Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 1 Post By chan
  • 1 Post By sumathisrini

Molar pregnancy - முத்துப்பிள்ளை கர்ப்பம்


Discussions on "Molar pregnancy - முத்துப்பிள்ளை கர்ப்பம்" in "General Pregnancy" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Molar pregnancy - முத்துப்பிள்ளை கர்ப்பம்

    முத்துப்பிள்ளை கர்ப்பம்

    மாதவிலக்கு தள்ளிப் போவது... வாந்தி... தலைசுற்றல்... மயக்கம்... திருமணமான பெண்ணுக்கு இந்த அறிகுறிகள் காணப்பட்டால், சந்தோஷப்படத்தானே வேண்டும்? ஆனால், அது முத்துப்பிள்ளை கர்ப்பம் எனத் தெரிந்தால், அத்தனை சந்தோஷங்களும் காணாமல் போகும்.

    ‘‘முத்துப்பிள்ளை கர்ப்பத்தை சரியான நேரத்தில் கண்டறிந்து கலைக்காவிட்டால், தாயின் உயிருக்கே ஆபத்தாக அமையும். கர்ப்பம் தரிக்கிற பெண்களில் ஒன்று முதல் இரண்டு சதவிகிதத்தினருக்கு முத்துப்பிள்ளை கர்ப்பமும், அதில் 10 முதல் 15 சதவிகிதத்தினருக்கு புற்றுநோய் அபாயமும் இருக்கிறது...’’ எச்சரிக்கையுடன் ஆரம்பிக்கிறார் மகப்பேறு மருத்துவர் சந்திரலேகா.

    ‘‘ஆணின் 23 குரோமோசோம்களும், பெண்ணின் 23 குரோமோசோம்களும் இணைந்து 46 குரோமோசோம்களாக மாறும். முழு முத்துப்பிள்ளை கர்ப்பத்தில் கரு முட்டையில் தாய்வழி குரோமோசோம்கள் இருப்பதில்லை. மேலும் தந்தையின் விந்தணுக்களின் குரோமோசோம்கள் இரட்டிப்பு அடையும். தாய்வழி குரோமோசோம்கள் முற்றிலும் இல்லாமல் போவதால், கருவோ, கரு வளரும் பையோ அல்லது நஞ்சுத் திசுக்களோ இருப்பதில்லை.

    மாறாக நஞ்சு, திராட்சை கொத்து போலக் காட்சியளிக்கும். இதையே முத்துப்பிள்ளை கர்ப்பம் என்கிறோம். சாதாரண கர்ப்பத்தில் இருக்கக்கூடிய அத்தனை அறிகுறிகளும் இருக்கும். சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனையில்கூட பாசிட்டிவ் என்றே வரும். 45 நாட்களில் ஸ்கேன் செய்து பார்த்தால் இதைத் தெரிந்து கொள்ளலாம். முத்துப்பிள்ளை கர்ப்பம் எனத் தெரிந்தால், கருவைக் கலைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், கர்ப்பத்தைக் கலைப்பதோடு, பிரச்னை முடிந்தது என அலட்சியமாக இருக்க வேண்டாம்.

    கரு வெளியேறிய பிறகும், எங்கேயாவது ஒட்டிக் கொண்டுள்ள திசுக்கள் மூலம், அது புற்றுநோயாக மாறக் கூடிய வாய்ப்பு இரண்டு சதவிகிதம் உள்ளது. எனவே ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையும், பீட்டா ஹெச்.சி.ஜி என்கிற ஹார்மோன் டெஸ்ட் செய்து, முத்துப்பிள்ளை கர்ப்பத்தின் திசுக்கள் ஏதேனும் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும்.


    அது ரத்தத்தில் தெரிய வரும். திசுக்கள் இல்லாமல் சுத்தமாகி விட்டால், நெகட்டிவ் எனக் காட்டும். சுமார் ஒரு வருடத்துக்கு இதைப் பின்பற்றி விட்டு, பிறகு மறுபடி கருத்தரிக்கலாம். கருக்கலைப்புக்குப் பிறகு அது புற்றுநோயாக மாறாமல் தவிர்க்க பிரத்யேக ஊசி போட்டுக் கொள்ளலாம்.

    ஒரு முறை முத்துப்பிள்ளை கர்ப்பம் ஏற்பட்டால், மறுபடி வர இரண்டு சதவிகித வாய்ப்புகள் உண்டு. மிக இள வயதில் கர்ப்பம் தரிப்பவர்களுக்கும், ரொம்பவும் தாமதமாக கருத்தரிப்பவர்களுக்கும் தான் இந்தப் பிரச்னை அதிகம் வருகிறது.

    வைட்டமின் ஏ, ஃபோலிக் அமிலம் குறைபாடு உள்ளவர்களுக்கும் இத்தகைய கர்ப்பத்துக்கான அபாயம் உண்டு. அரிசி உணவுகள் அதிகம் சாப்பிடுகிற இந்தியர்கள், சீனர்கள், ஜப்பானியர்களே இதனால் பெரிதும் பாதிக்கப் படுவதாகத் தெரிகிறது...’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் சந்திரலேகா.

    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini likes this.

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,537

    Re: Molar pregnancy - முத்துப்பிள்ளை கர்ப்பம்

    Thanks Lakshmi for the detailed post about Molar pregnancy.

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter