Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 2 Post By chan
  • 1 Post By sumitra
  • 1 Post By chan
  • 1 Post By chan
  • 1 Post By jv_66

Ulcer & Remedies for it-அல்சர்... அலட்சியம் வேண்டாம்!


Discussions on "Ulcer & Remedies for it-அல்சர்... அலட்சியம் வேண்டாம்!" in "General Health Problems" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Ulcer & Remedies for it-அல்சர்... அலட்சியம் வேண்டாம்!

    அல்சர்... அலட்சியம் வேண்டாம்!
    "கார்த்திகேயன்"
    குடல், இரைப்பை மற்றும் கல்லீரல் சிறப்பு மருத்துவர்
    ‘‘டீ, காபி வேண்டாம்... ஸாரி, எனக்கு அல்சர்” இந்த டயலாக் அடிக்கடி கேட்போம். வாழ்க்கைமுறை மாற்றத்தால், நாம் விலைக்கு வாங்கிய நோய்களில் இதுவும் ஒன்று. உணவு செரிப்பதற்காக வயிற்றில் அமிலங்கள் சுரக்கும். இந்த அமிலங்களால் வயிற்றுக்கு எந்தப் பாதிப்புகளும் ஏற்படாதவாறு, புரதங்களால் உருவாக்கப்பட்ட படிமங்களும் (Layers) இருக்கும். இது இரைப்பையைப் பாதுகாக்கும் வகையில் அமைந்திருக்கும். குடல், இரைப்பை, சிறுகுடல், வாய் போன்ற இடங்களில் புண்கள் ஏற்பட்டு, இந்த படிமங்களைப் பாதிக்கும்போதுதான் பிரச்னை ஏற்படுகிறது.

    அல்சர் அறிகுறிகள்!

    அல்சர் புண்களில் 30-40 சதவிகிதம் அறிகுறிகளே தெரியாது. அடிக்கடி பசி, சாப்பிட்ட பிறகும் பசி, வயிற்று வலி, முதுகு வலி, வயிற்று எரிச்சல், நெஞ்சு எரிச்சல், சாப்பிட்டதும் வாந்தி போன்ற பிரச்னைகள் இருக்கும். பால், தண்ணீர், பிஸ்கட் போன்ற உணவுகளைச் சாப்பிட்டதும், வயிற்று வலி குறைந்தது போன்ற உணர்வைத் தந்தால், அது முதல் கட்ட அல்சர். சிறிது உணவைச் சாப்பிட்ட பிறகும் வயிற்று வலி தொடர்ந்தால், அல்சர் தீவிரமாகி உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

    அல்சர் வரக் காரணங்கள்!
    சமச்சீர் உணவு சாப்பிடாமல் இருப்பது, அதிக மசாலா, எண்ணெய் உணவுகள், உணவுப் பழக்கத்தில் மாற்றம், காலை உணவத் தவிர்த்தல், ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobacter pylori) என்ற கிருமித் தொற்று, மனப் பிரச்னையால் அமிலங்கள் சுரப்பதில் மாற்றங்கள், வீரியமுள்ள வலி மாத்திரைகள், ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொள்வது, மது மற்றும் புகைப்பழக்கமும் அல்சரை ஏற்படுத்தும். 70 சதவிகித உணவு மற்றும் வாழ்வியல் தவறுகளால்தான் அல்சர் ஏற்படுகிறது.


    ரிஸ்க் அல்சர்

    வயிற்றுப் புண்ணுக்கு நீண்ட காலம் சிகிச்சை எடுக்காமல் இருந்தால், அது லிப்போமா (lymphoma) என்ற புற்றுநோயாக மாற வாய்ப்புகள் அதிகம். என்றோ ஒரு நாளைக்கு அதிகளவில் மது அருந்த, அவர்களுக்கும் அல்சர் வரும். வாந்தி, வாயு பிரச்னைகளைக் கொண்டுவந்து, அல்சர் நோயைத் தீவிரமாக்கிவிடும்.
    நீண்ட காலம் அல்சர் இருந்தால், அந்தப் புண்களின் வடுக்களும் இருக்கும். இது குடலில் ஓட்டை விழும் அளவுக்குக் கொண்டுவந்து, குடல் அடைப்பை ஏற்படுத்தலாம். ரத்தக் குழாய்களை அரித்து, பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தலாம். இதற்கான காரணங்களை முறையாகக் கண்டறிந்து, தகுந்த சிகிச்சைகளை மேற்கொண்டு, அல்சரை குணமாக்கிவிடலாம்.

    உணவின் மூலம் அல்சரைத் தடுக்கலாம்!
    நம் தென் இந்திய உணவுகள் ‘நல்ல உணவு’ பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த உணவைச் சாப்பிட்டாலே, அல்சர் வருவதை வெகுவாகக் குறைக்கலாம். ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளுக்கு முதல் இடம் தரலாம். எண்ணெய், உப்பு, மசாலா, காரம் இவற்றைக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம். தேன், ப்ரக்கோலி, முட்டைகோஸ், வெங்காயம், பூண்டு, பால் பொருட்கள், வாழை, அதிக நார்சத்துள்ள உணவுகள் மிகவும் நல்லது. கோலா பானங்கள், சோடா, ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிட்ரஸ் வகை ஆயத்த பழச்சாறுகள், டீ, காபி தவிர்க்கலாம்.

    Similar Threads:

    Sponsored Links
    jv_66 and sumitra like this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Ulcer & Remedies for it-அல்சர்... அலட்சியம் வேண்டாம்!

    really great information! thank you for sharing!!!!!!!

    chan likes this.

  3. #3
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Ulcer & Remedies for it-அல்சர்... அலட்சியம் வேண்டாம்!

    அல்சர் பற்றிய தகவல்களும் அதை சரி செய்யும் இயற்கை வைத்திய முறைகளும் :-



    இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் வாட்டி வதைக்கிறது “அல்சர்”. ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கம், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளால் மக்கள் ஈர்க்கப்படுகின்றனர்.

    அல்சர் என்பது என்ன?

    தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக ‘பெப்டிக் அல்சர்’ (Peptic ulcer) என்கிறோம். இரைப்பையில் புண் ஏற்பட்டால் ‘கேஸ்ட்ரிக் அல்சர்’ (Gastric ulcer) என்றும், முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் ‘டியோடினல் அல்சர்’ (Duodenal ulcer) என்றும் அழைக்கிறோம்.

    இரைப்பையில் உணவு செரிப்பதற்காகச் சுரக்கப்படுகின்ற ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் எனும் என்சைமும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது, இரைப்பை, முன்சிறுகுடலின் சுவற்றில் உள்ள மியூகஸ் படலம் அழற்சியுற்று வீங்கிச் சிதைவடையும்.

    அல்சர் ஏற்படுவதற்கான காரணங்கள் :-

    காரம் நிறைந்த, புளிப்பு மிகுந்த, மசாலா கலந்த உணவு, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது. மது அருந்துதல், புகைபிடித்தல், மென் குளிர்பானம், காபி, தேநீர் பானங்களை அதிகமாகக் குடிப்பது. ஸ்டீராய்டு மாத்திரைகள், ஆஸ்பிரின், புரூஃபென் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி சாப்பிடுவது.

    உணவை நேரம் தவறிச் சாப்பிடுவது, அதிகச் சூடாகச் சாப்பிடுவது, பட்டினி கிடப்பது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள் இரைப்பைப் புண்ணுக்கு வரவேற்பாக அமைகின்றன. தினமும் வேளை தவறிச் சாப்பிடுபவர்களுக்கும் காலை உணவைத் தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கும் இரைப்பைப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    இதற்குக் காரணம், நமக்குப் பசி உணர்வு தோன்றியதுமே ஹைட்ரோகுளோரிக் அமிலமும், பெப்சின் என்சைமும் சுரக்கத் தொடங்கிவிடும். அப்போது நாம் உணவைச் சாப்பிடாவிட்டால் இந்த அமிலம் இரைப்பையின் மியூகஸ் படலத்தைத் தின்னத் தொடங்கும். இது நாளடைவில் இரைப்பைப் புண்ணுக்கு வழிவகுக்கும்.

    அல்சருக்கான அறிகுறிகள் :-

    இந்த நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான். இதைத் தொடர்ந்து அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசி இல்லாமல் இருக்கும்.

    குறைந்த அளவு உணவைச் சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிவிட்ட உணர்வு உண்டாகும். பிறகு வயிற்றில் வலி தோன்றும்.

    குறிப்பாக இரைப்பை காலியாக உள்ள நள்ளிரவு நேரங்களிலும், விடியற்காலையிலும் மேற்புற வயிற்றில் அடிக்கடி வலி வரும், புண் உள்ள இடத்தில் அமிலம்படுவதால், இந்த வலி ஏற்படுகிறது.

    அதுபோல் உணவைச் சாப்பிட்ட பின்பும் இதே வலி உண்டாகும். காரணம் புண்ணின் மீது உணவு படுவதால் இப்படி வலி ஏற்படுகிறது.

    சிகிச்சை என்ன?

    இரைப்பை புண்ணைக் குணப்படுத்த அமில எதிர்ப்பு மருந்துகள் (Antacids), ‘பிபிஐ’ (Proton pump inhibitor) மாத்திரைகள்/ஊசி மருந்துகள் உள்ளன. இவற்றைச் சரியாக எடுத்துக்கொள்வதன் மூலமும் உணவுப் பழக்கத்தைச் சரிபடுத்தி கொள்வதன் மூலமும் 90 சதவிகித இரைப்பைப் புண்ணைக் குணப்படுத்திவிடலாம். ஒரு சிலருக்கு மட்டுமே மாத்திரை, மருந்துகள் பலன் தராது. அவர்களுக்கு மட்டும் அறுவைச் சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

    1. குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும். வயிற்றெரிச்சலை போக்கும்.

    2. உங்கள் உணவில் நெய் சேர்த்துக் கொள்ளவும். நோயாளிக்கு நெய் ஜீரணமாகவிட்டால் வெந்நீருடன் சேர்த்து கொடுக்கவும்.

    3. இரண்டு மூன்று வாழைப்பழங்கள் பாலுடன் கொடுத்தால் நல்லது.
    வாழைப்பழம் அதிக அமிலத்தை சரிப்படுத்தும். மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழம் சிறந்தது.

    4. நெல்லிக்காய் சாறை சர்க்கரையுடன் சேர்த்து குடிக்க பலனளிக்கும்.

    5. வில்வ இலைகள் / பழங்கள் – இவற்றை சேர்த்து கொண்டால் வயிற்றுப்புண்கள் குணமாகும்.

    6. 250 கிராம் முட்டைக்கோசை 500 மி.லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியளவு ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கி குளிர வைக்கவும். இதை கேரட் சாறுடன் சேர்த்து பருகினால் அல்சர் குணமடையும்.

    7. பாதாம் பால் (தோலுரிக்கப்பட்ட பாதாம் பருப்புகளால் செய்வது) அல்சருக்கு நல்லது.

    8. உடைத்த அரிசியை, ஒரு பாகத்திற்கு 14 பாகம் தண்ணீர் சேர்த்து கஞ்சி தயாரிக்கவும். இது அல்சருக்கு நல்லது. பருப்பு, அரிசி தண்ணீர் சேர்த்து பொங்கல் போல் தயாரித்து உட்கொள்ளலாம்.

    9. மாதுளம் பழச்சாறு அல்சருக்கும் நல்லது.

    10. திரிபாலா சூரணம் (ஒரு தேக்கரண்டி) நெய் ஒரு தேக்கரண்டி மற்றும் தேன்
    1/2 தேக்கரண்டி கலந்து எடுத்துக் கொண்டால் அல்சர் குணமாகும்.

    11. கொத்தமல்லி விதைகளை பொடியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாகத்திற்கு 6 பாகம் தண்ணீர் என்ற அளவில் கலந்து கொதிக்க வைக்கவும். இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் இந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.

    12. உங்களுக்கு அல்சர் இருந்தால் உளுந்து, கொள்ளு, மதுபானங்கள், சிகரெட், கத்திரிக்காய், மசாலா கலந்த காரசாரமான உணவு இவற்றை தவிர்க்கவும்.

    13. உண்ணும் போது கோபம், தாபம், வருத்தங்களை தவிர்க்கவும்.

    14. ஒரே வேளையாக அதிகம் உண்பதை தவிர்த்து, இடைவெளி விட்டு சிறிதாக உட்கொள்ளவும்.

    Last edited by chan; 29th Apr 2015 at 03:28 PM.
    jv_66 likes this.

  4. #4
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    அல்சர் வரக்காரணம் - தீர்க்கும் வழிமுறைகள

    அல்சர் வரக்காரணம் - தீர்க்கும் வழிமுறைகள்
    தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக ‘பெப்டிக் அல்சர்’ (Peptic ulcer) என்கிறோம்.

    காரணங்கள் :

    காரம் நிறைந்த, புளிப்பு மிகுந்த, மசாலா கலந்த உணவு, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது. மது அருந்துதல், புகைபிடித்தல், குளிர்பானம், காபி, தேநீர் பானங்களை அதிகமாகக் குடிப்பது. ஸ்டீராய்டு மாத்திரைகள், ஆஸ்பிரின், புரூஃபென் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி சாப்பிடுவது.

    உணவை நேரம் தவறிச் சாப்பிடுவது, அதிகச் சூடாகச் சாப்பிடுவது, பட்டினி கிடப்பது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள் இரைப்பைப் புண் வர காணமாகின்றன. தினமும் வேளை தவறிச் சாப்பிடுபவர்களுக்கும் காலை உணவைத் தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கும் இரைப்பைப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    சிகிச்சை :

    இரைப்பை புண்ணைக் குணப்படுத்த அமில எதிர்ப்பு மருந்துகள் (Antacids), ‘பிபிஐ’ (Proton pump inhibitor) மாத்திரைகள்/ஊசி மருந்துகள் உள்ளன. இவற்றைச் சரியாக எடுத்துக்கொள்வதன் மூலமும் உணவுப் பழக்கத்தைச் சரிபடுத்தி கொள்வதன் மூலமும் 90 சதவிகித இரைப்பைப் புண்ணைக் குணப்படுத்திவிடலாம்.

    1. இரண்டு மூன்று வாழைப்பழங்கள் பாலுடன் கொடுத்தால் நல்லது. வாழைப்பழம் அதிக அமிலத்தை சரிப்படுத்தும். மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழம் சிறந்தது.

    2. நெல்லிக்காய் சாறை சர்க்கரையுடன் சேர்த்து குடிக்க பலனளிக்கும்.

    3. 250 கிராம் முட்டைக்கோசை 500 மி.லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியளவு ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கி குளிர வைக்கவும். இதை கேரட் சாறுடன் சேர்த்து பருகினால் அல்சர் குணமடையும்.

    4. பாதாம் பால் (தோலுரிக்கப்பட்ட பாதாம் பருப்புகளால் செய்வது) அல்சருக்கு நல்லது.

    5. உடைத்த அரிசியை, ஒரு பாகத்திற்கு 14 பாகம் தண்ணீர் சேர்த்து கஞ்சி தயாரிக்கவும். இது அல்சருக்கு நல்லது. பருப்பு, அரிசி தண்ணீர் சேர்த்து பொங்கல் போல் தயாரித்து உட்கொள்ளலாம்.

    6. மாதுளம் பழச்சாறு அல்சருக்கும் நல்லது.

    7. கொத்தமல்லி விதைகளை பொடியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாகத்திற்கு 6 பாகம் தண்ணீர் என்ற அளவில் கலந்து கொதிக்க வைக்கவும். இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் இந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.

    8. உங்களுக்கு அல்சர் இருந்தால் உளுந்து, கொள்ளு, மதுபானங்கள், சிகரெட், கத்திரிக்காய், மசாலா கலந்த காரசாரமான உணவு இவற்றை தவிர்க்கவும்.

    9. ஒரே வேளையாக அதிகம் உண்பதை தவிர்த்து, இடைவெளி விட்டு சிறிதாக உட்கொள்ளவும்.

    jv_66 likes this.

  5. #5
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Ulcer & Remedies for it-அல்சர்... அலட்சியம் வேண்டாம்!

    Thanks for the details

    chan likes this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter