Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree97Likes

Heart Care- இதயத்தை காப்போம்


Discussions on "Heart Care- இதயத்தை காப்போம்" in "General Health Problems" forum.


 1. #31
  Dangu's Avatar
  Dangu is offline Ruler's of Penmai
  Gender
  Male
  Join Date
  Oct 2014
  Location
  CHROMEPET
  Posts
  10,950

  Re: Heart Care- இதயத்தை காப்போம்

  POTENTIAL BENEFITS OF EDTA CHELATION
  Prevents cholesterol deposits
  Reduces blood cholesterol levels
  Lowers high blood pressure
  Avoids by-pass surgery
  Avoids angioplasty
  Reserves digitalis toxicity
  Removes calcium from atherosclerotic plaques
  Dissolves intra-arterial blood clots
  Normalizes cardiac arrythmias
  Has an anti-aging effect
  Reduces excessive heart contractions
  Increases intracellular potassium
  Reduces heart irritability
  Improves heart function
  Removes mineral and drug deposits
  Dissolves kidney stones
  Reduces serum iron levels
  Reduces heart valve calcification
  Reduces varicose veins
  Heals calcified necrotic ulcers
  Reduces intermittent claudication
  Improves vision in diabetic retinopathy
  Decreases macular degeneration
  Dissolves small cataracts
  Eliminates heavy metal toxicity
  Makes arterial walls more flexible
  Prevents osteoarthritis
  Reduces rheumatoid arthritis symptoms
  Lowers diabetics' insulin needs
  Reduces Alzheimer-like symptoms
  Reverses senility
  Reduce stroke/heart attack after-effects
  Prevents cancer
  Improves memory
  Reverses diabetic gangrene
  Restores impaired vision
  Detoxifies snake and spider venoms  Sponsored Links
  jv_66 and chan like this.

 2. #32
  Dangu's Avatar
  Dangu is offline Ruler's of Penmai
  Gender
  Male
  Join Date
  Oct 2014
  Location
  CHROMEPET
  Posts
  10,950

  Re: Heart Care- இதயத்தை காப்போம்  Last edited by jv_66; 15th Jun 2015 at 01:33 PM. Reason: added the picture
  jv_66 likes this.

 3. #33
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Heart Care- இதயத்தை காப்போம்

  லப்டப் தேவை கூடுதல் கவனம்!


  மனித உடலில் மார்புக் கூட்டுக்குள் பத்திரமாக உள்ள இதயம்தான், மனிதர் உயிர் வாழ முதன்மை ஆதாரம். இதயம் தன் செயல்பாட்டை நிறுத்திவிட்டால் மனிதனின் இயக்கமும் நின்றுவிடும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இதயம், அதிகமாகத் துடித்தாலும் ஆபத்து; குறைவாகத் துடித்தாலும் ஆபத்து. இந்தப் பிரச்சினை ‘அரித்மியா’ (cardiac arrhythmia) என்றழைக்கப்படும் சீரற்ற இதயத் துடிப்பு நோய்க்கு வழிவகுத்துவிடும். இதிலிருந்து தற்காத்துக்கொள்வதே நமது ஆரோக்கியத்துக்கு அடிப்படை. அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்:

  இதயக் கோயில்
  # இதயம் என்பது ஒரு உடல் உறுப்பு மட்டுமல்ல. உடலின் ஒவ்வொரு மூலைக்கும் ரத்தத்தைப் பம்ப் செய்து அனுப்புவது இதயம்தான்.

  # இரவில் நாம் நிம்மதியாகத் தூங்கும்போதும்கூட இதயம் இடை விடாமல் வேலை செய்துகொண்டே இருக்கும். இதயம், ஒரு நாளைக்குச் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கிறது.

  லப்டப் கணக்கு
  # ஒரு நிமிடத்துக்கு இதயம் எத்தனை முறை துடிக்கிறதோ, அதை வைத்துத்தான் இதயத் துடிப்பு விகிதத் தைக் கணக்கிடுகிறார்கள்.

  # சாதாரணமாக ஓய்வு நேரத்தில் வயதுவந்தவர்களுக்கு 60 - 100 வரை இதயத் துடிப்பு இருக்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 70-100 வரை இதயத் துடிப்பு இருக்க வேண்டும். இதயத் துடிப்பு 100-ஐத் தாண்டினால் மிகைத் துடிப்பு நோய் என்று அர்த்தம், 60-க்குக் கீழ் குறைந்தால் குறைத் துடிப்பு ஆகும்.

  # இதயத் துடிப்பு என்பது எல்லோருக்கும் ஒரே சீராக இருக்காது. பிறந்த சிசு முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்வரை ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்றவாறு இதயத் துடிப்பு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்.

  # மனிதர்கள் செய்யக்கூடிய பணிகளைப் பொறுத்து இதயத் துடிப்பு மாறும். தொலைக்காட்சி பார்க்கும்போது, படுத்திருக்கும்போது இதயத் துடிப்பு குறைவாக இருக்கும். விளையாடினாலோ, மிகவும் உற்சாகமாக இருந்தாலோ இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும்.

  # இதயத் துடிப்பு என்பது சீராக இருக்க வேண்டும். அது ஒழுங்கற்று இருந்தால் இதய நோய்க்குச் சிவப்புக் கம்பளம் விரித்துவிடும். இதயத் துடிப்பு அதிகமாக இருந்தாலோ, குறைவாக இருந்தாலோ அல்லது ஒழுங்கற்று இருந்தாலோ, அதைச் சீரற்ற இதயத் துடிப்பு நோய் என்று மருத்துவ உலகம் கூறுகிறது.

  அறிகுறிகள்
  # சீரற்ற இதயத் துடிப்பு நோய் இருக்கிறதா, இல்லையா என்பதைச் சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். படபடப்பு, மயக்கம், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, மயக்கம் வரும் உணர்வு போன்ற பிரச்சினைகள் இருந்தால் சீரற்ற இதயத் துடிப்பு நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

  # அறிகுறிகளை மட்டும் வைத்துச் சீரற்ற இதயத் துடிப்பு நோய் வந்துள்ளது என்று நீங்களே முடிவு செய்துவிடக்கூடாது. அறிகுறிகள் தொடர்ந்து வெளிப்பட்டாலோ அல்லது சங்கடமாக உணர்ந்தாலோ மருத்துவரை அணுகிப் பிரச்சினையை அறிய வேண்டும்.

  துடிப்பை அறிய...
  # இதயத் துடிப்பை நாடியைத் தொட்டுப் பார்த்து மிக எளிதாக அறியலாம். நாடி மட்டுமல்லாமல், முழங் கையை மடக்கும் பகுதி, கவட்டி என்றழைக்கப்படும் இடுப்பும் தொடையும் சேரும் இடம், காதுக்குக் கீழே கழுத்துப் பகுதியிலும் இதயத் துடிப்பை உணரலாம்.

  # சீரற்ற இதயத் துடிப்பு நோய் இருக்கிறதா என்பதை அறிய இதயத் துடிப்பை ஒரு முறை மட்டும் பார்ப்பதன் மூலம் அறிந்துகொள்ள முடியாது. குறிப்பாக, ஒரு இடத்தில் இதயத் துடிப்பைப் பார்த்துவிட்டு எந்த முடிவுக்கும் வரக்கூடாது. வெவ்வேறு இடங்களிலும் துடிப்பைப் பார்க்க வேண்டும். ஒரு பணியைத் தொடங்குவதற்கு முன்பும் பின்னரும் இதயத் துடிப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  # செய்யும் பணிகளுக்கு ஏற்ப இதயத் துடிப்பு மாற வேண்டும். ஓய்வு நேரத்தில் குறிப்பாகக் காலையில் படுக்கையில் இருந்து எழுந்த பிறகோ அல்லது இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்போ இதயத் துடிப்பு விகிதத்தை அறியலாம்.

  பாதிப்புகள்
  # சீரற்ற இதயத் துடிப்பைப் பலரும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். சீரற்ற இதயத் துடிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம், இதயம் செயலிழப்பு போன்ற கடுமையான பிரச்சினைகள் ஏற்படலாம். சீரற்ற இதயத் துடிப்பால், உலகில் ஏராளமானோர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

  # சீரற்ற இதயத் துடிப்பு உள்ளவர்களுக்கு இதயம் ரத்தத்தைப் பம்ப் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டு மூளைக்குப் போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகலாம். எனவே, இந்தப் பிரச்சினை உள்ளவர்களுக்கு அடிக்கடி மயக்கம் வரலாம்.

  தடுப்பு முறை
  # சீரற்ற இதயத் துடிப்பு பிரச்சினை உள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரையைவிட ‘பேஸ்மேக்கர்’ கருவி நல்ல பலனைத் தருகிறது. இக்கருவி இதயத் துடிப்பைச் சீராக வைத்துக்கொள்ள உதவுவதால் மருத்துவர்கள் இதைப் பரிந்துரைக்கிறார்கள்.

  # குடிப் பழக்கம், புகைப் பழக்கம் மற்றும் அதிக நச்சுத்தன்மை உள்ள குளிர்பானங்கள், காபி போன்ற உணவுப் பொருட்களைக் கைவிடுவதன் மூலம் சீரற்ற இதயத் துடிப்பு நோய் வராமல் தடுக்கலாம். அதன்மூலம் இதய நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமலும் பார்த்துக்கொள்ளலாம்.  Last edited by chan; 6th Jun 2015 at 02:42 PM.
  jv_66 and Dangu like this.

 4. #34
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Heart Care- இதயத்தை காப்போம்

  வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உடனடியாக செய்ய வேண்டியது
  துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..! வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.


  திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக “வலி” ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள். உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மைல் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது.

  இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்…?? உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது.. நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.

  இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:

  “தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும், ஒவ்வொரு முறை இரும்புவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

  மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது, இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இரும்புவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்”.. பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..  Last edited by chan; 10th Jun 2015 at 01:01 PM.
  jv_66 and Dangu like this.

 5. #35
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Heart Care- இதயத்தை காப்போம்

  இதய நோயை விரட்டி, இதயத்தை பலப்படுத்தும் உணவுப் பொருட்கள்!!!


  இதய நோய், யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம். இதய நோயால் ஏற்படும் திடீர் மரணம் அபாயகரமானது. வாழ்க்கை முறை மாற்றத்தினால், இதயத்துக்கு நலம் தரும் உணவுகளைப் புறக்கணித்து, ரத்த குழாய்களில் கொழுப்பைச் சேர்க்கும் உணவுகளை நாம் பெருக்கிக் கொண்டே போவது தான் இதற்குக் காரணம். நம் இதயத்தை பாதுகாப்பதன் மூலம் நம் ஆயுட்காலத்தை நாமே நீட்டித்துக் கொள்ள இயலும். இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.......

  தினமும் காலையில் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக நெல்லிக்காய் சாப்பிடலாம். வெறும் நெல்லிக்காய் சாப்பிடப் பிடிக்கவில்லை என்றால் ஜுஸ் ஆக குடிக்கலாம். அதுவும் எளிமை தான். நெல்லிக்காய் உடன் இஞ்சி சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு கலந்து சர்க்கரை சேர்த்து கலந்து குடிக்கலாம். நாட்டு நெல்லிக்காய், மலை நெல்லிக்காய் என்றுக் கூறப்படும் பெரிய நெல்லிக்காய் தான் மருத்துவக் குணமுடையது.

  நெல்லிக்காய் இதயத்தைப் பாதுகாக்கிறது. அதுமட்டுமல்ல நெல்லிக்காய் கொழுப்பைக் கரைக்குமாம் மற்றும் கல்லீரல், கணையத்தில் புற்றுநோய்களையும் சரி செய்யக்கூடியது. என்னங்க இனி தினமும் நெல்லிக்காய் ஜுஸ் தானே உங்கள் வீட்டில்...

  பூண்டுக்கு ரத்த அழுத்தத்தைச் சரி செய்யக்கூடிய குணம் உள்ளது. வாயுக் கோளாற்றால் அவதிப்படுபவர்கள் ஒரு முழு பூண்டைத் தீயில் சுட்டு சாப்பிட்டால் உடனடி பலனைக் காணலாம். மேலும் பூண்டு, ரத்தக் குழாயில் உள்ள கொழுப்பைக் கரைப்பதோடு, இதயத்திற்கு வலுவைச் சேர்க்கிறது.

  உலர் திராட்சையை பன்னீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின்னர் அதை பிசைந்து வடிகட்டி விட்டு அந்த பன்னீரை இதயம் பலவீனமாக உள்ளவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதைக் குடித்தால் இதய படபடப்பு அடங்கும். அது மட்டுமல்லாது காலப்போக்கில் இதயம் வலுவாகும்.

  இஞ்சியை சரியான விகிதத்தில், சரியான நேரத்தில் சாப்பிட்டு வந்தால் அதன் பலன் சிறப்பானதாக இருக்கும். நம்மால் இஞ்சியை அப்படியே சாப்பிட முடியாது. எனவே அதனை துவையலாகவோ அல்லது சாறு எடுத்தோ குடிக்கலாம். இஞ்சி இதய நோயை, ரத்த அழுத்தத்தை, செரிமானக் கோளாறை, மற்ற உடல் கோளாறுகளை சரிசெய்ய வல்லது.


  jv_66 and Dangu like this.

 6. #36
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Heart Care- இதயத்தை காப்போம்

  இரத்த அழுத்தம் குறைய எழிய வழிகள்

  1. உப்பு மற்றும் உப்பு சேர்த்த பொருள்களை இயன்ற வரை குறைக்கவும். உப்பு இரத்த அழுத்தத்தை உயர்த்தக் கூடியது.

  2. உடல் எடை மிகுந்திருப்பது இரத்த நாளங்களையும், இரத்த ஓட்டத்தையும் வெகுவாகப் பாதிக்கும். எனவே எடையை தேவையான அளவு குறைக்கவும்.

  3. மது குடிப்பதை தவிர்க்கவும். - இரத்த அழுத்தத்தை உயர்த்துவதில் மது முக்கிய இடம் வகிக்கிறது. இது இரத்த அழுத்தத்தை உயர்த்துவதோடு இதயத்தையும் பாதிக்கிறது.

  4. உடற் பயிற்சி.- தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் இரத்த அழுத்தத்தைச் சீரான நிலைக்கு கொண்டு வர முடியும்.

  5.மன அமைதி - இயன்றவரை மனப்பதட்டம், அவசரம், மிகு ஆர்வம் போன்றவற்றைத் தவிர்க்கவும். கோபம் கொள்வதை அறவே மறந்து விட வேண்டும்.

  6. உணவுக் கட்டுப்பாடு - எப்போதும் அரை வயிறு உணவு மட்டுமே உட்கொள்வது நல்லது. இயன்றவரை பச்சைக் காய்கறிகள், பழங்கள் உட்கொள்ளுங்கள். இரவில் காலம் கடந்து உணவு கொள்ளக் கூடாது. இயன்றவரை மாலை 7 - 8 மணிக்குள் இரவு உணவு உட்கொண்டுவிட வேண்டும்.


  jv_66 and Dangu like this.

 7. #37
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Heart Care- இதயத்தை காப்போம்

  மாரடைப்பு தடுப்பது எப்படி?

  இதயத்திற்கு ரத்தத்தைக் கொடுக்கும் ரத்தக் குழாயில் முழு அடைப்பு ஏற்பட்டால் மார்பு வலி வரும். கரோனரி ரத்தக்குழாயின் முழு அடைப்புதான் மாரடைப்புக்குக் காரணம். மார்புக்கூடு முன் கடுமையான வலி ஏற்படும். இந்த வலி இடது தோள்பட்டைக்கு பரவுதல், முதுகின் பின்பகுதியில் வலி வருதல், சில சமயங்களில் பல் வலி, பகட்டு வலி, கழுத்து வலி, உணவு விழுங்க கஷ்டம், கேஸ் அடைப்பு போன்று பல அறிகுறிகள் தென்படலாம்.

  மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும்போது முதலில் வலி அதிகரிக்கலாம். நெஞ்சு வலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாகவும் சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும்போதுதான் தெரியவே வரும். இதற்கு “அமைதியான மாரடைப்பு’ என்று பெயர்.

  இதய வலியின் வெவ்வேறு தன்மைகள்:
  பொதுவாக இதய வலி நெஞ்சின் நடுப்பகுதியில் வரும். அது வலியாகவோ, ஒருவித அழுத்தமாகவோ, ஏதோ ஒரு கனமான பொருளை நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வாகவோ, நெஞ்சின் இரு பகுதியில் இருந்தும் நடுப்பகுதியை நோக்கி கயிற்றால் இறுக்குவது போலவோ, நெஞ்சு முழுவதும் ஏதோ முழுமையாக நிறைவாக இருப்பது போன்ற உணர்வுடனோ இருக்கலாம். சில நேரங்களில் சாப்பாடு செரிக்காமல் அஜீரண கோளாறு போன்ற உணர்வாகவும் வெளிப்படலாம். நெஞ்சுக்குள் எரிச்சல் போன்ற உணர்வு இருக்கலாம்.

  இத்தகைய உணர்வுகள் சில நிமிடங்கள் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ வரலாம். பொதுவாக இத்தகைய உணர்வுகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் அது மாரடைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இத்தகைய அறிகுறிகள் மாரடைப்பு வரும் முன் சில நாட்களோ, வாரங்களோ, ஏன் சில மாதங்களுக்கு முன்பே தென்படலாம். அத்தகைய வலி ஏதாவது செயலில் ஈடுபட்டிருக்கும் போது (நடைப்பயிற்சி அல்லது கனமான வேலைகள்) சில நிமிடங்கள் வரும். ஓய்வு எடுத்தவுடன் மறைந்து விடும். இதற்கு “ஆஞ்சைனா’ என்று பெயர்.

  அறிகுறிகள்
  * நெஞ்சு வலியுடன் மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் இறுக்கம்.

  * வியர்த்தல், குமட்டல் மற்றும் மயக்கம் வருவது போல் உணர்தல்.

  * வாந்தி , இருமல், படபடப்பு மற்றும் 20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து வலி ஏற்படுதல்.

  * தீவிர நிலையில், ரத்த அழுத்தம் குறைவதால் மாரடைப்பு ஏற்பட்டவரின் உடல் வெளுத்து இறப்பும் நேரலாம்.

  காரணங்கள்:
  * புகைப்பிடித்தல்

  * சர்க்கரை நோய்

  * உயர் ரத்த அழுத்தம்

  * அதிக உடல் பருமன் மற்றும் நன்மை செய்யும் கொழுப்பு (HDL) குறைவாக இருத்தல்.

  * அதிக கொலஸ்ட்ரால்

  * உடல் உழைப்பு இல்லாமை

  * குடும்பத்தில் பலருக்கு தொன்றுதொட்டு மாரடைப்பு

  * மன அழுத்தம், அதீத கோபம் மற்றும் படபடப்பு

  * மரபியல் காரணிகள்.

  மாரடைப்பின் வகைகள்:
  முதல் வகை மாரடைப்பு ரத்த நாளத்தில் கெட்ட கொழுப்பினால் அடைப்பு ஏற்பட்டு, இறுதி கட்டத்தில் ரத்தம் உறைந்து முழு அடைப்பு ஏற்படுவது. இதனால், இ.சி.ஜி.,யில் மாற்றம் ஏற்படுகிறது. இதை ஸ்டெமி மாரடைப்பு என்று அழைக்கின்றனர். இரண்டாவது வகை மாரடைப்புக்கு காரணம் வேறு விதமானது; இதயத் தசைகளுக்கு பிராண வாயுத் தேவை. அதற்கு ஈடு கொடுத்து சமமாக பிராண வாயுவை கொடுக்க வேண்டிய சமநிலையில் ஏற்படும்
  வேறுபாட்டால், குறை ஏற்பட்டு முழு அளவு தடைப்பட்டால் மாரடைப்பு மரணம் ஏற்படும். ரத்தம் தடைப்பட்டால் ரத்தம் உறைந்து விடும்.

  இதனால் இளம் வயதினருக்கும் மாரடைப்பு மரணம் வரும். நடுத்தர இளம் பெண்களுக்கு சாதாரணமாக வரும். மூன்றாவது, நீண்ட நேரம் ரத்த நாளம் சுருங்கினால், ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் மாரடைப்பு உண்டாகும். நான்காவது, மாரடைப்பு வந்த பின், பலூன் ஸ்டென்ட் சிகிச்சை செய்யும் போது ஸ்டென்டில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படும். இது இன்ஸ்டென்ட் அடைப்பு எனப்படும். அதனால் வரும் மாரடைப்பு மூலம், பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்.

  நோயைக் கண்டறிவது எப்படி ?
  * மருத்துவர் இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தினை பதிவு செய்வதோடு முந்தைய சிகிச்சை விவரங்களை விரிவாக பெற்றுக் கொள்வார்.

  * இதயத்தின் செயல்பாடுகளை மின்னணு வடிவில் பெற்றுத் தரும் இசிஜி ECG) எடுக்கப்படுகிறது..

  * இசிஜி இதயத்துடிப்பின் வேகம் பற்றிய தகவலைத் தருகிறது. வழக்கத்திற்கு மாறான துடிப்புகள் உள்ளனவா என்றும் மாரடைப்பால் இதயத்தசைகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றும் இசிஜி மூலம் அறியலாம்.

  * இதயத்தசைகளில் பாதிப்பு உள்ளதா எனக் கண்டறிய ரத்த பரிசோதனைகள் உதவும்.

  * மார்பு பகுதியில் எக்ஸ்ரே எடுக்கப்படலாம்.

  * எக்கோ-கார்டியோகிராம் என்பது இதயத்தின் செயல்பாடுகளை அறிய உதவும் புதிய ஸ்கேன் முறை.

  * கரோனரி ஆஞ்ஜியோகிராம் என்ற பரிசோதனை மூலம் கரோனரி ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.

  சிகிச்சை விவரம்
  * மாரடைப்பு ஏற்படும் ஆரம்பகால நிமிடங்களும், நேரங்களும் இக்கட்டானவை. முதலில் கரோனரி தமனி எனப்படும் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள கட்டியைக் கரைக்கும் மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.

  * இதயத்துடிப்புகள் கண்காணிக்கப்பட்டு இயல்புக்கு மாறான துடிப்புகளுக்குரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. வலி நீக்கும் மருந்துகளை நோயளிக்குக் கொடுத்து ஓய்வெடுக்க அறிவுறுத்தப்படுகிறார். ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்பட்சத்தில்,அதனைக்குறைக்கத் தகுந்த மருந்துகள் அளிக்கப்படுகின்றன.

  * நோயாளியின் வயது, மாரடைப்பின் தாக்கம், இதயம் பாதிக்கப்பட்டுள்ள அளவு மற்றும் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பின் அளவு ஆகியவற்றை பொறுத்து நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை மாறுபடும்.

  * பல நேரங்களில் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பினை நீக்க தெளிவான மற்றும் முறையான வழிமுறைகள் அவசியமாகின்றன. அவை கரோனரி ஆஞ்சியோப்ளாஸ்டி, பலூன்களைக்கொண்டு ரத்தக்குழாய்களை விரிவடையச்செய்தல் அல்லது கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற முறைகளாக இருக்கலாம்.

  மாரடைப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்ட பின்னர் சிகிச்சை அளித்தல் மாரடைப்பு ஏற்பட்டதும் ரத்த கட்டியைக் கரைப்பதற்கான Thrombolysis மருந்து உட்செலுத்தப்படுகின்றது. இம்மருந்து ரத்தக் கட்டியைக் கரைத்தால் தடைப்பட்டிருந்த முடியுருநாடியின் குருதியோட்டம் சீர்செய்யப்படுகின்றது.

  இதனால் இதயத் தசையில் பாதிக்கப்பட்ட பரப்பளவு மட்டுப்படுத்தப்படுவதுடன் அதன் அயற்பகுதிகளோ அல்லது அந்த முடியுரு நாடியால் குருதி வழங்கப்படும் இதயத்தின் மற்றைய பகுதிகளோ பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. அத்துடன் அடுத்தடுத்த மாரடைப்பு ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.

  இந்தச் சிகிச்சை முறை மாரடைப்பு ஏற்பட்டு முதல் 12 மணிநேரத்திற்குள் அளித்தால் மிகவும் நற்பயன் அளிக்கக்கூடியதாகும். அதிலும் மாரடைப்பு ஏற்பட்டு ஓரிரு மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்பட்டால் ரத்தக்கட்டி முழுவதுமாக கரைவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம். இதனால் உயிர் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவடைகிறது. எனவே நெஞ்சு வலி ஏற்பட்ட உடனே மருத்துவரை அணுகுவது மிக முக்கியமாகும்.

  Exercise ECG செய்யப்படுவதன் நோக்கம் மாரடைப்பு ஏற்பட்டு 6 வாரங்களினுள் Exercise ECG மேற்கொள்ளப்படு கிறது. இந்நேரத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட நேரத்தையும் அப்போதுECGஇல் ஏற்பட்ட மாற்றத்தையும் கொண்டு இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பின் அளவை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு நோயின் தன்மை கண்டுபிடிக்கப்பட்டு நோயாளிகளுக்கு Coronary Angiogram பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

  Last edited by chan; 13th Jun 2015 at 02:31 PM.
  jv_66 and Dangu like this.

 8. #38
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Heart Care- இதயத்தை காப்போம்

  பெண்களுக்கு இதயநோய் வருவதை தடுக்கும் பொட்டாசியம் உள்ள உணவுகள்  பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் பெண்களுக்கு இதய நோய் வருவது மிகவும் குறைவு என ஆராய்ச்சியில் தெரியவருகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் காலேஜ் ஆப் மெடிசின், மாதவிடாய் நின்ற 50 வயது முதல் 79 வயதுடைய பெண்களிடம் ஆராய்ச்சியை மேற்கொண்டது.

  ஆராய்ச்சியின் விளைவாக பொட்டாசியம் அதிகமாக எடுத்துக்கொண்ட பெண்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் மேலும் அவர்களின் இறப்பு விகிதம் குறைவதாகவும் கண்டுபிடித்துள்ளது. பொட்டாசியம் நம் உடலில் புரதம் சரியான முறையில் சேர்வதற்கும், சதை வளர்ச்சிக்கும், கார்போஹைட்ரட்டை குறைப்பதற்கும் பயன்படுகிறது.

  ஆராய்ச்சியின் இறுதியாக பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ள உணவுகளை பெண்கள் சாப்பிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  பொட்டாசியம் அதிகம் காணப்படும் உணவுகள் :

  வாழைப்பழம்,
  ஒரு சில பயறு வகைகள்,
  பால்,
  இனிப்பு உருளை கிழங்கு,
  வெள்ளை பீன்ஸ்

  jv_66 and Dangu like this.

 9. #39
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Heart Care- இதயத்தை காப்போம்

  இதயம் செயல் இழந்தால் என்ன செய்வது?

  ஹார்ட் ஃபெயிலியர்...

  பலருக்கும் இந்த வார்த்தைகள் புதிதாகவே இருக்கும். ஏன், புதிராகவும் இருக்கலாம். இதயத்தைப் பொறுத்தவரை ‘ஹார்ட் அட்டாக்’கை தெரிந்திருக்கிற அளவுக்கு ‘ஹார்ட் ஃபெயிலியர்’ என்று அழைக்கப்படுகிற ‘இதயச் செயல் இழப்பு’ குறித்து படித்தவர்கள் கூட தெரிந்து வைத்திருக்கவில்லை.


  இதயச் செயல் இழப்பு எது?

  இதயம் ஒவ்வொருமுறை சுருங்கி விரியும்போதும் சுமார் 70 மி.லி. ரத்தத்தை வெளியேற்ற வேண்டும். அப்போதுதான் கல்லீரல், மூளை, சிறுநீரகம் போன்ற உயிர்காக்கும் உறுப்புகளுக்குத் தேவையான ரத்தத்தை அதனால் கொடுக்க முடியும். ஆனால், சில நேரங்களில் அது இயலாமல் போய்விடும். அப்போது இதயம் தனது வழக்கமான பணிகளைச் செய்ய இயலாது. அந்த நிலைமையை ‘இதயச் செயல் இழப்பு’ (Heart failure அல்லது Cardiac failure) என்கிறோம்.
  இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் இரண்டு. ஒன்று, மூச்சுத் திணறல்.  மற்றொன்று, நீர்த் தேக்கம். மூச்சுத் திணறல் நுரையீரல் ஆஸ்துமாவிலும் (Bronchial asthma) காணப்படும். ஆகையால், இதயம் சார்ந்த மூச்சுத் திணறலை ‘இதய ஆஸ்துமா’ (Cardiac asthma) என அழைக்கலாம். இதில் மூச்சுத் திணறலுடன், உடலில் நீர்த் தேக்கமும் காணப்படும். நுரையீரல் ஆஸ்துமாவில் இந்த நீர்த் தேக்கம் இருக்காது.

  அடிப்படைக் காரணம் எது?

  உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பல்வேறு நோய்களால் திடீரென்றோ, நாளடைவிலோ இதயம் பாதிக்கப்படும்போது, இதயத் தசைகளின் சுருங்கி விரியும் தன்மை குறைந்து விடுகிறது. இதன் விளைவாக, இதயத்தின் வேலைப்பளு அதிகமாகிறது. இந்த நிலைமையைச் சரிக்கட்ட, இதயம் வழக்கத்தைவிட வேகமாகவும் அதிகமாகவும் துடிக்கிறது. இதயம் விரிந்து அதன் கொள்ளளவை அதிகப்படுத்திக் கொள்கிறது. இவற்றின் மூலம் உறுப்புகளுக்குத் தேவையான ரத்தத்தைக் கொடுக்க முயற்சி செய்கிறது.

  தொடக்கத்தில் இந்த முயற்சியால் இதயத்துக்கு வெற்றி கிட்டும் என்றாலும், நாளடைவில் ‘தன்வினைத் தன்னைச் சுடும்’ என்பதைப்போல இதயத்தில் ஏற்பட்ட மாற்றங்களே அதற்கு வினையாகி, இதயம் தனது செயல்திறனை இழக்கிறது. ஓரளவுக்கு விரிந்த இதயம் அளவுக்கு மீறி விரியும்போது, இயல்பாகச் சுருங்கி விரிய முடியாமல் சிரமப்படுகிறது.

  வேகமாகவும், மிக அதிகமாகவும் துடித்த இதயம் ஒரு கட்டத்தில் துடிப்பதற்கே சிரமப்படுகிறது. இதனால், இதயத்திலிருந்து ரத்தம் வெளியேறும் அளவு குறைகிறது. இதேபோல் உடலின் பல பகுதிகளிலிருந்தும், நுரையீரல்களிலிருந்தும் இதயத்துக்கு ரத்தம் வருவதும் குறைந்துவிடுகிறது. விளைவு, நுரையீரல், கல்லீரல், குடல் ஆகியவற்றில் நீர்த் தேக்கம் உண்டாகிறது. இதுதான் இதயச் செயல் இழப்புக்கு அடிப்படைக் காரணம்.

  யாரை பாதிக்கும்?

  இந்த நோய் பெரும்பாலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே வருகிறது. என்றாலும், பிறவி இதயக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும், சிறுவர், சிறுமிகளுக்கும் இந்த நோய் வரலாம். இந்தியாவில் 50 லட்சம் பேருக்கு இந்த நோய் உள்ளது. ஆண்டுதோறும் புதிதாக 20 லட்சம் பேருக்கு இது வருகிறது. இந்த நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களில் பாதிப் பேர் நோய் ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில் இறந்து விடுகின்றனர். பலர் உடனடியாக மரணத்தைத் தழுவுகின்றனர்.

  காரணங்கள்?

  இதயத்தை பாதிக்கும் எந்தவொரு நோயும் இதயச் செயல் இழப்பை ஏற்படுத்தலாம். என்றாலும், உடனடியாக இந்த நோயை வரவழைக்கும் நோய்கள் வரிசையில் முன்னணியில் நிற்பவை ‘ஆஞ்சைனா’வும் மாரடைப்பும்தான். அடுத்து வருவது, உயர் ரத்த அழுத்தம். இதனைத் தொடர்வது, இதய வால்வு நோய்கள் மற்றும் இதய இடைச் சுவர்த் துளை நோய்கள் (Septal defects), நுரையீரல் தமனி மிகு ரத்த அழுத்தம் (Pulmonary hypertension),

  இதயத் தசை அழற்சி நோய் (Myocarditis), இதயத் தசை நோய் (Cardiomyopathy), இதய உள்ளுறை அழற்சி நோய் (Endocarditis), இதய வெளிஉறை நீர்த் தேக்கம் (Pericardial effusion), நுரையீரல் தமனி ரத்த உறைக்கட்டி (Pulmonary embolism), இடது இதயக் கீழறைப் பெருக்க நோய் (Left ventricular hypertrophy), இதயத் தசைக் கட்டிகள் ஆகியவையும் இதயச் செயல் இழப்புக்கு வழிவகுக்கும். தைராய்டு ஹார்மோன் மிகைச் சுரப்பு (Hyperthyroidism), கடுமையான ரத்தசோகை, நிமோனியா, நீரிழிவு, வைட்டமின் பி-1 குறைவால் வருகின்ற பெரிபெரி நோய் (Beri beri)
  ஆகியவற்றாலும் இந்த நோய் ஏற்படலாம்.

  வகைகள்?

  இந்த நோய் ஏற்படுகிற தன்மையைப் பொறுத்து இதை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

  1.திடீர் இதயச் செயல் இழப்பு (Acute Heart Failure)
  திடீரெனத் தொடங்கும் இதயச் செயல் இழப்பு இது. மாரடைப்பு, நுரையீரலில் நகர்கிற ரத்த உறைக்கட்டி போன்றவற்றால் இத்தகைய இதயச் செயல் இழப்பு ஏற்படுகிறது.

  2.நாட்பட்ட இதயச் செயல் இழப்பு (Chronic Heart Failure)

  இது சிறிது சிறிதாக ஏற்படும் இதயச் செயல் இழப்பு. இதய வால்வுக் குறைபாடுகள், ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை இவ்வகை இதயச்செயலிழப்பை ஏற்படுத்துவது வழக்கம்.இதயச் செயல் இழப்பு இதயத்தைப் பாதிக்கின்ற முறையைப் பொறுத்து இதை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. வலது இதயச் செயல் இழப்பு (Right heart failure)

  இதயத்தின் வலது மேலறையும் வலது கீழறையும் சேர்த்து ‘வலது இதயம்’ எனப்படுகிறது. இந்த இரு அறைகள் தங்கள் செயல்திறனை இழக்கும் போது ஏற்படுவது ‘வலது இதயச் செயல் இழப்பு’ என அழைக்கப்படுகிறது. இது நுரையீரல் தமனி வால்வுக் குறைபாட்டினாலும், நாட்பட்ட நுரையீரல் நோய்களாலும், நுரையீரல் ரத்த உறைக் கட்டிகளாலும் உண்டாகிறது.

  இதில் வலது கீழறையிலிருந்து ரத்தம் வெளியேறுகின்ற அளவு குறைகிறது. இங்கிருந்து நுரையீரல்களுக்கு ரத்தம் சரிவரச் செல்வதில்லை. இதனால் மேற்பெருஞ்சிரை மற்றும் கீழ்்பெருஞ்சிரை வழியாக அசுத்த ரத்தம் வலது மேலறையை அடையச் சிரமப்படுகிறது. ஆகவே, உடலின் எல்லா பகுதிகளிலும் அசுத்த ரத்தம் தேங்குகிறது. இதன் விளைவாக, உடலின் பல பகுதிகள் வீங்குகின்றன.

  2.இடது இதயச் செயல் இழப்பு (Left heart failure)

  இதயத்தின் இடது மேலறையும் இடது கீழறையும் சேர்த்து ‘இடது இதயம்’ எனப்படுகிறது. இந்த இரு அறைகள் தங்கள் செயல்திறனை இழக்கும் போது ஏற்படுவது ‘இடது இதயச் செயல் இழப்பு’ என அழைக்கப்படுகிறது. மகாதமனி வால்வுக் குறைபாடு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா, மாரடைப்பு போன்றவற்றால் இவ்வகை இதயச் செயல் இழப்பு ஏற்படுகிறது. இதில் இடது கீழறைச் சுவர்கள் பலவீனமடைவதால், அவற்றின் சுருங்கி விரியும் தன்மை பாதிக்கப்படுகிறது. இடது கீழறையிலிருந்து ரத்தம் வெளியேறுகிற அளவு குறைகிறது. நுரையீரல்களிலிருந்து சிரை ரத்தம் இடது மேலறைக்கு வருவதும் குறைகிறது.

  எனவே, நுரையீரல்களில் ரத்தம் தேங்குகிறது. இதனால் நோயாளிக்கு மூச்சுத்திணறல் உண்டாகிறது. நோயாளி உட்கார்ந்திருக்கும்போது நுரையீரல்களின் அடிப்பகுதியில்தான் ரத்தம் தேங்கும். நுரையீரல்களின் மற்ற பகுதிகளில் அவ்வளவாக ரத்தம் தேங்குவதில்லை. ஆகவே, நோயாளி உட்கார்ந்திருக்கும்போது மூச்சுத்திணறல் குறைவாக இருக்கும். ஆனால், நோயாளி படுத்திருக்கும்போது நுரையீரல்களில் முழுப்பகுதியிலும் ரத்தம் தேங்குவதால் அப்போது மூச்சுத் திணறல் அதிகரிக்கிறது.

  3. தேக்கமுறும் இதயச் செயல் இழப்பு (Congestive heart failure)

  இதயத்தின் இரு பக்கங்களும் செயலிழக்கும் போது இதயக் கீழறைகள் இரண்டும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. அப்போது உடலெங்கும் நீர்த்தேக்கம் உண்டாகிறது. மூச்சுத் திணறல் கடுமையாக இருக்கும். சிறுநீர் பிரியாது.

  அறிகுறிகள்?

  இடதுபக்க இதய பாதிப்பால் இதயச் செயல் இழப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் தோன்றும்.
  படுக்கும்போது பெருமூச்சு வாங்கும். மூச்சுத் திணறல் உண்டாகும். சிலருக்கு உறக்கத்தில் மூச்சுத் திணறல் உண்டாகி விழிப்பு வந்துவிடும். இவர்கள் உடனே எழுந்து உட்கார்ந்து, முன்புறம் நன்கு சாய்ந்து கொண்டால் மூச்சுத் திணறல் சிறிதளவு குறையும். தொடர் இருமல் வரும்.

  வலதுபக்க இதய பாதிப்பால் இந்த நோய் ஏற்படுமானால், நோயாளிகளுக்குத் தொடக்கத்தில் கணுக்கால்களில் வீக்கம் தோன்றும். சிறுநீரின் அளவு குறையும். பாதங்களில், கால்களில், வயிற்றில், முகத்தில் வீக்கம் காணப்படும். நகங்கள் நீலநிறமாகும். கல்லீரல் வீங்கும். கழுத்திலுள்ள சிரைக் குழாய்கள் வீங்கிப்
  புடைத்துவிடும்.

  இதயத்தில் இரண்டு பக்கங்களிலும் இதயச் செயல் இழப்பு ஏற்படும்போது மேற்கூறிய எல்லா அறிகுறிகளும் காணப்படும். நாட்பட்ட நோயாளிகளுக்குப்பசி குறைந்து, உடல் மெலியும். எடை குறையும். உடல் தசைகள் நலிவடைந்து எலும்பும் தோலுமாகக் காணப்படுவார்கள்.

  சிக்கல்கள்?

  ரத்த யூரியா மிகைப்பு... இதயச் செயல் இழப்பினால் இதயத்திலிருந்து ரத்தம் குறைவாக வெளியேறுவதால் சிறுநீரகங்களுக்கும் குறைவாகவே ரத்தம் வந்து சேர்கிறது. இதனால் சிறுநீரகங்களின் இயல்பான பணி தடைபடுகிறது. ரத்தத்திலுள்ள கழிவுகளை முழுமையாக வெளியேற்ற முடிவதில்லை. விளைவு, ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரித்து விடுகிறது. ரத்தப் பொட்டாசியம் மற்றும் சோடியம் குறைவு...

  இந்த நோய்க்கு சிறுநீர்ப் பிரித்திகளை அதிகமாகப் பயன்படுத்துவதால், ரத்தத்திலுள்ள பொட்டாசியம், சோடியம் சிறுநீரில் மிகுதியாக வெளியேறி விடுகிறது. இதன் விளைவாக, ரத்தத்தில் பொட்டாசியம் மற்றும் சோடியம் அளவு குறைந்துவிடுகிறது. இதனால் உடலில் அமிலக்கார அளவுகள் மாறுவதால், ரத்த ஓட்டத்தில் சிக்கல் உண்டாகிறதுகல்லீரல் செயல்பாடு குறைவது...

  கல்லீரலுக்கு வருகின்ற ரத்தத்தின் அளவு குறைவதாலும், கல்லீரலில் சிரை ரத்தம் மிகுதியாகத் தேங்குவதாலும் அதனுடைய செயல்பாடு குறைகிறது. விளைவு, மஞ்சள் காமாலை தோன்றுகிறது.

  நகரும் ரத்த உறைக்கட்டி (Embolism)...

  இதுவும் இதயத்திலிருந்து ரத்தம் மிகக் குறைவாக வெளியேறுவதால் ஏற்படுகின்ற சிக்கல்தான். குறிப்பாக, நுரையீரல் சிரைகளிலும் கால் சிரைகளிலும்
  ரத்தம் உறைந்துவிடும். இந்த நோயாளிகள் நீண்டகாலம் படுக்கையிலேயே படுத்துக் கொண்டிருப்பதாலும் இம்மாதிரியாக ரத்தம் உறைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

  ஒழுங்கில்லாத இதயத்துடிப்பு (Arrhythmia)...

  இதய மேலறை லயமின்மை மற்றும் கீழறை லயமின்மை இதயச் செயல் இழப்பு நோயாளிகளுக்கு மிகச் சாதாரணமாக வரக்கூடிய சிக்கல். சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற ரத்த அயனிகள் குறைவதாலும், இதய அமைப்புக் குறைபாட்டாலும், டிஜாக்சின், கேட்டக்காலமின் போன்ற மருந்துகளின் அதீத விளைவுகளாலும் இந்தச் சிக்கல் உண்டாகிறது. இதயச் செயல் இழப்பு நோயாளிகளில் 50 சதவிகிதம் பேர் இதனால்தான் மரணமடைகின்றனர்.

  பரிசோதனைகள்?

  வழக்கமான ரத்தப் பரிசோதனைகளுடன் யூரியா, கிரியேட்டினின், சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், குளுக்கோஸ், கொலஸ்ட்ரால் ஆகியவற்றைப் பரிசோதிக்க வேண்டும். மார்பு எக்ஸ் - ரே. இசிஜி, இதய எக்கோ ஆகியவை இந்த நோயின் அடிப்படை காரணத்தைத் தெரிவிப்பதோடு, இதயச் செயல் இழப்பின் தன்மை, வகை, தீவிரம் போன்றவற்றையும் தெளிவுபடுத்தி விடும்.

  சிகிச்சை முறைகள்?

  1.முழுமையான ஓய்வு

  இதயச் செயல் இழப்பு நோயாளிகள் மருத்துவர்கள் சொல்லும் வரை முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும். இதனால் இதயத்தின் வேலைப்பளு குறையும்.

  2.அடிப்படை நோய்க்கு சிகிச்சை

  இதயச் செயல் இழப்பை ஏற்படுத்திய நோயைக் கண்டுபிடித்து அதற்குரிய சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.

  3.பிராணவாயு செலுத்துதல்

  இந்த நோயாளிக்கு இது ஒரு முக்கியமான சிகிச்சை முறை. காரணம், இவர்களுக்கு நுரையீரல்களில் நீர்த் தேக்கம் உண்டாவதால், அங்கிருக்கும் குறைந்த அளவு காற்று ரத்தத்தில் கலப்பது கடினம். செயற்கை சுவாசம் அளித்தல் முறையில் நோயாளியின் மூக்கு வழியாக, அதிக அழுத்தத்தில் பிராணவாயுவைச் செலுத்தினால், அது ரத்தத்தில் கலக்கும். இதனால் ரத்தம் சுத்தமாகி நோயாளியின் உயிரைக் காக்கும்.

  4.சிறுநீர் பிரித்திகள் (Diuretics)

  ஃபுரூசமைட், பூமீட்டனைட் போன்ற சிறுநீர்ப் பிரித்திகளை உபயோகித்து, உடலின் நீர்த் தேக்கத்தைக் குறைக்க வேண்டும். நீண்ட காலத்துக்கு இந்த மருந்து
  களைப் பயன்படுத்த வேண்டி இருந்தால், அவற்றுடன் பொட்டாசியம் கலந்த திரவ மருந்துகளையும் சேர்த்துத் தருவார்கள்.

  5.சுவாசக் குழாய் தளர்த்திகள்

  அமினோபிலின், தியோபிலின் போன்ற ஊசிகளைப் பயன்படுத்தி, மூச்சுத் திணறலைக் குறைக்க வேண்டும்.

  6. ரத்தக் குழாய் விரிப்பிகள், பீட்டா தடுப்பான்கள்... ‘ஆஞ்சியோடென்சின் கன்வர்டிங் என்ஸைம் இன்ஹிபிட்டார்ஸ்’, டிஜாக்சின் எனப் பல மருந்துகளைக் கொடுத்து நோயைக் கட்டுக்குள் கொண்டு வருவார்கள் மருத்துவர்கள்.

  7.பொதுவானவை

  உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம். வலி மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடக்கூடாது. புகைப்
  பிடிக்கக்கூடாது. மது அருந்தக் கூடாது. மாடிப்படிகளிலும் உயரமான இடங்களுக்கும் ஏறி இறங்கக்கூடாது. நோய் மீண்டும் தாக்காமல் இருக்க, தொடர்ச்சியான மருத்துவச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

  இதயத்தை பாதிக்கும் எந்தவொரு நோயும் இதயச் செயல் இழப்பை ஏற்படுத்தலாம். என்றாலும், உடனடியாக இந்த நோயை வரவழைக்கும் நோய்கள் வரிசையில் முன்னணியில் நிற்பவை ‘ஆஞ்சைனா’வும் மாரடைப்பும்தான்.


  டாக்டர் கு. கணேசன்


  Last edited by chan; 16th Jun 2015 at 01:33 PM.
  Dangu likes this.

 10. #40
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Heart Care- இதயத்தை காப்போம்

  ஆயுள் வளர்க்கும் ஆஸ்பிரின்


  தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம் என்று கூறுவார்கள். இதை நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ… ‘தினமும் ஒரு ஆஸ்பிரின் சாப்பிடுங்கள்; உங்கள் ஆயுள் அதிகரிக்கும்’ என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். ‘‘என்ன, ஒரு ரூபாய் மாத்திரைக்கு இத்தனை மகத்துவமா?’’ என்று கேட்பது காதில் விழுகிறது.

  சாதாரணமாக காய்ச்சல், தலைவலி, உடல் வலிக்குத் தரப்படுகிற ஆஸ்பிரின் மாத்திரை உயிர் காக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது என்பது உண்மை! இன்றைய இயந்திரகதியிலான வாழ்க்கைச் சூழலில் மன அழுத்தம் உள்ளவர்கள், நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, உடல் பருமன், அதிக கொழுப்பு உள்ளவர்கள், புகைபிடிப்பவர்கள், நாற்பது வயதைக் கடந்தவர்கள் ஆகியோருக்கு மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

  இதயத் தசைகளுக்கு ரத்தம் கிடைப்பது குறையத் தொடங்குவதால் வரும் மாரடைப்புக்கு ‘ஆஞ்சைனா’ (Angina) என்று பெயர். மாடிப்படிகளில் ஏறும்போதும், வேகமாக நடக்கும்போதும் நடுநெஞ்சில் பாரம் வைத்து அழுத்துவதுபோல் வலிக்கும். நடப்பதை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டால், நெஞ்சுவலி குறைந்துவிடும். இதயத்துக்கு ரத்தமும் ஆக்ஸிஜனும் தேவையான அளவுக்குக் கிடைக்காத காரணத்தால் இந்த வலி வருகிறது.

  சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி அழுத்துவது போல் கடுமையாக வலிக்கும். இந்த வலி கழுத்து, தாடை, இடதுபுஜம், இடது கைவிரல்களுக்குப் பரவும். உடல் அதிகமாக வியர்த்துக் கொட்டும். ஓய்வெடுத்தாலும் நெஞ்சு வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். மயக்கம் வரும். இதுதான் முழுமையான மாரடைப்பு (Myocardial infarction). ரத்தக்குழாயில் கொழுப்பு / ரத்தக்கட்டி அடைத்துக்கொள்வதால் இது ஏற்படுகிறது.

  இந்த இரண்டுக்கும் உயிர் காக்கும் மருந்தாக ஆஸ்பிரின் விளங்குகிறது. ரத்தக்குழாயை விரிக்கிற தன்மை ஆஸ்பிரினுக்கு உண்டு என்பதால், ‘ஆஞ்சைனா’ வலியின்போது சுருங்கிய நிலையில் உள்ள கரோனரி ரத்தக்குழாய்களை விரித்துவிடுகிறது.

  ரத்தம் இதயத்தசைகளுக்குத் தடையில்லாமல் கிடைத்துவிடுகிறது. இந்தக் காரணத்தால் ஆஞ்சைனா வலி குறைந்துவிடுகிறது. இதுபோல் ரத்தம் உறைகிற தன்மையைத் தடுக்கும் குணமும் இதற்கு உண்டு என்பதால், இன்ஃபார்க்*ஷன் எனும் மாரடைப்பிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது.

  எனவேதான், கோவையைச் சேர்ந்த இதயநோய் மருத்துவர் டாக்டர் ஜி.பக்தவத்சலம் அண்மையில் அளித்த பேட்டியில், ‘‘மாரடைப்பு அறிகுறிகள் தெரிய வரும்போது உடனடியாக டிஸ்பிரின் (ஆஸ்பிரின்) 325 மில்லி கிராம், அட்டார்வாஸ்டாடின் 80 மி.கி., குளோபிடாப் 150 மி.கி. சாப்பிட்டால் ரத்தம் உறைவதைத் தடுத்து, மாரடைப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும். பின்னர் மருத்துவமனை சென்று உரிய சிகிச்சை பெற்றுக்கொண்டால் உயிர் பிழைக்கலாம்’’ என்று கூறியுள்ளார்.இந்த அற்புத ஆஸ்பிரினை யார், எப்படிக் கண்டுபிடித்தார்கள்?

  கி.மு.400ம் ஆண்டில் கிரேக்க மருத்துவ மேதை ஹிப்போகிரேடஸ் பெண்களுக்குப் பிரசவ வலியைக் குறைப்பதற்கு கருநொச்சி இலைகளைச் (Willow Leaves) சாறு பிழிந்து கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 1763ல் இங்கிலாந்து மருத்துவர் எட்வர்டு ஸ்டோன் என்பவர் கருநொச்சிப் பட்டையிலிருந்து மருந்து தயாரித்து மூட்டுவாதக் காய்ச்சலைக் (Rheumatic fever) குணப்படுத்தினார். ஆனால், இந்த இருவருக்கும் கருநொச்சி இலையிலும் பட்டையிலும் என்ன மூலப்பொருள் இருக்கிறது என்பது தெரியவில்லை.

  1823ல் இத்தாலிய விஞ்ஞானிகள் சிலர் கருநொச்சிச் சாற்றிலிருந்து ‘சாலிசின்’ (Salicin) மூலப்பொருளைப் பிரித்தெடுத்து, அதுதான் வலிகளைப் போக்குகிறது என்று நிரூபித்தனர். இதைத் தொடர்ந்து பிரான்ஸ் விஞ்ஞானிகள் சாலிசிலிக் அமிலத்தை இதிலிருந்து தயாரித்தனர்.

  ஆனால் இது குடலுக்குள் சென்றதும் குடல் தசைகளை அரித்துப் புண்ணாக்கி வலி ஏற்படுத்திய காரணத்தால், 1893ல் ஜெர்மனி நாட்டு விஞ்ஞானிகள் ‘அசிடைல்’ எனும் வேதிவகையை அதனுடன் சேர்த்து, குடலைப் பாதிக்கும் பக்க விளைவைக் குறைத்தனர். ‘அசிடைல் சாலிசிலிக் அமிலம்’ என்று அதற்குப் பெயரிட்டனர்.

  என்றாலும் இன்று நாம் பயன்படுத்தும் ஆஸ்பிரின் மருந்தை ஜெர்மனி நாட்டு விஞ்ஞானி ஃபெலிக்ஸ் ஹாஃப்மேன் (Felix Hoffmann) என்பவர்தான் கண்டுபிடித்தார். இவர் பேயர் (Bayer) மருந்து நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி.

  சாலிசிலிக் அமிலத்துடன் அசிட்டிக் அன்ஹைட்ரைடை அசிட்டிலேஷன் முறையில் கலந்து செயற்கையான வழியில் அசிட்டைல் சாலிசிலிக் அமிலத்தைத் தயாரித்தார். முதன்முதலில் இதை ‘ஆஸ்பிரின்’ என்ற பெயரில் 1899ல் மனிதப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவர் இவர்தான்.

  இந்த மருந்தின் மகத்துவம் முழுமையாக அறியப்பட்டது 1974ம் ஆண்டில். அதுவரை வலி நிவாரணியாகவும் காய்ச்சல் மருந்தாகவும் மட்டுமே அறியப்பட்டிருந்த ஆஸ்பிரினுக்கு மாரடைப்பைத் தடுக்கும் குணமும் உண்டு என்று இங்கிலாந்து மருத்துவர் பேராசிரியர் பீட்டர் எல்வுட் கண்டுபிடித்தார்.

  சாலையின் மத்தியில் கற்களைக் குவித்து விட்டால் பயணம் தடைபடுவதைப்போல, ரத்தக் குழாய்க்குள் தட்டணுக்கள் ஓரிடத்தில் குவிந்து, ரத்தம் உறைந்து மாரடைப்பு வருவதுண்டு. இதைத் தடுக்கும் பண்பு ஆஸ்பிரினுக்கு உள்ளதால் மாரடைப்பு தவிர்க்கப்படுகிறது என்பதை பல சோதனைகள் வாயிலாக இவர் உறுதி செய்தார்.

  ஆஸ்பிரின் வலியைப் போக்குகிறது என்று மட்டுமே பொதுவாக அறியப்பட்டிருந்த நேரத்தில் ‘உடலில் வலிகளை உண்டாக்குகிற புராஸ்டாகிளான்டின் உற்பத்திக்குத் தேவையான என்சைமை ஆஸ்பிரின் தடுக்கிறது. இதன் காரணமாகவே ஆஸ்பிரின் சாப்பிட்டதும் வலி குறைகிறது’ என்று இங்கிலாந்து பேராசிரியர் ஜான் வானே மற்றொரு மகத்துவத்தைக் கண்டுபிடித்தார். இந்த அரிய கண்டுபிடிப்புக்காக 1982ல் இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.

  ஆஸ்பிரின் மகத்துவம் இத்தோடு நிற்கவில்லை. முதுமையில் ஏற்படுகிற பக்கவாத நோய், ஞாபக மறதி, கர்ப்பிணிகளுக்கு ஏற்படுகிற ‘முன் பிரசவ வலிப்பு நோய்’, குடல் புற்றுநோய் ஆகியவற்றைத் தடுக்கவும் இது பயன்படுவதாக அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள் நிரூபித்துள்ளனர். மிகவும் குறைந்த செலவில் அரிய உயிரைக் காக்கும் ஆஸ்பிரினுக்கு சபாஷ் போடலாமா!

  Dangu likes this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter