Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree11Likes
 • 5 Post By jv_66
 • 1 Post By Subhasreemurali
 • 1 Post By saidevi
 • 1 Post By sumathisrini
 • 1 Post By jv_66
 • 1 Post By rosei
 • 1 Post By jv_66

வளைக்காப்பின் மகத்துவம் - Importance of Valaikaappu during Pregnancy


Discussions on "வளைக்காப்பின் மகத்துவம் - Importance of Valaikaappu during Pregnancy" in "General Pregnancy" forum.


 1. #1
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  வளைக்காப்பின் மகத்துவம் - Importance of Valaikaappu during Pregnancy

  பிரசவம் - மன வலிமை தரும் நம்பாரம்பரியங்கள். . .

  பிரசவம்என்பது மறுபிறவி மாதிரி... அதை உடல் வலுவுடனும், மன வலுவுடனும் தாங்க வேண்டும் என்பதற்காகவே நம் இந்திய பாரம்பரியத்தில் எத்தனயோ விஷயங்களைப் பார்த்து பார்த்து செய்து வைத்திருக்கின்றார்கள்.

  அவை ஆச்சரியமானவை மட்டுமல்ல... விஞஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டவை என்பதுதான் இன்னும் அதிசயமானவை என்று சொல்லவேண்டும்....

  மனதுக்கான நல்ல விஷயங்களும் நம்முடைய பாரம்பரியத்தில்நிறைய அடங்கியிருக்கின்றன.

  முக்கியமாக,பிரசவத்துக்கு முன்பு வளைகாப்பு நடத்துகிறவிஷயத்தையே சொல்லலாம்.

  வளைகாப்புக்கு நிறையபெண்கள் கூடி,கர்ப்பவதிக்கு மூத்த சுமங்கலிகள்வளையல் போடுவார்கள்.

  இதற்கான காரணங்கள் பலசொல்லப்பட்டாலும்,"
  எங்களை எல்லாம் பார்... நாங்கள் எத்தனை பிள்ளைகளைப்பெற்று உன் முன் நிற்கிறோம்?! நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்... தைரியமாக இரு!"என்பதை இங்கு நாம் எடுத்துக்கொள்ளலாம்.

  இந்தச் சடங்கில் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமையையும் கவனிக்கலாம். வளையல் இடும் பெண்ணின் கையை கர்ப்பப்பைக்கு ஒப்பிட்டுப் பாருங்கள். கை விரல்களை கூப்பி, வளையல்களை உள்ள செலுத்தும்போது சற்று சுலபமாக இருக்கும். வளையலை மணிக்கட்டுப் பகுதிக்குச் செலுத்தும்போது சற்று கடினமாகி, அந்த வலியைச் சற்றே சற்று பொறுத்துக் கொண்டால்... அடுத்த நிமிடமே கரங்களில் வளையல் ஏறிவிடும். இப்படித்தான் பிரசவமும்!

  இந்த வளையல்கள் ஏற்படுத்தும் அதிர்வு ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு நல்ல தாலாட்டு. நம் தாய் நம்முடன் இருக்கிறாள் என்று குழந்தைக்கு அது கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு, அழகானது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

  அந்தக் காலத்தில்வீடு என்பது பெரியதாகஇருந்தது.பிரசவத்துக்கு முன்பு அடிக்கடி உறக்கம் கலைந்து, அந்தப்பெண்ணுக்கு சிறுநீர் கழிக்கவேண்டியதிருக்கும்.இரவு நேரத்தில் கர்ப்பமான பெண் அறையைக் கடந்து, கூடத்தைக்கடந்து, பின்புறமிருக்கும் கழிவறைக்குப் போகும்போது அந்த வளையல்சப்தம் அந்த பெண்எங்கே செல்கிறாள்என்பதை சட்டென்று சுட்டிக்காட்டும
  ். "ஏன்டி,என்னை எழுப்பக்கூடாதா...இரு நானும் வர்றேன்"என்று உதவிக்குச் செல்வார்கள் வீட்டில் இருக்கும் பெண்கள்.

  வளையல் போட்ட 'கையோடு' கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் செல்வதிலும் அடங்கி இருக்கின்றன அவர்களின் மனநலம் சம்பந்தப்பட்ட நுணுக்கங்கள்.

  இந்திய நாட்டில் மட்டுமின்றி, ஆசிய நாடுகளில் எல்லாம் பிரசவம் என்று வந்தாலே அந்தப் பெண் தாய் வீட்டுக்குச் சென்று விடுவது வழக்கமாக இருக்கிறது. ஆம்...பிரசவமாகும் பெண்ணின் உடல்நலம் மட்டுமல்ல, மனநலத்தையும் பாதுகாக்கிற பணி, தாய் வீட்டுக்குத்தான் என்று பார்த்துப் பார்த்து இந்த ஏற்பாட்டை செய்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.

  நம் அம்மா, அப்பா, கணவர், சொந்தங்கள், மருத்துவர் எல்லாம் நம்மைப் பிரசவம் எனும் அந்த பெருநிகழ்வில்இருந்து பத்திரமாக மீட்பார்கள்...' என்ற நம்பிக்கைதானே அன்று அட்டவணைகள் இல்லாமல், செக்கப்புகள் இல்லாமல், மருந்து -மாத்திரைகள் இல்லாமல் எல்லா பிரசவங்களையும் சுகப்பிரசவமாக்கின?!

  அந்த நம்பிக்கையை கர்ப்பிணிகளின் மனதில், அவளைச் சுற்றியுள்ளவர்களே ஆழமாக விதைக்கலாம். அதையெல்லாம் செய்து பாருங்கள்...இரண்டு, நான்கு, ஆறு...என்று மாதங்கள். அவர்களுக்குத் தெரியாமலே சுகப்பிரசவத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும். .

  By Chitthar Ariviyal


  Similar Threads:

  Sponsored Links
  Jayanthy

 2. #2
  Subhasreemurali's Avatar
  Subhasreemurali is offline Penman of Penmai
  Blogger
  Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jan 2013
  Location
  chennai
  Posts
  7,537
  Blog Entries
  1

  Re: வளைக்காப்பின் மகத்துவம் - Importance of Valaikaappu during Pregnancy

  நம் முன்னோர்கள் எதையும் திட்டமிட்டே செய்திருக்கிறார்கள் ... அருமையான பகிர்வு நன்றி

  jv_66 likes this.
  Arise ! awake ! and stop not till the goal is reached

 3. #3
  saidevi's Avatar
  saidevi is offline Guru's of Penmai
  Real Name
  sarala devi
  Gender
  Female
  Join Date
  Mar 2014
  Location
  tn
  Posts
  5,086

  Re: வளைக்காப்பின் மகத்துவம் - Importance of Valaikaappu during Pregnancy

  பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

  jv_66 likes this.

 4. #4
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,592

  Re: வளைக்காப்பின் மகத்துவம் - Importance of Valaikaappu during Pregnancy

  மிகவும் அருமை ஜெயந்தி, பகிர்வுக்கு மிக்க நன்றி.

  jv_66 likes this.

 5. #5
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: வளைக்காப்பின் மகத்துவம் - Importance of Valaikaappu during Pregnancy

  ​Thanks and welcome friends

  sumathisrini likes this.
  Jayanthy

 6. #6
  rosei's Avatar
  rosei is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Nederland
  Posts
  6,455

  Re: வளைக்காப்பின் மகத்துவம் - Importance of Valaikaappu during Pregnancy

  அழகாச் சொல்லியிருகீங்க ஜெயந்தி....இலங்கையில் வளைகாப்பு என்பது நடைமுறையில் இல்லை எனக்குத் தெரிந்தவரையில்..ஆனால் இப்போ வெளிநாடுகளில் வாழ்பவர்கள் செய்கிறார்கள் ஒரு விழாவாக ..அதில் இவ்வளவு விடயம் இருக்கா....பகிர்வுக்கு நன்றி...

  jv_66 likes this.
  With love,
  Rosei.  Stories of Rosei!

  Downlord My Stories Here! (eBOOKS )

  Viemen's drawings.
  Suriyan's drawings.

  Use your smile to change this world, don't let this world change your smile ! 7. #7
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: வளைக்காப்பின் மகத்துவம் - Importance of Valaikaappu during Pregnancy

  நன்றி ரோசி .

  rosei likes this.
  Jayanthy

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter