Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By chan

Will the Fibroid affect the Embryo?-கர்ப்பத்தைப் பாதிக்குமா கர்ப்பப்&#


Discussions on "Will the Fibroid affect the Embryo?-கர்ப்பத்தைப் பாதிக்குமா கர்ப்பப்&#" in "General Pregnancy" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Will the Fibroid affect the Embryo?-கர்ப்பத்தைப் பாதிக்குமா கர்ப்பப்&#

    கர்ப்பத்தைப் பாதிக்குமா கர்ப்பப்பை கட்டி?

    கர்ப்பப்பை கட்டி என்றால் புரியாதவர்களுக்குக் கூட ‘ஃபைப்ராயிட்ஸ்’ என்றால் தெரியும் அளவுக்கு சமீப காலமாக இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அறிகுறிகள் எதையும் காட்டாது என்பதால் அனேகப் பெண்களால் அலட்சியப்படுத்தப்படுகிற இது, கர்ப்பம் தரிப்பதைப் பாதிப்பதோடு, ஏற்கனவே கருத்தரித்ததையும் பெரிதும் பாதிக்குமாம். அதைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.

    ‘‘கர்ப்பப்பை கட்டியானது கர்ப்பப்பை சவ்வுக்குள் இருந்தால், அந்தப் பெண் கருத்தரிப்பது சிரமம். அப்படியே கருத்தரித்தாலும், சீக்கிரமே அது கலையலாம். கட்டியானது, கர்ப்பப் பையின் வெளியே உள்ள தசைகளில் இருந்தால், கருத்தரித்தாலுமே, அந்தக் கருவின் வளர்ச்சி பாதிக்கப்படும். கர்ப்பப்பையின் வெளியே இருந்தால், எந்தப் பிரச்னையும் இல்லை.

    பரம்பரையாக சிலருக்கு இந்தப் பிரச்னை தொடரலாம். கருத்தடை மாத்திரைகளுக்கும், ஃபைப்ராய்டு கட்டிகளுக்கும் தொடர்பிருப்பதாகப் பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பயம் தேவையில்லை. 30 சதவிகிதப் பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில், இந்தக் கட்டியானது வளரும். அதற்குக் காரணம் ஹார்மோன் மாற்றங்கள்.

    பெரும்பாலும் இந்தக் கட்டியின் வளர்ச்சி, கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் அதிகமாக இருக்கும். அதன் விளைவாக கருக்கலையலாம். கர்ப்பத்தின் அடுத்தடுத்த மாதங்களில் ரத்தப் போக்கும், குறைப்பிரசவமும் ஏற்படலாம். சில சமயங்களில் இந்தக் கட்டியின் வளர்ச்சியால், நஞ்சுக் கொடியானது, கர்ப்பப்பையின் வாயில் வந்து உட்கார்ந்து கொண்டு, நஞ்சுக் கொடியை சீக்கிரம் பிரியச் செய்யும்.

    பிரசவத்துக்குப் பிறகு ரத்தப் போக்கு அதிகமாகும். சுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் குறையும். சிசேரியன் செய்ய வேண்டி வரும். சிசேரியன் செய்யும் போதே கட்டியை அகற்றலாம் எனப் பலர் நினைப்பதுண்டு. அது தவறு. ஏற்கனவே சிசேரியனில் ரத்தப் போக்கு அதிகமாக இருக்கும். இந்த அறுவையையும் சேர்த்துச் செய்தால், ரத்தப் போக்கு இன்னும் அதிகமாகும்.

    எனவே பிரசவமாகி 3 மாதங்களுக்குப் பிறகு, கர்ப்பப்பை சுருங்கிய பிறகுதான் கட்டியை நீக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஃபைப்ராய்டு கட்டிகளின் வளர்ச்சி பெரும்பாலும் மிக மெதுவாகவே இருக்கும். அரிதாக சிலருக்கு வேகமாக வளர்ந்தால், அதை எடுத்து பயாப்சி செய்து, புற்றுநோயாக இருக்குமா எனப் பார்க்க வேண்டும். அதே மாதிரி மெனோபாஸுக்கு பிறகு இந்தக் கட்டிகள் தானாகச் சுருங்கத் தொடங்கும்.

    அப்படி சுருங்காவிட்டாலும், அது புற்றுநோய் கட்டியா எனப் பரிசோதித்துப் பார்க்க வேண்டியது அவசியம். கர்ப்பப்பை கட்டியின் வளர்ச்சி வெளியே தெரியாது. வேறு அறிகுறிகளையும் காட்டாது. மாதவிலக்கின் போது அதிக வலியும், ரத்தப் போக்கும் இருக்கும். வழக்கத்தைவிட முன்னதாகவே மாதவிலக்கு வரும்.

    இப்படி இருந்தால், கட்டி இருக்கிறதா என சோதித்துப் பார்க்கலாம். 3டி மற்றும் 4டி சோதனைகளில் கண்டுபிடிக்கலாம். எம்.ஆர்.ஐ ஸ்கேனில் இன்னும் துல்லியமாகத் தெரியும். கருத்தரிப்பதற்கு முன்பே, இந்தச் சோதனையைச் செய்து பார்த்து, சிகிச்சை மேற்கொள்வது பாதுகாப்பானது...’’ என்கிறார் டாக்டர் மாலா ராஜ்.

    Similar Threads:

    Sponsored Links
    jv_66 likes this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Will the Fibroid affect the Embryo?-கர்ப்பத்தைப் பாதிக்குமா கர்ப்பபĮ

    Thanks for the details.

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter