Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
 • 2 Post By chan
 • 1 Post By jv_66

Robotic Knee replacement surgery-ரோபோட்டிக் மூட்டு மாற்று சிகிச்சை!


Discussions on "Robotic Knee replacement surgery-ரோபோட்டிக் மூட்டு மாற்று சிகிச்சை!" in "General Health Problems" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Robotic Knee replacement surgery-ரோபோட்டிக் மூட்டு மாற்று சிகிச்சை!

  ரோபோட்டிக் மூட்டு மாற்று சிகிச்சை!

  இன்றைய தினம், பொது மருத்துவரிடம் சிகிச்சைக்கு வருபவர்களில் மூன்றில் ஒருவர் மூட்டுவலி காரணமாகவே வருகிறார். இந்தியாவில் மட்டும் 15 கோடிப் பேர் ஏதாவது ஒரு மூட்டுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூட்டுவலி என்பது முன்பெல்லாம் முதியவர்களைப் பாதிக்கும் நோயாக இருந்தது; இப்போதோ இளைஞர்களையும் டீன் ஏஜ் பெண்களையும் பாதிக்கின்ற நோயாக வளர்ந்து வருகிறது.  உடல் உழைப்பு குறைந்து வருவதும் உடற்பயிற்சி இல்லாததும் இதற்கு முக்கியக் காரணங்கள். நாட்டில் கணினித்துறை பெரும் வளர்ச்சி பெற்ற பிறகு 35 சதவீத இளைஞர்கள் அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு மூட்டுத்தசை இறுகி மூட்டுவலி வந்துவிடுகிறது. மாறிவரும் உணவுமுறை மூட்டுவலியை ஏற்படுத்துகிற அடுத்த காரணம்.

  இன்றைய இளைய தலைமுறையினர் இந்தியப் பாரம்பரிய உணவுமுறையை ஓரங்கட்டி விட்டார்கள். மேற்கத்திய உணவுக் கலாசாரத்துக்கு மாறிவிட்டார்கள். இதனால், சிறு வயதிலேயே உடல் பருமன் மற்றும் ஹார்மோன் கோளாறுகள் வந்து அவதிப்படுகிறார்கள். இந்த அவதி நாளடைவில் மூட்டுவலிக்கு வழி அமைக்கிறது.

  முதுமை, அடிபடுதல், காயம், மூட்டு சவ்வு கிழிதல், மூட்டு எலும்பு வளைவு, ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ எனும் எலும்பு வலுவிழப்பு நோய், யூரிக் அமிலம் எலும்பு மூட்டுகளில் படிவது, பாக்டீரியா கிருமித்தொற்று, ருமாட்டிக் நோய், காசநோய் போன்றவை முழங்கால் மூட்டு
  வலிக்குப் பொதுவான காரணங்கள்.

  முதுமையில் வருகிற முழங்கால் மூட்டுவலிக்கு அடிப்படைக் காரணம் எலும்புத் தேய்மானம்தான். வயதாக ஆக, அங்குள்ள குருத்தெலும்பு தேய்ந்து அழற்சி உண்டாகிறது. ‘முதுமை மூட்டழற்சி’ (Osteoarthritis) என்று இதற்குப் பெயர். முழங்கால் மூட்டில் ‘கொலாஜன்’ எனும் புரதப்பொருள் உள்ளது. இதுதான் அங்குள்ள குருத்தெலும்பை வழுவழுப்பாகவும் வலுவாகவும் வைத்துக்கொள்கிறது. முதுமை நெருங்கும்போது, இயற்கையாகவே கொலாஜன் உற்பத்தி குறைந்துவிடும்; குருத்தெலும்புத் திசுக்கள் தேய்ந்து மெலிந்துவிடும். இதன் விளைவால், மசகு இல்லாத சக்கரம் கிரீச்சிடுவது போல, முதுமையில் முழங்கால் மூட்டுகள் உரசிக்கொள்ளும்போது மூட்டுவலி ஏற்படுகிறது.

  அடுத்த காரணம் இது: நாட்கள் ஆக ஆக, அழற்சி ஏற்பட்டுள்ள குருத்தெலும்புத் திசுக்களில் எலும்பு முடிச்சுகள் (Osteophytes) முளைக்கின்றன. இதனால் குருத்தெலும்பு தடித்து விடுகிறது. தோலில் ஏற்பட்ட காயம் ஆறிய பின்பு அங்கு தழும்பு ஏற்படுகிறதல்லவா? அதுமாதிரிதான் இது. இதன் விளைவால், தேய்ந்துபோன கிரானைட் கல் மாதிரி மூட்டின் முனைகளில் காணப்படுகின்ற வழுவழுப்புத் தன்மை மறைந்து சொரசொரப்பாகி விடுகிறது.

  இந்த நிலைமையில் முழங்காலை அசைத்தால், தடித்துப் போன எலும்புகள் உரசுகின்றன. இதனால் மூட்டுவலி கடுமையாகிறது.
  சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு எழுந்து நில்லுங்கள். மூட்டு பிடிப்பதுபோல் இருக்கிறதா? கொஞ்ச தூரம் நடந்து செல்லுங்கள். அந்தப் பிடிப்பு விட்டதுபோல் இருக்கிறதா? அப்படியானால், உங்களுக்கு மூட்டுத் தேய்மானம் ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம்.

  இதன் ஆரம்ப நிலையில் மாத்திரைகள் மற்றும் பிசியோதெரபி சிகிச்சை மூலம் நிவாரணம் பெற முடியும். இவற்றில் SWD, IFT சிகிச்சைகள் பிரதானம். இவற்றுடன் தொடை தசைகளுக்குப் பயிற்சி கொடுத்தால் மூட்டுவலி குறையும். சிலருக்கு முழங்கால் மூட்டுக்குள் ஸ்டீராய்டு ஊசியைப் போட்டால், சில மாதங்களுக்கு வலி இருக்காது. இன்னும் சிலருக்கு ‘ஆர்த்ராஸ்கோப்’ மூலம் மூட்டின் உள்பகுதி சுத்தம் செய்யப்படும் (Arthroscopic lavage). இதன் பலனால் ஆறு மாதமோ, ஒரு வருடமோ மூட்டுவலி இல்லாமல் இருக்க முடியும்.

  மூட்டில் தேய்மானம் மிக அதிகமாக இருந்தால், இந்தச் சிகிச்சைகள் எல்லாம் முழுமையான தீர்வு தராது, ‘செயற்கை மூட்டு மாற்று சிகிச்சை’ (Total Knee Replacement) மட்டுமே நிரந்தரத் தீர்வு தரும். உலோகத்தால் தயாரிக்கப்பட்ட செயற்கை மூட்டைப் பொருத்தும் அறுவை சிகிச்சை இது. மூட்டில் குருத்தெலும்பு உள்ள மேல்தளத்தை மட்டுமே எடுத்துவிட்டு அந்த இடத்தில் உலோக மூட்டு பொருத்தும் சிகிச்சை இது.

  எவர்சில்வர் தொடங்கி குரோமியம், கோபால்ட், டைட்டானியம், பாலிஎதிலீன், செராமிக்ஸ், ஜிர்க்கோனியம் வரை பலதரப்பட்ட உலோகக் கலவைகள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் புது வரவு ஆக்சினியம்(Oxinium). இது ஓர் ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்ட ஜிர்க்கோனியம் கலவை; மற்ற உலோகக் கலவைகளைவிட பல வழிகளில் சிறந்தது; அதிக வலுவானது. வழுவழுப்பானது; சீக்கிரத்தில் தேயாது; அதிகமாக வளையும் தன்மை கொண்டது.

  குறைந்த எடை உடையது. இதற்கு ஒவ்வாமை ஏற்பட வழியில்லை. இதைப் பொருத்திக் கொண்டவருக்கு மூட்டுவலி இருந்த இடம் தெரியாது. முன்பெல்லாம் செயற்கை மூட்டுகள் அதிகபட்சமாக 10 வருட காலம்தான் தாக்குப்பிடிக்கும். ஆக்சினியம் மூட்டு 25 வருடங்கள் வரை உழைக்கின்றது.

  இதைப் பொருத்தும் முறையிலும் ஒரு புதுமை புகுந்துள்ளது. கணினியின் உதவியுடன் ஒரு ரோபோ இந்த அறுவைச் சிகிச்சையை (Computer-Assisted Robotic Knee Replacement Surgery) செய்கிறது. எலும்பு மூட்டில் மனிதக் கைகளால் போடமுடியாத அளவுக்கு மிகச் சிறிய துளையைப் போட்டு அதன் வழியாக செயற்கை உலோகத்தை மூட்டுக்குள் செலுத்துவதற்கு ரோபோ உதவுகிறது. மேலும், மூட்டின்மீது மிகத் துல்லியமாக செயற்கை மூட்டைப் பொருத்துவதற்கும் இது பயன்படுகிறது. இதனால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு செயற்கை மூட்டு இடம் மாறுவதற்கோ, நழுவிவிடவோ வழியில்லை.

  இயற்கை மூட்டைப் போலவே இதுவும் மிகச் சரியாகப் பொருந்திவிடுவதால், மறுசிகிச்சை என்ற பேச்சுக்கே இடமில்லை. ரத்தமிழப்பு இல்லை. அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லை. அறுவை சிகிச்சைத் தழும்பு தெரிவதில்லை. நோய்த்தொற்றுக்கு வாய்ப்பில்லை. இது இந்தியாவிலும் இப்போது மேற்கொள்ளப்படுகிறது.


  டாக்டர் கு.கணேசன்
  Similar Threads:

  Sponsored Links
  sumathisrini and jv_66 like this.

 2. #2
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Robotic Knee replacement surgery-ரோபோட்டிக் மூட்டு மாற்று சிகிச்சை

  Very good advanced technology.

  chan likes this.
  Jayanthy

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter