Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
 • 4 Post By umaravi2011
 • 1 Post By Dharshini86

சாலிவாகனன் கதை - Salivahanan Story for Pregnant Ladies


Discussions on "சாலிவாகனன் கதை - Salivahanan Story for Pregnant Ladies" in "General Pregnancy" forum.


 1. #1
  umaravi2011's Avatar
  umaravi2011 is offline Minister's of Penmai
  Real Name
  Uma
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Hyderabad
  Posts
  3,874

  சாலிவாகனன் கதை - Salivahanan Story for Pregnant Ladies

  சாலிவாகனன் கதை

  இந்த கதையை அருவருப்பு படாமல் வாசிக்க வேண்டும்


  பட்டியும் விக்ரமாதித்தனும் காளி தேவியை வேண்டி வரம் இருந்து பட்டி 2000௦௦௦ வருடமும் விக்ரமாதித்தன் 1000௦௦௦ வருடமும் அரசாளுவார்கள் என்று வரம் பெறுகிறார்கள் பட்டியை விட விக்ரம்மதிதனுக்கு 1000௦௦௦ வருடம் குறைவாக இருப்பதால் அவர் ஆறு மாதம் நாடாள்வர் ஆறு மாதம் காட்டில் வாசிப்பார் அவர்கள் நல்ல முறையில் ஆட்சி நடத்தி வந்தனர் அவர்களை யாராலும் ஜெயிக்க முடியவில்லை


  அவர்களது ஆயுள் முடியும் காலம் நெருங்கிக்கொண்டு வந்தது ஒரு முனிவர் தனக்கு நல்ல அறிவும் பலமும் மிக்க மகன் பிறக்க வேண்டி பனிரெண்டு ஆண்டு காலம் தவம் செய்தார் கடவுளும் அவர் முன் தோன்றி ஒரு பழம் கொடுத்து உண்ண சொன்னார் உண்டவுடன் இந்த கனி
  உண்ட ஒரு நாளுக்குள் உன் மனைவியுடன் சேர வேண்டும் அப்போது உண்டாகும் குழந்தை மகா புத்திசாலியாகவும் பலசாலியாகவும் அதிர்டசாலியாகவும் பிறப்பான் இன்று இல்லாவிடில் இந்த கனியால் பலன் இல்லை என்று கூறி மறைந்தார்

  முனிவரும் வேகமாக தன் இருப்பிடம் செல்ல விரைந்தார் மழை பெய்ததால் ஆற்றில் வெள்ளம் அதிகமாக கரை புரண்டு ஓடியது முனிவரால் கரையை கடக்க இயல வில்லை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்
  தவ வலிமையை உபயோக படுத்தினால் குழந்தையின் அதிர்ஷ்டம் சற்றே குறைந்துவிடுமே என்ன செய்வது என்று குழம்பினார்ஆற்றங்கரையில் ஒரு வயதான குயவன் ஒருவன் சட்டி பானை செய்ய மண் குழைத்து கொண்டிருந்தான் அவனிடம் முனிவர் படகோட்டி யாரவது வருவார்களா என்று கேட்க இத்தனை வெள்ளம் கரை புரண்டு ஓடும் போது யாராலும் படகு விட முடியாது ஏன் உங்களுக்கு இந்த அவசரம் வெள்ளம் வடிந்த வுடன் போங்கள் சாமி என்று குயவன் கூறினான்
  வேறு வழியில்லாமல் எல்லாவற்றையும் முனிவர் குயவனிடம் கூறினார் குயவன் சற்று யோசித்து சாமி பொழுது போய்விட்டது இனி நீங்கள் வீடு செல்ல இயலாது ஆகவே நான் ஒரு யோசனை சொல்கிறேன் கேட்பீர்களா என்று சொல்ல வேறு வழியில்லாமல் முனிவரும் சரிதான் சொல் என்றார் சாமி ஏன் வீட்டில் திருமண மாகாத என் மகள் இருக்கிறாள் நீங்கள் அவளை திருமணம் செய்து கொண்டு அந்த குழந்தையை பெற்று கொள்ளுங்கள் என்று சொன்னான்

  முனிவரும் பொழுதும் முடிய போகிறது குழந்தை உருவாக வில்லை எனில் பனிரெண்டு ஆண்டு தவம் வீணாகிவிடுமே என்று குயவன் சொன்னதிற்கு ஒத்துக்கொண்டு குயவன் மகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்தார் குயவன் மகளும் ஒரு மகனை ஈன்றெடுத்தாள் அவன் தான் சாலிவாகனன்

  இறைவன் கூறிய படியே குழந்தை மிக புத்திசாலியாகவும் பலசாலியாகவும் இருந்தான் முனிவரும் தன மகனுக்கு அனைத்து கலைகளையும் கற்பித்தார் குயவனும் தங்கள் குல தொழிலை கற்று கொடுத்தான் குழந்தையும் வளர்ந்து பெரியவன் ஆனான் அனைத்தும் கற்று தேர்ந்தான்
  பட்டியும் விகரமாதித்தனும் தங்களை வெல்ல யாருமே இல்லை தாங்கள் தான் உலகிலேயே மிக சிறந்தவர்கள் என பறை அறிவித்தனர் இதனை கண்ட சாலிவாகனன் தான் அவர்களுடன் போர் புரிய தயார் என அறிவித்தான்
  இதை கேட்ட அனைவரும் எள்ளி நகையாடினர் பட்டியும் விகரமாதித்தனும் போயும் போயும் ஒரு குயவனா நம்முடன் மோதுவது என்று சினம் கொண்டு சண்டைக்கு நாள் அறிவித்தனர்

  சாலிவாகனன் போருக்கு தேவையான கருவிகள் யானை குதிரை சிப்பாய் என எல்லாவற்றையும் மண்ணால் செய்து தந்தையிடம் கற்ற மந்திரங்களை உச்சரித்து அனைத்து பொருள்களுக்கும் உயிர் கொடுத்தான் அரசனது படையை விட நூறு மடங்கு பெரிய படை கொண்டு எளிதாக வென்றான் சட்டி பானை செய்யும் சக்கரத்தை கொண்டு விக்ரமாதித்தனயும் கொன்று அந்த நாட்டிற்கு மன்னன் ஆனான்


  இந்த கதையை படிப்பதால் சாலிவாகனன் போல மிக சிறந்த குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்


  இந்த புத்தகம் ஏன் பாட்டி வீட்டில் இருக்கிறது நானும் இதை படித்து இரண்டு வருடமாகிறது முடிந்த அளவு நான் ஞாபகம் படுத்தி கதையை சொல்லி இருக்கிறேன்


  எல்லா சகோதரிகளும் இதை நெறைய தடவை படித்து எல்லா வளமும் கொண்ட குழந்தைகளை பெற நான் அந்த இறைவனை வேண்டுகிறேன்


  நன்றி
  Similar Threads:

  Sponsored Links
  Last edited by umaravi2011; 2nd May 2012 at 11:03 PM.

  umaravi
  COURAGE IS NOTHING BUT WILLING TO BE AFRAID

  Ask a Recipe - I will try to post it for you

 2. #2
  Dharshini86 is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Apr 2013
  Location
  Palani
  Posts
  15

  Re: சாலிவாகனன் கதை - Salivahanan Story for Pregnant Ladies

  I never heard this story from anyone. Thanks for sharing.

  sumitra likes this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter