Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree97Likes

Heart Care- இதயத்தை காப்போம்


Discussions on "Heart Care- இதயத்தை காப்போம்" in "General Health Problems" forum.


  1. #61
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    இதயத்தைப் பாதுகாக்கும் 5 பயிற்சிகள்

    தயம் குறித்த விழிப்புஉணர்வு பரவலாகியிருக்கும் காலம் இது. இதயத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? கடினமான பயிற்சிகள் ஏதும் தேவை இல்லை, நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிளிங், ஏரோபிக்ஸ், ஜாகிங் ஆகிய ஐந்து எளிய பயிற்சிகளைச் செய்தாலே போதும்... உடலும் மனமும் இதயமும் ஆரோக்கியம் பெறும்.

    நடைப்பயிற்சி

    *இதய நோய்கள் வருவதைத் தடுக்கும்.
    *உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
    *உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை சீராகத் தரும்.
    *உடல் எடையைக் குறைக்கும். சீரான எடையைப் பராமரிக்க உதவும்.
    *மறதி நோய் வராமல் காக்கும்.
    *சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
    *எலும்பு அடர்த்திக் குறைவு (ஆஸ்டியோ பொரோசிஸ்) வராமல் தடுக்கும்.
    *வைட்டமின் டி அளவை உடலில் அதிகரிக்கச் செய்யும்.
    *எந்த நோயாக இருந்தாலும், அதன் வீரியத்தைக் குறைக்கும்.
    *சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செய்யக்கூடிய எளிமையான பயிற்சி.


    ஜாகிங்
    *எலும்புகளை உறுதியாக்கும்.
    *தசைகளை வலுவடையச் செய்யும்.
    *முழுமையான இதய ஆரோக்கியம் கிடைக்கச் செய்யும். இதயத் துடிப்பை சீராக்கும்.
    *உடல் எடையைச் சீராகப் பராமரிக்க உதவும்.
    *ஓடும்போது சீரான ரத்த ஓட்டம் கிடைக்கும்; உடல் புத்துணர்ச்சி அடையும்.
    *ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
    *தேவையான ஆக்சிஜனைக் கிரகிக்க உதவும்.
    *உடலின் வளைந்துகொடுக்கும் தன்மையை மேம்படுத்தும்.
    *ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
    *10 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் ஜாகிங்கில் ஈடுபடலாம்.
    குறிப்பு: மூட்டுவலி இருப்பவர்கள் ஜாகிங் செய்வதைத் தவிர்க்கவும்.

    நீச்சல்
    *தொப்பையைக் கரைக்கும். அழகான, தட்டையான வயிறு கிடைக்கும்.
    *மன அழுத்தத்தைப் போக்கும்.
    *உடலின் அமைப்பு (Posture), சமநிலை (Balance) மற்றும் ஒத்துழைக்கும் திறனை மேம்படுத்தும்.
    *உடல் வெப்பத்தை நீக்கும்.
    *நாள்பட்ட நோய்களைச் சரிசெய்யும்.
    *தசைகளை வலுவடையச் செய்து, உடலை உறுதியாக்கும்.
    *உடல் உறுப்புகள் அனைத்தையும் ஆரோக்கியம் பெறச் செய்யும்.
    *இதயம் மற்றும் நுரையீரலை வலுவடையச் செய்யும்.
    *பசியின்மையை நீக்கும்.
    *கொழுப்பைக் குறைத்து, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்.
    *மூட்டு, கால் பகுதிகளை உறுதியாக்கும்.

    குறிப்பு: வீசிங் பிரச்னை, காதில் தொற்று உள்ளவர்கள் மருத்துவர் அனுமதி பெற்றுச் செய்யலாம்.


    ஏரோபிக்ஸ்
    *அதிக அளவில் கலோரி எரிக்கச் செய்யும்.
    *உடல் எடையைக் குறைக்கும்.
    *உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக்கும். காய்ச்சல், சளி, தொற்று போன்றவை வராமல் காக்கும்.
    *இதயம் மற்றும் இதயத் தசைகளை வலுப்படுத்தும்.
    *ரத்தத்தைச் சீராக பம்ப் செய்து, அனைத்து உறுப்புகளுக்கும் சீராகப் பாய உதவும்.
    *நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.
    *டென்ஷன், மன உளைச்சலைச் சரியாக்கும்.
    *கவலை, சோர்வு நீக்கும்.
    *நீண்ட ஆயுள் கிடைக்கும்.
    *மூட்டுப் பிரச்னை, முதுகு எலும்பு, டிஸ்க் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்கலாம். உடல் பருமனானவர்,

    குறிப்பு: உடல்பருமனானவர், ட்ரெயினரின் ஆலோசனையோடு சில பயிற்சிகளை மட்டும் தவிர்க்கலாம்.


    சைக்கிளிங்
    ஏரோபிக் மற்றும் ஜாகிங் இரண்டுக்குமான பலனை சைக்கிளிங் பயிற்சி மட்டுமே தந்துவிடும்.
    தசைகளை வலுவாக்கி, வலிமைமிக்க உடலாக மாற்றும்.
    இதயத் துடிப்பை அதிகப்படுத்தும். இதய உறுப்புகளை வலுப்படுத்தும்.
    50 சதவிகித இதய நோயாளிகள் சைக்கிளிங் பயிற்சியால் குணமடையலாம் என்கின்றன ஆய்வின் முடிவுகள்.
    மனம் தொடர்பான பிரச்னைகளைப் போக்கும்.
    தோள்பட்டை - கால்கள், பாதம் - கை, உச்சி - பாதம் வரை அனைத்து உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
    எலும்புகள், மூட்டு இணைப்புகள் ஆகியவற்றை வலுவாக்கும்.
    உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

    குறிப்பு: மூட்டுத் தேய்மானம், அறுவைசிகிச்சை செய்தவர்கள் மருத்துவர் ஆலோசனை கேட்டு, சைக்கிளிங் பயிற்சி செய்வது நல்லது.


    Sponsored Links
    Last edited by chan; 19th Sep 2015 at 04:32 PM.
    Dangu likes this.

  2. #62
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பாதாம்

    பாதாம் பருப்பு பொதுவாகவே விலை உயர்ந்ததாகக் கருதப்படுவதால், பலரும் இதை அதிகம் பயன்படுத்துவதில்லை. அதேநேரம், தினசரி ஒரு பாதாம் பருப்பை உண்டுவந்தால் அதிலிருந்து சிறப்பான சத்துகள் கிடைக்கும்.

    l பாதாம் (வாதுமை) எனப்படும் கொட்டை அல்லது பருப்பு Prunus Dulcis எனப்படும் அறிவியல் பெயர் கொண்ட மரத்திலிருந்து. இந்தப் பருப்பு சற்று இனிப்புத்தன்மை கொண்டது. நம் பகுதிகளில் காணப்படும் நாட்டு வாதுமை, இதிலிருந்து வேறுபட்டது.

    l ஒரு கைப்பிடியளவு பாதாம் பருப்பு 161 கலோரி சக்தியையும் 2.5 கிராம் மாவுச்சத்தையும் (கார்போஹைட்ரேட்) தரும்.

    l நாம் நினைப்பதற்கு மாறாகப் பாதாம் பருப்பின் மேற்பகுதியில் உள்ள பழுப்பு நிறத் தோலில்தான் சத்து அதிகம். அதில் ஆன்ட்டிஆக்சிடண்ட் இருக்கிறது.

    l வைட்டமின் இ சத்தை அதிகம் கொண்டது பாதாம் பருப்பு.

    l பாதாம் பருப்பில் உள்ள மக்னீசிய சத்து, ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவும்.


    Dangu likes this.

  3. #63
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    இதயத்தை பாதுகாக்கும் டயட்
    சுமதி, ஊட்டச்சத்து நிபுணர்
    ல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்யும், கெட்ட கொழுப்பைச் சேர்க்க விடாத உணவுகளைச் சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. எந்த ஓர் உணவையும் எண்ணெயில் பொரிக்காமல், வேகவைத்தோ, மசாலா தடவாமல், கரியவிடாமல் சுட்டோ சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம் தரும்.


    Dangu likes this.

  4. #64
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

  5. #65
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வராமல் தடுக்க...

    சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன், புகையிலைப் பழக்கம் ஆகியவை இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. எனவே, மருத்துவ ஆலோசனை பெற்று இவற்றைக் கட்டுப்படுத்தினால், புகையிலைப் பழக்கத்தை நிறுத்தினால், மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

    வயிற்றைச் சுற்றி அதிகரிக்கும் கொழுப்பு, இதயத்துக்கு மிகவும் ஆபத்தானது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதனால், இதய ரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுகின்றன. தொப்பையைக் கரைக்கும் பயிற்சிகள் செய்து, ஃபிட்டான வயிற்றுப்பகுதியை வைத்துக்கொள்வது அவசியம்.

    பி.எம்.ஐ 25-க்கு மேல் இருந்து, அதனுடன் ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரித்து, உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அவர்களுக்கு இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

    5 முதல் 10 சதவிகிதம் எடைக் குறைப்புகூட, ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்; ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவைக் குறைக்கும். இது இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும்.

    உடற்பயிற்சி என்றால் ஜிம் வொர்க்அவுட் மட்டும் இல்லை. குழந்தைகளுடன் விளையாடுவது, வீட்டைச் சுத்தம் செய்வது, தோட்ட வேலை செய்வது போன்றவையும் உடலுக்கு நல்ல உடற்பயிற்சி்களே.

    ஏரோபிக், நடைப்பயிற்சி, ஜாகிங், நீச்சல் போன்றவையும் இதயத்தைப் பலப்படுத்தும் பயிற்சிகள்தான்.

    ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம்.இல்லாவிட்டால், உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன், சர்க்கரை நோய், மாரடைப்பு, மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

    பெரியவர்கள் ஆண்டுக்கு இரண்டு, மூன்று முறையாவது ரத்த அழுத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் 120/80 மில்லிமீட்டர் ஆஃப் மெர்குரி என்ற அளவில் இருக்க வேண்டும். அப்படி இல்லை எனில், இதய நோய்க்கான வாய்ப்பு அதிகம்.

    குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ரத்தத்தில் கொழுப்பு அளவைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். குடும்பத்தில் யாருக்காவது இதய நோய் பாதிப்பு இருந்தால், அந்தக் குடும்பத்தினர் ஆண்டுக்கு ஒரு முறையாவது பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

    பரிசோதனையில் மொத்தக் கொழுப்பு 200-க்கு கீழாகவும், கெட்ட கொழுப்பு 100-க்கு கீழாகவும், நல்ல கொழுப்பு 40-க்கு மேலாகவும் இருக்க வேண்டும்.

    நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது ரத்தத்தில் சர்க்கரை கலக்கும் வேகத்தைத் தாமதப்படுத்தும். கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும். ஒரு நாளைக்கு 25 முதல் 35 கிராம் நார்ச்சத்து தேவை. நார்ச்சத்து மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமான மண்டலக் குறைபாட்டையும் தீர்க்கும்.

    சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பின் அறிகுறிகள் வெளியே தெரியாது. திடீரென்று உயிரிழப்பை ஏற்படுத்திவிடும்

    உணவில் உப்பு, கொழுப்பு, சர்க்கரை அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். டிரான்ஸ்ஃபேட் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

    பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் நிறைந்த உணவுகள், சில மீன் வகைகள் இதயத்தைப் பாதுகாக்கும்.

    ரெட் மீட், பால் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பாம் ஆயில், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

    ஆண்டுக்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

    சிகரெட் புகைத்தல் அல்லது புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரித்துவிடும். புகையிலையில் உள்ள ரசாயனங்கள் இதயம் மற்றும் ரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால், ரத்தக் குழாய்கள் குறுகலாகி, மாரடைப்புக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

    புகைக்கும்போது உடலில் கார்பன் மோனாக்சைடு அளவு அதிகரிக்கிறது. இது, உடலுக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்கச் செய்ய, இதயத்தை அதிகம் துடிக்கத் தூண்டுகிறது.

    ஆண்டுதோறும், குழந்தைகள் உட்பட ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட, இரண்டாம் நிலை சிகரெட் புகை சுவாசிப்பவர்கள் உயிரிழக்கின்றனர். கிட்டத்தட்ட உலகின் பாதிக் குழந்தைகள் சிகரெட் புகை உள்ளிட்டவற்றால் மாசடைந்த காற்றையே சுவாசிக்கின்றனர். இது, அவர்களில் 10 சதவிகிதம் பேருக்கு இதய நோய்க்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது. எனவே, சிகரெட்டை முற்றிலுமாகத் தவிர்ப்பது நமக்கும் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லது.

    நம்மைவிட நம் இதயத்துக்கு 15 வயது அதிகம்!
    உணவுப் பழக்கம், துடிப்பான வாழ்க்கைமுறை, சிகரெட், மதுப் பழக்கம், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக்கொண்டு இதயம் மற்றும் ரத்த ஓட்ட மண்டலத்தின் வயதை மருத்துவர்கள் கணிக்கின்றனர்.

    இதன் அடிப்படையில் பார்க்கும்போது இந்தியர்களின் இதயத்துக்கு சராசரியாக 10 முதல் 15 வயது அதிகமாக இருக்கிறதாம். நமக்கு 20 வயது இருக்கலாம் அல்லது 30-ன் தொடக்கத்தில் இருக்கலாம். ஆனால், இதயத்துக்கு மட்டும் 35 அல்லது 45 வயதாகிறது. இதனால்தான் இளம் வயது இதய நோயாளிகளின் எண்ணிக்கையும் மாரடைப்பு மரணங்களும் அதிகரித்துள்ளன.


    Dangu likes this.

  6. #66
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    மாரடைப்பு 5 காரணங்கள்

    ‘நல்லாத்தான் இருந்தார்... 40 வயசுதான்... நேத்து ராத்திரி படுத்தவர், காலையில எந்திரிக்கலை; ஹார்ட் அட்டாக்காம்’ இப்படியான துயரக் கதைகளை சமீபகாலங்களில் அடிக்கடி கேட்கிறோம். மாரடைப்பு வருவதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மோசமான வாழ்வியல்முறை காரணமாக ஏற்படும் மாரடைப்பு குறித்து, ‘உலக சுகாதார நிறுவனம்’ பட்டியலிட்டுள்ள மிக முக்கியமான, பொதுவான ஐந்து காரணங்கள் இங்கே...


    உயர் ரத்த அழுத்தம்

    உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு ‘அத்ரோஸ்க்லிரோசிஸ்’ எனும் இதயநோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதாவது, இதயத்துக்குச் செல்லும் கரோனரி ரத்தக் குழாய்கள் தடித்து வீங்கிவிடும். ரத்தக் குழாய்கள் வீங்குவதால், இதயத்துக்கு ரத்தம் செல்வது கொஞ்சம் கொஞ்சமாகத் தடைப்படும். இதனால், ஒரு கட்டத்தில் மாரடைப்பு ஏற்படும்.

    உடல் பருமன்
    உடல் பருமன், மாரடைப்புக்கு மிக முக்கியமான மறைமுகக் காரணி. உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் எளிதில் வந்துவிடும். சர்க்கரை நோய், உடல் பருமன் இரண்டும் ஒன்று சேரும்போது, கரோனரி ரத்தக் குழாய்கள் வீங்கி, மாரடைப்பு வரலாம். உடல் பருமனாக இருக்கும் குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்குக்கூட சமீபகாலமாக மாரடைப்பு வருவது கவனிக்கத்தக்கது. எனவே, உடல் பருமன் உடையவர்கள் உடனடியாக உடற்பயிற்சி் செய்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி டயட் கடைப்பிடித்து உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

    கொலஸ்ட்ரால்
    கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாக இருக்கும்பட்சத்தில், அவை இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் மெள்ளமெள்ள படிந்து, ரத்த ஓட்டத்தைத் தடைசெய்யும். இதன் காரணமாக மாரடைப்பு ஏற்படும். கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள்வைத்திருப்பது அவசியம்.

    சர்க்கரை நோய்
    சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்காமல் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லாத சமயத்தில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். இதனால், ரத்தக் குழாய்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். சர்க்கரை நோய் காரணமாக ரத்தக் குழாய்கள் வீங்கி, ரத்தம் செல்வது தடைப்பட்டு, மாரடைப்பு வரலாம். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் இரண்டு பிரச்னைகளும் இருப்பவர்களுக்கு, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்பதால், விழிப்புஉணர்வு அவசியம்.

    புகைபிடித்தல்
    தொடர்ந்து புகைபிடிப்பவர்களுக்கும், புகை பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களுக்கும், புகையிலையில் உள்ள நிக்கோடின் மற்றும் சில வேதிப் பொருட்கள் மெள்ள மெள்ள நுரையீரலில் படிந்து, நுரையீரலின் செயல்திறனைக் குறைக்கும். மேலும், இவை ரத்தக் குழாய்களிலும் படியும். கொலஸ்ட்ரால் படிவது போலவே சிகரெட் பிடிப்பதால் பல்வேறு வேதிப்பொருட்கள் ரத்தக் குழாயில் படியும்போது, இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் தடைப்படுவதால், மாரடைப்பு வரும். தொடர்ந்து சிகரெட் பிடிப்பவராக இருந்தால், என்றாவது ஒரு நாள் நீங்கள் பிடிக்கும் சிகரெட் உங்களின் உயி்ரைப் பறிக்கும் கடைசி சிகரெட் ஆகும் அபாயம் உள்ளதால், சிகரெட் பழக்கத்தை உடனே கைவிடுங்கள்.


  7. #67
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    இதயத்தை இதமாக்கும் லவ்லி விஷயங்கள்
    நமக்குப் பிடித்த ஒருவரைப் பார்த்தால் மட்டும் அல்ல, அவர்களைப் பற்றிய இனிமையான, இதமான நிகழ்வுகளை நினைத்தாலே மனதுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும் இல்லையா... நம் மூளையில் ஏற்படும் சில ரசாயன மாற்றங்கள்தான் இந்த உணர்வுக்கு முக்கியக் காரணம். மூளையில் ஏற்படும் இந்த நல்ல ரசாயன மாற்றம், உடல் முழுவதுக்கும் ஆரோக்கியம் தருகிறது என்பது ஆச்சர்யமான உண்மை. எப்படி... விரிவாகப் பார்க்கலாமா?


    சிரிப்பு மற்றும் லவ் ஹார்மோன்கள்

    *நம்மை மகிழ்ச்சியாக உணரச் செய்யக்கூடியது மூளையில் சுரக்கும் ‘எண்டார்ஃபின்’ என்னும் ரசாயனம். இது, மனதளவில் நம்மை குதூகலமாக உணரச்செய்வதோடு, உடல் வலியையும் குறைக்கும் சக்திகொண்டது. இந்த வேதிப்பொருளை அதிக அளவில் சுரக்கச் செய்யும் சக்தி சிரிப்புக்கு உண்டு.

    *ஒரு முறை வாய்விட்டுச் சிரிப்பதால், நம்முடைய தசைகள் 45 நிமிடங்களுக்கு ரிலாக்ஸ் ஆகும்.

    *இயல்பான சிரிப்பு ரத்தக் குழாய்களின் செயல்பாட்டை அதிகரிப்பதால், ரத்த ஓட்டம் சீராகும்.

    *அன்பாக ஒருவரைக் கட்டி அணைக்கும்போது, இருவருக்குமே மன அழுத்தம் குறையும்.

    *மனதுக்குப் பிடித்தவரைப் பார்க்கும்போது அல்லது கட்டிப்பிடிக்கும்போது, உடல் உணரக்கூடிய இதமான சூட்டுக்கும் மகிழ்ச்சியான மனநிலை ஏற்படுவதற்கும் பாதுகாப்பாக உணர்வதற்கும் ‘ஆக்சிடோசின்’ என்னும் ஹார்மோன் சுரப்புதான் காரணம். இதனால் மன அழுத்தம் மற்றும் மற்ற உடல் பாதிப்புகளும் குறைந்துவிடும்
    .

    *மூளையிலிருந்து சுரக்கும் ஆக்சிடோசினின் மற்றொரு பெயர் ‘லவ் ஹார்மோன்’!

    *தனிமையின் காரணமாக ஏற்படும் மிகப் பெரிய பாதிப்பு, ஆக்சிடோசின் சுரப்பு குறைவது. தனிமையில் அவதிப்படுபவர்களுக்கு இதய நோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் உருவாக முக்கியக் காரணம் இதுதான்.


    அன்பு தெரப்பி!

    *நமக்குப் பிடித்தவர்களுக்குக் கடிதம் எழுதும்போது அவர்களைப் பற்றிய நல்ல, மகிழ்ச்சியான, நெகிழ்வான விஷயங்களை யோசிக்க ஆரம்பிப்போம். அப்போது, தன்னிச்சையாகவே மனதில் உள்ள கவலைகள் மறைந்துபோகும்.

    *அதேபோல் நம்மைப் பற்றிப் பாசமாக ஒருவர் எழுதிய கடிதத்தைப் படிக்கும்போது, அந்த வர்ணனை வார்த்தைகளே நமக்குள் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்திவிடும்.

    *பிரியமானவர்களுக்கு தினமும் கடிதம் எழுதுபவர்களுக்கு, மன அழுத்தம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்களுக்கான வாய்ப்பைக் குறைக்கும்.

    *பிடித்தவர்களிடம் உள்ள ஐந்து நல்ல விஷயங்களைத் தினமும் பட்டியல் இடுங்கள். அன்பு அதிகமாவதோடு ஆரோக்கியமும் அதிகரிக்கும்.


    நினைத்தாலே இனிக்கும்!
    *பிடித்த ஒருவரைப் பார்க்கும்போதோ அல்லது அவர்களுடன் இருக்கும்போதோ, அவர்களுடனான மகிழ்ச்சியான தருணங்களை ஆசையோடு அசைபோட ஆரம்பித்துவிடும் நம் மனது.

    *இதனால் மூளையிலிருந்து ‘டோபமைன்’ அதிகமாகச் சுரக்கும்.

    *இந்த டோபமைன்கூட மனதுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரு ரசாயனம்தான்.

    *மகிழ்ச்சியான தருணங்களில் இது அதிகமாகச் சுரப்பதால், இதயத்தின் செயல்பாடு அதிகமாகி, ரத்த அழுத்தம் இயல்பாகும்.

    கையைப் பிடித்து கோபத்தைக் குறைக்கலாம்
    *ஒருவர் கோபமாக இருக்கும்போது, அவர்களது கையைப் பிடித்தால், அந்தச் செயல் நரம்புகளைக் கட்டுப்படுத்தி அவர்களை அமைதியாக்கும்.

    *சோகமாக இருக்கும் ஒருவரின் கைகளைப் பற்றினால், அவருக்காக நாம் இருக்கிறோம் என்கிற பாதுகாப்பு உணர்வை அது ஏற்படுத்திவிடும். தேவை இல்லாத கவலையைக் கைவிட்டாலே, பாதி நோய் நீங்கிவிடும்.

    *கைகோத்து நடக்கும்போது ஒருவர் மீதான அன்பை மற்றொருவருக்கு அழகாக வெளிப்படுத்துகிறோம்.

    *ஒருவருடைய கையை நாம் எப்படிப் பிடிக்கிறோம் என்பதிலேயே, புரிதல், காதல் என அனைத்து உணர்வுகளையும் தெளிவாக விளக்கிவிட முடியும்.

    இனியன விரும்பு!
    *எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, பாசிட்டிவ்வாகப் பேசுவது, பேசுபவர்களுக்கு மட்டும் அல்ல, கேட்பவர்களுக்கும் நல்லது. பாசிட்டிவ் எண்ணங்கள் கவலை, பயத்தை மட்டும் அல்ல, உயர் ரத்த அழுத்தம் போன்ற பல நோய்களையும் விரட்டுகின்றன.

    *மனதுக்கு வருத்தத்தைத் தரக்கூடிய சில தவறான முடிவுகளும் எண்ணங்களும்தான் இதய நோய்க்கு முக்கியக் காரணம். பாசிட்டிவாக யோசிப்போம்... இதயப் பிரச்னைகளுக்கு குட்பை சொல்வோம்!


    Last edited by chan; 2nd Dec 2015 at 03:24 PM.

  8. #68
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    மாரடைப்பு தவிர்க்க...

    தூங்கச் செல்வதற்கு முன் தண்ணீர் குடித்தால் மாரடைப்பு வருவதைத் தவிர்க்கலாம் என்பது உண்மையா?

    இதய நோய் சிறப்பு மருத்துவர் செங்கோட்டு வேலு...மாரடைப்புக்கும் தண்ணீர் குடிப்பதற்கும் தொடர்பே இல்லை. ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் மாரடைப்பு வரும். மாரடைப்பு வருவதைத் தவிர்ப்பதற்கான முன்னெடுப்புகள் நம்மிடத்தில்தான் இருக்கின்றன. மது, சிகரெட் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். குப்பை உணவுகளைத் தவிர்த்து காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். 8-10 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம். நமது வாழ்வியலை முறைப்படுத்தி வாழ்ந்தோம் என்றால் மாரடைப்பைத் தவிர்த்து விடலாம்.


    Last edited by chan; 17th Dec 2015 at 05:14 PM.

  9. #69
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    உயிர் காக்கும் மருந்துகள்

    முதலுதவிப் பெட்டி

    மருத்துவர்களின் ஆலோசனை, பிரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது என்பது எல்லோரும் அறிந்ததே. ‘அதேவேளையில் சில உயிர்காக்கும் மாத்திரைகளை எந்த நேரமும் உடன் வைத்து இருந்து, ஆபத்தான நேரங்களில் உடனடியாக சாப்பிட வேண்டும்’ என்கிறார் லைஃப் ஸ்டைல் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஜி.பக்தவத்சலம்.

    தலைவலி, சளி உட்பட பல நோய்களுக்காக, டாக்டரின் பிரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் மருந்து வாங்கக் கூடாது. இதனை, மருத்துவர்கள் 'Over The Counter Prescription' என்று குறிப்பிடுவார்கள். சூப்பர் மார்க்கெட் போன்று பல பொருட்களை ஒரே இடத்தில் விற்கும் இடங்களில், தலைவலிக்கான தைலம், பாரசிட்டமால், குரோசின்,

    டோலோ650, வைட்டமின் மாத்திரைகள் போன்றவை டாக்டர் பிரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் தாராளமாக கிடைக்கும். அதேவேளையில், தூக்க மாத்திரைகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், பெனிசிலின், எரித்ரோமைசின் போன்ற மருந்துகளை வாங்கக் கூடாது. வாங்கவும் முடியாது. சட்டப்படி விற்கவும் கூடாது.

    மருத்துவ உலகில் சில மாத்திரைகள் உயிர் காக்கும் மருந்துகள் அல்லது முதலுதவி அளிக்கக்கூடிய மாத்திரைகள் ( Loading Dose) எனக் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில், டிஸ்பிரின் 325 மில்லிகிராம் (Disprin 325 mg), அட்டார்வாஸ்டாடின் 80 மில்லிகிராம் (Atorvastatin 80 mg), குளோபிடாப்150 மில்லிகிராம் (Clopitab 150 mg) ஆகியவை மிகமிக முக்கியமானவையாகும். இந்த மூன்று மாத்திரைகளும் சேர்ந்து Loading Dose என்று அழைக்கப்படுகின்றன.

    இந்த உயிர் காக்கும் மாத்திரைகள் வரிசையில், டிஸ்பிரின் 325 mg, அட்டார்வாஸ்டாடின் 80 mg ஆகியவற்றில் ஒன்றினையும், குளோபிடாப் 150 mg மாத்திரை இரண்டினையும் மாரடைப்பு நோயாளிகள் தங்களுடைய சட்டைப்பை அல்லது பர்சில் எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும்.

    சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், சிகரெட் பழக்கம் உள்ளவர்கள், நாற்பது வயதினைக் கடந்தவர்கள், பருமனான உடல் அமைப்பு கொண்டவர்கள் (80 கிலோவுக்கு மேல்), ரத்தத்தில் தீமை உண்டாக்கும் கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள், பரம்பரையாக இதய நோய்க்கு ஆட்படுபவர்கள், அதிக மன அழுத்தம் மற்றும் மனச்சுமையோடு வேலை செய்பவர்களுக்கு மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

    ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படப் போவதை முன்னதாகவே எளிதாக அறிந்து கொள்ளலாம். நெஞ்சுப்பகுதியில் அசவுகர்யமான உணர்வு, நெஞ்சு எரிச்சல், உடல் அசதி, செரிமான குறைபாடு, வாந்தி, நெஞ்சில் ஊசி குத்துவது போன்ற வலி, அதிக அழுத்தமான நெஞ்சு வலி, தாடை மற்றும் கழுத்துப்பகுதியில் வலி, முதுகு மற்றும் இடது கைக்கு மெல்ல மெல்ல வலி பரவுதல், குளிர்ச்சியான தட்பவெப்பம் உள்ள இடத்திலும் வியர்வை பெருக்கெடுத்தல், உடல் பிசுபிசுப்பு, நடக்கவும், மாடிப்படிகளில் ஏறவும் சிரமப்படுதல் உட்பட மூச்சுவிட கஷ்டப்படுதல், தலைசுற்றல், மயக்கம், படப்படப்பு இவையெல்லாம் மாரடைப்புக்கான ஆரம்ப அறிகுறிகளாக சொல்லப்படுகின்றன.

    இந்த அறிகுறிகள் ஒருவரின் உடலில் தென்படும்போது, உடனடியாக மேலே குறிப்பிடப்பட்ட உயிர் காக்கும் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். அதோடு மட்டுமில்லாமல், நடக்கவோ, ஓடவோ, வண்டி ஓட்டவோ கூடாது. படுத்துக்கொள்ள வேண்டும். இவை ரத்தத்தின் அடர்த்தியைக் குறைத்து, மாரடைப்பின் தீவிர தன்மையைக் கட்டுப்படுத்தும். பின்னர், காலதாமதம் செய்யாமல், ஆம்புலன்ஸை வரவழைத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மாரடைப்புக்கான ஆரம்ப அறிகுறிகள் உடலில் தென்படும்போது, உட்கொள்ளும் மருந்துகள் ‘கோல்டன் ஹவர்ஸ்’ என்று சொல்லப்படுகின்ற ஒரு மணிநேரத்தை 3 மணி நேரமாக மாற்றும் சக்தி கொண்டவை.

    ஒருவருக்கு மாரடைப்புஏற்படப் போவதை முன்னதாகவே எளிதாக அறிந்து கொள்ளமுடியும். இந்த அறிகுறிகள் ஒருவரின் உடலில் தென்படும்போது, உடனடியாக உயிர் காக்கும் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்...


  10. #70
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    இதயம் காக்க !

    சாம்பார், ரசம், புளிக்குழம்பு என நம்முடைய அன்றாட உணவுகளில் தக்காளிக்கு முக்கிய இடம் உண்டு. இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகொண்ட தக்காளியில் சத்துக்கள் ஏராளம். லைக்கோபீன் (Lycopene) என்ற நிறமிதான், தக்காளியின் சிவப்பு நிறத்துக்குக் காரணம். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, இதயத்துக்கு நன்மை விளைவிக்கிறது. கெட்ட கொழுப்பு குறைவதால், தமனிகளில் (Arteries) அடைப்புகள் ஏற்படாது. லைக்கோபீன், சில வகை புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது.

    உணவில் தக்காளியை அதிக அளவில் சேர்த்துக்கொண்டவர்களின் இதயம் பலமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை சில ஆய்வுகள் ஊறுதிசெய்திருக்கின்றன. சிவப்பு நிறப் பழங்களையும் காய்களையும் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியம் பெறும். இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், இதயம் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter