Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By sumathisrini
  • 1 Post By rni123

Is it necessary to remove Uterus? - கர்ப்பப்பை நீக்கம் அவசியமா


Discussions on "Is it necessary to remove Uterus? - கர்ப்பப்பை நீக்கம் அவசியமா" in "Gynaecology Problems" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Is it necessary to remove Uterus? - கர்ப்பப்பை நீக்கம் அவசியமா

    கர்ப்பப்பை நீக்கம் அவசியமா

    மகளிர் மட்டும்

    ஒரு பெண்ணின் உடலில் பொக்கிஷம் போன்ற பகுதி அவளது கர்ப்பப்பை. அவளைச் சுமந்த, அவள் சுமக்கப் போகிற உயிரின் உறைவிடமான அதை பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்க வேண்டும்.

    அவசியமோ அவசரமோ இல்லாமல் கர்ப்பப்பையை எடுத்துக் கொள்கிற இளவயதுப் பெண்களின் எண்ணிக்கை, கிராமப் புறங்களில் அதிகரித்து வருவதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறார் மகப்பேறு மருத்துவர் லோகநாயகி. கர்ப்பப்பையை எடுக்க வேண்டிய தவிர்க்க முடியாத காரணங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீர்வுகள் என எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர்.

    ``மாதவிலக்கின் போது லேசான வயிற்று வலி வந்தாலோ, ரத்தப் போக்கு சற்று அதிகமானாலோகூட தானாக வலிய வந்து மருத்துவரிடம் கர்ப்பப்பையை எடுத்துவிடச் சொல்லிக் கேட்கிற பெண்களை ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் அதிகம் பார்க்கிறேன்.

    கர்ப்பப்பையை நீக்க வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்ட பிறகும், மருத்துவர் எச்சரித்தும்கூட, அதை எடுக்க வேண்டாமெனச் சொல்கிற மனோபாவம் நகரத்துப் பெண்களிடம் அதிகம் இருப்பதையும் பார்க்கிறேன். இந்த இரு தரப்பினருக்கும், எந்த மாதிரியான காரணங்களுக்காக கர்ப்பப்பையை அகற்றலாம் என்கிற அடிப்படை உண்மைகளை அறிந்திருக்க வேண்டும்.

    *சில பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஆரம்ப கால புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்படும். கர்ப்பப்பையின் உள்பக்க லைனிங்கான எண்டோமெட்ரியம், கர்ப்பப்பை வாய், பிறப்புப் பாதை, சினைக்குழாய் போன்ற இடங்களில் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தெரிந்தாலும் கர்ப்பப்பையை அகற்றுவதைப் பற்றி மருத்துவர் பேசுவார்.

    *கர்ப்பப்பையானது சிலருக்கு பந்து போல வீங்கிக் கொண்டு, கடுமையான வலியைக் கொடுக்கும். சிலருக்கு மாதவிலக்கின் போது மட்டுமின்றி, எப்போதுமே இடுப்பும் அடிவயிறும் வலிக்கும். அது அடினோமையோசிஸ் என்கிற பிரச்னையாக இருந்து, சம்பந்தப்பட்ட பெண் ஏற்கனவே குழந்தை பெற்றவர் என்றால் அவருக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

    *எந்தவித மருத்துவ சிகிச்சைகளுக்கும் கட்டுப்படாத அதீத ரத்தப் போக்கு, கர்ப்பப்பையில் கிருமித் தாக்கம் போன்றவற்றுக்கும், அந்தப் பெண்ணுக்கு குழந்தை இருக்கும் பட்சத்தில் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

    *சிலருக்கு பிரசவத்தின் போது ஏற்படுகின்ற சிக்கல்களுக்கும் இந்த அறுவை சிகிச்சை தீர்வாக சொல்லப்படும். உதாரணத்துக்கு குழந்தையின் மாறுபட்ட நிலையின் காரணமாகவோ அல்லது முந்தைய அறுவை சிகிச்சைகளின் விளைவாகவோ கர்ப்பப்பையின் ஒரு பகுதி கிழிந்திருந்தால் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை தீர்வாக சொல்லப்படும்.

    *கர்ப்பப்பையின் உள்ளேயும் சினைப் பையிலும் வரக்கூடிய ரத்தக் கட்டிகள், சிகிச்சைக்குக் கட்டுப்படாத போது, குழந்தைகள் இருக்கும் பெண்களுக்கு கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

    *ஃபைப்ராய்டு எனப்படுகிற பிரச்னை இருந்தால் மாதவிலக்கின் போது வயிற்றுவலியும் ரத்தப் போக்கும் மிக அதிகமாக இருக்கும். பொதுவாக ஃபைப்ராய்டு கட்டிகள் புற்றுநோயாக மாறும் வாய்ப்புகள் குறைவு. எனவே அதற்கு பயந்து கர்ப்பப்பையை அகற்ற வேண்டாம். அது அளவில் பெரிதானாலோ, அதிக வலியையும் அதீத ரத்தப் போக்கையும் கொடுத்தாலோ கர்ப்பப்பை நீக்கம் பற்றி யோசிக்கலாம்.

    கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சையில் பல வகைகள் உள்ளன. கர்ப்பப்பை மற்றும் அதன் கழுத்துப் பகுதியான செர்விக்ைஸ எடுப்பது டோட்டல் ஹிஸ்ட்ரக்டமி. கர்ப்பப்பையின் மேல்பகுதியை மட்டும் எடுப்பது பார்ஷியல் ஹிஸ்ட்ரக்டமி. கர்ப்பப்பை, சினைப்பை, சினைக்குழாய் என எல்லாவற்றையும் எடுப்பது டோட்டல் ஹிஸ்ட்ரக்டமி மற்றும் BSO.

    புற்றுநோய் வந்தவர்களுக்கு கர்ப்பப்பை, சினைப்பை, சினைக்குழாய், செர்விக்ஸ், பாதிக்கப்பட்ட நிணநீர் சுரப்பிகள், பிறப்புப் பதையின் மேல்பகுதி போன்றவற்றை எடுப்பது ரேடிக்கல் ஹிஸ்ட்ரக்டமி. பிறப்புப் பாதை வழியே செய்கிற அறுவை சிகிச்சை வஜைனல் ஹிஸ்ட்ரக்டமி. வயிறு வழியே செய்வது அப்டாமினல் ஹிஸ்ட்ரக்டமி.

    கர்ப்பப்பையின் பக்க இணைப்புகளை அகற்றி, கர்ப்பப்பையை மட்டும் பிறப்புப் பாதை வழியே எடுக்கும் லேப்ராஸ்கோப்பிக் ஹிஸ்ட்ரக்டமி இப்போது ரொம்பவே லேட்டஸ்ட். அறுவை சிகிச்சை முடிந்த 2வது நாளே வீட்டுக்குப் போகலாம்.கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை யின் பக்க விளைவுகள், இதர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற விஷயங்கள் அடுத்த இதழிலும் தொடரும்.

    பொதுவாக ஃபைப்ராய்டு கட்டிகள் புற்றுநோயாக மாறும் வாய்ப்புகள் குறைவு. அதற்கு பயந்து கர்ப்பப்பையை அகற்ற வேண்டாம். ஆனால், அது அளவில் பெரிதானாலோ, அதிக வலியையும் அதீத ரத்தப் போக்கையும் கொடுத்தாலோ கர்ப்பப்பை நீக்கம் பற்றி யோசிக்கலாம்.




    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    re: Is it necessary to remove Uterus? - கர்ப்பப்பை நீக்கம் அவசியமா

    Good sharing. Most of them are scared & fears of their stomach ache. Ennavendru diagnose pannamalaye uterus remove panna solli varanga enoda doctor friend sonnatha kettu varuthama irunthchu hmm.

    chan likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  3. #3
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,567

    Re: Is it necessary to remove Uterus? - கர்ப்பப்பை நீக்கம் அவசியமா

    Thanks Lakshmi for sharing these important details about Uterus removal.

    chan likes this.

  4. #4
    rni123 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2014
    Location
    ME
    Posts
    371

    Re: Is it necessary to remove Uterus? - கர்ப்பப்பை நீக்கம் அவசியமா

    Quote Originally Posted by chan View Post
    கர்ப்பப்பை நீக்கம் அவசியமா

    மகளிர் மட்டும்

    ஒரு பெண்ணின் உடலில் பொக்கிஷம் போன்ற பகுதி அவளது கர்ப்பப்பை. அவளைச் சுமந்த, அவள் சுமக்கப் போகிற உயிரின் உறைவிடமான அதை பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்க வேண்டும்.

    அவசியமோ அவசரமோ இல்லாமல் கர்ப்பப்பையை எடுத்துக் கொள்கிற இளவயதுப் பெண்களின் எண்ணிக்கை, கிராமப் புறங்களில் அதிகரித்து வருவதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறார் மகப்பேறு மருத்துவர் லோகநாயகி. கர்ப்பப்பையை எடுக்க வேண்டிய தவிர்க்க முடியாத காரணங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீர்வுகள் என எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர்.

    ``மாதவிலக்கின் போது லேசான வயிற்று வலி வந்தாலோ, ரத்தப் போக்கு சற்று அதிகமானாலோகூட தானாக வலிய வந்து மருத்துவரிடம் கர்ப்பப்பையை எடுத்துவிடச் சொல்லிக் கேட்கிற பெண்களை ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் அதிகம் பார்க்கிறேன்.

    கர்ப்பப்பையை நீக்க வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்ட பிறகும், மருத்துவர் எச்சரித்தும்கூட, அதை எடுக்க வேண்டாமெனச் சொல்கிற மனோபாவம் நகரத்துப் பெண்களிடம் அதிகம் இருப்பதையும் பார்க்கிறேன். இந்த இரு தரப்பினருக்கும், எந்த மாதிரியான காரணங்களுக்காக கர்ப்பப்பையை அகற்றலாம் என்கிற அடிப்படை உண்மைகளை அறிந்திருக்க வேண்டும்.

    *சில பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஆரம்ப கால புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்படும். கர்ப்பப்பையின் உள்பக்க லைனிங்கான எண்டோமெட்ரியம், கர்ப்பப்பை வாய், பிறப்புப் பாதை, சினைக்குழாய் போன்ற இடங்களில் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தெரிந்தாலும் கர்ப்பப்பையை அகற்றுவதைப் பற்றி மருத்துவர் பேசுவார்.

    *கர்ப்பப்பையானது சிலருக்கு பந்து போல வீங்கிக் கொண்டு, கடுமையான வலியைக் கொடுக்கும். சிலருக்கு மாதவிலக்கின் போது மட்டுமின்றி, எப்போதுமே இடுப்பும் அடிவயிறும் வலிக்கும். அது அடினோமையோசிஸ் என்கிற பிரச்னையாக இருந்து, சம்பந்தப்பட்ட பெண் ஏற்கனவே குழந்தை பெற்றவர் என்றால் அவருக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

    *எந்தவித மருத்துவ சிகிச்சைகளுக்கும் கட்டுப்படாத அதீத ரத்தப் போக்கு, கர்ப்பப்பையில் கிருமித் தாக்கம் போன்றவற்றுக்கும், அந்தப் பெண்ணுக்கு குழந்தை இருக்கும் பட்சத்தில் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

    *சிலருக்கு பிரசவத்தின் போது ஏற்படுகின்ற சிக்கல்களுக்கும் இந்த அறுவை சிகிச்சை தீர்வாக சொல்லப்படும். உதாரணத்துக்கு குழந்தையின் மாறுபட்ட நிலையின் காரணமாகவோ அல்லது முந்தைய அறுவை சிகிச்சைகளின் விளைவாகவோ கர்ப்பப்பையின் ஒரு பகுதி கிழிந்திருந்தால் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை தீர்வாக சொல்லப்படும்.

    *கர்ப்பப்பையின் உள்ளேயும் சினைப் பையிலும் வரக்கூடிய ரத்தக் கட்டிகள், சிகிச்சைக்குக் கட்டுப்படாத போது, குழந்தைகள் இருக்கும் பெண்களுக்கு கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

    *ஃபைப்ராய்டு எனப்படுகிற பிரச்னை இருந்தால் மாதவிலக்கின் போது வயிற்றுவலியும் ரத்தப் போக்கும் மிக அதிகமாக இருக்கும். பொதுவாக ஃபைப்ராய்டு கட்டிகள் புற்றுநோயாக மாறும் வாய்ப்புகள் குறைவு. எனவே அதற்கு பயந்து கர்ப்பப்பையை அகற்ற வேண்டாம். அது அளவில் பெரிதானாலோ, அதிக வலியையும் அதீத ரத்தப் போக்கையும் கொடுத்தாலோ கர்ப்பப்பை நீக்கம் பற்றி யோசிக்கலாம்.

    கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சையில் பல வகைகள் உள்ளன. கர்ப்பப்பை மற்றும் அதன் கழுத்துப் பகுதியான செர்விக்ைஸ எடுப்பது டோட்டல் ஹிஸ்ட்ரக்டமி. கர்ப்பப்பையின் மேல்பகுதியை மட்டும் எடுப்பது பார்ஷியல் ஹிஸ்ட்ரக்டமி. கர்ப்பப்பை, சினைப்பை, சினைக்குழாய் என எல்லாவற்றையும் எடுப்பது டோட்டல் ஹிஸ்ட்ரக்டமி மற்றும் BSO.

    புற்றுநோய் வந்தவர்களுக்கு கர்ப்பப்பை, சினைப்பை, சினைக்குழாய், செர்விக்ஸ், பாதிக்கப்பட்ட நிணநீர் சுரப்பிகள், பிறப்புப் பதையின் மேல்பகுதி போன்றவற்றை எடுப்பது ரேடிக்கல் ஹிஸ்ட்ரக்டமி. பிறப்புப் பாதை வழியே செய்கிற அறுவை சிகிச்சை வஜைனல் ஹிஸ்ட்ரக்டமி. வயிறு வழியே செய்வது அப்டாமினல் ஹிஸ்ட்ரக்டமி.

    கர்ப்பப்பையின் பக்க இணைப்புகளை அகற்றி, கர்ப்பப்பையை மட்டும் பிறப்புப் பாதை வழியே எடுக்கும் லேப்ராஸ்கோப்பிக் ஹிஸ்ட்ரக்டமி இப்போது ரொம்பவே லேட்டஸ்ட். அறுவை சிகிச்சை முடிந்த 2வது நாளே வீட்டுக்குப் போகலாம்.கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை யின் பக்க விளைவுகள், இதர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற விஷயங்கள் அடுத்த இதழிலும் தொடரும்.

    பொதுவாக ஃபைப்ராய்டு கட்டிகள் புற்றுநோயாக மாறும் வாய்ப்புகள் குறைவு. அதற்கு பயந்து கர்ப்பப்பையை அகற்ற வேண்டாம். ஆனால், அது அளவில் பெரிதானாலோ, அதிக வலியையும் அதீத ரத்தப் போக்கையும் கொடுத்தாலோ கர்ப்பப்பை நீக்கம் பற்றி யோசிக்கலாம்.


    Hi Chan, Can you please post follow up of this article if you have?

    chan likes this.

  5. #5
    rni123 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2014
    Location
    ME
    Posts
    371

    Re: Is it necessary to remove Uterus? - கர்ப்பப்பை நீக்கம் அவசியமா

    TFS chan.................


  6. #6
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Is it necessary to remove Uterus? - கர்ப்பப்பை நீக்கம் அவசியமா

    கர்ப்பப்பை நீக்கம் அவசியமா

    அவசியம் ஏற்படுகிற போது கர்ப்பப்பையை நீக்காமல் விடுவது எத்தனை ஆபத்தானதோ, அதைவிட ஆபத்தானது அவசியமில்லாமல் அதை நீக்கி விடுவது!

    அப்படி தேவையின்றி செய்யப்படுகிற கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சையின் பின் விளைவுகள் பற்றியும், கர்ப்பப் பையைப் பாதுகாக்கும் வழிகள் பற்றியும் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் லோகநாயகி.

    ``கர்ப்பப்பை நீக்கம் என்பது எந்த வயதில் செய்யப்படுகிறதோ, அதற்கேற்ற பின் விளைவுகளைத் தரக்கூடியது. உதாரணத்துக்கு 50 வயதுக்கு மேல், ஒரு பெண் ஏற்கனவே மெனோபாஸ் வயதில் இருக்கும்போது கர்ப்பப்பை மற்றும் சினைப்பைகளை எடுப்பதில் பெரிய பிரச்னைகள் வராது.

    40 வயதுக்குக் குறைவாக உள்ள பெண்களுக்கோ அந்த அறுவை சிகிச்சை அத்தனை உசிதமானதல்ல. பெண்ணின் சினைப்பை தான், ஈஸ்ட்ரோஜென் என்கிற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. அந்த ஹார்மோன்தான் பெண்ணை பெண் தன்மையுடன் வைக்கிறது. பெண்களுக்கு ஹார்ட் அட்டாக் வராமல் தடுப்பதும் அதுதான்.

    அதாவது, அவர்களை எதையும் தாங்கும் இதயத்துடன் வைத்திருப்பது அந்த ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்தான். கர்ப்பப்பை அறுவை சிகிச்சையுடன் சேர்த்து சினைப்பையையும் எடுக்கும் போது, அந்தப் பெண்களுக்கு நீரிழிவு, மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய்கள் வரும் அபாயங்கள் அதிகரிக்கும்.

    நம்மூரில் புற்றுநோய் மரணங்களைவிட, நீரிழிவாலும், மாரடைப்பாலும், பக்கவாதத்தாலும் நிகழ்கிற மரணங்களே அதிகம். கர்ப்பப்பையில் லேசான கட்டி எனத் தெரிந்தாலே, அதைப் பெரிதுபடுத்தி, புற்றுநோயாக இருக்குமோ, பிற்காலத்தில் புற்றுநோயாக மாறிவிடுமோ என்றெல்லாம் பயந்து, இள வயதில் தேவையின்றி கர்ப்பப்பையை அகற்றச் சொல்கிற பெண்கள் யோசிக்க வேண்டும்.

    கர்ப்பப்பையை அகற்றுவதால் (சிறுநீர்ப்பைக்கு சப்போர்ட்டாக இருந்த கர்ப்பப்பை அகற்றப்படுவதால்) பல பெண்களுக்கும் சிறுநீரைக் கட்டுப்படுத்துவதில் கட்டுப்பாடு இல்லாமல் போகலாம். கர்ப்பப்பையை இழப்பதால் தன்னால் முழுமையான பெண்ணாக இருக்க முடியாதோ என்றும் இல்லற வாழ்வில் முழுமையாக ஈடுபட முடியாமல் போய் விடுமோ என்றும் மனரீதியான பயங்கள் பல பெண்களுக்கும் உண்டு. சிலர் தாம்பத்திய உறவில் சிரமங்களை உணர்வதுண்டு.

    ஆனால், கர்ப்பப்பையை எடுத்தே தீர வேண்டும் என மருத்துவர் எச்சரித்த பிறகு, இந்த விஷயத்துக்குப் பயந்து கொண்டு அதைத் தவிர்க்க வேண்டாம். ஏனென்றால் அந்தச் சூழ்நிலையில் HRT எனப்படுகிற ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி அவர்களுக்கு கை கொடுக்கும். கர்ப்பப்பையை நீக்கிவிடலாம் என்கிற எண்ணம் எழுகிற போது, அதிலுள்ள சாதக, பாதகங்களைப் பற்றி மருத்துவரிடம் கலந்தாலோசித்து, பிறகு முடிவெடுப்பதே பாதுகாப்பானது.’’

    கவனம் இருக்கட்டும்!

    * அந்தரங்க உறுப்பில் அரிப்பு, அசாதாரண வாடையுடன் வெள்ளைப் போக்கு இருந்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரைப் பார்க்கவும்.

    * அதீத ரத்தப் போக்கு இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில், ஃபிராக்*ஷனல் கியூரெட்டேஜ் என்கிற டி அண்ட் சி செய்து கொள்ளலாம். அதன் பிறகும் பிரச்னை சரியாகவில்லை என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைப் பற்றி யோசிக்கலாம்.

    * கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க 40 வயதுக்கு உள்ளான எல்லா பெண்களும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

    * கர்ப்பவாய் புற்றுநோயைக் கண்டுபிடிக்க, வருடம் ஒரு முறை பாப்ஸ்மியர் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். சந்தேகம் இருந்தால் மருத்துவர் செர்வைகல் பயாப்சி என்கிற சோதனைக்கு அறிவுறுத்துவார். அதில் புற்றுநோய் வரலாம் என்பதற்கான அறிகுறிகளை சந்தேகித்தால், கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்கு அவர் உங்களை அறிவுறுத்தலாம்.

    “நல்ல நம்பிக்கையும் ஊக்கமும் உடையவரே சிறந்த மருத்துவர்!”
    - சாமுவேல் டெய்லர்காலரிட்ஜ் (கவிஞர்)



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter