Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree97Likes

Heart Care- இதயத்தை காப்போம்


Discussions on "Heart Care- இதயத்தை காப்போம்" in "General Health Problems" forum.


  1. #51
    butterfly09 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    Mumbai
    Posts
    51

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    Useful Info.... Thanks a lot


    Sponsored Links
    Dangu likes this.

  2. #52
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    இதயநோய்க்கு மருந்தாகும் செம்பருத்திப்பூ

    செம்பருத்தி... இது செம்பரத்தை, செவ்வரத்தை என்ற வேறு பெயர்களைக்கொண்டது. செம்பருத்தியின் பூவுக்கு நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. குறிப்பாக, இதயநோய்க்கு செம்பருத்திப்பூ அருமையான மருந்தாகும்.

    காலையில் வெறும் வயிற்றில் ஒன்றிரண்டு செம்பருத்திப்பூவின் இதழ்களைச் சாப்பிட்டு வந்தால், காலப்போக்கில் இதயநோய் குணமாகும். மேலும், இதயநோயாளிகளுக்கு வரக்கூடிய படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு என்று அத்தனை பிரச்னைகளையும் இந்த செம்பருத்திப்பூ சரிசெய்யக்கூடியது. மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்கள் செம்பருத்திப் பூக்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் பிரச்னைகள் தீருவதோடு கர்ப்பப்பை குறைபாடுகள் சரியாகும்.

    செம்பருத்திப்பூக்களை தலைக்குத் தேய்க்கும் சிகைக்காய் பொடியுடன் சேர்த்துப் பயன்படுத்தினால், பொடுகு, முடி உதிர்தல், இளநரை போன்ற பிரச்னைகள் சரியாகும். காயவைத்த செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, பயத்தம்பருப்பு, கறிவேப்பிலை அனைத்தையும் பொடியாக்கி, சோப்புக்குப் பதிலாக தலை முதல் கால் வரை பூசி குளித்து வர, தோல் நோய்களில் இருந்து விடுபடலாம்!

    Dangu likes this.

  3. #53
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    பெண்களுக்கு வரும் மாரடைப்பு நோய் அறிகுறிகள்


    ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு நோய் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஆனால் அதற்கான அறிகுறிகள் ஆண்களைவிட பெண்களுக்கு வித்தியாசமானதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    மாரடைப்பு குறித்த அறிகுறிகளை பெண்கள் தெரிந்து கொள்வதன் மூலம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது இருதய நோய்கள் வருகிற வாய்ப்பும், மூளைவாதம் ஏற்படுகிற வாய்ப்பும் அதிகரிக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உலகில் 70 மில்லியன் பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிபரம்.

    உலகம் முழுக்க இருதய நோய்களை ஏற்படுத்தும் அபாயம் மிகுந்த காரணிகள் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமாக இருக்கிறது. ஆனால் மாரடைப்பு வரும் பெண்களுக்கு இருக்கிற எச்சரிக்கை அறிகுறிகள் ஆண்களுக்கு வருவது போல இல்லாமல் இருக்கலாம். ஒரு பெண்ணுக்கு இருதய நோய்களுக்கான எச்சரிக்கை அறிகுறிகள் பற்றித் தெரிந்திருப்பதும், ஆண்களைப் போல அல்லாத அறிகுறிகள் வரலாம் என்பதும் முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டும்.

    அறிகுறிகள் என்னென்ன?

    இருதய நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் ஆண்களைவிட பெண்களால் வேறு மாதிரி உணரப்படும். பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் மிக மென்மையாக இருக்கும். பொதுவாக அதிகப் படியான வேலை செய்வதால் ஏற்படுகிற சோர்வு, படபடப்பு, மூச்சிரைத்தல், நெஞ்சுவலி போன்றவை ஏற்பட்டால் உடனே இருதய நோய்களுக்காக கவனிக்கப்பட வேண்டும். இருதயத்தில் இருந்து தொடங்கும் பிரச்சினை எந்தவிதமான செயலிலும் மோசமடையக் கூடும்.

    புகைப்பிடிக்கும் பெண்கள்

    இருதய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் போதும், ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளுக்கு மாறி சுலபத்தில் அவற்றைத் தடுத்து திடமான ஆரோக்கியமான இதயத்துடன் வாழ முடியும். கண்டிப்பாக நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் இருதய நோய்கள் வருகிற வாய்ப்புகள் இருக்கிற பெண்கள் தடுப்பு நடவடிக்கையாக இருதயப் பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும்.

    புகைபிடிக்கும் பெண்கள் மற்றும் கருத்தடை மாத்திரை பயன்படுத்துபவர்கள் இருதயம் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு மாரடைப்பு, மூளைவாதம் இரண்டும் மற்ற சாதாரண பெண்களுக்கான அபாயத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்த அபாயம் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்னும் அதிகமாகிறது.

    உடல் எடையை கவனியுங்கள்

    மிதமான வேகம் கொண்ட உடல் உழைப்பில் தொடர்ந்து ஈடுபடுவதால் மோசமான இருதய நோய்கள் வரும் வாய்ப்பு கால் பங்கு குறைக்கப்படும். அதே நேரத்தில் உடல் உழைப்புடன், எடையை பராமரிப்பது, சத்தான உணவு உண்பது போன்ற வாழ்க்கை முறைகளும் இருந்தால் மாரடைப்பு போன்ற இதயநோய்கள் ஏற்படுவதை தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

    தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதால் இருதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரித்து, இருதயத்தின் சுருங்கி விரியும் திறன் கூடுகிறது. இதனால் இருதயம் சுலபமாக, நிறைய இரத்தத்தை வெளியேற்றும் சக்தி பெறுகிறது. உடற்பயிற்சியால் உங்கள் எடை அதிகரிப்பதும் தடுக்கப்படுகிறது.

    ஊட்டச்சத்துணவுகள்


    ஆரோக்கியமான இருதயத்திற்கு ஊட்டச்சத்துள்ள உணவைச் சாப்பிடுங்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பழங்கள், காய்கறிகள், முழுதானிய வகைகள் மற்றும் குறைந்த கொழுப்புப் பொருட்களைச் சாப்பிடுவதன் மூலம் இருதயத்தைப் பாதுகாக்க முடியும். குறைந்த கொழுப்பு உள்ள புரத வகை உணவுகள் கூட இருதய பாதிப்புகளைக் குறைக்கின்றன.

    பாலிஅன்சாச்சுரேட் வகை கொழுப்பில் வருகிற ஒமேகா 3 என்கிற கொழுப்பு அமிலம் உங்கள் இருதயத்திற்குப் பாதுகாப்பானது. இது மாரடைப்பைத் தடுக்க உதவும். ஒழுங்கற்ற இருதயத் துடிப்பை சரிசெய்ய உதவும். எனவெ ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பெண்களுக்கு இருதய நோய்களின் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது சிரமம் என்பது உண்மைதான். இருந்தாலும் வருமுன் காப்பதற்காக இவற்றில் போதிய விழிப்புணர்வு பெண்களுக்கு வேண்டும் என்பதே ஆராய்ச்சியாளர்கள் சொல்வதாகும்.









    Dangu likes this.

  4. #54
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    மாரடைப்பு யாருக்கு வரும்?

    வருமுன் காப்போம்!

    பலத்த மழை வரும் முன் இடி, மின்னல், குளிர்காற்று, மெல்லிய தூறல் என வானம் சில அறிகுறிகளை காட்டும். அதைப் பார்த்தே உஷார் ஆகலாம். அதே போல இன்று இளைஞர்களையும் மிரட்டிக் கொண்டிருக்கும் மாரடைப்பையும், முன்கூட்டியே தெரிகிற சில அறிகுறிகளைத் தெரிந்து கொண்டு தடுத்துவிடலாம் என்கிறார்கள் இதய நிபுணர்கள். மாரடைப்பு வருவதற்கு முன் வரும் அறிகுறிகள் என்ன? எப்படித் தப்பிக்கலாம்? இதய நோய் நிபுணர் ஜாய் எம்.தாமஸ் விளக்குகிறார்.

    ``மாரடைப்பு என பொதுமொழியில் சொல்லப்படுவதன் மருத்துவ பெயர் மயோகார்டியல் இன்ஃபார்க்*ஷன் (Myocardial infarction) என்பதாகும். இது வருவதற்கு முன்பே சில அறிகுறிகளைக் காட்டும். உடல் சோர்வு அதிகமாக இருக்கும். எந்தப் பிரச்னையும் இல்லாமல் இரண்டு, மூன்று மாடி ஏறுபவருக்கு, ஒரு மாடி ஏறியவுடனே அதிக சோர்வு ஏற்படும். எந்த உடற்பயிற்சிகளையும் சரிவர செய்ய இயலாது. தொண்டை அல்லது நெஞ்சுப்பகுதியில் அழுத்துவது போல இருக்கும். ஏசியில் உட்கார்ந்து வேலை செய்தால் கூட, அதிகமாக வியர்க்க ஆரம்பிக்கும்.

    இதயத்திலுள்ள ரத்தக்குழாய்களில் அடைப்பு இருந்தால் `ஆஞ்சினா பெக்டொரிஸ்’ என்னும் நெஞ்சுவலி வருவதும் கூட, மாரடைப்பு வருவதற்கான அறிகுறிதான். நீரிழிவு உள்ளவர்கள், சிகரெட், மதுப் பழக்கங்கள் உள்ளவர்களுக்கும் மாரடைப்பு தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். பரம்பரை வழியாகவும் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. குடும்பத்தில் 55 வயதுக்கு குறைவான ஆண்களுக்கோ, 65 வயதுக்கு கீழே உள்ள பெண்களுக்கோ மாரடைப்பு வந்து இருந்தால் அவர்களின் வாரிசுகளுக்கும் வரலாம்.

    மேல் வயிற்றுப்பகுதியில் பிடிப்பு ஏற்பட்டாலும், முதுகில் பிடிப்பும், சுருக்சுருக் எனக் குத்தினாலும் வாயுப்பிடிப்பு என்று அசட்டையாக இருந்துவிடக் கூடாது. இது மாரடைப்பு வருவதன் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம். பலர் வாயுப்பிடிப்பையும் மாரடைப்புக்கான அறிகுறியையும் குழப்பிக்கொள்கிறார்கள். நடக்கும்போதோ, உடற்பயிற்சி செய்யும் போதோ பிடிப்பு ஏற்படுவதும், பளுவான பொருளை தூக்கும்போது பிடிப்பு ஏற்படுவதும் மாரடைப்பு வருவதற்கான அறிகுறி. சாப்பிட்ட பிறகோ, இரவில் விருந்து சாப்பிட்டால் அதிகாலையில் ஏப்பம் வந்து முதுகில் பிடிப்பது வாயுப்பிடிப்பு.

    ‘ஆஞ்சினா பெக்டொரிஸ்’ வருவதைத்தான் நெஞ்சுவலி வந்தது என்பார்கள். நெஞ்சுவலி வரும் போது எந்த வேலையும் செய்யாமல் ஓய்வு எடுத்தால் உடலுக்கு ஆக்ஸிஜன் தேவை குறையும். இதனால் சிறிது நேரத்தில் சரியாகிவிடும்.மாரடைப்பு வரும் போது இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டமானது முழுமையாகத் தடைபடும். இதயத்திலுள்ள தசைகளும் செல்களும் பெருமளவு பாதிப்படையும்.

    இன்று பலருக்கு இளம் வயதிலேயே மாரடைப்பு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அதிக வேலைகளால் ஏற்படும் மன உளைச்சலே. தேவைக்கு அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற உந்துதலில் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களிலோ, ஒரே இடத்தில் மிக அதிக நேரமோ வேலை செய்வதும் வழக்கமாக இருக்கிறது. இதனால் போதுமான தூக்கமும் ஓய்வும் உடலுக்குக் கிடைப்பதில்லை.

    நீண்ட நேரம் அமர்ந்து பணிசெய்பவர்கள் அடிக்கடி எழுந்து நடப்பது அவசியம். தேவையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். போன் வந்தால் கூட, எழுந்து நின்றபடியோ நடந்தபடியோ பேச வேண்டும்.பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் போது, அவர்களை இதய நோய்களில் இருந்து காக்கும் புரோஜெஸ்ட்ரான், ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹார்மோன்களின் சுரப்பு நிற்கிறது. இதனால் 45 வயதுக்கு மேல் மாரடைப்பு வரும் அபாயம் அதிகம். 60 வயது தாண்டிய பெண்களில் நீரிழிவு உள்ளவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்புண்டு.

    வேலையில் அதிக மன உளைச்சல் உள்ளவர்களுக்கும், உயர்பதவி அனுபவிப்பவர்களுக்கும் திடீரென வேலை போய்விட்டால், அந்த அதிர்ச்சியில் மாரடைப்பு
    வரலாம். தம்பதிகளில் இணை திடீரென இறந்தால், அந்த அதிர்ச்சியாலும் மாரடைப்பு ஏற்படலாம். இளம் வயதில் கணவனை இழக்கும் மனைவிக்கு பாதுகாப்புணர்வு குறைவதும் இதற்குக் காரணமாகலாம். விவாகரத்து செய்து கொள்ளும் தம்பதிகளிலும், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் ஒருவருக்கு மாரடைப்பு
    எளிதாக வருகிறது.

    நடக்கும் போது நெஞ்சில் அழுத்தம் உருவானால், படி ஏறும் போது நெஞ்சு பிடிப்பது போல இருந்தால், தோள்பட்டையிலோ, தாடையிலோ வலி அடிக்கடி உருவானால் உடனடியாக இதய நோய் மருத்துவரைப் பார்ப்பது அவசியம். தோள்பட்டையில் உருவாகும் வலி முன்னங்கைகள் வரை ஊடுருவிச் சென்றாலும், கீழ் தாடையில் அடிக்கடி வலி வந்தாலும் அது இதய நோயின் அறிகுறியே. பின்பக்க முதுகில் அடிக்கடி பிடிப்பு ஏற்பட்டாலும் இதயநோய் நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.

    அதிக கொழுப்புள்ள ரெட் மீட் (ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி), நெய், வெண்ணெய் ஆகியவற்றை ஒதுக்கிவிட வேண்டும். பொரித்த உணவுகளையும் தவிர்த்து விட வேண்டும். 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதிப்பது அவசியம். ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் ஆகியவை சரியான அளவில் இருக்கிறதா என்பதையும் தகுந்த கால இடைவேளையில் பரிசோதிக்க வேண்டும். ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அதற்கான சிகிச்சையை உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி ஆகியவற்றை அன்றாடம் மேற்கொள்ள வேண்டும். மன உளைச்சலை போக்க யோகா மற்றும் சுவாசப் பயிற்சிகளை தினமும் செய்துவர வேண்டும். உணவில் மீன், உலர்பருப்புகள், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அசைவம் சாப்பிடுபவர்களுக்கு... மீனில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலில் சரியான அளவில்இருந்தால் இதயநோய்கள் வராமல் கட்டுப்படுத்தும்...’’

    இளம் வயதில் கணவனை இழக்கும் மனைவிக்கு பாதுகாப்புணர்வு குறைவதும் மாரடைப்புக்குக் காரணமாகிறது. விவாகரத்து செய்து கொள்ளும் தம்பதிகளில்,
    இருவரில் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் ஒருவருக்கு மாரடைப்பு எளிதாக வருகிறது...


    Dangu likes this.

  5. #55
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்?

    டாக்டர் கு. கணேசன்

    நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள்.

    சாதாரண தசை வலியிலிருந்து இதய நோய்வரை பல நோய்களுக்கு நெஞ்சு வலி ஒரு முக்கிய அறிகுறியாக இருப்பதால், இதை அலட்சியப்படுத்த முடியாது. அதேவேளையில் எல்லா நெஞ்சுவலியும் மாரடைப்பாகத்தான் இருக்கும் என்று எண்ணி, தேவையில்லாமல் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. நடைமுறையில் பெரும்பாலான நெஞ்சு வலிக்கு இதய நோய்கள் காரணமாக இருக்காது; வேறு காரணங்கள்தான் இருக்கும்.

    காரணம் என்ன?
    நெஞ்சு வலிக்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவை. ஒன்று, ‘ஆஞ்சைனா’ (Angina pectoris) எனும் இதய வலி. மற்றொன்று, மாரடைப்பு. இவற்றை எந்த வகையிலும் அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படி அலட்சியப்படுத்தினால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

    ஆஞ்சைனா / மாரடைப்பால் ஏற்படுகிற நெஞ்சு வலியானது இதயத் தசையில் உருவாகி நெஞ்சில் உணரப்படுகிறது. இதயத் திசுக்களுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிக் குழாய்களில் கொழுப்புப் படிந்து, அதன் விட்டத்தைக் குறுகச் செய்வதுதான் இந்த வலிக்கு அடிப்படைக் காரணம். முதுமை காரணமாக தமனிக் குழாய் தடித்துப் போனாலும், இந்த நிலைமை ஏற்படுவதுண்டு.

    இதயத் தமனிக் குழாய் உள்அளவில் சுருங்கும்போது, இதயத் திசுக்களுக்குச் செல்லக்கூடிய ரத்தத்தின் அளவு குறைகிறது. நாம் ஓய்வாக இருக்கும்போது இதயத் திசுக்களுக்குத் தேவையான ரத்தம் கிடைத்துவிடும். ஆனால், உழைப்பு அதிகப்படும்போது இதயத் தசைகளின் தேவையும் அதிகரிக்கிறது. குறுகிவிட்ட இதயத் தமனியால் இந்தத் தேவையை ஈடுசெய்ய இயலாது. இதனால் இதயத் திசுக்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் உணவு கிடைக்காமல் அழியத் தொடங்கும். அந்த நேரத்தில் இதயத் தசைகள் எழுப்புகிற கூக்குரலே நெஞ்சு வலியாக உணரப்படுகிறது.

    இதய வலி - அறிகுறிகள்
    மாடிப் படிகளில் ஏறும்போதும், வேகமாக நடக்கும்போதும் நடுநெஞ்சில் பாரம் வைத்து அழுத்துவதுபோல் வலிக்கும். நடப்பதை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டால் அல்லது கிளிசரில் டிரைநைட்ரேட் (Glyceryl trinitrate) மாத்திரையை நாக்கின் அடியில் வைத்தால் நெஞ்சு வலி குறைந்துவிடும்.

    மாரடைப்பு - அறிகுறிகள்
    சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும். இந்த வலி தாடை, கழுத்து, இடது புஜம், இடது கை விரல்களுக்குப் பரவும். உடல் அதிகமாக வியர்க்கும். ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். மூச்சுத் திணறல் உண்டாகும். மயக்கம் வரும். இதுதான் மாரடைப்பு (Myocardial infarction).

    தூண்டும் சூழல்கள்
    இந்த வலியை முதன்முறையாகத் தோற்றுவிக்கவும் அல்லது வலியை அதிகப்படுத்தவும் சில சூழல்கள் காரணமாகின்றன. அவை: பரம்பரை, அதிக உடலுழைப்பு, கடுமையான அலைச்சல், அதிகமான உடற்பயிற்சி, நெடுநாள் உறக்கமின்மை, அளவுக்கு மீறிய கொழுப்பு உணவு, குளிர்ச்சி மிகுந்த தட்பவெப்பநிலையால் திடீரெனத் தாக்கப்படுவது, உயரமான இடங்களுக்குச் செல்வது ((எ-டு ) மாடிப்படி ஏறுதல், மலை ஏறுவது; மன அழுத்தம்), அதிகமாக உணர்ச்சி வசப்படுவது (( எ-டு ) கோபம், கவலை, பயம், பீதி, விரக்தி, சண்டை).

    யாருக்கு அதிக வாய்ப்பு?
    புகைபிடிப்போர், மது அருந்துவோர், உயர் ரத்த அழுத்தம், ரத்த மிகைக் கொழுப்பு, நீரிழிவு நோய், இதயத் தசை அழற்சி போன்ற நோய்களைக் கொண்டவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடலுழைப்பே இல்லாதவர்கள், ஓய்வின்றிக் கடுமையாக உழைப்பவர்கள், பரபரப்பான வாழ்க்கை முறையைக் கையாள்கிறவர்கள், முதியோர் ஆகியோருக்கு இந்த வகையான நெஞ்சு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு.

    நுரையீரல் நோய்கள்
    ‘நிமோனியா’ எனும் நுரையீரல் அழற்சி நோய், நுரையீரல் உறைக் காற்று நோய் (Pneumo thorax), நுரையீரல் உறை அழற்சி நோய் (Pleurisy), கடுமையான காச நோய் ஆகியவற்றிலும் நெஞ்சு வலி வரும். அப்போது துணை அறிகுறிகளாக இருமல் இருக்கும். இருமும்போது நெஞ்சு வலி அதிகரிக்கும். இழுத்து மூச்சு விட்டால்கூட வலி அதிகமாகும். காய்ச்சல், சளி ஏற்படும்; பசி குறையும். இந்த வலி பொதுவாக இளம் வயதினருக்கும் நடுவயதினருக்கும் வருகிறது.

    நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் நெஞ்சில் வலி வரலாம். அப்போது சளியில் ரத்தம் கலந்து வரும். இது பெரும்பாலும் 50 வயதுக்குப் பிறகு வரும். மேற்சொன்ன அறிகுறிகள் மூலம் மாரடைப்பிலிருந்து மற்ற பிரச்சினைகளைப் பிரித்துணரலாம்.

    நுரையீரல் ரத்த உறைவுக் கட்டி (Pulmonary embolism) காரணமாகவும் நெஞ்சில் வலி வரலாம். இது பெரும்பாலும் ரத்தக் குழாய் நோயுள்ளவர்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், நீண்டகாலமாகப் படுத்த படுக்கையாக இருப்பவர்கள், நெடுங்காலம் கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும் பெண்கள், சமீபத்தில் பிரசவித்த பெண்கள் ஆகியோருக்கு ஏற்படுவதுண்டு.

    தசை / எலும்பு வலிகள்
    மார்புப் பகுதியில் உள்ள தசை, நரம்பு, எலும்பு மற்றும் எலும்பிடைத் தசைகளில் உண்டாகும் நோய்கள் காரணமாகவும் நெஞ்சில் வலி ஏற்படலாம். நெஞ்சில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இந்த வலி வரலாம். வலியுள்ள பகுதியைத் தொட்டு அழுத்தினால் வலி அதிகரிக்கும். உடல் அசைவின்போதும் மூச்சுவிடும்போதும் வலி அதிகரிக்கும். மார்பில் அடிபடுவது, தசைப் பிசகு, மார்பு / விலா எலும்பு முறிவு போன்றவை இவ்வகை நெஞ்சு வலியை உண்டாக்கும்.

    உணவுப்பாதை புண்கள்
    தொண்டையில் தொடங்கி இரைப்பைவரை உணவு செல்ல உதவும் உணவுக் குழாய் இரைப்பை, முன் சிறுகுடல் ஆகியவற்றில் புண்கள் ஏற்படும்போது நெஞ்சில் வலிக்கும். பொதுவாக, இந்த நோயாளியிடம் உணவுக்கும் நெஞ்சு வலிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அறிய முடியும். இந்த நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான்.

    காரணம் என்ன?
    நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் இருக்கும் அமிலம் தன் எல்லைக் கோட்டைக் கடந்து, உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான். இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள திசுப்படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படும்.

    மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவை அடிக்கடி சாப்பிட்டால் உணவுக் குழாயின் கீழ்முனைக் கதவு பழைய சல்லடை வலை போல ‘தொள தொள' வென்று தொங்கிவிடும். விளைவு, இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது, அதைத் தடுக்க முடியாமல் உணவுக் குழாய்க்குள் அனுமதித்துவிடும். இந்த நிலைமையில் உள்ள நெஞ்செரிச்சலுக்குத் தகுந்த சிகிச்சை பெறத் தவறினால், இரைப்பையில் புண் உண்டாகும்.

    அப்போது அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசி இல்லாமல் இருக்கும். குறைந்த அளவு உணவு சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிவிட்ட உணர்வு உண்டாகும். பிறகு, வயிற்றில் வலி தோன்றும். குறிப்பாக, இரைப்பை காலியாக உள்ள நள்ளிரவு நேரத்திலும், விடியற்காலையிலும் மேற்புற வயிற்றில் அடிக்கடி வலி வரும். புண் உள்ள இடத்தில் அமிலம் படுவதால், இந்த வலி ஏற்படுகிறது. அதுபோல் உணவு சாப்பிட்ட பின்பும் இதே வலி உண்டாகும். புண்ணின் மீது உணவு படுவதால் இப்படி வலிக்கிறது. பொதுவாக, சாப்பிட்டதும் வயிற்று வலி அதிகமானால், அது கேஸ்ட்ரிக் அல்சர். சாப்பிட்டதும் வலி குறைந்தால், அது டியோடினல் அல்சர். இவற்றைத் தவிர, குமட்டலும் வாந்தியும் வரும்.

    உளவியல் காரணங்கள்
    குடும்பத்தில் சண்டை, இழப்பு, பொருளாதார நெருக்கடி, வேலைப் பளு, வேலையின்மை, தனிமை, வாழ்க்கையில் தோல்வி, தேர்வு பயம், கோபம் போன்ற காரணங்களால் ஏற்படுகிற மனச்சோர்வு, மன அழுத்தம், மனப் பதற்றம், பரபரப்பான வாழ்க்கைமுறை ஆகியவற்றாலும் நெஞ்சு வலி ஏற்படுகிறது.

    பிற நோய்கள்
    மகாதமனிக் குழாய் வீக்கம், இதய வெளியுறை அழற்சி நோய், அக்கி அம்மை, அஜீரணம், கணைய நோய், பித்தப்பை நோய், கடுமையான ரத்தசோகை, தைராய்டு பிரச்சினைகள் காரணமாகவும் நெஞ்சில் வலி வரலாம்.

    பரிசோதனைகள் என்ன?
    வழக்கமான ரத்தப் பரிசோதனை களுடன் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு ஆகியவை பரிசோதிக்கப்படும். இவை தவிர, மார்பு எக்ஸ்-ரே, இ.சி.ஜி., எக்கோ, சி.டி. ஸ்கேன், டிரெட்மில், எண்டாஸ்கோபி போன்ற பரிசோதனைகளும் தேவைப்படும். இவற்றின் மூல காரணம் அறிந்து, சிகிச்சை பெற்றுவிட்டால் நெஞ்சு வலி விடைபெற்றுக்கொள்ளும்.

    இதய வலிக்கு முதலுதவி

    இதய வலி அல்லது மாரடைப்புக் கான அறிகுறிகள் தெரியவரும்போது உடனடியாக ஆஸ்பிரின் 325 மி.கி., அட்டார்வாஸ்டாடின் 80 மி.கி., குளோபிடோகிரில் 150 மி.கி. ஆகியவற்றைச் சாப்பிட்டால், தமனி ரத்தக் குழாயில் ரத்தம் உறைவது தடுக்கப்படும். இதன் பலனாக மாரடைப்பின் தீவிரம் குறைந்து நெஞ்சில் வலி குறையும். இந்த முதலுதவியைத் தொடர்ந்து எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுகிறோமோ அந்த அளவுக்கு உயிருக்கு ஆபத்து வருவதைத் தடுக்க முடியும்.

    கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
    தொடர்புக்கு: gganesan95@gmail.com

    தடுப்புமுறைகள்

    l புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. பான்மசாலாவைப் பயன்படுத்தக் கூடாது.

    l சரியான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும்.

    l தினமும் முறையாக உடற்பயிற்சி / யோகாசனம் / தியானம் செய்ய வேண்டும்.

    l உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொழுப்புக் கோளாறு போன்றவற்றுக்குச் சரியான சிகிச்சை எடுத்து, அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    l கொழுப்பு உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

    l மாசடைந்த சுற்றுச்சூழலைத் தவிருங்கள். அசுத்தமான காற்றுதான் பல நுரையீரல் நோய்களுக்குக் காரணம்.

    l அசுத்தமான உணவைச் சாப்பிடாதீர்கள்.

    l இரைப்பைப் புண் உள்ளவர்கள், சமச்சீரான உணவை அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவது நல்லது. மசாலா மிகுந்த, காரம் நிறைந்த, எண்ணெயில் பொரித்த உணவை எவ்வளவு குறைக்க முடியுமோ, அவ்வளவு குறைத்துச் சாப்பிட வேண்டும். பட்டினி கிடக்கக் கூடாது; விரதம் வேண்டாம்; நேரத்தோடு சாப்பிடும் பழக்கம் முக்கியம்.

    l வேகவைத்த இந்தியப் பாரம்பரிய உணவை அதிகமாக உட்கொள்ளுங்கள். துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, அதிக இனிப்புப் பண்டங்கள், புளித்த உணவு ஆகியவற்றை ஓரங்கட்டுங்கள்.

    l நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் சாப்பிட்டதும் படுக்கக் கூடாது. இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கப் போவது நல்லது. படுக்கையின் தலைப் பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடிவரை உயர்த்திக்கொள்வது நல்லது,

    l மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகள், ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நோய்களுக்குத் தரப்படுகிற ஸ்டீராய்டு மாத்திரைகள், மூட்டுவலி மாத்திரைகள் போன்றவற்றைத் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது.

    l மன அழுத்தம் தவிருங்கள்.

    l தேவையான அளவுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியம்.

    l நெஞ்சில் அடிபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    குடும்பத்தில் சண்டை, இழப்பு, பொருளாதார நெருக்கடி, வேலைப் பளு, வேலையின்மை, தனிமை, வாழ்க்கையில் தோல்வி, தேர்வு பயம், கோபம் போன்ற காரணங்களால் ஏற்படுகிற மனச்சோர்வு, மன அழுத்தம், மனப் பதற்றம், பரபரப்பான வாழ்க்கைமுறை ஆகியவற்றாலும் நெஞ்சு வலி ஏற்படுகிறது.




    Last edited by chan; 17th Aug 2015 at 01:23 PM.
    Dangu likes this.

  6. #56
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    ஹார்ட் அட்டாக் தவிர்க்கும் 6 விஷயங்கள்


    நாற்பது வயதைத் தொடும்போது பெரும்பாலான அமெரிக்கர்கள் தினம் ஒரு ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிடுகிறார்களாம். ஹார்ட் அட்டாக்கைத் தவிர்க்க இதுதான் வழி என நம்புகிறார்கள் அவர்கள். இதனால் உடலில் எங்காவது ரத்தக்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது என டாக்டர்கள் எச்சரிப்பதையும் அவர்கள் கேட்பதில்லை. இப்படி அபத்தமாக ஏதும் செய்வதற்கு பதிலாக இந்த ஆறு விஷயங்களைச் செய்தால் ஹார்ட் அட்டாக் தவிர்க்கலாம். ஏராளமானவர்களிடம் செய்த ஆய்வுகளை வைத்து நிபுணர்கள் பரிந்துரைக்கும் விஷயங்கள் இவை...

    1.தினமும் அரை மணி நேரமாவது இசை கேட்பது, ரத்த நாளங்களின் இறுக்கம் தளர்த்துகிறது. அதோடு இதயத் துடிப்பையும் இது சீராக்குவதால், இதயம் தனது பணியை சிரமமின்றி செய்கிறது. ஆனால் அதிரும் இசையைக் கேட்காதீர்கள். இதமான மெல்லிசை கேளுங்கள்.

    2.செல்போன் ரிங் ஓசைகூட பிளட் பிரஷரை எகிறச் செய்யும் வல்லமை பெற்றது. (மனைவியிடமிருந்தோ, கடன்காரரிடமிருந்தோ வரும் அழைப்பாக இருந்தால் இன்னும் மோசம்!) வாரத்தில் சில மணி நேரமாவது எல்லா டெக்னாலஜி கருவிகளையும் துறந்துவிட்டு இருப்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக டி.வி. தினமும் இரண்டு, மூன்று மணி நேரம் உட்கார்ந்தபடி டி.வி பார்ப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக்



    ரிஸ்க் ரொம்ப அதிகமாம்!

    3.‘தனிமையில் வசிப் பவர்கள் ஹார்ட் அட்டாக்கால் மரணத்தைத் தழுவும் அபாயம் ரொம்ப அதிகம்’ என்கிறது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு. உறவுகளோடும் நண்பர்களோடும் சிரித்துப் பழகி வாழுங்கள். வாய்ப்பு இல்லா விட்டால், வீட்டில் ஒரு நாயோ, பூனையோ வளருங்கள்!

    4.ஆபத்து என ஒதுக்கும் உருளைக்கிழங்கில், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும் பொட்டாசியம் அதிகம் இருக்கிறது. பீட்ரூட்டிலும் இது அதிகம். இதோடு பச்சைப் பட்டாணியும் சாப்பிடப் பரிந்துரைக்கிறார்கள் டாக்டர்கள். எண்ணெயில் பொரித்து அல்ல, வேக வைத்து!

    5.குறட்டை விடுவது ரொம்பவே டேஞ்சர்! மூளைக்கு ஆக்சிஜனை சப்ளை செய்யும் ரத்த ஓட்டத்தில் ஏதோ பிரச்னை என்பதை குறட்டை உணர்த்துகிறது. இதுவே ஹார்ட் அட்டாக்கிற்கு விசிட்டிங் கார்டு கொடுத்து வரவழைக்கும்.

    6.மனதில் பாரம் ஏற்றுபவர்களுக்கு எப்போதுமே பிரச்னை. எல்லாவற்றையும் இறக்கி வைத்துவிடுங்கள். இதயம் இதமாக இருக்கும். யோகா, தியானம், ஹியூமர் கிளப் என எங்கே முடிகிறதோ, அங்கே சென்று மனதை லேசாக்குங்கள். ஹார்ட் ஹேப்பியாக இருக்கும்!


    Dangu likes this.

  7. #57
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    01. ரத்த அழுத்தம் என்றால் என்ன?
    உடலில் உள்ள திசுக்களுக்கு தேவையான உணவு, பிராண வாயுவை எப்போதும் கிடைக்கச் செய்யவும்; திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேற்றவும், ஓர் அமைப்பு நம் உடலுக்கு தேவை. அந்த அமைப்பு தான், ரத்த ஓட்டம். அந்த ரத்த ஓட்டம், ஒருவித அழுத்தத்தால் தான், உடல் முழுக்க செல்கிறது. அதைத் தான், ரத்த அழுத்தம் என்கின்றோம்.

    02. உயர் ரத்த அழுத்தம் உண்டாவதற்கான காரணங்கள்?
    எந்த காரணமும் இல்லாத நிலையில், உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் அதற்கு, 'முதல் நிலை உயர் ரத்த அழுத்தம்' என்று பெயர். இதில், மரபணு சார்ந்த ரத்த அழுத்தமும் அடங்கும். கர்ப்பத் தடை மாத்திரை உட்கொள்ளுதல், வேண்டாத தீய பழக்கங்கள், புகைப் பிடிப்பது, மது அருந்துவது, மன அழுத்தம் போன்ற காரணங்களால் வரும் உயர் ரத்த அழுத்தத்திற்கு, 'இரண்டாம் நிலை உயர் ரத்த அழுத்தம்' என்று பெயர்.

    03. மேற்சொன்ன காரணங்கள் மட்டுமே, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகின்றனவா?
    நவீன காலத்தில், டின்னில் அடைத்து விற்கப்படும் உணவுகள், துரித உணவுகளை உண்பது, மிகவும் சாதாரணமாகி விட்டது. இதில், ருசிக்காக அதிகளவு கொழுப்பு பொருட்களும், உப்பும் சேர்க்கப்படுகிறது. இதனால், பெரும்பாலானோருக்கு, இளம் வயதிலேயே உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

    04. உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் விளைவுகள்?
    சிறுநீரகக் கோளாறுகள், ரத்தம் சிறுநீரகங்களுக்குக் குறைவாகச் செல்லுதல், பக்கவாதம், இதயம் தொடர்பான பல்வேறு நோய்கள், ஹார்மோன்களின் அளவு மாறுதல் போன்றவை ஏற்படுகின்றன.

    05. ரத்தத்தில் அதிகமாக உப்பு சேர்ந்தால், ரத்த அழுத்தம் மட்டுமின்றி, சிறுநீரக கோளாறும் ஏற்படுகிறதாமே?
    உப்பை அதிகளவில் உட்கொள்வதால், அது ரத்தத்தில் கலக்கிறது. உப்பின் அடர்த்தி நிலையை குறைக்க, ரத்தம், உடலில் உள்ள நீரை அதிகமாக எடுத்துக் கொண்டு, சிறுநீரகம் மூலம் அதை வெளியே தள்ள முயல்கிறது. இதனால், ரத்த அழுத்தம் அதிகமாகி, சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது.

    06. ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி உதவுமா?
    கண்டிப்பாக உதவும். அதிகாலை நடைபயிற்சி (45 நிமிடம் முதல் 60 நிமிடம் வரை), சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தல் நல்லது. யோகாசனம் செய்வது மிகவும் சிறந்தது. இது, மன அழுத்தத்தையும் குறைக்கும் தன்மை கொண்டது. நாள்தோறும் உடற்பயிற்சி செய்தால், 10 மி.மீ., அளவு உயர் ரத்த அழுத்தம் குறையும் என, கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    07. எவ்வாறு நடைபயிற்சி செய்ய வேண்டும்?
    மூச்சு இரைக்க நடைபயிற்சி மேற்கொள்ளக் கூடாது. நடையில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும்; பாதம் முழுவதும், ஒரே சீராக அழுத்தப்பட வேண்டும். காலை நேரத்தில், வெயிலுக்கு முன் நடப்பது நல்லது.

    08. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க, உணவுக் கட்டுப்பாடு தேவையா?
    எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவை உட்கொள்ள வேண்டும்; வயிறு புடைக்க உண்பதை தவிர்ப்பது நல்லது. உண்ட உணவு செரிக்கும் முன்பே, அடுத்த வேளை உணவை எடுத்துக் கொள்வதும்; நீண்ட பட்டினி கிடப்பதும், உயர் ரத்த அழுத்தத்திற்கு வித்திடும். எண்ணெயில் பொரித்த உணவுகள், புளிப்பு பண்டங்கள், மசாலா பொருட்கள், காபி, டீ, பருப்பு வகைகள், மாமிச உணவுகள், வாயுவை பெருக்கும் உணவுப் பொருட்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.

    09. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் பராமரிக்க, என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?
    கீரைகள், பழங்கள் போன்றவற்றை, உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, குப்பைமேனி கீரை, முருங்கைக்கீரை, சிறுகீரை போன்றவற்றை சாப்பிட வேண்டும். கறிவேப்பிலையை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. காலை உணவை கண்டிப்பாக தவிர்க்கக் கூடாது.

    10. உணவு மாற்றம் மட்டுமல்லாமல், பழக்க வழக்கங்களிலும் மாற்றம் தேவையா?
    மன அழுத்தத்தை உண்டாக்கும் கோபம், எரிச்சல், தீரா சிந்தனை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பதை, அறவே தவிர்க்க வேண்டும்; மது அருந்துதல் கூடாது. இப்படி, சிறு சிறு விஷயங்களில் நம்மை மாற்றிக் கொண்டால், ரத்த அழுத்தம் மட்டுமல்ல; நீரிழிவு நோயிலிருந்து கூட நம்மை காத்துக் கொள்ளலாம்.
    -தமிழ்ச்செல்வன்,பொது மருத்துவர், சென்னை. 98401 60706

    Last edited by chan; 30th Aug 2015 at 01:12 PM.
    Dangu likes this.

  8. #58
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    BLOOD PRESSURE CHART BY AGE...

    Check out the blood pressure numbers for your age.

    The best blood pressure is 120 over 80, or lower.
    If your Blood Pressure is higher than 140 over 90, this means you have high blood pressure.

    Tips for high blood pressure
    1. Reduce intake of salt.
    2. lose excess weight
    3. Exercise daily
    4. Control your anger
    5. Take maintenance medicine as given by your doctor.




    Dangu likes this.

  9. #59
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    மாத்திரையே இல்லாமல் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்!



    Dangu likes this.

  10. #60
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    உயர் ரத்த அழுத்தம் தவிர்க்க!




    40 வயதைக் கடந்ததும், உயர் ரத்த அழுத்தம் வருவது இன்று அதிகரித்திருக்கிறது. ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இல்லாததே இதற்கு மிக முக்கியக் காரணம். இதோ ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க அட்டகாசமான டயட் சார்ட்!


    தவிர்க்க!

    உப்பு சேர்ப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். புகைப்பழக்கம், மது, ஊறுகாய், கருவாடு, பப்படம், அப்பளம், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.



    Dangu likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter