அட நம்ம வீட்டுக்கு குட்டி குழந்தை வரபோகிறதா!!!... என்று நாம் சந்தோஷ படுவதையும் சேர்த்து, கர்ப்பம் அடைத்த தாய்மார்கள் இந்த ஒன்பது மாத கால பயணத்தில் அவர்கள் அடைய போகும் சில சின்ன சின்ன சந்தோசங்கள்..
  • கர்பம்உறுதியான முதல் வாரங்களில் உங்களுக்கும் உங்கள் கணவருக்குமே ஆனா ரகசிய பரிமாற்றங்கள்.
  • நீங்கள் கனவு காண, குழந்தை வரவு பற்றி திட்டம் போட இன்னும் மாதங்கள் உள்ளன என்று என்னும் பொழுது
  • புது விதமான உடைகள் , உங்கள் கற்பத்துக்கு ஏற்ப எளிதில் அணிய கூடிய உடைகள் வாங்கி சேர்க்க போகும் தருணங்கள்
  • பொறுமையான, இளம் சூட்டில் இருக்கும் நீரில் குளித்து, வலிக்கும் கால்களுக்கு மசாஜ் செய்து கொண்டு, உங்கள் உப்பிற்ற வயிற்றில் மசாஜ் தைலம் மற்றும் என்னை தேய்த்து சுகத்தை அனுபவிக்கும் பொழுது...
  • நீங்கள் வேலைக்கும் சென்றால் உங்கள் கற்பகால சலுகைகள் பற்றி பேசுதல்
  • யோகா மற்றும் பேறு காலத்திற்கு முற்பட்ட பயிற்சிகள் சேரும் பொழு அங்கே உங்களுக்கு கிடைக்கும் புது தோழமைகள்.
  • உடல் எடை கூடுவதை பற்றி சற்றும் கவலை படாமல் இருப்பது
  • இது உங்கள் முதல் குழந்தை என்றால், அடுத்து வரும் ஒன்பது மாதங்கள் நன்றாக தூங்கி எழுந்து அனுபவித்தல்
  • உங்களுக்கவே பிரத்யேகமாக உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சமைத்து தரும் உணவை ஒரு பிடி பிடித்தல்(ஆஹா என்னும் போதே இவ்வளவு நன்றாக இருகிறதே...)


Similar Threads: