இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள் என்று தெரியுமா?

இரட்டைக் குழந்தை பிறந்தால் அதிசயமாக பார்ப்போம். அது ஒரு இயற்கையான நிகழ்வு தான். ஆனால் இரட்டைக் குழந்தைகள் அனைவருக்குமே பிறக்கும் என்று சொல்ல முடியாது. இது ஒரு ஆண் மற்றும் பெண்ணின் விந்து மற்றும் கருமுட்டையைப் பொறுத்தது. அதுமட்டுமின்றி, இரட்டைக் குழந்தையானது உங்கள் பரம்பரையில் யாருக்கேனும் பிறந்து இருந்தாலும் பிறக்கக்கூடும். சரி, உங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள் என்று தெரியுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

இத்தகைய இரட்டைக் குழந்தைகளில் இரண்டு வகைகள் உள்ளன. அவையாவன:

* வேறுபாடுள்ள இரட்டைக் குழந்தைகள்
* ஒன்று போலிருக்கும் இரட்டைக் குழந்தைகள்

வேறுபாடுள்ள இரட்டைக் குழந்தைகள்

பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஒரு சூல்முட்டை வெளிப்படும். ஆனால் சிலருக்கு இரண்டு வெளிப்படும். அப்படி இரண்டு சூல்முட்டைகள் வெளிப்படும் போது, ஒரு பெண் உடலுறவில் ஈடுபட்டால், ஆணின் விந்தணுவானது இரு வேறு சூல்முட்டைகளில் நுழைந்து கருவாக உருவாகும். அப்படி உருவாகும் கருவில் பிறந்த குழந்தைப் பார்த்தால், அவர்கள் வேறுபட்டு காணப்படுவதோடு, அவர்களின் பண்புகளும் வேறுபட்டிருக்கும்.


ஒன்று போலிருக்கும் இரட்டைக் குழந்தைகள்

இந்த வகை குழந்தைகள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பார்கள். இவர்கள் ஒரே ஒரு விந்தணுவின் மூலம் பிறப்பார்கள். அது எப்படியெனில், உறவில் ஈடுபடும் ஆணிடமிருந்து வெளிவரும் ஆயிரக்கணக்கான செல்களில் ஒன்றே ஒன்று மட்டும் பெண்ணின் கருமுட்டையினுள் சென்று இணையும் போது, இயல்புக்கு மாறாக சில சமயங்களில் கருமுட்டையானது இரண்டாக பிரிய ஆரம்பித்து, இரண்டு குழந்தைகளாக உருவாகும்.

இந்த வகை இரட்டைக் குழந்தைகளிலும் ஒரு வகை உள்ளது. அது என்னவெனில், கருமுட்டை இரண்டாக பிரியும் போது முழுமையாக பிரியாமல் இருந்தால், குழந்தைகள் ஒட்டிப் பிறப்பார்கள். அதுமட்டுமல்லாமல் ஒரே மாதிரி காணப்படுவார்கள்


Similar Threads: