Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

கர்ப்பப்பையும் பிரச்னைகளும்...


Discussions on "கர்ப்பப்பையும் பிரச்னைகளும்..." in "Gynaecology Problems" forum.


  1. #1
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    கர்ப்பப்பையும் பிரச்னைகளும்...

    * பொதுவா 18 முதல் 25 வயசு வரைக்குமான பெண்களோட கர்ப்பப்பை 7 முதல் 7.5 செ.மீ இருக்கணும். மாதவிலக்கின் போது, ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்கள் சுரந்து, கர்ப்பப்பையை வளரச் செய்யுது. மாதவிலக்கு சுழற்சி சரியில்லாம, தடைப்படறப்ப, கர்ப்பப்பையோட வளர்ச்சி தடைபட்டு, அளவுல சுருங்கிப் போகுது. இப்படிப்பட்டவங்களுக்கு அந்த ரெண்டு ஹார்மோன்களையும் கொடுத்தால்தான் மாதவிலக்கே வரும்.

    * இயற்கையாகவே சிலருக்கு கர்ப்பப்பையோட வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கலாம். இன்னும் சிலருக்கு மாதவிலக்கு சுழற்சி சரியில்லாததாலயும் அப்படியிருக்கலாம்.

    சினைப்பைல பிரச்னை இருந்தா, அதை சரியாக்கி, ஹார்மோன் மருந்துகளும் கொடுத்தா, மாதவிலக்கு சுழற்சி முறைப்படும். கர்ப்பப்பையும் சாதாரண அளவுக்கு வரும்.

    * மெனோபாஸ் காலத்துல, கர்ப்பப்பை தன்னோட அளவுலேர்ந்து கொஞ்சம், கொஞ்சமா சின்னதாக ஆரம்பிக்கும். அதாவது மெனோபாஸுக்கு பிறகு ஒரு பெண்ணோட கர்ப்பப்பை, பூப்பெய்தறதுக்கு முன்பிருந்த மாதிரி சின்ன அளவுக்குத் திரும்பும்.

    கர்ப்பப்பை வளர்ச்சியில்லாதது எப்படி பிரச்னைக்குரியதோ, அதே மாதிரிதான் கர்ப்பப்பை வீக்கமும். கர்ப்பப்பை வளர்ச்சி சீரா உள்ள பெண்ணுக்கு மாதத்துல 2 முதல் 3 நாளைக்கு மாதவிலக்கு இருக்கும்.

    * வெளியேறும் ரத்தத்தோட அளவு 50 முதல் 100 மி.லியா இருக்கும். 100 மி.லியை தாண்டினா பிரச்னை. அதன் விளைவா ரத்த சோகை உண்டாகும்.

    இதயம், சிறுநீரகம், நுரையீரல்னு தலை முதல் கால் வரை உள்ள சகல உறுப்புகளையும் பாதிக்கிற பிரச்னை ரத்த சோகை. மாதவிலக்கின் போது, அதிக ரத்தப் போக்கு, தீவிரமான வயிற்று வலி, களைப்பு, வேலை செய்ய முடியாமை எல்லாம் இருந்தா, அவங்களோட கர்ப்பப்பை வீக்கமா இருக்கலாம்னு சந்தேகப்படலாம்.

    * மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தலாமே தவிர, முழுக்க சரி பண்ண முடியாது. ஹார்மோன் மருந்துகள் உள்ள காப்பர் டி மாதிரியான சாதனங்களைப் பொருத்தியோ, ஹிஸ்ட்ரோஸ்கோப் மூலமா கர்ப்பப்பை தோலை அகற்றக்கூடிய லேசர் சிகிச்சை மூலமோ இதுக்கு தீர்வு காணலாம்.

    மாதவிலக்கு சுழற்சி சரியில்லாத பெண்களும், கர்ப்பம் தரிக்காத பெண்களும், அதிக ரத்தப் போக்கு உள்ள பெண்களும் ஸ்கேன் மூலமா கர்ப்பப்பை அளவைத் தெரிஞ்சு, பிரச்சனைக்கேத்தபடி சிகிச்சையை எடுத்துக்கலாம்...

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: கர்ப்பப்பையும் பிரச்னைகளும்...

    Thanks for effort of sharing information regarding this forum with Penmai (s).


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter