Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 1 Post By chan
  • 1 Post By jv_66

Thalasemia -தாலசிமியா


Discussions on "Thalasemia -தாலசிமியா" in "General Health Problems" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Thalasemia -தாலசிமியா

    தாலசிமியா

    ‘‘நம் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ரத்தத்தட்டுகள் என்று மூன்றுவித பொருட்கள் அடங்கியிருக்கின்றன. இவற்றில் சிவப்பு அணுக்கள் நம் உடல்முழுவதும் ஆக்சிஜனை கொண்டு செல்லவும், வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கும், காயங்கள் ஏற்படும்போது ரத்தத்தை உறைய வைத்து தற்காத்துக் கொள்ள ரத்தத்தட்டுகளும் உதவி செய்கின்றன.



    இந்த மூன்றும் இயல்பாக உற்பத்தியாகிக் கொண்டிருந்தால்தான் நாம் உயிர் வாழ முடியும். துரதிர்ஷ்டவசமாக, சில குழந்தைகளுக்குப் பிறவியிலேயே சிவப்பு அணுக்கள் இல்லாமல் போய்விடுகின்றன. இதையே தாலசிமியா(Thalassemia)என்கிறோம்’’ என்று அறிமுகம் கொடுக்கிறார் குழந்தைகள் ரத்த இயல் சிறப்பு மருத்துவரான ரேவதி ராஜ்.

    தாலசிமியா குறைபாடு எதனால் வருகிறது என்பதையும், முன்னரே கண்டுபிடிக்கும் வழிமுறைகளையும் தொடர்ந்து விளக்குகிறார்... ‘‘தினமும் லட்சக்கணக்கான சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ரத்தத்தட்டுகள் ஆகியவை நம் எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகின்றன. இந்த உற்பத்தித்திறன் மரபியல் ரீதியாக பெற்றோரிடமிருந்து குழந்தைக்குக் கிடைக்கிறது. சிவப்பு அணுக்களின் உற்பத்திக்குத் தாயிடம் இருந்து ஒரு ஜீன், தந்தையிடம் இருந்து ஒரு ஜீன் என இரண்டு ஜீன்கள் கிடைக்க வேண்டும்.

    அப்படி கிடைக்காதபட்சத்தில், அதுவே தாலசிமியா குறைபாடாக உருவாகிறது. இரண்டு ஜீன்களில் ஒரு ஜீன் கிடைக்காமல், மற்றொரு ஜீன் ஆரோக்கியமாக இருந்தால் பிரச்னைகள் ஏதும் ஏற்படப் போவதில்லை. இரும்புச்சத்து மட்டும் சற்று குறைவாக இருக்கும். ஆரோக்கியமான ஒரு ஜீன் மூலம் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை சமாளித்துக் கொள்ள முடியும்.

    இதற்கு ‘மைனர் தாலசிமியா’ என்று பெயர். மைனர் தாலசிமியா குறைபாடு யாருக்கும் இருக்க வாய்ப்புண்டு. அமிதாப் பச்சன், அமிஷா படேல் போன்ற பிரபலங்களே மைனர் தாலசிமியா பாதிப்புள்ளவர்கள்தான். பெற்றோரிடம் இருந்து இரண்டு ஜீன்களும் கிடைக்காத பட்சத்திலோ, ஜீன்கள் கிடைத்தும் செயல்திறன் இல்லாமல் இருந்தாலோ உருவாகும் மேஜர் தாலசிமியாதான் மிகவும் கவனத்துக்கு உரியது.

    மேஜர் தாலசிமியா குறைபாடு பிறந்த மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் குழந்தையின் உடல் நிறம் வெளுப்பாவது, கண்கள் மஞ்சள் நிறமாக மாறுவது, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு பாதிக்குப் பாதியாகக் குறைவது, கல்லீரல், மண்ணீரல் போன்ற உள்ளுறுப்புகளில் வீக்கம் போன்றவற்றின் மூலம் தெரிய வரும். மேஜர் தாலசிமியாவுக்கு, நீரிழிவு உள்ளவர்கள் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வது போல மாதா மாதம் குழந்தைக்கு ரத்தம் ஏற்றிக் கொள்ள வேண்டும்...’’

    இப்படி மாதாமாதம் ரத்தம் ஏற்றிக் கொள்வதால் பொருளாதார சவால்களோடு பெற்றோரின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுமே...‘‘தாலசிமியா பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு ரத்தத்தை இலவசமாக வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஆனாலும், ஒவ்வொரு ப்ளட் பாக்கெட்டையும் எச்.ஐ.வி. பரிசோதனை, ஹெபடைட்டிஸ் பரிசோதனை என்று பல சோதனைகளை செய்துதான் ரத்தத்தை கொடுக்க முடியும். அதனால், சில கட்டணங்களைத் தவிர்க்க முடிவதில்லை.

    குழந்தைகள் வளரும்போது ரத்தத்தின் தேவையும் அதிகமாவதால் மாதம் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை செலவாகும். இந்த பொருளாதாரச் சவாலுடன் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. ஒரு பாக்கெட் ரத்தத்தில் 200 மி.கி. வரை இரும்புச் சத்து இருக்கும்.

    மாதா மாதம் உடலில் ரத்தத்தை ஏற்றிக்கொண்டே செல்வதால் இரும்புச் சத்தும் அதிகமாகும். தேவைக்கும் அதிகமாக உடலில் சேரும் இரும்புச் சத்து இதயம், கல்லீரல் போன்றவற்றை பாதித்து உயிரிழப்பையே உண்டாக்கலாம். அதனால், இரும்புச்சத்தை குறைப்பதற்கானமருந்துகள், மாத்திரைகளையும் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

    தாலசிமியா பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்றால் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே வழி. இந்த சிகிச்சையின் மூலம் சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக ரத்தம் மாறி, தாலசிமியா நீங்கிவிடும். ரத்த வகைகளில் ஒற்றுமை இருப்பதுபோல எலும்பு மஜ்ஜை ஒரே வகையாக குடும்பத்தில் யாருக்காவது இருக்கும். அதை தானமாக பெற்றுக்கொண்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.

    இந்த சிகிச்சைக்கு ரூ.15 லட்சம் வரை செலவாகும். தாலசிமியாவை வரும் முன்னர் தடுப்பதே சிறந்தது’’ என்கிறார். தமிழ்நாட்டில் தாலசிமியாவின் பாதிப்பு எப்படிஇருக்கிறது? எப்படி தடுப்பது?‘‘தாலசிமியா பிரச்னை தமிழ்நாட்டில் மிகவும் குறைவுதான். நமக்குத் தெரிந்து 500 பேர் வரை மைனர் தாலசிமியா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம்.

    தர்மபுரி, நீலகிரி, சித்தேரி போன்ற மலைப்பகுதிகளிலும் வட இந்தியர் வாழும் மதுரை போன்ற சில பகுதிகளிலும் மைனர் தாலசிமியா குறைபாடு கொண்டவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள். சித்தேரியில் அதிகபட்சமாக 22 சதவிகிதம் வரை பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வட இந்தியாவில் பாதிப்பு சற்றே அதிகமாக இருக்கிறது.

    தாலசிமியாவை வரும் முன்னரே தடுக்க முடியும். நெருங்கிய உறவு திருமணங்களைத் தவிர்க்க வேண்டும். தம்பதி இருவருமே மைனர் தாலசிமியா கொண்டவர்கள் எனில், பிறக்கும் குழந்தைக்கு தாலசிமியா உண்டாக 25 சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது.

    இதனால், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிற தம்பதி,கர்ப்பத்தின் மூன்றாவது மாதத்திலேயே குழந்தைக்கு தாலசிமியா இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்வது அவசியம். கர்ப்பிணிகளைப் பரிசோதிக்கிற மருத்துவர்களுக்கும் தாலசிமியா பற்றிய விழிப்புணர்வு இன்னும் அதிகமாக வேண்டும். ஹீமோகுளோபின் அளவு குறைந்திருக்கிறது என்று சில மருத்துவர்கள் கவனக்குறைவாக விட்டுவிடுகிறார்கள். இரும்புச்சத்து குறைபாடா, மைனர் தாலசிமியாவா என்பதை கண்டுபிடிக்க HB electrophoresis என்ற பரிசோதனையையும் செய்து கொள்ள வேண்டும்!’’

    நெருங்கிய உறவு திருமணங்களைத் தவிர்க்கவேண்டும். தம்பதி இருவருமே மைனர் தாலசிமியா கொண்டவர்கள்என்றால், பிறக்கும் குழந்தைக்கு தாலசிமியா உண்டாக25 சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது...

    அமிதாப் பச்சன், அமிஷா படேல் போன்ற பிரபலங்களும்மைனர் தாலசிமியா பாதிப்பு உள்ளவர்களே!



    Sponsored Links
    jv_66 likes this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Thalasemia -தாலசிமியா

    Thanks for the info.

    chan likes this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter