Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree12Likes

Menopause - மெனோபாஸ் என்றால் என்ன?


Discussions on "Menopause - மெனோபாஸ் என்றால் என்ன?" in "Gynaecology Problems" forum.


  1. #1
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Menopause - மெனோபாஸ் என்றால் என்ன?

    மெனோபாஸ் என்றால் என்ன?


    பெண் பருவமடைய ஆரம்பித்ததிலிருந்து தொடங்கும் மாதாந்திர பிரச்னையான மாதவிலக்கு முழுமையாக நின்று விடுவதற்கு "மெனோபாஸ்" என்று பெயர்.

    "மெனோபாஸ்" என்ற வார்த்தை பெண்களின் மகப்பேறு வாழ்க்கை வரலாற்றில் காணப்படும் இறுதியான அத்தியாயம். சுருங்க கூற வேண்டுமாயின் "கருப்பை" முற்றிலுமாக எடுத்துக் கொள்ளும் ஓய்வு நேரம் ஆகும். இந்நிகழ்ச்சி உள்ளுறுப்புகளில் நடந்தாலும், வெளிப்படையாக அறிந்து கொள்வது எப்படி? என்றால், வழக்கமாக வரும் மாதவிலக்கு, முற்றிலுமாக நின்று விடும் கட்டம் தான் "மெனோபாஸ்" என்று கூறப்படுவதாகும்.

    பேருந்தில் பிரயாணம் பண்ணும்போது நிறைய நிறுத்தங்கள் வந்தாலும் சில இடங்களில் மட்டும்தான் `ஸ்டேஜ்' வருகிறது. அங்கு தான் சோதனை செய்யப்படும். அது போலவே பெண்களின் வாழ்க்கையிலும் ஒன்று உண்டு. அதுதான் இந்த மெனோபாஸ் பருவம் சிலருக்கு பெரிய போராட்டமாகி விடுகிறது.

    இந்த மெனோபாஸ், இயற்கையாக வருவது உண்டு இது பொதுவாக 45-55 வயதுக்குள் வருவதாகும். இந்த வயதில், கருப்பை வழக்கமாக சுரக்கும் ஹார்மோனாகிய "ஈஸ்ட்ரோஜன்" இயற்கையாகவே, குறைந்த அளவில் சுரக்க ஆரம்பிக்கிறது. இதனால் மாதவிலக்கு முன் போல வருவதில்லை. முதலில் குறைந்த அளவு மாதவிலக்கு ஏற்பட்டு பிறகு விட்டு விட்டு மாதவிலக்கு ஏற்படும். பின் அதிக அளவு மாதவிலக்கு ஏற்பட்டு சுத்தமாக மறைந்து விடும்.

    இப்படி படிப்படியாக ஒரு நிலையை அடைவது தான் இயற்கையான மெனோபாஸ் என்பது. இதில் எல்லோருக்குமே எல்லா நிலைகளும் கண்டிப்பாக காணப்படும் என்ற கட்டாய நிலையும் இல்லை. சிலருக்கு சில நிலைகள் மட்டுமே அதிகமாக தோன்றும். எதுவுமே தாங்கக்கூடிய அளவில் இருக்கும் போது இயற்கையான மெனோபாஸில் மருந்து உண்ணும் நிலை ஏற்படாது. மாறாக சில கட்டங்களில் தாங்க முடியாத மாதவிலக்கு ஏற்பட்டால், உடனடியாக நிறுத்தக் கூடிய மருந்துகளை உட்கொள்வது நல்லது.

    செயற்கையான மெனோபாஸ் என்பது மற்றொன்று. இது அறுவை சிகிச்சைக்கு பின்னோ அல்லது அதிக அளவு கதிர்வீச்சுக்குப் பின்னோ ஏற்படும் மெனோபாஸ் ஆகும். ஆகவே, இந்த மெனோபாஸில், மேற்கூறியது போல பல கட்டங்கள் தோன்றாமல் திடீரென மாதவிலக்கின்மை காணப்படுதல் மட்டுமே வெளியே தோன்றும் அறிகுறியாகும். இதற்கு ஈஸ்ட்ரோஜன் மாத்திரைகளே போதுமானதாகும்.

    மூன்றாவது, தவறுதலான மருந்துகளை அளவுக்கு மீறி உட்கொள்வதாலும், எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்காக சாப்பிடும் மாத்திரைகளாலும் மாத விலக்கு வருவது முற்றிலும் நின்று விடுகிறது.

    மெனோபாஸின் போது ஏற்படும் பொதுவான, அதிகப்படியான கோளாறு,

    1. அதிக அளவு வெள்ளை படுதல்

    2. அதிக அளவு இரத்தப்போக்கு

    இவை இரண்டுமே, வயதான நேரங்களில் மட்டுமல்லாது, மற்ற நேரங்களிலும் காணக்கூடிய கோளாறுகளாகும். வெள்ளை படுதல், தண்ணீர் போல ஒழுகி வருவது உண்டு. சிலருக்கு பால் போல , சளி போல இருக்கும். பாதி வேக வைத்த முட்டையின் வெள்ளை கரு போலவும் இருக்கும். நிறத்தை பார்க்கும் போது முதலில் வெள்ளை என்பது வெள்ளை நிறமாக இருந்தாலும், அது நாள்பட, நாள்பட சற்று மஞ்சள் நிறமாகவும், பிறகு மஞ்சள் கலந்து பச்சை நிறமாகவும் காணப்படுவதுண்டு. "மணத்தை" நோக்கும் போது புளித்த மணம், பாலாடை போன்ற மணம், மீன் நாற்றம் போன்று, இன்னும் சில தாங்க முடியாத மணங்களும் உண்டு.

    மேற்கூறியவைகள், கர்ப்பப்பையில் சிறிது (அ) அதிக அளவு வேக்காடு இருந்தாலும், பல கிருமி தொற்று இருந்தாலும், கர்ப்பப்பையில் அரிப்பு இருந்தாலும், கர்ப்பப்பையில் கட்டி இருந்தாலும், தண்ணீர் பை போல் இருந்தாலும் காணக்கூடிய கோளாறுகள். இவற்றிற்கு தகுந்த நேரத்தில், தகுந்த மருத்துவரை அணுகி, மருந்துகளை உட்கொள்ளுதல் வேண்டும்.

    மேற்கூறியவைகள் பொதுவாக மெனாபாஸ், நேரத்தின் போது காணப்பட்டாலும், முட்டி வலி, பாலுணர்வு மாற்றம் போன்றவைகளும் ஏற்படுவது உண்டு. உலர்ந்த பெண் உறுப்பு பாலுணர்வு குறைந்து விடுதல் அல்லது அதிக அளவு பாலுணர்வு ஆசை ஏற்படுதல் மார்பகங்களில் வலி, மூத்திர பையில் அழற்சி சிறிதளவு உயர்ந்த ரத்த அழுத்தம் நடு முதுகெலும்பு வலி, இடுப்பெலும்பு வலி போன்றவைகள் எல்லாமே இந்த மெனாபாஸில் அடங்கும். அதனால் தான் மெனோபாஸ் என்பது பல அறிகுறிகளை ஒன்று சேர்த்து கூறப்படும் ஒரு வார்த்தையாகும்.

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by sumathisrini; 27th Nov 2012 at 03:33 PM.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Menopause - மெனோபாஸ் என்றால் என்ன?

    ​Very useful info. Sumitra

    sumitra likes this.
    Jayanthy





  3. #3
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Menopause - மெனோபாஸ் என்றால் என்ன?

    thank you Jayanthy for your comments.


  4. #4
    pooo80's Avatar
    pooo80 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    1,319

    Re: Menopause - மெனோபாஸ் என்றால் என்ன?

    good explanation

    sumitra likes this.

  5. #5
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Menopause - மெனோபாஸ் என்றால் என்ன?

    Dear Pooo, thanks for your comments


  6. #6
    vasanthi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    403

    Re: Menopause - மெனோபாஸ் என்றால் என்ன?

    Dear sumi
    Very vvery useful info.
    Thanks for sharing.
    Vasanthi
    Mct


  7. #7
    sbsudha's Avatar
    sbsudha is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sudha Sivadas
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    3,942
    Blog Entries
    6

    Re: Menopause - மெனோபாஸ் என்றால் என்ன?

    Very useful info Sumi,

    பலருக்கு தெரியாத இந்த கருத்துக்களை இங்கே குடுத்தது சாலச் சிறந்தது. பல பெண்களுக்கு இப்படி இருந்தாலும் அதை யாரிடமும் ஏன் மருத்துவரிடம் கூட சென்று கேட்க வெட்கமாக இருந்து மௌனமாக இருந்து அவதி படுபவரும் உண்டு. அவர்களுக்கு நல்லதொரு வார்த்தை.


    மேற் சொன்னவை உடல் பாதிப்புகள்.
    இந்த மெனோபாஸ் நிலையை அடைய முற்படும் வயதில் இருக்கும் பெண்கள் மனதாலும் சில சமயம் பாதிக்கப்படுவதுண்டு.
    அந்த நேரத்தில் ஒரு பெண்ணின் மனம் கண்ணாடி பாத்திரம் போல இருக்கும்.
    எல்லோருக்கும் மன அழுத்தம் கவலை, உறக்கமின்மை இருக்குமா என்றால் அப்படியும் சொல்ல முடியாது. ஒவ்வொருவரின் உடல் மன குடும்ப நிலை பொருத்தது.

    இந்த நேரத்தில் மன உளைச்சலை போக்கும் வழி:

    உங்கள் ஒற்றை வயது பெண்களிடம் பேசுங்கள்.
    உங்கள் மனதில் இருப்பவற்றை அவர்களிடமோ, தாய், சகோதரிகள் தோழிகளிடமோ பகிருங்கள்
    கணவனிடம் கூட பேசலாம், பகிர்தல் நல்லது.
    எந்த ஒரு விஷயத்தையும் மனதிலேயே போட்டு அமுக்கி வைக்காதீர்கள்
    தினசரி உங்களுக்கு என நேரம் செலவழியுங்கள்
    புத்தகம் படிப்பதோ, பாட்டு கேட்பதோ வரைவதோ, தையல் கை வேலைகள் செய்வதோ எதுவாகினும் சரி, மனதை திசை திருப்புங்கள்
    உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல மன ஆரோக்யமும் இந்த நிலையின் போது ரொம்பவே முக்கியம்.

    எனக்கு தெரிந்தே சில பெண்கள் வாழ்க்கையில் இந்த நிலையை கடக்கும் முன் பூரணமாக மெனோபாஸ் செட் ஆகும் முன் எரிச்சல் ஆத்திரம் கோபம் கத்துவது கணவன் குழந்தைகளை திட்டுவது போன்றவை ஏற்பட்டது
    சொல்லத் தெரியாத துக்கம் தொண்டையை அடைக்கும்
    ஏன் என்றே தெரியாமல் கண்ணீர் வழியும்
    பொங்கி அழத் தோன்றும்.
    ஏன் அழுகிறாய் உனக்கு என்ன துக்கம் என கேட்டால் சொல்லக்கூட தெரியாது.
    இதை தடுக்க பேசுங்கள் மனம் விட்டு பேசுங்கள்.
    குறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.
    இதை நான் பயமுறுத்த வேண்டி சொல்லவில்லை. தெரிந்து கொள்வது நலம், அதற்கான தகுந்த முன்னேற்பாட்டுடன் செயல்படுவது நலம் என கூற விரும்பினேன்.

    sumathisrini and jv_66 like this.

  8. #8
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,533

    Re: Menopause - மெனோபாஸ் என்றால் என்ன?

    நல்லதோர் உபயோகமான பகிர்வு சுமித்ரா சிஸ்டர் & சுதா சிஸ்டர், நன்றி.

    sbsudha likes this.

  9. #9
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Menopause - மெனோபாஸ் என்றால் என்ன?

    Thanks for the useful info. sudha.

    sbsudha likes this.
    Jayanthy





  10. #10
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Menopause - மெனோபாஸ் என்றால் என்ன?

    Thank you for the useful & important info sumitra mam

    Arise ! awake ! and stop not till the goal is reached

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter