Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree36Likes

Pregnancy Care Tips - பத்து மாத பாதுகாப்பு டிப்ஸ்


Discussions on "Pregnancy Care Tips - பத்து மாத பாதுகாப்பு டிப்ஸ்" in "General Pregnancy" forum.


  1. #11
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Pregnancy Care Tips - கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்பு

    கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்பு
    டாக்டர் அப்பன்




    கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்பு இன்றைய நாளில் இன்றியமையாததாகக் கருதப்பட வேண்டிய நிலையில் ‘கழுதை தேய்ந்து கட்டெறும்’பான கதை போன்று நாம் தள்ளப்பட்டு வருகிறோம். ஏனெனில் இன்றைய நாளில் சுகப்பிரசவம் என்பது உலகிலேயே இல்லையென்ற நிலை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. நம்மிடைய போலியான ஊட்டச்சத்து கருத்துக்களும், நடைமுறைகளும் நிலவுவதால், சுகப்பிரசவம் அரிதாகி வருகிறது.

    இதற்கெல்லாம் காரணம் இயற்கைக்கு மாறான உணவுப் பழக்கங்களும், நடைமுறைகளுமேயாகும். மலச்சிக்கலே அனைத்து நோய்களுக்கும் மூல காரணம்; சமைத்துண்ணும் பழக்கமே மலச்சிக்கலுக்குக் காரணம். சமைத்துண்ணும் உணவில், மலச்சிக்கலைத் தவிர்க்கும் நார்ச்சத்து இல்லை. சமைக்காமல், தனக்குரிய இயற்கை உணவு உண்டு வாழும் அனைத்து விலங்குகளுக்கும் சுகப் பிரசவம் ஆகின்றது.

    எனவே ஒரு பெண் கர்ப்பம் தரித்தவுடனாவது, சுகப் பிரசவம் ஏற்படவும், ஊனமுற்ற குழந்தை பிறப்பைத் தவிர்க்கவும், தாய்ப்பால் போதிய அளவு கிடைக்கவும், பிறக்கும் குழந்தைக்குத் தரமான தாய்ப்பால் கிடைக்கவும், மூன்று வேளை சமையலுணவைத் தவிர்த்து, காலையும், இரவும் தேவையான தேங்காயும், பழ வகைகளும், உணவாக உண்டு, தேவையெனில் மதியம் ஒரு வேளை மட்டும் சமைத்த சைவ உணவு உண்டு வாழ்வது நல்லது.

    முடிந்தால் மதியம் ஒரு வேளையும் சமைத்த்ட சைவ உணவைத் தவிர்த்து, அவல் பச்சைக் காய்கறிகள், பழங்கள் என உணவாகத் தேவையான அளவு உண்டு வாழ்வது, மேலும் சிறப்புடையதாக இருக்கும்.

    இவ்வாறு, குறைந்தபட்சம் பிரசவம் ஆகும் வரையிலாவது உணவை மாற்றி உண்டு வாழ்ந்தால், உறுதியாக சுகப்பிரசவம் கிட்டும். தாய்ப்பால் போதிய அளவு சுரக்கும், தாய்ப்பாலின் தரமும் உயர்வாக இருக்கும். இத்தகைய தாய்ப்பாலை அருந்தும் குழந்தை சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் வளரும். இந்நிலையில் பிரசவிக்கும் குழந்தைகள், இதர குழந்தைகளை விட எடை குறைவானதாக இருக்கும். இதைக் கண்டு அஞ்சவேண்டாம். கவலை வேண்டாம்.

    மேலும் கர்ப்பம் தரித்த நாளிலிருந்து பிரசவம் ஆகும் வரை, அந்தக் கர்ப்பிணிப்பெண் ஓரளவாவது இயன்ற வேலைகளை செய்து வர வேண்டும். ஆனால், இன்றைய உலகம், கர்ப்பிணிப் பெண் ஆடக் கூடாது, அசையக் கூடாது, அலுங்காமல், குலுங்காமல் இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

    இது சரியல்ல. பிரசவம் ஆகும் வரை அப்பெண் முடிந்த வேலைகளைத் தவறாமல் செய்து வர வேண்டும். அப்போதுதான் சுகப்பிரசவம் கிடைக்கும்.

    அடுத்ததாக, கர்ப்பம் தரித்தவுடன், கணவரோடு உடலுறவைப் பிரசவம் ஆகும் வரை தவிர்த்தால், உடல் ஊனமுற்ற குழந்தை பிறப்பதைத் தவிர்ப்பதோடு, மேலும் கர்ப்பிணிப் பெண்ணுக்கும், கருவுக்கும், பிறக்கும் குழந்தைக்கும் மிக்க நன்மை பயக்கும். விலங்குகூட கர்ப்பம் தரித்த பெண் விலங்குடன் உடலுறவைத் தவிர்ப்பதை இன்றும் கவனிக்கலாம். சினை வாடை, கர்ப்ப வாடை இல்லாத பெண் விலங்குடன் தான் எந்தவொரு ஆண் விலங்கும் உடலுறவு கொள்ளும்.

    அதுபோல், எந்தவொரு விலங்கும் கர்ப்பம் தரித்ததிலிருந்து பிரசவம் ஆகும்வரை எப்போதும் போல் இரை தேடி அலைந்து உண்டு வாழ்கின்றது. சுகப் பிரசவம் ஏற்படுகின்றது. நம்மைப் போல் ஆடாமல், அலுங்காமல், குலுங்காமல் முடங்கிக் கிடப்பது இல்லை.

    முழு இயற்கை உணவில், அல்லது இரு வேளை இயற்கை உணவில் கர்ப்பிணிப் பெண் வயிறு சமைத்துண்ணும் கர்ப்பிணிப் பெண் வயிறு போன்று மிகவும் பெரிதாக இருக்காது. ஓரளவு தான் பெரிதாக இருக்கும்.
    இவ்வாறு அதிகப்பட்சம் இயற்கை உணவில் வாழும் கர்ப்பிணிப் பெண்கள் தான், உலகிற்கு ஆரோக்கியக் குழந்தையைப் பெற்றெடுத்து வழங்க இயலும் எனவே ஆரோக்கிய உலகு, நோயற்ற உலகு உருவாக உண்பதும், நல்ல சிந்தனையில் வாழ்வதும், இயன்ற அளவு உடலுழைப்பு செய்வதும் முக்கியமானதாகும்.

    போலிப் பழக்கத்தைத் துறப்போம். இயற்கை பழக்கத்தை ஏற்போம்.

    தொடர்புக்கு - டாக்டர் அப்பன்: 9380873645, 9944042986




    Sponsored Links
    Last edited by chan; 13th Oct 2015 at 02:16 PM.
    jv_66 likes this.

  2. #12
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,567

    Re: Pregnancy Care Tips - கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்பு

    Useful sharing Lakshmi, thanks.

    chan likes this.

  3. #13
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Pregnancy Care Tips - பத்து மாத பாதுகாப்பு டிப்ஸ்

    Very useful tips lakshmi

    chan likes this.
    Jayanthy





  4. #14
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    கர்ப்ப காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய

    கர்ப்ப காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்





    இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும். முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வராமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

    • மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது. மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.

    • கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூடநம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை’ மெலனின்’ எனப்படும் நிறமிகளே!

    • கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

    • வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டியதானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

    • பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது.

    • கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

    • கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

    • தைராய்டு, சுகர் போன்ற பிரச்சனைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

    • தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

    jv_66 likes this.

  5. #15
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,567

    Re: கர்ப்ப காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டி

    Useful guidance Lakshmi, thanks much for sharing.


  6. #16
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    கர்ப்பிணிகளுக்கான பயனுள்ள தகவல்கள்

    கர்ப்பிணிகளுக்கான பயனுள்ள தகவல்கள்




    • கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும்.

    • வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது, சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டியதானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

    • பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது.

    • கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

    • கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

    • தைராய்டு, சுகர் போன்ற பிரச்சனைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

    • தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். தாய்ப்பால் சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

    jv_66 likes this.

  7. #17
    kanikadugal011 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2016
    Location
    Ludhiana
    Posts
    146

    Re: Pregnancy Care Tips - பத்து மாத பாதுகாப்பு டிப்ஸ்

    Exercise is important for your pregnancy health and also can help reduce stress. Take a pregnancy exercise class or walk at least fifteen to twenty minutes every day at a moderate pace. Walk in cool, shaded areas or indoors in order to prevent overheating.


  8. #18
    gulf.rajesh's Avatar
    gulf.rajesh is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jul 2011
    Location
    GULF
    Posts
    297

    Re: Pregnancy Care Tips - பத்து மாத பாதுகாப்பு டிப்ஸ்

    கர்ப்பிணிகளுக்கான ஆப்ஸ்!



    ர்ப்பகாலம்தான் ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டம். இந்தக் காலத்தில், குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும், என்ன உணவு எடுக்கலாம், என்ன பயிற்சி செய்யலாம் என்று பெண்களுக்கு ஏராளமான சந்தேகங்கள் வரும். அவர்களுக்கு உதவும் விதமாக பல ஸ்மார்ட்ஃபோன் ஆப்ஸ் உள்ளன. அவற்றி்ல் சிறந்த சில ஆப்ஸ்…

    வெப் எம்டி ப்ரெக்னன்ஸி (Web MD Pregnancy)


    கர்ப்பிணிகளுக்கான சிறந்த ஆலோசனைகளை வழங்கும் இந்த ஆப், ஆப்பிளின் ஐ-ஓஎஸ் தளத்தில் மட்டுமே இயங்கக்கூடியது. இந்த ஆப்பில் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் தலைசிறந்த மருத்துவர்களிடமிருந்து பெறப்படுபவை. இந்த ஆப்பின் சிறப்பம்சம், பிரசவக் காலத்தில் பெண்களின் உடல்நிலை, குழந்தையின் வளர்ச்சி, உணவுகள், உடற்பயிற்சி என அனைத்தைப் பற்றியும் அறிவுரை வழங்கும் ‘பிரெக்னன்ஸி 101’ ஆப்ஷன். அப்பாக்களுக்கு அறிவுரை வழங்கும் ‘ஜஸ்ட் ஃபார் டேட்’ ஆப்ஷனும் இருக்கிறது.
    நர்ச்சர் பை க்ளோ (Nurture by Glow)
    மருத்துவ செக்அப் தேதிகளைச் சிறப்பாகக் கையாளக் கைகொடுக்கும் ஆப் இது. வாட்ஸ்அப் குரூப்போல, இதிலிருக்கும் ‘கம்யூனிட்டி’யின் மூலம் பிற கர்ப்பிணிகளோடு கலந்துரையாடவும், ஆலோசனைகள் பெறவும் இந்த செயலி உதவுகிறது.
    பேபி பம்ப் பிரெக்னன்ஸி ப்ரோ (Baby Bump Pregnancy Pro)
    ‘ப்ரோ வெர்ஷன்’ என்று குறிப்பிட்டிருந்தாலும் முழு வெர்ஷனையும் இலவசமாகவே டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஆண்ட்ராய்டு மொபைல்களி்ல் இதைப் பயன்படுத்த முடியும். இந்த ஆப், பிரசவம் என்னும் பெருநிகழ்வுக்கு கர்ப்பிணிகளை மனதளவில் தயார்செய்யும் பொருட்டு, பல பிரசவ வீடியோக்களைத் தொகுத்து வழங்குகிறது.
    ஸ்ப்ரௌட் (Sprout)
    பெண்களுக்குக் கர்ப்பகாலத்தின் பேரின்பமே, குழந்தையின் அசைவுகளை உணர்வதுதான். குழந்தையின் வளர்ச்சி, எடை, அசைவுகள் என அனைத்தையும் கண்காணிக்கும் இந்த ஆப், கர்ப்பிணிகளுக்கான மருத்துவப் பரிசோதனைகள் பற்றியும் தெரியப்படுத்துகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் இயங்கும்.
    மை பேபிஸ் பீட் (My Baby’s Beat)
    கர்ப்பப்பையில் குழந்தை அசையும் அதிர்வலைகளை ஓசையாக உணர, டாக்டரின் ஸ்டெத் தேவையில்லை. மொபைல் ஸ்கேனராக மாற, அல்ட்ரா சவுண்ட் மூலம் இந்த ஆப் மூலமாகவே உணர முடியும். அலைபேசியை வயிற்றுப் பகுதியில் வைத்தவுடன், இந்த ஆப் குழந்தையின் அசைவுகளைப் பதிவு செய்யும் (செயலியைப் பயன்படுத்தும்போது மொபைலை ஃப்ளைட் மோடில் வைக்க வேண்டும்). குறிப்பாக, கரு வளர்ச்சியின் 30 வாரங்களுக்குப் பிறகு, அந்த ஓசையைத் துல்லியமாகக் கேட்க முடியும். இந்த ஆப்பின் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 1.99 அமெரிக்க டாலர்களுக்கும் ஐ-போன் வெர்ஷன் 4.99 டாலர்களுக்கும் கிடைக்கிறது.
    பேபி நேம்ஸ் (Baby Names)
    கர்ப்பம் உறுதிசெய்யப்பட்ட நாளில் இருந்தே கணவன், மனைவி இருவரும் பிறக்கப்போகும் தங்கள் குழந்தைக்கான பெயர் வேட்டையில் இறங்கிவிடுவார்கள். பெரியவர்களின் ஆலோசனை, நியூமராலஜி, கூகுள் தேடல் எனப் பல திசைகளிலும் தேடுவார்கள். அவர்களுக்கான மற்றுமொரு திசை, இந்த ஆப். ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகளுக்குத் தனித்தனிப் பிரிவுகளில் ஆயிரக்கணக்கில் பெயர்கள், அர்த்தத்துடன் இதில் கிடைக்கும். கணவன், மனைவி இருவரது பெயரையும் டைப் செய்தால், அதற்குப் பொருத்தமான பெயர் பரிந்துரைக்கப்படுவது சிறப்பான வடிவமைப்பு.
    ஹூ’ஸ் யுவர் டேடி (Who’s Your Daddy)
    பெண்கள் கருவில் ஓர் உயிரைச் சுமந்தால், ஆண்கள் மனதில் அந்த இரு உயிரையும் சுமப்பவர்கள். அவர்களுக்கான ஆப் இது. தன் மனைவி மற்றும் பிறக்கப்போகும் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு அந்த ஆண் செய்யவேண்டிய விஷயங்கள் அனைத்தையும் இந்தச் செயலி பட்டியலிடும். குறிப்பாக, முதல் குழந்தையை எதிர்நோக்கியிருக்கும் அப்பாக்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.


    Durgaramesh likes this.

  9. #19
    Durgaramesh's Avatar
    Durgaramesh is offline Minister's of Penmai
    Real Name
    Durga Devi
    Gender
    Female
    Join Date
    Sep 2015
    Location
    Puducherry
    Posts
    2,967

    Re: Pregnancy Care Tips - பத்து மாத பாதுகாப்பு டிப்ஸ்

    useful apps and useful posting friend


    DURGA DEVI

  10. #20
    Strawberry's Avatar
    Strawberry is offline Citizen's of Penmai
    Real Name
    ishu
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    656

    Re: Pregnancy Care Tips - பத்து மாத பாதுகாப்பு டிப்ஸ்

    Very useful details n app

    Ishu..
    Ur Dream Is Ur Signature..

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter