Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree1Likes
 • 1 Post By chan

Heat Stroke -ஹீட் ஸ்ட்ரோக் தடுக்க... தவிர்க்க...


Discussions on "Heat Stroke -ஹீட் ஸ்ட்ரோக் தடுக்க... தவிர்க்க..." in "General Health Problems" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Heat Stroke -ஹீட் ஸ்ட்ரோக் தடுக்க... தவிர்க்க...

  ஹீட் ஸ்ட்ரோக் தடுக்க... தவிர்க்க...
  திலோத்தம்மாள்
  நரம்பியல் மருத்துவர்
  கிக்கும் வெயிலின் தாக்கத்தினால், இந்தியாவில் இந்த ஆண்டில் மட்டும் 2000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது. கொதிக்கும் வெயிலால் எரிச்சல் உணர்வு, பதற்றம், டென்ஷன் ஏற்பட்டு நம் உடல்நலமும் மனநலமும் பாதிக்கப்படுகின்றன. இதன் உச்சமாக உயிரிழப்புகூட நிகழ்கிறது.

  சராசரியாக நமது உடலின் வெப்பநிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் என்றால், ஹீட் ஸ்ட்ரோக்கின்போது, 104 டிகிரிக்கு மேல் உயர்கிறது. வெப்பநிலை அதிகரிக்கும்போது, உடலின் வெப்பநிலையும் அதிகரிக்கிறது. இதைச் சரி செய்து, உடலின் தட்பவெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்க வியர்வை சுரக்கிறது. வியர்வை சுரப்பை மூளையில் உள்ள ஹைபோதலாமஸ் தூண்டுகிறது. வியர்வையால் உடல் நனைந்து, குளிர்ச்சி அடையும். சருமத்துக்கு ரத்தஒட்டம் பாயும். வியர்வை அதிகமாகச் சுரந்து ஆவியாகும். இந்த செயல்பாடுகள் நடக்காவிட்டால் ஹீட் ஸ்ட்ரோக் வரும்.

  யாருக்கு வரலாம்?
  வியர்வை சுரக்காமலோ, சுரந்து ஆவியாகாமல் இருந்தாலோ, ஹைபோதலமஸ் சரியாக வேலை செய்யாமல் இருந்தாலோ, ஹீட் ஸ்ட்ரோக் வர வாய்ப்புகள் அதிகம். வயதானவர்களுக்கு, ஹைபோதலமஸ் சரியாக வேலை செய்யாமல் போகலாம். குழந்தைகளும் நீண்ட நேரம் வெயிலில் இருந்தால், உடல் பலவீனமாகி ஹீட் ஸ்ட்ரோக் வரலாம். ராணுவத்தினர், காவல் துறையினர், கட்டட தொழிலாளர்கள் போன்ற வெயிலில் பணிபுரிவோருக்கு, உடலில் வெப்பம் கூடி ஹீட் ஸ்ட்ரோக் வரலாம்.

  அறிகுறிகள்
  உடல் வெப்பநிலை அதிகரித்தல், வியர்வை குறைதல், மயக்கம், வாந்தி, வயிற்றைப் புரட்டல், படபடப்பு, கை, கால் மற்றும் தசைகள் பிடிப்பு, தலைவலி, குழப்பமான மனநிலை போன்றவை ஆரம்ப அறிகுறிகள்.

  அதிவேக இதயத் துடிப்பு, தாங்க முடியாத தலைவலி வந்து மயக்கம், சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு போய்விடுதல் போன்றவைகளால் உயிரிழப்பு ஏற்படலாம். மயங்கி விழுபவர்களின் உடலைத் தொட்டுப்பார்த்தால், நெருப்பில் கை வைத்தது போல சுடும். சருமம் சிவந்திருக்கும். இவர்களுக்கு வியர்வை வராமல், அனைத்துச் செயல்பாடுகளும் நின்றுபோயிருக்கும்.

  முதலுதவி எப்படிச் செய்வது?
  மயக்கமடைந்துவிட்டால், உடனடியாக நிழலான இடத்துக்குக் கொண்டு செல்லவேண்டும். உடைகளைக் களைந்து, காற்று போகும்படி செய்ய வேண்டும். உடலின் வெப்பநிலையை சராசரிக்குக் கொண்டுவர வேண்டும். முகத்தில் நீரைத் தெளிக்கலாம். குழாயைத் திறந்துவிட்டு தண்ணீர் படும்படி உட்காரவைக்கலாம். குளிர்ந்த நீரை உடல் முழுதும் ஊற்றலாம். வாயில் தண்ணீரை ஊற்றுவது பயன் இருக்காது. சுயநினைவுடன் இருந்தால், மூன்று நான்கு கிளாஸ் தண்ணீர், இளநீர், உப்பு சர்க்கரை கலந்த நீரைக் கொடுக்கலாம். கஞ்சி, கூழ் போன்ற திரவ உணவுகளை கொடுக்கக் கூடாது.

  ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். தாமதப்படுத்தி சிகிச்சை அளித்தால், சிலருக்கு மறதி, கவனக்குறைவு, ஆர்வமின்மை, தனியாக தன் வேலைகளைச் செய்ய முடியாமல் போதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். மது, காபி, காஃபைன் கலந்த உணவுகள், கொகைன், மருந்துகளைச் சாப்பிடுபவர்கள், இருமலுக்குக் குடிக்கும் சிரப் மருந்துகள், சிகரெட், புகையிலை சுவைத்தல், காற்று இல்லாத இடத்தில் இருப்பது ஆகியவற்றால் உடல் அதிக வெப்பமடைந்து, பாதிப்புகளை ஏற்படுத்தும். ஏ.சி இல்லாமல், காரின் கதவுகளை அடைத்து உட்கார்ந்திருப்பதாலும், கார் பார்க்கிங் போன்ற காற்று புகாத இடங்களில் 10 நிமிடங்களுக்கு மேல் இருந்தாலும் உடலில் 20 ஃபாரன்ஹீட்அளவுக்கு வெப்பம் அதிகரிக்கக் கூடும். இதனால்கூட ஹீட் ஸ்ட்ரோக் வரலாம். கவனத்துடன் இருந்தால், ஹீட் ஸ்டிரோக்கைத் தவிர்க்கலாம்.


  தடுக்கும் வழிகள்...
  உச்சி வெயிலின்போது, குழந்தைகள், வயதானவர்களை வெளியில் அனுப்பக் கூடாது.

  பருத்தி ஆடைகளைத் தவிர்த்து, வேறு எந்த ஆடைகளையும் அணிவிக்கக் கூடாது. அடர் நிற ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவும்.

  காற்று புகக்கூடிய ஓட்டைகள் இருக்கும், ஒலைத் தொப்பியை அணிவது சிறப்பு.

  வெயிலில் வேலை செய்வோர், அரை மணி நேரத்துக்கு ஒருமுறை, நிறைய தண்ணீரை அருந்த வேண்டும். அடிக்கடி உடலை ஈரமாக்கிக்கொள்ளலாம். திரவ உணவுகளை அதிகமாகச் சாப்பிடலாம்.

  மயக்கம் அடைந்து கீழே விழுபவர்களை, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வது அவசியம்.

  Similar Threads:

  Sponsored Links
  Last edited by chan; 18th Jun 2015 at 11:13 AM.
  jv_66 likes this.

 2. #2
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Heat Stroke -ஹீட் ஸ்ட்ரோக் தடுக்க... தவிர்க்க...

  Thanks for the suggestions

  Jayanthy

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter