Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By Nishahameetha

Common Gynecological Problems


Discussions on "Common Gynecological Problems" in "Gynaecology Problems" forum.


  1. #1
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Common Gynecological Problems

    இதென்ன பெரிய விஷயமா எல்லாப் பெண்களுக்கும் இருக்கிற பிரச்னைதானே.. என அலட்சியமாகத்தான் தோன்றும். ஆனால், ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சைஅளிக்காவிட்டால், அது உண்டாக்கும் பாதிப்புகள் பயங்கரமானவை. ஆமாம்... வெள்ளைப்படுதல் இத்தனை பயங்கரமானது என்றால் நம்ப முடிகிறதா

    வெள்ளைப்படுதலுக்கான காரணங்கள், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், தீர்வுகள் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் கரு வளர்ச்சியியல் துறை சிறப்பு மருத்துவர் பி.எஸ்.ஆர்.மூர்த்தி.

    மாதவிலக்குக்கு முன்னாடியோ, சிலருக்கு மாதவிலக்கு முடிஞ்சதுமோ, இன்னும் சிலருக்கு இரண்டு மாதவிலக்குகளுக்கு இடைப்பட்ட நாள்களிலோ வெள்ளைப்படுதல் இருக்கும். இதுக்கு ஹார்மோன்களோட மாறுதலே காரணம். அரிப்பையோ, கெட்ட வாடையையோ உண்டாக்காத பட்சத்துல, சாதாரண வெள்ளைப்படுதல் பற்றிப் பெரிசா கவலைப்படத் தேவையில்லை.

    சிறுநீரகப் பகுதிகள்லயும் அந்தரங்க உறுப்புகள்லயும் அரிப்பு, கெட்ட வாடை, மஞ்சள் அல்லது பச்சை நிற வெள்ளைப்போக்கு இருந்தா, அது அசாதாரணமானது. உடனடியா சிகிச்சை எடுத்துக்கணும். பொதுவா பாக்டீரியா அல்லது ஃபங்கல் இன்ஃபெக்ஷன் காரணமாதான் வெள்ளைப்போக்கு ஏற்படுது. சாதாரண வெள்ளைப்போக்கா இருந்தா, மருத்துவரோட ஆலோசனையின் பேர்ல ஆன்ட்டிபயாடிக் அல்லது ஆன்ட்டி ஃபங்கல் மருந்துகளை எடுத்துக்கலாம்.

    தொற்றானது பிறப்புறுப்புலேருந்து, கர்ப்ப வாய்க்கும், அடுத்து கர்ப்பப்பைக்கும் பரவலாம். அது கவனிக்கப்படாதபோது, பெல்விக் இன்ஃபளமேட்டரி டிசீஸ் னு சொல்லக்கூடிய இடுப்பெலும்பு தொடர்பான பிரச்னையா மாறலாம். கர்ப்பப்பையும், அதைச் சுத்தின பகுதிகளும் பாதிக்கப்படும். கர்ப்பப் பைக்குப் பக்கத்துல உள்ள கருமுட்டை செல்லும் குழாய்களையும் பாதிச்சு, அதன் காரணமா மலட்டுத் தன்மை வரலாம்.

    அடுத்தகட்ட பாதிப்பா, கர்ப்பப்பையை சுத்தின திசுக்கள் பாதிப்புக்குள்ளாகி, சினைப்பைகள் பாதிக்கப்பட்டு, ஒரு கட்டத்துல கர்ப்பப்பையையும் குழாய்களையும் அகற்ற வேண்டிய அளவுக்குத் தீவிரமாகலாம்.

    சாதாரண வெள்ளைப்படுதலுக்கும் அசாதாரணமானதுக்கும் பெண்களால வித்தியாசம் கண்டுபிடிக்க முடியும். மேலே சொன்ன அறிகுறிகள் இருந்தா, உடனடியா மருத்துவரைப் பார்க்கறது நல்லது. கணவர்கிட்டருந்து ஏற்பட்ட தொற்று காரணமாவும், பெண்கள் பாதிக்கப்படலாம். அதனால இந்தப் பிரச்னைக்கு கணவன், மனைவி இருவருக்குமே பரிசோதனையும் சிகிச்சையும் அவசியம்.

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by Nishahameetha; 27th Feb 2012 at 08:11 PM.
    YOKI likes this.

  2. #2
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: Common Gynecological Problems

    Thanks for sharing......................


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter