Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree1Likes
 • 1 Post By chan

Tips to deliver a Healthy Child-ஆரோக்கியமான குழந்தையைப் பெற ஒரு கர&


Discussions on "Tips to deliver a Healthy Child-ஆரோக்கியமான குழந்தையைப் பெற ஒரு கர&" in "General Pregnancy" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Tips to deliver a Healthy Child-ஆரோக்கியமான குழந்தையைப் பெற ஒரு கர&

  ஆரோக்கியமான குழந்தையைப் பெற ஒரு கர்ப்பிணி பின்பற்றவேண்டிய விஷயங்கள் எவை?

  சென்னையைச் சேர்ந்த பிரபல மகப்பேறு மருத்துவர் டாக்டர் கே.பிரேமா

  ‘‘ஒரு பெண் கர்ப்பம் அடைய தகுந்த வயது என்று எதைச் சொல்வீர்கள்?’’

  ‘‘நம்ம ஊர் ஆட்டோக்களில் எல்லாம் பெண்ணின் திருமண வயது 21 என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அதை மனதில் கொண்டு, இந்த வயதுதான் அவள் கர்ப்பம் அடைய தகுதியான வயது என்று சொல்லிவிட முடியாது. கிராமங்களில் பெண்களுக்கு 16 வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். நகர்ப்புறங்களிலோ, பெண்கள் உயர் கல்வி வரை போய் படித்து, சுயமாக சம்பாதித்து, பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுக்கும்பொழுது, பல சமயங்களில் வயது 30-ஐ தாண்டி விடுகிறது. எனவே, ஒரு பெண்ணின் திருமணம் என்பது அவள் வாழ்கின்ற சூழ்நிலையை பொறுத்து அமைகிறது.

  இருப்பினும், பெண்ணின் கர்ப்பகாலம் எந்த வயதிற்குள் இருந்தால் அவள் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பாள் என்று கேட்டால், அது 21 வயதிலிருந்து 25 வயதுக்குள் இருத்தல் வேண்டும். ஏனென்றால், அந்த காலகட்டத்தில் உருவாகும் கருமுட்டை மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். மேலும், கர்ப்பம் மற்றும் மருத்துவ ரீதியான பிரச்னைகளை தவிர்க்கவும் இதுதான் சரியான பருவம்!’’

  ‘‘வெளியே, ‘ஒரு பெண்ணுக்கு தரவேண்டிய திருமணப் பரிசு..’ என்று கேள்வி குறியுடன் ஒரு போர்டு வைத்திருக்கிறீர்களே.. அதற்கான அர்த்தம் என்ன?’’
  ‘‘சொல்கிறேன்.. எல்லா குடும்பங்களுக்கும் நான் வலியுறுத்த விரும்பும் விஷயம் அது!

  பொதுவாக, கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ‘ஃபோலிக் ஆசிட்’ ( folic acid ) என்கிற வைட்டமின் சத்து மிகவும் அவசியமானது. இது, நாம் உண்ணும் பச்சை காய்கறிகளில் இருந்தாலும்கூட, கர்ப்ப காலத்தில்.. முக்கியமாக, கரு உருவாகும் ஆரம்ப நாட்களில் பெண்ணுக்கு இந்தச் சத்து அதிகமான அளவு தேவைப்படுகிறது. அதனால், கரு ஆரம்பமாவதற்கு முன்பே ‘ஃபோலிக் ஆசிட்’ அடங்கிய பிரிநேட்டல் ( prenatal ) என்ற மாத்திரைகளை எடுத்துக் கொண்டால்தான் முழுமையான பலன் கிடைக்கும்.

  மேலைநாடுகளில் ‘குழந்தை பெற்றுக் கொள்வது’ என்பதை முழுமையான திட்டமிட்ட ஒரு செயலாக கருதுகிறார்கள். அதனால், கர்ப்பம் அடையும் முன்பே டாக்டர்களைச் சந்தித்துப் பேசுவார்கள். டாக்டர்களும், குழந்தை பெற அந்தப் பெண் மனதளவில் தயாராகும் போதே, இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள்.

  ஆனால், நம் ஊரில் நிலைமை அப்படியல்ல. திருமணம் முடிந்த துமே பெரும்பாலான பெண்கள் கர்ப்பம் அடைந்துவிடுகிறார்கள். அதுமட்டுமல்ல, கர்ப்பம் தரித்து குறைந்தது இரண்டு வாரங்கள் கழித்தே டாக்டரையே அணுகுவார்கள். இதற்குள் அந்தக் கருவின் நரம்பு மண்டல வளர்ச்சி தொடங்கியிருக்கும். அப்போது, என்னதான் ‘ஃபோலிக் ஆசிட்’ எடுத்துக் கொண்டாலும், எதிர்பார்க்கும் பலனை அது முழுமையாக தந்துவிடாது. அதனால்தான், எல்லா பெண்களுக்கும் இந்த ‘ஃபோலிக் ஆசிட்’டை கல்யாண பரிசாகவே கொடுக்கவேண்டும் என்கிறேன்.

  ‘ஃபோலிக் ஆசிட்’ சத்தின் மகத்துவம் நம் தம்பதிகளுக்கு சுலபமாக புரிய வேண்டும் என்பதற்காக நகைச்சுவையாக, ‘ஊரில் எல்லா பிள்ளைகளும் ப்ளஸ்-டூவில் 99 சதவிகித மதிப்பெண்கள் வாங்குகின்றன. உங்கள் குழந்தை 99.9 சதவிகிதம் மதிப்பெண் வாங்க வேண்டுமானால், கரு உருவாகும் முன்பே, உங்கள் மனைவிக்கு ‘ஃபோலிக் ஆசிட்’ மாத்திரை கொடுங்கள்’ என்பேன்.’’  ‘கர்ப்பிணிகளுக்கான உணவு பற்றி சொல்லுங்களேன்..’’

  ‘‘இந்த உணவைத்தான் அவர்கள் சாப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்ல எதுவுமில்லை. பொதுவாக, எல்லோருமே ஒரு காய், ஒரு கனி, ஒரு கீரையை தினமும் உண்ணுவது சிறந்தது. அவை கர்ப்ப காலத்தில் மிகவும் இன்றியமையாதது. கர்ப்பிணிகள் ஒரு வேளைகூட உணவு உட்கொள்வதை தவிர்க்கக் கூடாது என்பது முக்கியம்!’’

  ‘‘கர்ப்பிணிகளுக்கான உடற் பயிற்சிகள் என்று ஏதாவது இருக்கிறதா?’’

  ‘‘சாதாரணமாக எல்லா கர்ப்பிணி களுக்கும் உகந்த உடற்பயிற்சி நடப்பதுதான். தினமும் 20லிருந்து 30 நிமிடங்கள் வரையில் நடக்க லாம். ஏற்கெனவே ஏரோபிக்ஸ் போன்ற உடற்பயிற்சிகள் செய்யும் பெண்கள் அதை நிறுத்தவேண்டிய அவசியமில்லை. அவருடைய இதயத் துடிப்பு சராசரி நிலையில் இருந்து இருபது துடிப்புகள் அதிகமாகும் வரை எந்த உடற் பயிற்சியும் மேற்கொள்ளலாம். இதற்கும் மேல் இதயத் துடிப்பை அதிகரிக்கும் உடற் பயிற்சிகளை தவிர்ப்பது நல்லது.’’

  ‘‘கர்ப்பிணிகள் ஸ்கூட்டர், மோட்டார் பைக்குகள் ஓட்டலாமா?’’

  ‘‘முதல் நான்கு மாதங்கள் தாராளமாக ஓட்டலாம். ஆனால், அதற்கு பிறகு அதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் நான்கு மாதத்திற்கு மேல் கருப்பை, வயிற்றுப் பகுதிக்கு வந்து விடுவதால் ஹாண்டில் பார் போன்ற வற்றில் மோத வாய்ப்பு உள்ளது. டூ வீலர்களில் பின்னால் உட்கார்ந்து செல்லும் பெண்கள் ஆறு, ஏழு, மாதங்கள் வரைக்கூட அப்படி செல்லலாம். இவர்கள் எல் லோருமே ஹெல்மட் அணிவதோடு, ஆண்களைப் போல டூ வீலரில் இரண்டு பக்கமும் காலைப் போட்டு அமர்ந்து செல்வதும் முக்கியம். அப்போதுதான் நல்ல பாலன்ஸ் கிடைத்து, வண்டியிலிருந்து விழாமல் இருக்கமுடியும். வழுக்கும் நைலக்ஸ் சேலைகளை தவிர்த்து இவர்கள் காட்டன் புடவைகளை அணிவதே சிறந்தது.’’

  ‘‘எந்தெந்த பரிசோதனைகள் எல்லா கர்ப்பிணி களுக்கும் அவசியம் என்று சொல்வீர்கள்?’’
  ‘‘ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு, பிளட் குரூப், சிறுநீர்ப் பரிசோதனை, உணவு உண்டு இரண்டு மணி நேரத்திற்கு பிறகான சர்க்கரையின் அளவு, மஞ்சள் காமாலைக்கான அறிகுறி, தைராய்டு, ஹார்மோன் அளவு மற்றும் பிமிக்ஷி சோதனை.. இவையெல்லாம் அவசியமான சோதனைகள்!’’

  ‘‘எந்த மாதத்தில் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்து பார்க்கவேண்டியது அவசியம்?’’
  ‘‘ஸ்கேன் என்பது இருபதாவது வாரத்தில் (அதாவது, 5-வது மாதம்) செய்யப்பட வேண்டியது. இப்போது பல டாக்டர்கள் மூன்றாவது மாத முடிவிலேயே ஸ்கேனுக்கு சிபாரிசு செய்கிறார்கள். ஏனெனில், குழந்தைக்கு உயிருக்கே ஆபத்தான பாதிப்புகள் ( fatal anamolies ) ஏதேனும் இருப்பின், அந்த சமயத்திலேயே கருச்சிதைவு செய்வது ரொம்ப எளிது. அதுவே, இருபதாவது வாரத்திற்கு பிறகு எனில், தாய்க்கு அதனால் பல பிரச்னைகள் வரும். அது, பின் வரும் பிரசவங்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது!’’

  ‘‘ஸ்கேனில் எல்லா குறைகளையும் கண்டறிய முடியுமா?’’
  ‘‘அனடாமிகல் என்று சொல்லப்படும் உடல் உறுப்புகள் சம்பந்தமான குறைகளை 95 சதவிகிதம் ஸ்கேன் மூலமே கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், இதை வைத்து உடல், மன உறுப்புகளின் வேலைத் திறனை ( functional activities ) கண்டறிய முடியாது.’’

  ‘‘வயது முதிர்ந்த முதல் கர்ப்பம் ( Elderly primi ) என்பது எந்த வயதில் கூறுகிறார்கள்? அதுபற்றி..’’

  ‘‘ஒரு பெண்ணுக்கு 35 வயதுக்குமேல் முதல் முறையாக கரு உருவானால், அதுதான் ‘வயது முதிர்ந்த கர்ப்பம்’. இது ஒருவகையில் சிக்கலான கர்ப்பம்! இந்தத் தாய்க்கு பிறக்கும் குழந்தைக்கு மன வளர்ச்சி குன்றலாம் அல்லது வேறு வகையான பாதிப்புகள் வரலாம். ஆனால், முதல் கேள்விக்கு சொன்னபடி, ஏதோ ஒரு காரணத்தினால் அந்தப் பெண்ணுக்கு திருமணமே தாமதப்பட்டு நடந்திருக் கலாம். அதனால், இந்த வயதில் அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்று சொல்ல முடியாது. அதனால், சரியான வயதில் திருமணம் செய்து கொள்பவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை எக்காரணம் கொண்டும் தள்ளிப்போட வேண்டாம் என்று சொல்கிறோம்.’’

  ‘‘கருவின் ஆரோக்கியத்தை பரிசோதிக்க, ஸ்கேனை தவிர வேறு ஏதேனும் சோதனைகள் இருக்கிறதா?’’

  ‘‘முப்பத்தைந்து வயதுக்கு பிறகு முதல் முறையாக கர்ப்பம் அடைந்திருப்பவர்கள், ஏற்கனவே பிறந்த குழந்தைக்கு உடல் அல்லது மன வளர்ச்சி குன்றிய நிலை இருந்து மீண்டும் கர்ப்பமானவர்கள் ஆகியோருக்கு, இந்த 13 வது வார ஸ்கேனில், அவர்களின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு உடல், மன வளர்ச்சி குன்றியதற்கான குறிகள் ( markers ) இருக்கிறதா என்று பார்ப்போம். அப்படி குறிகள் இருப்பின், அடுத்து அந்த கர்ப்பிணிகளுக்கு ரத்தப் பரிசோதனைகள் ( Bio chemical ) மேற்கொள்வோம். அதுவும் சந்தேகத்தை எழுப்புமானால், வயிற்றிலிருக்கும் அந்த குழந்தையின் ரத்தத்தையாவது, அல்லது குழந்தையை சுற்றியுள்ள amniotic fluid என்ற திரவத்தையாவது எடுத்து பரிசோதிக்க அனுப்புவோம். இந்த பரிசோதனைகளும் குழந்தையின் மன அல்லது உடல் வளர்ச்சி குன்றியதை ஊர்ஜிதப்படுத்துமானால், அதன் பிறகு கருச்சிதைவு பற்றிய கவுன்சிலிங் ஆரம்பிப்போம்.’’

  ‘‘குழந்தை பிறந்த பின் நம் நாட்டில் அநேக பெண்களுக்கு தொப்பை எனப்படும் mid body obesityவந்துவிடுகிறதே.. அதை எப்படி தடுப்பது?’’

  ‘‘கர்ப்ப காலத்திலேயே இவர்களுக்கு உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை சொல்லித் தருகிறோம். நார்மல் பிரசவமாக இருப்பின், இரண்டு வாரங்கள் கழித்தும், சிசேரியனாக இருப்பின் ஆறு வாரங்கள் கழித்தும் இந்த வயிற்றுப் பயிற்சிகளை ஆரம்பிக்க அறிவுறுத்து கிறோம். இவற்றை தொடர்ந்து செய்துவந்தால், இந்த வகை பருமனை நிச்சயம் தவிர்க்கலாம்.

  இந்த வகை உடல் பருமன் கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால், இதுதான் ‘மெட்ட பாலிக் சின்ட்ரோம்’ என்கிற ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், இன்சுலின் எதிர்ப்பு சக்திகளுக்கும், அதனால் இதய நோய்களுக்கும் முன்னோடி!

  சிலர் சில வாரங்கள் மட்டும் இந்த பயிற்சிகளை செய்துவிட்டு நிறுத்திவிடுகிறார்கள். ஆனால், இவை எல்லாம் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய நோய் தடுப்பு முறைகள்!’’ என்ற டாக்டர் பிரேமா,

  ‘‘கர்ப்பிணிகளுக்கு முக்கியமான இன்னொரு விஷயத்தையும் சொல்லவேண்டும். நிறைய பேர் ‘இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிட்டால் குழந்தை கறுப்பாக பிறந்துவிடும்’ என்றும், ‘குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும்’ என்றும் நம்புகிறார்கள். அதெல்லாம் மூடநம்பிக்கை!’’ என்றார் அழுத்தமான குரலில்!

  Moderator's Note:This Article has been published in Penmai eMagazine June 2015. You Can download & Read the magazines HERE.

  Similar Threads:

  Sponsored Links
  Last edited by sumathisrini; 25th Jun 2015 at 06:54 PM.
  sumathisrini likes this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter