Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By vijigermany

Preggies can avoid watching Television-கர்ப்ப காலங்களில் பெண்கள் டிவி பா


Discussions on "Preggies can avoid watching Television-கர்ப்ப காலங்களில் பெண்கள் டிவி பா" in "General Pregnancy" forum.


  1. #1
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    96,900

    Preggies can avoid watching Television-கர்ப்ப காலங்களில் பெண்கள் டிவி பா

    கர்ப்ப காலங்களில் பெண்கள் டிவி பார்க்க வேண்டாம்: மருத்துவர்கள் அறிவுரை

    குழந்தை வளர்ப்பு முறை தாயின் கருவறையில் இருந்து தொடங்குகிறது. கர்ப்ப காலங்களில் எதிர்மறை சிந்தனைகள், பயம் போன்றவை இருக்கக் கூடாது. எனவே அத்தகைய நேரங்களில் பெண்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும், நேர்மறை எண்ணங்களைக் கொண்டிருப்பதுடன், தன்னம்பிக்கை, நல்ல சிந்தனைகளை வளர்க்க வேண்டும்.

    குழந்தை வளர்ப்பில் பெற்றோருடன் தாத்தா - பாட்டியின் பங்கும் முக்கியம். கூட்டுக் குடும்பங்களில் வளரும் குழந்தைகள் நல்ல பண்புகளுடன் வளருகின்றனர். குழந்தைகளுக்குத் தொடர்ந்து 6 மாதங்களுக்கு கட்டாயமாக தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். புட்டிப்பால் கொடுப்பதால் பல்வேறு வியாதிகள் ஏற்படுகின்றன.

    கை சூப்புவது, நகம் கடிப்பது, படுக்கையில் சிறுநீர் கழிப்பது, முரண்டுபிடிப்பது போன்றவற்றின் மூலம் குழந்தைகள் தங்களது மன அழுத்தத்தைப் போக்கிக் கொள்கின்றனர். எனவே இவற்றுக்கு நேர்மறையான வழியின் மூலமே தீர்வு காண வேண்டும். கை சூப்பும் குழந்தைகளுக்கு வேப்ப எண்ணெய் வைத்தியம் எதிர்மறை சிந்தனையைத் தூண்டும்.

    குழந்தைகளுக்கு சத்தான, பாரம்பரிய உணவுகளை வழங்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவு, குளிர்பானங்களைக் கொடுக்க வேண்டாம். குழந்தைகளை தினமும் ஒரு மணி நேரமாவது ஓடியாடி விளையாட அனுமதிக்க வேண்டும். வழிபாட்டுத் தலங்களுக்கும், இயற்கை காட்சிகளை ரசிக்கவும் அழைத்துச் செல்ல வேண்டும்.

    எக்காரணம் கொண்டும் குழந்தைகளை பிறருடன் ஒப்பிட்டுப் பேச வேண்டாம். மேலும், எதற்கெடுத்தாலும் மருத்துவரிடம் செல்வதையும், மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளைக் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.

    Similar Threads:

    Sponsored Links
    jv_66 and Mary Daisy like this.

  2. #2
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: கர்ப்ப காலங்களில் பெண்கள் டிவி பார்க்க 

    useful info . . . . . . . .. . .


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter