத்தத்தை அளப்பதால் மருந்து நன்கு வேலை செய்கிறதா என்பதையும் பிரச்சினைகள் இருந்தால் முன்கூட்டியே அறியவும் முடியும். மருந்துக் கடைகளிலும் மருத்துவக் கருவிகள் விற்கும் கடைகளிலும் வீட்டிலேயே ரத்த அழுத்தத்தை அளக்கும் கருவியை வாங்கலாம். கூடுதல் யோசனை தேவைப்பட்டால் மருத்துவரைக் கலந்தாலோசிக்கலாம். உங்கள் கருவிகளில் பழுது ஏதும் இருக்கிறதா என ஆண்டுதோறும் சரி பார்க்க வேண்டும்.

    துல்லிய அளவுக்கு
    துல்லியமான ரத்த அழுத்த அளவீடுகளைப் பெறக் குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு முன்பாகப் புகைப்பதையும் காஃபின் கலந்த பானங்கள் அருந்துவதையும் தவிர்ப்பது நல்லது. அத்துடன் சிறுநீர் கழித்த பின் 5 நிமிடங்கள் முதுகு சாய்ந்த நிலையில் ஓய்வெடுத்த பிறகு, ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது துல்லியமான அளவுகளைப் பெற உதவும்.

    உடல் எடை
    நீங்கள் அதிக உடல் எடை உள்ளவராக இருந்து 5 கிலோ எடை குறையும்போதுகூட, உங்கள் ரத்த அழுத்தம் குறையலாம். உங்கள் உடல் எடையை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சியும் ஆரோக்கிய மான உணவும் எப்போதும் தேவை.

    தினசரி உடற்பயிற்சி
    வாரத்தில் 5 நாட்களுக்குக் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் மிதமான (சுறுசுறுப்பான நடை போன்ற) உடற்பயிற்சி செய்வது ரத்த மிகை அழுத்தத்தைத் தடுக்கவும் கட்டுக்குள் வைக்கவும் உதவும். நீங்கள் அதிக வேலைப்பளு உள்ளவராக இருந்தால், தொடர்ந்து 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய இயலாதபோது 10 நிமிடங்கள் வீதம் நாள்தோறும் மூன்று வேளை என 30 நிமிட உடற்பயிற்சியைப் பூர்த்தி செய்யலாம்.

    நன்றி: இரத்த மிகை அழுத்தமும் உங்கள் இதயமும்,
    மேயோ கிளினிக்,


    Last edited by chan; 17th May 2015 at 04:32 PM.
    Dangu likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter