கர்ப்பமாக இருக்கும் போது இரத்தக் கசிவு ஏற்படுவதற்கான காரணங்கள்!

கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு இரத்தக் கசிவு ஏற்படும். பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது இரத்தக் கசிவு ஏற்பட்டால், கரு கலைந்துவிட்டது என்று தான் நினைப்பார்கள். ஆனால் இரத்தக் கசிவு ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. எனவே கர்ப்பமாக இருக்கும் போது இரத்தம் வெளிவந்தால், பயப்பட அவசியமில்லை. ஆனால் எதற்காக இரத்தக் கசிவு ஏற்படுகிறது என்று ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு இதற்கான காரணத்தை அறிய அமெரிக்க கருத்தரிப்பு கூட்டமைப்பு அனுபவமிக்க 20-30 பெண்களிடம் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் எந்த பிரச்சனைகளினால் இரத்தம் வடிய வாய்ப்புள்ளது என்று ஒரு ஆய்வு நடத்தியது. இதில் அவர்கள் ஒருசில காரணங்களை வெளியிட்டனர். இப்போது அந்த காரணங்கள் என்னவென்று பார்ப்போம்...

* கர்ப்பமாக இருக்கும் போது 6-12 நாட்களில் சிலருக்கு பிங்க் அல்லது ப்ரௌன் நிறத்தில் இரத்தக்கசிவு ஏற்படும். ஏனெனில் கருமுட்டையானது கருப்பையில் நுழைவதால், இரத்த குழாயில் இருந்து இரத்தம் வெளிவரும். இருப்பினும் இது சில நாட்கள் மற்றும் சில நேரங்களில் மட்டுமே ஏற்படும்.

* கர்ப்ப காலத்தில் மிகவும் சென்சிட்டிவ்வான கருப்பைக்கு இரத்தமானது அதிக அளவில் பாயும். இதனால் அதில் அழுத்தமானது அதிகம் ஏற்படுவதால், இரத்தக் கசிவு ஏற்படுகிறது.

* நஞ்சுக்கொடியில் இரத்தக்கட்டிகள் இருந்தாலும் இரத்தக்கசிவு ஏற்படும். ஆனால் இரத்தக்கட்டிகயானது அளவுக்கு அதிகமாக இருந்தால், நஞ்சுக்கொடியானது கருப்பையில் இருந்து பிளவுபட்டு கருச்சிதைவை ஏற்படுத்திவிடும். இந்த நிலைக்கு எவ்வித சிகிச்சையும் இல்லை. இருப்பினும் மருத்துவர்களின் அறிவுரையைக் கேட்டு நடந்தால், பிரசவம் ஆரோக்கியமாக நடக்கும்.

* கர்ப்ப காலத்தில் இரத்தமானது அடர் சிவப்பு நிறத்தில் வந்தால், கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். அதிலும் முதல் 12 வாரத்தில் இந்த நிலை வந்தால், கருவின் வளர்ச்சி சரியாக இல்லை என்பதே காரணம்.


Similar Threads: