Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine May! | All Issues

User Tag List

Like Tree49Likes

Temples, Slokas & Mantras for Pregnancy & Delivery


Discussions on "Temples, Slokas & Mantras for Pregnancy & Delivery" in "General Pregnancy" forum.


  1. #11
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    31,148

    Re: Temples, Slokas & Mantras for Pregnancy & Delivery

    புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

    மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ பாவங்களைச் செய்து விடுகின்றனர். அப்படி செய்யப்பட்ட பாவங்களுக்கு பரிகாரம் உண்டா என்று கேட்பதுண்டு.

    மக்களுக்கு சந்தான பிராப்தி அவசியம். இந்த பிராப்தி, சிலருக்கு இல்லாமல் போவதுண்டு. பொதுவாக, இது போன்று புத்திர பாக்கியம் இல்லாமல் போவதற்கு சிலவகை காரணங்களை, பாவங்களில் சொல்லியிருக்கின்றனர். குரு, தாய், தந்தையை துவேஷித்து, துன்பப்படுத்தி இருந்தால், சந்தான பாக்கியம் இருக்காதாம். இதற்கு பரிகாரம், சொர்ணத்தால் கிருஷ்ண விக்ரகம் செய்து, தானம் செய்தால், சந்தானம் உண்டாகும்.

    அதே போல், கன்றையும் பசுவையும், தாயையும் பிள்ளையையும் பிரித்தால், சந்ததி உண்டாகாது. இதற்கு, பூமிதானம், கோதானம் செய்தால், பாவம் விலகி, சந்தான பாக்கியம் கிடைக்கும். மேலும், குழந்தைகளை மிரட்டுவது, அடிப்பது, அவர்களுக்கு கொடுக்காமலோ, ரகசியமாகவோ அல்லது எதிரிலேயோ பட்சணங்கள் சாப்பிடுவதும் புத்திர தடைக்கு காரணம். இதற்கு பரிகாரமாய், குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான்கள், மரப்பாச்சி, சோழி இவைகளை வாங்கி, தானம் செய்ய வேண்டும். பிறருடைய குழந்தைகளை அடித்து புண்படுத்துவது, மற்ற உயிரினங்களின் முட்டைகளை உடைப்பது போன்ற செயல்கள், சந்ததி நாசம் ஏற்படுத்தும்.

    தண்ணீரில் மூழ்கி இறந்து விடும் தறுவாயில் உள்ள விலங்குகளை காப்பாற்ற முயற்சிக்காமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது பாவம். இதற்கு, தினமும் கோ பூஜை செய்வதும், பசுவுக்கு புல் கொடுப்பதும் பரிகாரமாக சொல்லப்படுகிறது.

    சர்ப்பங்களை அடித்துக் கொல்வதாலும், ராகு கேது கிரகதோஷங்களாலும், பித்ருக்கள் சாபத்தாலும், சந்தானம் இல்லாமல் போகலாம். நாகப் பிரதிஷ்டை, சர்ப்ப சாந்தி செய்தால், புத்திர பாக்கியம் ஏற்படும்.





    Sponsored Links
    jv_66 and gkarti like this.

  2. #12
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    31,148

    Re: Temples, Slokas & Mantras for Pregnancy & Delivery

    புத்திர பாக்கியம் பெற...

    குழந்தை பாக்கியம் மிகவும் முக்கியமானது என்பதால் திருவள்ளுவர் மக்கட்பேறு என்ற ஒரு அதிகாரத்தையே தனது திருக்குறளில் இடம் பெறச் செய்துள்ளார்.

    2. மகப்பேறு உண்டாகாமல் இருப்பதற்கு முன் வினையே காரணம் என்று கருடபுராணம் தெரிவிக்கிறது.

    3. ஏழைக் குழந்தைகளுக்கு உடைகள், விளையாட்டு பொருட்கள், நூல்கள் வாங்கி கொடுத்தால் புத்திரபாக்கியம் உண்டாகும்.

    4. ராமாயணத்தில் பாலகாண்டம் 18-வது ஸ்வர்க்கத்தை 45 நாட்கள் பாராயணம் செய்தல் வேண்டும். அவ்வாறு பாராயணம் செய்ய இயலாதவர்கள் பிறரைப் படிக்கச் சொல்லிக் கேட்டால் கூடப் பலன் உண்டு.

    5. பாயாசம் செய்து நிவேதனப் பொருளாக வைத்துக் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் புத்திரபாக்கியம் உண்டாகும்.

    6. பூஜை அறையில் ராமர் படம் இருப்பது சிறப்புடையது ஆகும்.

    7. ராகு தோஷத்தினால் பிடிக்கப்பட்டுப் புத்திரபாக்கியம் இல்லாத தம்பதியினர் திருமணஞ்சேரித் தலத்திற்குச் சென்று அங்குள்ள சப்ர சாகர தீர்த்த்தில் நீராடி, அங்கு கோயில் கொண்டிருக்கும் ராகு பகவானுக்கு பால் அபிஷேகமும், பால் பொங்கல் நிவேதனமும் செய்து வழிபட்டால் ராகுவின் அருள்கிட்டும். நிவேதனத்தைச் சிறிது அருந்தினால் ராகு தோஷம் நீங்கப் பெற்றுப் புத்திரப்பேறு பெறுவர்.

    8. `புத்ரதா' என்றழைக்கப்படும் தை மாத சுக்ல பட்ச ஏகாதசியன்று உபவாசம் இருந்து நாராயணனை வழிபட்டு மறுநாள் துவாதசி அன்று துவாதசிப் பாரணை செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.

    9. புத்திர தோஷம் விரைவில் அகல குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியமாகும்.

    10. சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வந்தால் குழந்தை பாக்கியம் வரும்.

    11. வெள்ளியினால் செய்த நாகத்தைத் தானம் செய்தாலும் பலன் உண்டு.

    12. கிருத்திகை விரதம் இடைவிடாது இருந்தால் புத்திரதோஷ நிவர்த்தி ஏற்பட்டு, புத்திர பாக்கியம் உண்டாகும்.

    13. சஷ்டி, கிருத்திகை, செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகனை பக்தியுடன் பூஜை செய்ய புத்திர பாக்கியம் உண்டாகும்.

    14. ஹரித்துவார் சென்று கங்கையில் நீராடி ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் புத்திர பாக்கியம் கைகூடும்.

    15. ஒருமுறை காசிக்கு சென்று கங்கையில் நீராடி, உங்கள் கைகளினாலேயே கங்கை நீரைத் கொண்டு, காசி விஸ்வநாதருக்கு வில்வம் சேர்த்து கங்கா தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

    16. தங்கள் மனைவியருடன் அமைந்துள்ள நவக்கிரக மூர்த்திகளை வழிபட்டால் திருமணம் கைகூடி உரிய காலத்தில் புத்திர பாக்கியம் ஏற்பட்டு இல்லற வாழ்க்கை இனி தாய் அமையும்.

    17. பசு வளர்த்து அதற்கு சேவை செய்து வந்தால் உடனடியாக குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    18. திருவாரூரில் இருந்து 24 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ராஜகோபாலப் பெருமாள் ஆலயம். இந்த பெருமாள் குழந்தை வடிவில் உள்ளதால் இவரை வழிப்பட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

    19. சமயபுரம் மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். குழந்தை இல்லாதவர்கள் அங்கு சென்று சமயபுரத்தாளை வழிபட்டால் பலன் கிடைக்கும்.

    20. மதுரை ராமநாதபுரம் சாலையில் உள்ள மடப்புரம் காளிக்கோயிலில் குழந்தை இல்லாத பெண்கள் தங்கள் சேலையைக் கிழித்து தொட்டில் கட்டினால் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

    21. ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமிக்கு அர்ச்சனை செய்து குழந்தை பாக்கியம் வேண்டும் என்று கேட்டு வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    22. குழந்தை இல்லாத குறையை நீக்க அரச மரமும், வேம்பும் சேர்ந்துள்ள ஆலயத்திற்கு காலை 7 மணிக்குள் சென்று 108 முறை 48 நாட்கள் சுற்றி வர குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த 48 நாளும் நல்லெண்ணை திரி போட்டு விளக்கு ஏற்றி வரவும்.

    23. அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யாதவர்களுக்கு சந்ததிகள் உண்டாகாது. புத்திர தோஷம் ஏற்படும்.

    24. வைகாசி விசாக நட்சத்திரத்து அன்று, பகல் உணவு அருந்தி, மாலை கோவில்களுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபடுவதால் புத்திர தோஷம், புத்திர சோகம் நீங்கி புத்திர பாக்கியம் கிடைக்கும்.

    25. காலை மூன்று மணி முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரம்ம முகூர்த்தம் என்று கூறுவார்கள். இந்த நேரத்தில் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு உடலில் அணிந்திருக்கும் துணி காயும் முன் அரச மரத்தைச் சுற்றத் தொடங்க வேண்டும். ஆண்கள் வலது பக்க மாகவும் பெண்கள் இடது பக்கமாகவும் சுற்றி வர வேண்டும். இவ்வாறு 21 முறை சுற்றவும். இதனால் பிள்ளைப் பேறுக் கிடைப்பது மட்டுமல்லாது பிற கர்ப்ப கோளாறுகள் நீங்கும். இதனால் தான் அரச மரத்தின் கீழ் இருபாம்புகள் பிணைந்து கிடப்பது போன்ற கற்சிலைகள் இருக்கின்றன.

    26. ஏழைகளுக்கு தேன் தானம் செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். 27. அரசும் வேம்பும் ஒன்றாக வளரும் இடத்தில் ஓர் உயிரியல் மின்சக்தி நிலவுகிறது. இதை வலம் வரும்போது நம் உடலில் உள்ள சில சுரப்பிகள் தூண்டப்படுகின்றன. குழந்தை இல்லாத பெண்களின் சூலகம் தூண்டப்பட்டு சுரப்பு நீர் சமப்படுத்தப்படுகிறது. இதனால் புத்ர பாக்கியம் உண்டாகும்.

    28. அம்மனை வழிபடும் போது மாம்பழத்தால் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    29. நவக்கிரகங்களை வணங்குவதால் பல்வேறு பலன்கள் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. புத்ர பாக்கியம் விரும்புபவர்கள் குரு (வியாழன்) பகவானை தினமும் வழிபட்டால் நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்.

    30. வலங்கைமான் கீழ விடையலில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோவில் மிக சிறந்த புத்திர பாக்கியம் அருளும் தலமாகும்.

    தொடரும்...






    jv_66 and gkarti like this.

  3. #13
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    31,148

    Re: Temples, Slokas & Mantras for Pregnancy & Delivery

    31. ஞானசம்பந்தர் பாடிய திருச்சிராப்பள்ளி மற்றும் திருவெண்காடு ஆகிய தேவாரப் பதிகங்களைப் படிப்பதால் குழந்தைப்பேறு ஏற்படும்.

    32. ஆதி சங்கரர் அருளிய சவுந்தர்ய லஹரியின் 6, 74, 94-வது சுலோகங்களைப் படிப்பதால், முறையே மலடு நீக்கம், புத்திரப் பாக்கியம், கர்ப்பம் தரித்தல் நடைபெறும்.

    33. சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் எழுதிய கர்ப்ப ரட்சாம்பிகை ஸ்தோத்திரத்தைப் படிப்பது நல்ல பலனைத் தரும்.

    34. வளைகாப்பு நடக்கும் பெண்ணின் பக்கத்தில் மறுமணையில் அமர்ந்து வளையல் அடுக்கிக் கொள்ளும் பெண் விரைவில் கர்ப்பம் தரிப்பாள்.

    35. குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் பல புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு சென்று அங்குள்ள மரத்திலோ, உள்ளே சந்நிதியிலோ மரத் தொட்டில் வாங்கிக் கொண்டு போய் கட்டலாம்.

    36. குழந்தை பிறந்து 8-ம் நாள் காப்புப் போடும்போது அம்மிக் குழவியை அலம்பி மை வைத்துப் பொட்டிட்டு அலங்கரிக்கும் பெண்ணுக்கும் விரைவில் குழந்தை பிறக்கும்.

    37. சேலம் ஆத்தூருக்கு அருகிலுள்ள அபினவம் கிராமத்தில் உள்ள அத்த னோரம்மன் கோவிலில் தொட்டில் கட்டினால் உடனடி புத்திரபாக்கியம் கிடைக்கும்.

    38. சிவகங்கை பேருந்து நிலையத்தில் இருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் கோவிலிலும் தொட்டில் கட்டி பயன் பெறலாம்.

    39. கூடுவாஞ்சேரியில் உள்ள பல்லவர் காலப் பெருமாள் கோவிலில் காலையில் குளித்து சுத்தமாகச் சென்று தொட்டில் கட்டினால் குழந்தைப்பேறு உண்டாகும்.

    40. சில கோவில்களில் தூளி கட்டுவதும் வழக்கத்தில் உள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டகக் கண்ணி அம்மன் கோவிலில் தூளி கட்டி வழிபடலாம்.

    41. கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் இருக்கும் நவநீத கணபதிக்கு வெண்ணை சார்த்தி வணங்கினால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    42. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ள கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரியை வணங்கி, பிரசாதமாக தரப்படும் மஞ்சளை பெண்கள் தினமும் பூசி குளித்து வந்தால் மகப்பேறு உண்டாகும்.

    43. திருவாரூர் மாவட்டம் தேவூரில் உள்ள தேவபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இத்தலத்தின் விருட்சம் கல்லில் வளரும் வாழை. இந்த வாழைக்கு திங்கட்கிழமைகளில் பூஜை செய்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.

    44. செல்வங்களுள் சிறந்ததாகக் கருதப்படும் மழலைச் செல்வத்தை மனிதன் தர்மத்தின் அடிப்படையில்தான் பெற வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே தர்மாதிபதியான குருவை புத்திரக் காரகனாக ஆக்கி வைத்துள்ளார்கள்.

    45. ஆனிமாதம் பவுர்ணமி அன்று கடைபிடிக்கப்படும் ஓர் முக்கியமான விரதம் சாவித்திரி விரதமாகும். இவ்விரதம் மேற்கொள்பவர்கள் சகல பாக்கியங்களும் புத்திர பாக்கியம் மற்றும் செல்வம் பெற்று எமபயமின்றி வாழ்வர் என்பது ஐதீகம்.

    46. நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். விரதம் கடைப்பிடிக்கும்போது, நமது சக்திக்குத் தகுந்தபடி தங்கத்திலோ அல்லது பிற உலோகத்திலோ பாம்பின் உருவம் செய்து அதை ஒரு கலசத்துக்குள் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.

    47. சென்னை மேற்கு மாம்பலத்தில் முத்தாலம்மன் ஆலயம் உள்ளது. இங்கு தல விருட்சமாக அரச மரம் அமைந்துள்ளது. நாகதோஷம் நீங்கவும், புத்திர பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் ஏராளமானோர் முத்தாலம்மனை வழிபடுகின்றனர்.

    48. திருவண்ணாமலை மாவட்டம் படைவீடு ரேணுகா அம்மன் ஆலயத்தில் கிருஷ்ணர் சிலையை தலையில் சுமந்து வலம் வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    49. குழந்தை பேறுக்காக ஹோமம் செய்ய விரும்புபவர்கள், புத்திரகாம இஷ்டி ஹோமம் செய்யலாம். புத்ர என்றால் குழந்தை, காம என்றால் ஆசை, இஷ்டி என்றால் ஹோமம், குழந்தை ஆசைக்காக நடத்தப்படுவதால் இந்த பெயர் உண்டாயிற்று.

    50. கிருஷ்ணர் போல குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் சந்தான கோபாலஹோமம் செய்தால் பலன் கிடைக்கும்.




    jv_66, gkarti and Durgaramesh like this.

  4. #14
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    31,148

    Re: Temples, Slokas & Mantras for Pregnancy & Delivery

    சுகப் பிரசவமாக ஜெபிக்க வேண்டிய மந்திரம்:

    ஓம் ஹிமவத்யுத்தரே பார்ஸ்வே சுரதா நாம யக்ஷிணி
    தஸ்யா: ஸ்மரண மாத்ரேணா விசல்யா கர்பிணிபவேது.





    Attached Thumbnails Attached Thumbnails Temples, Slokas & Mantras for Pregnancy & Delivery-sri_garba_rakhshambigai_sm1.jpg  
    jv_66, gkarti and Durgaramesh like this.

  5. #15
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    31,148

    Re: Temples, Slokas & Mantras for Pregnancy & Delivery

    குழந்தை வரம் தரும் கந்த சஷ்டி விரதம்

    முருகனுக்குரிய விரதங்களில் இதுவே தலைமையானது. ஒப்பற்றது. இதனைச் சுப்பிரமணிய சஷ்டி விரதம் என்றும் அழைப்பர்- இது திதி விரதம். `சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தான்’ என்று வேடிக்கையாகக் கூறுவார்கள். முருகன் சட்டியிலே மாவை வறுத்தானாம்!

    உண்மைதான். அவன் சட்டியிலே, சஷ்டி திதியிலே, மா அறுத்தான் = மாமரமாக நின்ற சூரபத்மனைத் அறுத்தான். முருகன் சூரபத்மனுடன் ஆறு நாள்கள் தொடர்நது போரிட்டான். ஆறாம் நாள், மாமரமாகி எதிர்த்துப் போரிட்ட அவனைத் தனது வேலாயுதத்தால் பிளந்தான். பிளந்த ஒரு கூறு மயிலாயிற்று.

    முருகன் அதைத் தன் வாகனமாக ஏற்றான். மறு கூறு சேவலாயிற்று. அதைத் தன் கொடியாக ஏந்தினான். ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள், அதாவது தீபாவளிக்கு மறுநாள்- பிரதமையில் விரதத்தைத் தொடங்கித் தொடர்ந்து சஷ்டி வரை ஆறுநாள்கள் முருகனை வழிபட்டுக் கடும் விரதம் காப்பது 'கந்த சஷ்டி விரதம்’ இதனை `மகா சஷ்டி விரதம்’ என்றும் கூறுவர்.

    வழிபாடு: ஆறு நாள்களிலும், காலையில் நீராடி, ஆறு காலங்களிலும், ஆறுமுகனுக்குப் பூஜைகள் செய்ய வேண்டும். கோவில்களுக்குச் சென்று முருகனை வழிபட வேண்டும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம் முதலான கவச நூல்களைப் பயிலலாம்.

    திருப்புகழ், கலந்தரலங்காரம், கந்தரநுபூதி முதலிய நூல்களை ஓதலாம்.

    'சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்பது ஒரு மொழி.

    சட்டியில் = சஷ்டி திதியில்,
    இருந்தால் = விரதமிருந்தால்;
    அகப்பையில் = கருப்பையில்;
    வரும் = கரு தோன்றும். அதாவது மகப்பேறில்லாத மகளிர் சஷ்டி விரதமிருந்து முருகனை வழிபட்டால், அவனது அருளால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும்.




    jv_66, gkarti and Durgaramesh like this.

  6. #16
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    31,148

    Re: Temples, Slokas & Mantras for Pregnancy & Delivery

    குழந்தை வரம் அருளும் திருவடகுரங்காடுதுறை தலம்

    திருவடகுரங்காடுதுறை திருத்தலத்தில் அருள்பாலிக்கும் குலை வணங்கி நாதரையும், அழகு சடைமுடி அம்மையையும் ஒரு தம்பதியினர் தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி இறைவனை வழிபட்டனர். இதையடுத்து அந்த தம்பதியருக்கு குழந்தை வரம் கிடைத்தது.

    தன் மனைவி கர்ப்பம் தரித்ததை தொடர்ந்து அவளது கணவன், இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் மீண்டும் இந்த ஆலயத்துக்கு வந்தனர். அப்போது அந்தப் பெண்ணுக்கு பசி ஏற்பட்டது. இதையடுத்து அவளது கணவன் உணவு வாங்குவதற்காக கோவிலை விட்டு வெளியில் வந்தான். கணவன் வர வெகு நேரம் ஆனது. பசியால் துடித்த பெண் இறைவனை வேண்டினாள். அப்போது அந்த அதிசயம் நிகழ்ந்தது. அங்கிருந்த தென்னை மரம் ஒன்று வளைந்து, இளநீரை உதிர்த்தது.

    இளநீரை பருகி, அந்தப் பெண் பசியாறினாள். அடுத்த சோதனையாக அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இப்போதும் இறைவனையும், இறைவியையும் வேண்டுவதைத் தவிர அவளுக்கு வேறு கதி இல்லை. சுவாமியையும், அம்பாளையும் வேண்டினாள். அவளது வேதனை குறைந்தது. மேலும் ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள். இந்த நிலையில் உணவுக்காக வெளியில் சென்ற அவளது கணவன் திரும்பி வந்தான். நடந்ததை மனைவி கூறியதும் இறைவனை அவனும் துதித்தான்.

    இறைவியும், இறைவனும் அந்த தம்பதியருக்கு காட்சியளித்து அருள்புரிந்தனர். இறைவனை வேண்டி குழந்தையை பிரசவித்த பெண்ணிற்கும் இந்த ஆலயத்தில் தனிச் சன்னிதி இருக்கிறது. கர்ப்பிணி பெண்ணுக்கு இளநீர் வழங்க தென்னங்குலை இறைவனை நோக்கி தாழ்ந்தது. இதனால் இறைவன் ‘குலை வணங்கி நாதர்’ என்று அழைக்கப்படலானார். வாலிநாதர், சித்திலங்கேஸ்வரர் போன்ற பெயர்களும் இறைவனுக்கு உள்ளன. இறைவி அழகு சடை முடியம்மை, சடாமகுட நாயகி போன்ற திருநாமங்களில் அழைக்கப்படுகிறாள்.

    ஆலய அமைப்பு:

    இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் ராஜகோபுரம். அதைத் தொடர்ந்து நீண்ட நடை பாதை. வலது புறம் வசந்த மண்டபம். வடகிழக்கு திசையில் நவக்கிரகங்கள் இருக்கின்றன. அடுத்த முகப்பைத் தாண்டியதும் அலங்கார மண்டபமும், மகாமண்டபமும் உள்ளன. அடுத்துள்ள அர்த்த மண்டபத்தை கடந்ததும் கருவறையில் இறைவன் சிவலிங்க திருமேனியுடன் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். இறைவி தனி சன்னிதியில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.

    இறைவனின் தேவக்கோட்டத்தின் தென் திசையில் கோஷ்ட கணபதியும், லிங்கோத்பவரும், மேற்கில் அர்த்தநாரீஸ்வரரும் காட்சிதருகின்றனர். தேவக் கோட்டத்தின் வடபுறம் பிரம்மாவும், அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கையும் உள்ளனர். விஷ்ணு துர்க்கையின் கரத்தில் உள்ள சக்கரம், பிரயோக நிலையில் இருப்பது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. ஆலய திருச்சுற்றில் குரு பகவானும், சனகாதி முனிவர்கள் எட்டு பேரும் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். கிழக்கு பிரகாரத்தில் சனீஸ்வரன், பைரவர், காலபைரவர், சூரியன், சம்பந்தர், நாவுக்கரசர் திருமேனிகள் உள்ளன.

    மேற்கில் விநாகயரும், வடக்கில் சண்டிகேசவரும், மேற்கில் முருகன், வள்ளி– தெய்வானை, கஜலட்சுமி ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். ராமாயண காலத்தில் வாலிக்கும், ஒரு அரக்கிக்கும் நடந்த சண்டையில் வாலியின் வால் அறுபட்டு போனது. தன்னுடைய வால் மீண்டும் வளர வேண்டி, இத்தல இறைவனை வாலி வழிபட்டதாக தல வரலாறு தெரிவிக்கிறது. இதனால் இத்தல இறைவன் வாலிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் ஒரே விதையில் உருவான இரட்டை தென்னை மரம் உள்ளது.

    அதுவே ஆலயத்தின் தலவிருட்சம். ஆலய தீர்த்தம் காவிரியாகும். குழந்தை பேறு வேண்டும் பெண்கள், 16 விரலி மஞ்சளில் மாலை கட்டி, அம்மனுக்கு சாத்தி, முளைப் பயிறை அம்மன் வயிற்றில் கட்ட, அவர்கள் வேண்டுதல் நிறைவேறுவதாகப் பக்தர்கள் கூறுகின்றனர். வேண்டுதல் நிறைவேற பெற்ற பெண்கள், தங்களுக்கு வளைகாப்பு நடக்கும் போது, அம்மனுக்கும் வளையலிட்டு காணிக்கை செலுத்துகின்றனர்.

    பின்னர் குழந்தை பிறந்ததும் அன்னைக்கு புடவை சாத்தி நன்றி கூறுகின்றனர். இத்தலத்து இறைவன், பக்தர்களின் வேண்டுதலை எந்தவித தடையுமின்றி நிறைவேற்றித் தருவார் என்பது நம்பிக்கை.

    காலை 7 முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசன நேரமாகும்.

    திருவையாறிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருவடகுரங்காடுதுறை என்ற இத்தலம். சுவாமி மலையில் இருந்து இந்த ஆலயம் செல்வதற்கு பேருந்து வசதி உள்ளது.



    jv_66 and Durgaramesh like this.

  7. #17
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,806

    Re: Temples, Slokas & Mantras for Pregnancy & Delivery

    Very useful details Sumathi. Thanks for these.

    sumathisrini likes this.
    Jayanthy





  8. #18
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    31,148

    Re: Temples, Slokas & Mantras for Pregnancy & Delivery

    Quote Originally Posted by jv_66 View Post
    Very useful details Sumathi. Thanks for these.

    Thanks & Welcome Jayanthy .




  9. #19
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    31,148

    Re: Temples, Slokas & Mantras for Pregnancy & Delivery

    தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக

    ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்

    சந்தான பிராப்தி இந்த மந்திரத்தின் குறிக்கோளாகும். புத்திர தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு உபதேசம் செய்து வைக்கலாம். உபதேசம் செய்து வைப்பவர் இந்த மந்திரத்தை பாராயணம் செய்திருக்க வேண்டும். தனுர் ராசி உபாசகர்களுக்கு மிக்க பலன் தரும் மந்திரம். முதலில் 18 முறை வீதம் 18 நாட்கள் ஜெபம் செய்ய வேண்டும். பின் 54 நாட்கள், 54 முறை வீதமும், பின் 108 நாட்கள் வரை 54 முறை வீதமும் ஜெபம் செய்ய வேண்டும். முழு ஜெபத்தையும் தோஷ பரிகாரமாகத் தர்ப்பணம் செய்துவிட வேண்டும். அதன்பின் 108 வீதம் தொடர் ஜெபம் செய்து அதன்பின் சங்கல்ப சங்கியை அல்லது அக்ஷரலக்ஷம் நிறைந்ததும் பாராயணம் செய்ய வேண்டும்.

    இதனை புன்னை மரத்தடியில் ஜெபம் செய்வது சிறப்பு. கோமடம், துளசி வனம் போன்ற இடங்களும் ஜெபம் செய்ய ஏற்ற தலமாகும். ஜெபம் செய்ய கிழக்கு, வடக்கு திசைகள் சிறப்பு. காலையில் கிழக்கு திசை நோக்கியும், மாலையில் வடக்கு திசை நோக்கியும் ஜெபம் செய்ய சித்தி கிடைக்கும். பிரம்ம முகூர்த்தம் முதல் சூரியோதயம் வரை ஜெபம் செய்ய ஏற்ற காலம்.

    அஸ்ய ஸ்ரீ ஸந்தான கோபாலகிருஷ்ண மஹா
    மந்த்ரஸ்ய பகவான் நாரத ருஷி: அனுஷ்டுப்
    சந்த: ஸ்ரீதேவகீஸுதோ தேவதா
    க்லாம்-பீஜம், க்லீம்: சக்தி : க்லூம் கீலகம்
    மம ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ண-ப்ரஸாத-
    த்வாரா ஸத்சந்தான-ஸித்தயர்த்தே ஜபே விநியோக:
    க்லாம்-க்லீம்-க்லூம்-க்லைம்-க்லௌம்
    க்ல: இதி கரந்யாஸ: அங்க ந்யாஸச்ச
    பூர்ப்பு வஸ்ஸுவரோமிதி திக்பந்த: த்யானம்
    த்யாயாமி பாலகம் கிருஷ்ணம் மாத்ரங்கே ஸ்தன்ய பாயினம்
    ஸ்ரீ வத்ஸ வக்ஷஸம் காந்தம் நீலோத் பல - தலச்சவிம்
    லம்-இத்யாதி பஞ்சபூஜா

    மந்திரம்

    ஓம்-ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லௌம்-தேவகீசுத
    கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே
    தனயம் க்ருஷ்ண த்வா மஹம் சரணம் கத:

    ஹ்ருதயாதி-ந்யாஸ
    பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்விமோக
    த்யானம் பஞ்சபூதா ஸமர்ப்பணம்

    தேவகீஸுத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே
    தேஹிமே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம்கத

    தேவதேவ ஜகந்நாத கோத்ர விருத்திகர ப்ரபோ
    தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்


    Durgaramesh likes this.

  10. #20
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    31,148

    Re: Temples, Slokas & Mantras for Pregnancy & Delivery

    சுகப்பிரவசம் நடைபெற ஸ்ரீ கர்ப்ப ரக்ஷம்பிகை ஸ்தோத்திரம்

    அம்பாள் சன்னதியில் பிரம்மஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்க்ஷிதர் அவர்களால் மெய்மறந்து இயற்றப்பட்ட ஸ்தோத்திரம். தினசரி பாராயணம் செய்ய உகந்தது.

    ஸ்ரீ மாதவீ கானனஸ்தே - கர்ப்ப
    ரக்ஷம்பிகே பாஹி பக்தம் ஸ்துவந்தம் (ஸ்ரீ)

    வாதபீதடே வாமபாகே - வாம
    தேவஸ்ய தேவஸ்ய தேவீஸ்துதித்வம்
    மாந்யா வரேண்யாவதான்யா - பாஹி
    கர்ப்பஸ்த ஜந்தூனதா பக்த லோகான் (ஸ்ரீ)

    ஸ்ரீ கர்ப்ப ரக்ஷ புரேயா - திவ்ய
    ஸெளந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய காத்ரீ
    தாத்ரீ ஜனித்ரீ ஜனானாம் திவ்ய
    ரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம் பஜேதாம் (ஸ்ரீ)

    ஆஷாடே மாஸே ஸுபுண்யே - சுக்ர
    வாரே ஸுகந்தேன கந்தேன லிப்தா
    திவ்யாம் பராகல்ப தேஷா - வாஜ
    பேயாதி யாகஸ்த பக்தைஸ் ஸுத்ருஷ்டா (ஸ்ரீ)

    கல்யாண தாத்ரீம் நமஸ்யே -வேதி
    காக்ய ஸ்த்ரியா கர்ப்ப ரக்ஷ கரீம் த்வாம்
    பாலைஸ் ஸதாஸே விதாங்க்ரிம் - கர்ப்ப
    ரக்ஷர்த்த மாராது உபேதைரு பேதாம் (ஸ்ரீ)

    ப்ரம் மோத்ஸவே விப்ரவீத்யாம் - வாத்ய
    கோஷேண துஷ்டாம் ரதே ஸந்நிவிஷ்டாம்
    ஸர்வார்த்த தாத்ரீம் பஜேஹம் - தேவ
    ப்ருந்தை ரபிட்யாம் ஜகன் மாதரம் த்வாம் (ஸ்ரீ)

    ஏதத் க்ருதம் ஸ்தோத்ர ரத்னம் - தீக்ஷ?
    தானந் தராமேண தேவ்யாஸ் ஸுதுஷ்ட்யை
    நித்யம் படேத்யஸ்து பக்தியா - புத்ர
    பௌத்ராதி பாக்யம் பவேத்தஸ்ய நித்யம்: (ஸ்ரீ)



loading...
Like It?
Share It!







Follow Penmai on Twitter