* சிறுநீரகத்தின் முக்கியப் பணி, கழிவுப் பொருட்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றுவதே. ரத்தத்திலுள்ள கழிவுப்பொருட்களான, யூரிக் அமிலம், யூரியா, கிரியேட்டினைன் சல்பேட்டுகள் போன்றவை வெளியேறுகின்றன.
* அளவுக்கதிகமான தாதுப் பொருட்களான, சோடியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பேட் மற்றும் மெக்னீசியம் போன்றவற்றையும், சிறுநீரின் வழியாக வெளியேற்றுகின்றன.
* சிறுநீரகம் பழுதடைந்துவிட்டால், யூரியாவின் அளவு அதிகமாகிவிடும். இந்த நிலைக்கு யூரேமியா என்று பெயர்.
* சிறுநீரகம், பழுதடையும் போது, உடலில் தாதுப் பொருட்களின் சமச்சீர் குறைகிறது. இதனால் அசிடோசிஸ், ரத்தக் கொதிப்பு மற்றும் அதிக அளவு கால்சியமும் வெளியேறுவதால், 'ஹைப்பர் கேமெல்லியா ஏற்படுகிறது.
* சிறுநீரகப் பணியில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், கால்சியம் சத்தினை உடலில் சேர, தேவைப்படும் சத்தான, 'வைட்டமின் - டி' உருவாக்கப்படுவது கடினமாகிறது. எனவே சிறுநீரகக் கோளாறு உள்ளவருக்கு எலும்பு தேய்மானமடைந்து எலும்பு நோய் உருவாகிறது.
* ஹார்மோன்களான இன்சுலின், கேஸ்டிரின், பெரா தைராய்டு மற்றும் கால்சிடோனின் போன்றவற்றை படிப்படியாகச் சிதையச் செய்கின்றது.
* மரபணுக்கள் உருவாக்கத் தேவைப்படும் 'எரித்ரோபையோடின்' சிறுநீரகத்தில் உருவாக்கப்படுகிறது.
* சிறுநீரக வீக்கம் வெளியுறுப்புகளில் ஏற்படும் மாற்றத்தை வைத்து தான் இதையறிய முடியும்.
* சிறுநீரக வீக்கம் பெரும்பாலும், 3 முதல் 10 வயது வரையுள்ள குழந்தைகளுக்கே ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு, 50 வயதை தாண்டியவுடன் ஏற்படுகிறது.
* சிறுநீரகம் செயலிழக்க முக்கிய காரணம், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது.

Similar Threads: