பி.சி.ஓ.டி - தடுக்க... தவிர்க்க!


உடல் எடையைக் கட்டுக்குள்வைக்க வேண்டும். உடற்பயிற்சி, சீரான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் பிரச்னையைக் குறைக்க முடியும். மருத்துவர் பரிந்துரைந்தால் மட்டுமே, மருந்துகளை உட்கொள்ளலாம். அனைத்துப் பெண்களுக்கும் மருந்துகள் தேவைப்படாது.

சூர்ய நமஸ்காரத்தை முறையாகக் கற்றுக்கொண்டு, மூன்று மாதங்கள் செய்தாலே பி.சி.ஓ.டி சரியாகும்.

சைக்கிளிங் செய்வதால், உடல்பருமன் குறையும்.

தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யலாம்.

உடல் எடை குறைந்தாலே இன்சுலின் சரியாகச் சுரந்து, நன்றாக வேலைசெய்யும். சினைப்பையும் ஆரோக்கியமாகும். இதனால்தான் பி.சி.ஓ.டிக்குத் தரப்படும் மருந்துகளுடன் இன்சுலினை சீராக்கும் மருந்தும் அளிக்கப்படுகிறது.Similar Threads: