Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 2 Post By sumathisrini
  • 1 Post By jv_66

Skin care tips for pregnant women - கர்ப்பிணிகளுக்கான சரும பராமரிப்ப&#


Discussions on "Skin care tips for pregnant women - கர்ப்பிணிகளுக்கான சரும பராமரிப்ப&#" in "General Pregnancy" forum.


  1. #1
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Skin care tips for pregnant women - கர்ப்பிணிகளுக்கான சரும பராமரிப்ப&#

    Skin care tips for pregnant women - கர்ப்பிணிகளுக்கான சரும பராமரிப்ப&#-247656814_1368818786.jpg

    கர்ப்ப காலத்தின் போது ஒரு பெண்ணின் உடல் குறிப்பிடத்தக்க மாறுதல்களுக்கு உள்ளாகிறது. அதிலும் ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்களினால் பாதிக்கப்படுவதால், உடலிலேயே மிகவும் மென்மையான பகுதியான சருமம் அதிகம் பாதிக்கப்படும்.


    சருமத்தை சரியாக பரிமரிக்காமல் இருந்தால், பின் அதிக சரும பிரச்சனைகளுக்கு உள்ளாக நேரிடும். அதே சமயம் அனைத்து அழகு பொருட்களும் கர்ப்ப காலத்தில் உபயோகிக்க ஏற்புடையதாக இருக்குமென்பது இல்லை. ஒரு தாயாக போகும் பெண்ணுக்கும் மற்றும் அவர்கள் கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தைக்கும் பல பொருட்கள் தீங்கு விளைவிக்கலாம். அதனால், கர்ப்பிணிகள் சரும பராமரிப்புப் பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


    தோல் நோய் நிபுணரை பார்க்கவும்
    தாயாகப் போகும் எல்லா பெண்களுக்கும் எப்பொழுதும் சரும தடிப்புகள், சரும அரிப்பு அல்லது பிற சரும பிரச்சனைகளை கூர்மையாக கவனிக்க வேண்டும். இந்த அறிகுறிகளைக் கண்டவுடன் ஒரு சரியான தோல் நோய் நிபுணரை பார்த்து, தகுந்த ஆலோசனையைப் பெற வேண்டும்.


    ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் பயன்படுத்தவும்
    கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் சரும நிற மாற்றங்களின் சிகிச்சைக்கு ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் பாதுகாப்பான பொருளாக கருதப்படுகிறது. ஏனெனில் அவைகளில் இயற்கையில் கிடைக்க வேண்டிய தேவையான பொருட்கள் உள்ளன. அதில் மிக முக்கியமாக க்ளைகோலிக் அமிலம் மற்றும் லாக்டிக் அமிலம் இருக்கும். க்ளைகோலிக் அமிலம் கரும்பிலிருந்தும் மற்றும் லாக்டிக் அமிலம் பாலிலிருந்தும் பெறப்படுகிறது. இதிலிருக்கும் வினைப்பொருட்கள் சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனினும், சன் பிளாக் க்ரீமையும் அதே நேரத்தில் சேர்த்து பயன்படுத்தப் பட வேண்டும். இதனால் சருமத்தில் ஏற்படும் எரிச்சலை க்ளைகோலிக் அமிலமும், சரும வறட்சியை லாக்டிக் அமிலமும் சரிசெய்யும்.


    இரசாயன பொருட்களிலிருந்து விலகியிருக்கவும்
    கர்ப்பிணி பெண்கள், அவர்களுக்கும் மற்றும் பிறக்காத குழந்தையின் உடல்நிலைக்கு துன்பம் விளைவிக்க காரணமாக இருக்கும் ஒவ்வாமை பொருட்களிலிருந்து கட்டாயம் விலகி இருக்க வேண்டும். எப்போதும் பயன்படுத்தும் பொருட்கள் பாதுகாப்பான பொருட்களாக உள்ளனவா என்றும் மற்றும் அது குழந்தைக்கு எந்த எதிர்வினையும் உண்டாக்காது என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஹைட்ரோகுவினோனை, ஸ்டீராய்டுகள் மற்றும் பிற தீங்கிழைக்கும் ப்ளிச்சிங் பொருட்களை தவிர்த்தல் சிறந்ததாகும்.


    சன் பிளாக் பயன்படுத்தவும்
    உடலில் சூரிய ஒளி முற்றிலும் படுவதை தவிர்க்க முடியாது. ஆனால் கார் மற்றும் வீட்டிற்குள் வரும் சூரிய ஒளியை, கண்ணாடி மூலம் தடுத்தாலும், அதிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, தோல் மருத்துவர்கள் குறைந்தது SPF30++ உள்ள ஒரு சன் பிளாக் க்ரீமை பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். சூரிய ஒளியின் கடுமையை தணிக்க, இந்த சன் பிளாக் க்ரீம் 30 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்வதால், சூரிய ஒளி கடுமையாவதற்கு முன்பு காலையிலேயே இதனை பூசிக் கொள்ள வேண்டும். மேலும் அதன் பின்னரும் சன் பிளாக் க்ரீமின் விளைவு நீடித்திருக்க வேண்டுமெனில், ஒவ்வொரு 3-4 மணிக்கு ஒரு முறை பூச வேண்டும்.


    சூரிய வெப்பத்தைத் தவிர்க்கவும்
    கர்ப்பிணி பெண்கள் ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்கள் காரணமாக, சருமத்தின் உணர்திறன் அதிகமாவதற்கு ஆளாவார்கள். இதன் விளைவாக, அவர்களது சருமம் கருமை அடைதல் மற்றும் நிறமூட்டல் ஆகிறது. ஹார்மோன் சமநிலையின்மையை தவிர்த்தல் நடைமுறையில் இல்லை. ஆனால் நிச்சயமாக சூரிய ஒளியில் வெளியே செல்வதை தவிர்க்க முடியும். அதற்கு வீட்டின் உள்ளேயே இருக்க முயற்சிக்கவும். ஒருவேளை வெளியே செல்ல நேர்ந்தால், எப்பொழுதெல்லாம் வெளியில் செல்கிறீர்களோ, அப்பொழுது உடலில் சூரிய ஒளிப்படுமிடம் மூடி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். குறிப்பாக முகத்தில் விழும் சூரிய கதிர்களைத் தடுக்க ஒரு தொப்பி அணிந்து செல்வது நல்ல முறை ஆகும்.

    source: boldsky

    Similar Threads:

    Sponsored Links
    priyasarangapan and jv_66 like this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Skin care tips for pregnant women - கர்ப்பிணிகளுக்கான சரும பராமரிப்Ī

    உபயோகமான குறிப்புகள்

    sumathisrini likes this.
    Jayanthy





  3. #3
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: Skin care tips for pregnant women - கர்ப்பிணிகளுக்கான சரும பராமரிப்&

    Quote Originally Posted by jv_66 View Post
    உபயோகமான குறிப்புகள்

    நன்றி ஜெயந்தி.



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter