Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree97Likes

Heart Care- இதயத்தை காப்போம்


Discussions on "Heart Care- இதயத்தை காப்போம்" in "General Health Problems" forum.


  1. #41
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    உயர் ரத்த அழுத்தம் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டியவை


    உலகம் முழுதும் 25 முதல் 30 சதவீதத்தினர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உணவில் சேர்க்கும் உப்புக்கும், ரத்த அழுத்தத்திற்கும் தொடர்பு உண்டு. அதிக உப்பு சேர்த்து கொண்டால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். சிலருக்கு, சிறியளவில் உப்பு சேர்த்து கொண்டாலே, உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.

    சீரான உடல்நிலையில் உள்ளவர்கள் தினமும், 5 கிராம் அல்லது ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு, நாள் ஒன்றுக்கு, மொத்தமாக தேவைப்படும் உப்பு, 4 டீஸ்பூன் தான். உப்பு அளவை கணக்கிடும் போது, உணவில் இயற்கையாகவே உள்ள உப்பையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லா உணவிலும் – குடிநீரில் கூட, இயற்கை உப்பு உள்ளது.

    ரத்த அழுத்தத்தைச் சீராக்க, நிறைய மருந்துகள் தற்போது கிடைக்கின்றன.

    வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு, இவ்வகையான மருந்துகளையும் சிறியளவில் உட்கொண்டு வந்தால், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

    உடல் எடை அதிகரிக்கும் போது, ரத்தக் குழாய்களுக்கான அழுத்தம் அதிகரிக்கும். எனவே, பி.எம்.ஐ., அளவைச் சரியாக வைத்துக் கொள்ளுங்கள். செயலற்றுக் கிடப்பவர்களின் இதயத் துடிப்பு அதிகரித்து, தேவைக்கு அதிகமான பணி செய்யும் நிலை ஏற்படும்.

    எனவே, இதயம் சீக்கிரம் செயலிழக்கும். நடைபயிற்சி, மித ஓட்டப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, ஓட்டப் பயிற்சி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம். 6 வயது முதலே இதை துவங்கலாம். முதலில் 20 நிமிட ஓட்டமாக துவங்கி, 18 வயது நிரம்பியவுடன், ஒரு மணி நேர ஓட்டமாக அதிகரித்துக் கொள்ளலாம்.

    புகை பிடிப்பது, அருகில் இருப்பவர் விடும் புகையை சுவாசிப்பது, மூக்குப்பொடி போடுவது, புகையிலை மெல்வது ஆகியவை, ரத்தக் குழாய்களை பாதிக்கும் வகையிலான ரசாயனங்களை வெளியிடுகின்றன. இவை ரத்தக் குழாய்களை சுருக்கி விடுவதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. உணவில் தினமும் 5 கிராமோ அல்லது அதற்கு குறைவான அளவோ, உப்பு சேர்ப்பது நல்லது.

    உடலில் நீர் சத்தை தக்க வைக்க இது பயன்படும். இந்த அளவை மீறினால், அதே நீரே, உடலில் தங்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். பழங்கள், காய்கறிகளில் உள்ள பொட்டாசியம் சத்து, உடலில் சேரும் உப்புச் சத்தை அதிகரிக்க விடாமல் செய்கிறது. எனவே, தினமும் 4 முதல் 6 முறை பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும்.

    உணவு மூலமாக கிடைக்கும் அல்லது சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின் டி சத்து, சிறுநீரகத்தில் நொதிகளைச் சீராகச் செயல்பட வைத்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் பாதுகாக்கும். எனினும், அதிகளவிலோ அல்லது தாறுமாறாகவோ வெயிலில் அலைய நேர்ந்தால், ரத்த அழுத்தமும் சீரற்றதாகி விடும். மது அருந்துவது, இதயத்தை பாதிக்கிறது.

    ஒரே நேரத்தில் 2 அல்லது 3 கோப்பை மது அருந்தினால் கூட, ரத்த அழுத்தத்தில் மாறுபாடு தோன்றும். அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது, இதயம் நிரந்தர பாதிப்புக்கு உள்ளாகி விடும். தொடர்ந்து அதிக பதட்டத்துடன் இருந்தாலும், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். தியானம், யோகா ஆகியவற்றின் மூலம் பதட்டத்தை தவிர்க்கலாம்.

    பதட்டத்தை தவிர்க்க, சிலர் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, புகை பிடிப்பது, மது அருந்துவது ஆகியவற்றை மேற்கொள்கின்றனர். நீரிழிவு நோய், அதிக கொழுப்புச் சத்து சேர்வது, சிறுநீரக நோய், தூக்கமின்மை ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அவை, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் முக்கிய காரணிகள்.


    Sponsored Links
    Dangu likes this.

  2. #42
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    இதயக் கோளாறு வராமல் தடுக்க என்ன செய்யலாம்


    புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடல் உழைப்பின்மை இவற்றைத் தவிர்த்தாலே போதும், இதயக் கோளாறுகளால் ஏற்படும் 80 சதவிகித மரணங்களைத் தவிர்த்துவிடலாம். நம் வாழ்வியல் முறையில் கடைப்பிடிக்கும் சில எளிய செயல்பாடுகள் நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்… இதய நோய்கள் வராமல் நம்மைக் காப்பாற்றும். அவை என்னவென்று பார்க்கலாம்.

    * பச்சைப் பருப்புகள், ஆலிவ் எண்ணெய், மீன் எண்ணெய், ஆளி விதை (Flax seeds), அவோகாடோ பழம் (Avocados) போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம்.

    * பசுமையான காய்கறிகளையும் பழங்களையும் ஃப்ரெஷ்ஷாகவோ அல்லது வெண்ணெய் சேர்க்காமல் சமைத்தோ சத்துணவாக எடுத்துக் கொள்ளலாம்.

    * தானியம் மற்றும் பயறு வகைகளால் தயாரிக்கப்பட்ட உணவுகள், பிரெட், பாஸ்டா ஆகியவற்றை உண்ணலாம்.

    * புரதச்சத்துக்கு மீன் மற்றும் நண்டு போன்ற அசைவ உணவுகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கலாம்.

    * உடலுக்குத் தேவைப்படும் கால்சியம் சத்துக்கு முட்டையின் வெள்ளைக்கரு, ஆடை நீக்கப்பட்ட பால், கொழுப்பு நீக்கப்பட்ட பால், கொழுப்பில்லாத சீஸ் அல்லது தயிர் சாப்பிடலாம்.

    * பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், குறிப்பாக சோடியம் அதிகமாக உள்ள உணவு வகைகளுக்கு ‘நோ’ சொல்லிவிட வேண்டும்.

    * அரிசி உணவுகள், முட்டை சேர்க்கப்பட்ட உணவு, எண்ணெயில் பொரித்த உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது.

    * வறுத்த கோழி, இறைச்சி, உப்புக்கண்டம் போட்ட பன்றி இறைச்சி, அதிகம் மசாலா சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்து விட வேண்டும்.

    * பாலில் தயாரிக்கப்பட்ட சீஸ், தயிர், முட்டையின் வெள்ளைக்கரு போன்றவற்றைத் தொடக் கூடாது. மிக அதிகமாக பால் சாப்பிடக் கூடாது.


    Dangu likes this.

  3. #43
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    பீ.பி. ஓடணுமா? ரிலாக்ஸ் ப்ளீஸ்!



    ரத்தக்கொதிப்பானது இன்றைய அவசர உலகில் பலருக்கும் உள்ளது. வேலைப்பளு காரணமாகவும், ஓயாத மன உளைச்சலின் காரணமாகவும் இது ஏற்படுகிறது. நம் ஒவ்வொருவருக்கும் ஓரளவு இயற்கையிலேயே ரத்த அழுத்தம் இருக்கும். இவை பரம்பரை மூலமாகவும் ஏற்படக்கூடியது. இதனை முழுவதுமாக தவிர்க்க முடியாது. மாறாக உணவு கட்டுப்பாடு மற்றும் சில எளிய பயிற்சியின் மூலம் கட்டுக்குள் வைக்கமுடியும்.

    ரத்தக் கொதிப்பு ஏற்படுவது ஏன்?

    ரத்தக் கொதிப்பு என்பது அதிக ரத்த அழுத்தத்தினால் ஏற்படுவது. இது ஏற்படுவதற்கான காரணங்களை துல்லியமாக கூறமுடியாது. அது பெற்றோரிடமிருந்து பிள்ளைகள் என, பரம்பரை பரம்பரையாக தொடர்வதாகும். பொதுவாக இவை தொடர் மனஅழுத்தத்தின் காரணமாகவும், ஓய்வில்லாத கடுமையான உழைப்பு, அதிக அளவு கொழுப்பு சத்துள்ள உணவு பொருட்களின் மூலமும் மற்றும் இறைச்சி, தேயிலை, புகையிலை மற்றும் போதை பொருட்களின் மூலமாகவும் உண்டாகிறது.

    ரத்த அழுத்தம் ஒரே நாளில் ஏற்படுவதில்லை. நீண்ட காலங்கள் உள்ளூற இருந்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். நம்முடைய ரத்த அழுத்தம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு ஏற்ப மாறும்.

    துயரம், அதிக அளவிலான மகிழ்ச்சி, அச்சம் மற்றும் கட்டுக்கடங்காத உணர்ச்சிகள் மூலமாக ரத்த அழுத்தமானது, 30 முதல் 60 எண்கள் வரை உயரும். நாம் உறங்கும் போது உள்ளதை விட, நடக்கும் போதும் அதைவிட ஓடும் போதும், ரத்த அழுத்தம் அதிகரிக்கக் கூடும்.

    தியான முறைகளை பின்பற்றலாம்!
    ரத்த கொதிப்பிற்கு மலச்சிக்கலும் முக்கிய காரணமாகும். சரியான நேரத்தில் எப்படி உணவு உட்கொள்கிறோமோ அது போல மலம் கழித்தலையும் குறித்த காலத்தில் முடிக்க வேண்டும். அதிக அளவு பழம், சுத்தமான பசும்பால் மற்றும் நிறைய தண்ணீர் அருந்தி வந்தால் இந்த மலச்சிக்கல் வராது.

    செய்யக்கூடாதவை
    ரத்த கொதிப்புள்ளவர்கள் அதிக நேரம் ஓய்வின்றி கண்விழித்தல் கூடாது. உணர்ச்சிகளை தூண்டக்கூடிய சினிமா அல்லது செயல்களை தவிர்க்க வேண்டும். அதிகளவு கோபத்தை காட்டக்கூடாது. காபி, டீ, குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். புகையிலை சம்மந்தமான எதையும் பயன்படுத்தக்கூடாது. முக்கியமாக, மது அருந்தக்கூடாது.

    செய்யவேண்டியவை
    ரத்த கொதிப்புள்ளவர்கள் முதலில் அமைதியாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியோ அல்லது துன்பமோ அதிக அளவு உணர்ச்சிகளை காட்டக்கூடாது. இவை நம்மை அதிகளவு பாதிக்கும். வேலை நேரம் போக அதிகளவு ஓய்வெடுக்க வேண்டும்.


    Dangu likes this.

  4. #44
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    நெஞ்சு வலியும், மாரடைப்பும் ஒன்றல்ல!


    நம் இதயம் ஒரு தசை. நிமிடத்துக்கு, 70 – 80 முறை துடிக்கும். இந்த தசைப் பகுதிக்கு ரத்தத்தைக் கடத்தும் மூன்று முக்கிய ரத்தக் குழாய்களில் சிதைவு ஏற்பட்டால், ரத்தக் கட்டி உருவானால் அல்லது இன்னும் சில காரணங்களால், இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவது தான் மாரடைப்பு.தசைப் பிடிப்பு, நெஞ்சு எலும்பிலோ, உணவுக் குழாயிலோ பிரச்னை போன்ற பல காரணங்களால் நெஞ்சு வலி ஏற்படலாம்;

    அது மாரடைப்பல்ல.சாதாரண நெஞ்சு வலி, தாங்க முடிகிற அளவில் இருக்கும். மாரடைப்பின்போது நெஞ்சில் மிக அதிக வலி இருக்கும். அந்த வலி இடது கையில் பரவும்; அதிகமாக வியர்க்கும்; மூச்சடைக்கும்; மயக்கமும், உச்சபட்சமாக மரணம் கூட ஏற்படும்.பொதுவாக முதல், ‘அட்டாக்’கில், 10 – 20 சதவீதம் பேர், மருத்துவமனைக்கு வருவதற்குள்ளாகவே இறந்து விடுகின்றனர்; அந்தளவுக்கு அது தீவிரமாக இருக்கும்.பெரும்பாலும் நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்களையே இலக்காகக் கொண்டிருந்த மாரடைப்பு, இப்போது, 20 வயதினருக்கு கூட ஏற்படுகிறது.

    மரபு, சர்க்கரை நோய், புகைப்பழக்கம், மன அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் போன்றவை, மாரடைப்பின் காரணிகள். தேங்காய் எண்ணெயில் சமைத்தால், ‘ஹார்ட் அட்டாக்’ வரும் என்பது தவறான தகவல். தேங்காய் எண்ணெய், குறிப்பாக, ‘வெர்ஜின் தேங்காய் எண்ணெய்’ நம் உடலுக்கு நல்லதே.

    இதய நோயாளிகள், காய், பழங்கள் அதிகமாகவும், சாதத்தைக் குறைத்தும், எண்ணெய் உணவுகள், வெண்ணெய், நெய் போன்றவற்றைத் தவிர்த்தும், சாப்பிட வேண்டியது அவசியம். விலை குறைவாகக் கிடைக்கும் மத்தி மீனில், இதயத்துக்கு ஆரோக்கியம் தரும், ‘ஒமேகா 3′ ஆயில் இருப்பதால், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து சாப்பிடலாம்.
    பத்து ஆண்டுகளுக்கு மேல் சர்க்கரை நோய் இருப்போருக்கு, ‘சைலன்ட் அட்டாக்’ வர வாய்ப்புகள் அதிகம்.

    இவர்களுக்கு நரம்புகள் பாதிப்படைந்திருக்கும் என்பதால், மாரடைப்பு வந்தாலும் நெஞ்சுவலி தெரியாது. வாந்தி உணர்வு, மூச்சு விட சிரமம் மற்றும் வியர்வை போன்ற அறிகுறிகளை உணரலாம்.இதய நோயாளிகள், ஆஸ்பிரின், அடோர்வாஸ்டாடின், க்ளோபிடாப் மாத்திரைகள், கையுடன் வைத்திருக்க வேண்டியவை என்றும், ஹார்ட் அட்டாக் வந்த நேரத்தில், உடனடியாக இவற்றை சாப்பிட்டால், மூன்று மணி நேரத்துக்கு ஆபத்தில்லை என்றும், ஒரு செய்தி பரவலாக இருக்கிறது.

    இந்த மாத்திரைகளை சாப்பிடுவதால் தப்பில்லை. முதல் ஒரு மணி நேரத்துக்குள் இந்த மாத்திரையை உட்கொண்டால், மேலும் ரத்தக் கட்டி உருவாவதை தடுக்கும். ஆனால், இது மட்டுமே சிகிச்சை அல்ல; இது, முதலுதவி மட்டுமே.


    Last edited by chan; 28th Jun 2015 at 04:25 PM.
    Dangu likes this.

  5. #45
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    மாரடைப்பு என்றால் என்ன?


    இதயத்திற்கு ரத்தத்தைக் கொடுக்கும் ரத்தக் குழாய் முழு அடைப்பு ஏற்பட்டால் மார்பு வலி வரும். சிலருக்கு மரணத்தை கொடுக்கும். அஞ்சைனா என்ற மார்புவலி, ரத்தக்குழாயில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை அடைப்பு ஏற்பட்டால் வரும். இந்த அடைப்புகளால் இதய தசைகள் செயல் குறைந்து, நலிவடைகிறது.

    இ.எப்., என்ற இதய தசைகள் இயக்கத்தின் செயலை குறிக்கும் குறியீடு. இது 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை இருக்க வேண்டும். இதுதான் முதலில் ஏற்படுகிறது. அதன்பின் தான் மார்புவலி. கரோனரி ரத்தக்குழாயின் முழு அடைப்புதான் மாரடைப்புக்குக் காரணம். முன் கூட்டியே, 70 முதல் 90 சதவீதம் அடைப்புள்ள குழாயில், மீதியுள்ள குழாயில் ரத்தம் உறைந்து முழு அடைப்பாகிறது.

    இந்த நேரத்தில், மார்புக் கூடு முன் கடுமையான வலி, இந்த வலி இடது தோல் பட்டைக்கு பரவுதல், முதுகுக்குப்பின் வலி வருதல், சில சமயங்களில் பல் வலி, பகட்டு வலி, கழுத்து வலி, விழுங்க கஷ்டம், காஸ் அடைப்பு போன்று பல அறிகுறிகள் தென்படலாம்.

    மவுனமான மாரடைப்பு:

    இந்த அறிகுறிகள் இல்லாமல், பரிசோதனைக்கு வரும்போது மாரடைப்பு கண்டு பிடிக்கப்படுகிறது. இது மவுனமான மாரடைப்பு. இதை இ.சி.ஜி., மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த மாரடைப்பை ஊர்ஜிதம் செய்ய, என்சைம் பரிசோதனை செய்யலாம். தற்போது டிராப்ட் டெஸ்ட் என்ற பரிசோதனை இதய தசைகள் பழுதடைந்ததை காட்டும். அதன்பின், எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை. இவைகள் செய்த பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும்.

    இதை முடிவு செய்வது இதயநோய் நிபுணர் அல்லது அவர் ஆலோசனையில் சேர்ந்து, அவரது ஆலோசனைப்படி மருத்துவம் பார்க்க வேண்டும். இதயநோய் நிபுணர், குறிப்பாக, ஊருருவல் வல்லுனர்களால் மாரடைப்பு, மார்பு வலிக்கு காரணமான கரோனரி குழாய் அடைப்பை சரி செய்ய இவர்களால் தான் முடியும்.

    அதாவது, முழுமையான சிகிச்சை கொடுக்க முடியும். மார்புவலி, மாரடைப்பு என்று அறிந்த பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும். இல்லையென்றால், அன்ஸ்டேபில் ஆஞ்ஜினாவால் (UNSTABLE ANGINA) ஒருநாள் கண்காணித்து, அடுத்த நாள் அனுப்பலாம்.

    Dangu likes this.

  6. #46
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    ஓபன் ஹார்ட் ஆபரேஷன் என்றால் என்ன?
    ஐந்து நிமிடங்களுக்கு மேல் ரத்த ஓட்டம். இல்லையென்றால், உடனே இதயம் நின்று போகும். இதயம் வேலை செய்யாது நின்று போனால், மூளை உட்பட அத்தனை உறுப்புகளும் செயலிழந்து, உயிர் நம் உடம்பிலிருந்து பிரிந்து மனிதன் இறந்து போக நேரிடும். இதயத் துடிப்பை நிறுத்தி இதய ஆபரேஷன் செய்வதால் மட்டும் ஓபன் ஹார்ட் ஆபரேஷன் என்று கூறிவிட முடியாது.

    சாதாரணமாக 5 நிமிடங்களுக்கு மேல் இதயத்துடிப்பு நின்றாலே நாம் இறந்து விடுவோம். ஆனால், ஓபன் ஹார்ட் ஆபரேஷனில் 5 மணி நேரத்திற்கும் மேல் இதயத்துடிப்பை நிறுத்தி, மறுபடியும் இதய இயக்கத்தை உண்டாக்கி நோயாளியைப் பிழைக்க வைக்க முடியும். இந்த,”ஓபன் ஹார்ட்’ (திறந்த முறை) இதய அறுவைச் சிகிச்சை முறையில் செயற்கை இதய, நுரையீரல் இயக்கி வைக்க முடிகிறது.

    இந்த சிறந்த முறை அறுவைச் சிகிச்சை முறையில் உடம்பிலுள்ள பிராண வாயு குறைந்த (அசுத்த) ரத்தம் முழுவதும் இரண்டு பெரிய பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டு உடம்பிலிருந்து உறியப்பட்டு, அந்த அசுத்த ரத்தம் செயற்கை நுரையீரல் மிஷினில் செலுத்தப்படுகிறது. செயற்கை நுரையீரல் மிஷின் உடம்பின் வெளியே கொண்டு வரப்பட்ட அசுத்த ரத்தத்தை முழுவதும் சுத்தம் செய்து 100 சதவீதம் பிராணவாயு கலந்து சுத்த ரத்தமாக மாற்றுகிறது.

    இதயத்தை திறந்து ஆபரேஷன் முழுவதும் முடிந்தவுடன் 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் குறைவான ரத்த வெப்பத்தை, ஹைபோதெர்மியா மிஷின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தி, 37 டிகிரி செல்சியஸ் அளவு வந்தவுடன், இதயம் துடிக்க ஆரம்பிக்கிறது. அதே சமயம், மகாதமனியை கிளாம்ப் செய்த உபகரணத்தை எடுத்து விட வேண்டும்.

    அந்த சமயத்தில் ஆபரேஷன் பண்ணப்பட்ட நோயாளியின் ரத்தத்தின் அமிலம், காரத்தன்மை மற்றும் ரத்த பொட்டாசியம், சோடியம் போன்ற உப்புச்சத்துக்களைச் சரி செய்து, உடம்பின் ரத்தம் கசியும் தன்மையையும் சரி செய்தவுடன், இதயத்துடன் இணைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் ஒவ்வொன்றாக எடுத்து, கசியும் ரத்தத்தை உடம்பிலிருந்து வெளியேற்ற இதயத்தின் மேலும், வலது மார்புகூட்டிலும், பிளாஸ்டிக் குழாய்களை இணைத்து, உடம்பில் வீணாகும் ரத்தத்தை உடம்பின் வெளியே ஒரு பெரிய கண்ணாடி பாட்டிலில் இணைத்துவிடலாம்.

    ஆபரேஷன் செய்த பிறகு இதயம் சரிவர துடிப்பதற்கும், மூளை, நுரையீரல் போன்ற மற்ற உறுப்புகள் சரியாக வேலை செய்வதற்கும் ஆபரேஷன் செய்த புண் ஆறுவதற்கும் சரியான மருந்துகளைக் கொடுத்து இதய ஆபரேஷன் செய்த நோயாளியை முற்றிலும் குணப்படுத்தி விடலாம்.

    Dangu likes this.

  7. #47
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    பைபாஸ் சர்ஜரி என்றால் என்ன?


    பைபாஸ் சர்ஜரி என்பது இதய ரத்தக்குழாய் முழுவதும் அடைபடுவதால் உண்டாகக்கூடிய மாரடைப்பு நோய்க்கு செய்யக்கூடிய இதய ஆபரேஷன். இந்த ஆபரேஷனை திறந்த முறை இதய ஆபரேஷன் மூலம், செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகப்படுத்தி இதய துடிப்பை நிறுத்தியும் ஆபரேஷன் செய்யலாம்.

    இதயத்துடிப்பை நிறுத்தாமலும், செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகிக்காமலும் ஆபரேஷன் செய்யலாம். பைபாஸ் சர்ஜரி செய்வதற்கு காலில் உள்ள அசுத்த ரத்தத்தை இதயத்திற்கு கொண்டு செல்லும் செபனஸ் ரத்தக்குழாய் மற்றும் மார்புக்கூட்டின் உட்புறமுள்ள இடது மற்றும் வலது உள்மார்பு ரத்தக்குழாய்கள் மற்றும் முன் கையில் உள்ள ரேடியல் ரத்தக்குழாய்கள் போன்றவற்றை உபயோகித்து மேற்கூறிய ஒன்று அல்லது

    அதற்கு மேற்பட்ட ரத்தக்குழாய்களின் அடைப்பின் தன்மையைப் பொறுத்து மகாதமனியின் ஆரம்பத்திலும், இதய ரத்தக் குழாய் அடைப்பின் கீழும் இணைத்து பைபாஸ் சர்ஜரி செய்யப்படுகிறது. பைபாஸ் சர்ஜரி என்பது ஓபன் ஹார்ட் சர்ஜரியின் மூலமும் செய்யக்கூடிய ஒரு தனிப்பட்ட இதய அறுவைச் சிகிச்சை முறை.

    Dangu likes this.

  8. #48
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?


    அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக.. உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்…

    மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:

    சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

    சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும்.

    திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும். இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும்.

    இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.

    மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு:

    மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும். தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும்.

    60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாது.
    உறக்கத்திலேயே இறந்துவிடுவர்.

    தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும்.

    ஆகவே எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
    படித்தவுடன் உங்களின் நண்பர்களுக்கு கண்டிப்பாக பகிருங்கள்.

    விழிப்புணர்வுடன் பகிர்ந்தால் குறைந்தபட்சம் ஒரு உயிரையாவது காப்பாற்ற முடியும்...


    Dangu likes this.

  9. #49
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டியவை


    ரத்தக் கொதிப்பு என்பது அதிக ரத்த அழுத்தத்தினால் ஏற்படுவது. இது ஏற்படுவதற்கான காரணங்களை துல்லியமாக கூறமுடியாது. அது பெற்றோரிடமிருந்து பிள்ளைகள் என, பரம்பரை பரம்பரையாக தொடர்வதாகும்.

    பொதுவாக இவை தொடர் மனஅழுத்தத்தின் காரணமாகவும், ஓய்வில்லாத கடுமையான உழைப்பு, அதிக அளவு கொழுப்பு சத்துள்ள உணவு பொருட்களின் மூலமும் மற்றும் இறைச்சி, தேயிலை, புகையிலை மற்றும் போதை பொருட்களின் மூலமாகவும் உண்டாகிறது. ரத்த அழுத்தம் ஒரே நாளில் ஏற்படுவதில்லை.

    நீண்ட காலங்கள் உள்ளூற இருந்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். நம்முடைய ரத்த அழுத்தம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு ஏற்ப மாறும். துயரம், அதிக அளவிலான மகிழ்ச்சி, அச்சம் மற்றும் கட்டுக்கடங்காத உணர்ச்சிகள் மூலமாக ரத்த அழுத்தமானது, 30 முதல் 60 எண்கள் வரை உயரும். நாம் உறங்கும் போது உள்ளதை விட, நடக்கும் போதும் அதைவிட ஓடும் போதும், ரத்த அழுத்தம் அதிகரிக்கக் கூடும்.

    ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை :

    ரத்த கொதிப்புள்ளவர்கள் அதிக நேரம் ஓய்வின்றி கண்விழித்தல் கூடாது. உணர்ச்சிகளை தூண்டக்கூடிய சினிமா அல்லது செயல்களை தவிர்க்க வேண்டும். அதிகளவு கோபத்தை காட்டக்கூடாது. காபி, டீ, குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். புகையிலை சம்மந்தமான எதையும் பயன்படுத்தக்கூடாது. முக்கியமாக, மது அருந்தக்கூடாது. ரத்த கொதிப்புள்ளவர்கள் முதலில் அமைதியாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியோ அல்லது துன்பமோ அதிக அளவு உணர்ச்சிகளை காட்டக்கூடாது. இவை நம்மை அதிகளவு பாதிக்கும். வேலை நேரம் போக அதிகளவு ஓய்வெடுக்க வேண்டும்.

    Dangu likes this.

  10. #50
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    தமனி பாதித்தால் தாங்குமா இதயம்?



    நம் உடலில் தொடர்ந்து, 5 லி., ரத்தம் ஓடியபடி இருக்கிறது. ரத்தம் ஓடவில்லை என்றால், உடலில் உயிர் இல்லை என்று பொருள். மகா தமனியின் வழியாக, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தம் செல்கிறது; இதனால் மகா தமனி நெகிழ்வு தன்மை உடையது. இப்படி இதயத்திலிருந்து உடலின் பிற பாகங்களுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்தக் குழாய்கள், மகா தமனி (ஆர்ட்டெரி) எனப்படுகிறது. மகா தமனி, மூன்று சுற்றுச்சுவர்களை உள்ளடக்கியது.

    இதயம் பாதிக்க முக்கிய காரணம், ரத்தம் கொண்டு செல்லும் மகா தமனிகளில், பிரச்னை உண்டாவதே. இதில் முதன்மையானது அடைப்பு. ரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு தொடர்ந்து இருந்தால், அது மகா தமனியின் உட்சுவரில் படிந்து, அதை தடிக்க வைத்து, சுற்றளவைக் குறைத்து விடுகிறது, அதிகமான ரத்த அழுத்தம், பிறவியிலேயே இணைப்புத் திசுக்களில் ஏற்படும் கோளாறுகள், மரபியல் காரணங்கள் மற்றும் கடுமையான விபத்துகளால் ஏற்படும் பெருங்காயங்களால், தமனியைச் சுற்றியுள்ள மூன்று திசுச் சுவர்களுக்கிடையில், கிழிசல் ஏற்பட்டு, இதனுள் ரத்த ஓட்டம் பாயும். இவ்வாறு கிழிசல் ஏற்பட்டால், மகா தமனி உடைந்து, நோயாளி உடனே மரணத்தை தழுவி விடுவர்.

    தமனி பாதிப்பை கண்டறிந்தவுடன் திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை அல்லது நுண்துளை இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
    தமனி பாதிப்பு, இதயத்திற்கு எவ்வளவு அருகே இருக்கிறது என்பதை பொறுத்து, அறுவை சிகிச்சை முறையை, மருத்துவர் தீர்மானிப்பார். 40 முதல் 60 வயதினருக்கே, இந்த மகா தமனி பாதிப்பு ஏற்படுகிறது.

    முன்னெச்சரிக்கை அறிகுறிகளை கண்டறிவது கடினம். மாரடைப்புக்கான அறிகுறிகள் போன்றே தோன்றும். 'சி.டி., ஸ்கேன்' முடிவுகளில் மட்டுமே, இந்த நோயை உறுதிப்படுத்த முடியும். நம் நாட்டில் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு, குறைவாக இருக்கிறது. மேலும் இதற்கான சிகிச்சை முறையும் சற்றே கடினம் என்பதால், திறமையான மருத்துவர்களும் குறைவு.

    - எம்.எம்.யூசுப்
    நுண் துளை இதய அறுவை சிகிச்சை நிபுணர்,
    குளோபல் மருத்துவமனை, சென்னை.
    82206 69911


    Dangu likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter