Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree18Likes

Details about Menstrual problems, Sanitary napkins and others


Discussions on "Details about Menstrual problems, Sanitary napkins and others" in "Gynaecology Problems" forum.


  1. #11
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,283

    Menstrual Care Tips for a Healthy Period - மாதவிலக்கு காலங்களில் கடைபிடிக்&#

    மாதவிலக்கு காலங்களில் கடைபிடிக்க வேண்டியவைகள்!

    ஒரு பெண்ணின் பெருமை அந்தப் பெண் தாய்மையடைவதில்தான் இருக்கிறது. இந்த தாய்மைக்கு அடித்தளம் பூப்பெய்தலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மாதவிடாய் சுழற்சியும்தான். தற்போது நவீன உணவு மாறுபாட்டால் 9 முதல் 12 வயதிற்குள் சிறுமிகள் பூப்பெய்துகிறார்கள். இந்த பூப்பெய்தல் என்பது கருப்பையில் உருவாகும் கருமுட்டைகள் முதிர்ந்து போதிய வளர்ச்சியடைந்து அதனால் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களால் கருப்பை வளர்ச்சியுற்று அதன் உட்புறச் சவ்வின் கசிவே உதிரமாக வெளியேறுகிறது. இது மாதம் ஒருமுறை அதாவது 27-30 நாட்களுக்கு ஒருமுறை என சுழற்சியாக நடைபெறும். 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை உதிரப்போக்கு இருக்கும்.

    பொதுவாக 14 வயது முதல் 45 வயது வரை மாதவிலக்கு சுழற்சி நடைபெறுகிறது. பழங்காலத்தில் பெண்கள் அடிக்கடி குழந்தை பெற்றுக்கொள்வதால் மாதவிலக்கு சுழற்சியிலிருந்து விடுபட்டனர். அதுபோல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது மாதவிடாய் சுழற்சி ஒருசிலருக்கு தடைபடும்.
    இந்த மாதவிலக்குக் காலங்களில் பெண்களை தனியாக தங்க விடுவார்கள். எந்த வேலையும் செய்ய விடாமல் முழு ஓய்வு கொடுப்பார்கள். சிலர் இதை மூடப் பழக்கம் எனலாம். ஆனால் அந்த பழக்கத்திலும் சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன.

    தற்போது நவீன உலகத்தில் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஓய்வு என்பது இல்லை. பெரும்பாலான பெண்கள் மாதவிலக்கு சுழற்சியை ஒரு சாபமாக நினைக்கின்றனர். பசி, தூக்கம் போல் இதுவும் ஒரு வித இயற்கை நிகழ்வுதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சில பெண்கள் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி, தலைவலி போன்றவற்றால் அதிக அளவு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    இதனால் மாதவிலக்கை தள்ளிப் போடவும், சில சமயங்களில் வெகு விரைவில் வரவும் மருந்து மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இது முற்றிலும் தவறானது. இயல்பாக மாதம் ஒருமுறை என்ற சுழற்சியை மாற்றினால் பின் வரும் காலங்களில் பல உபாதைகளை சந்திக்கவேண்டி வரும்.

    பெண்களின் மாதவிலக்கானது வாத, பித்த, கப அடிப்படையில் உடலின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்.

    வாத உடம்புக்காரர்களுக்கு மாதவிலக்கின் இடைவெளி ஒழுங்கற்றிருக்கும். ஓரளவுக்கு உதிரம் குறைவாக, உறைந்த நிலையில் சிறு கட்டிகளாகக் கூட வெளியேறும். இந்த காலகட்டத்தில் அடிவயிறு இறுக்கமாக இருப்பதுபோல் தோன்றும். வயிற்றுவலியும் கூடவே மலச்சிக்கலும் ஏற்படும். சில நேரங்களில் வயிற்றுப் போக்கு கூட ஏற்படலாம். எரிச்சல், கோபம், தூக்கமின்மை போன்றவை ஏற்படும்.
    இந்த வாத உடம்புக்காரர்கள் அதிக வேலை, உடற்பயிற்சி அல்லது உடல் எடையைக் குறைக்க நினைத்தால் சில சமயங்களில் மாதவிலக்கு தள்ளிப்போக வாய்ப்புண்டு.
    பித்த உடம்பைக் கொண்ட மகளிருக்கு மாதவிலக்கு இடைவெளி குறையும். மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். 5 நாட்களுக்கு மேல்கூட உதிரப்போக்கு இருக்கும். வயிற்றுப்போக்கு, முகத்தில் பருக்கள் தோன்றும். உடம்பு தடித்து காணப்படும். ஒருபக்க தலைவலி தோன்றலாம்.
    கப உடம்பு மகளிருக்கு இயல்பான உதிரப்போக்கு இருக்கும். ஆனால் இவர்களுக்கு பல உபாதைகள் அதாவது மார்பகங்களில் வீக்கம், முதுகு, இடுப்பு, கை, கால்களில் வலி போன்றவை ஏற்படும். அஜீரணக் கோளாறு ஏற்படும். இத்தகைய உபாதைகளுக்கு உணவு மூலமும், ஓய்வின் மூலமும் நடைமுறையிலேயே தீர்வு காணலாம்.

    கடைபிடிக்க வேண்டியவை:
    முதலில் மனதில் தோன்றும் வெறுப்பை மாற்றிக்கொள்ள வேண்டும்.
    மாதவிடாய் தோன்றும் நாட்களை கவனத்தில் கொண்டு அந்த காலங்களில் வெளியூர் பயணம், மற்ற கடின வேலைகளை தவிர்க்க வேண்டும்.
    மாதவிடாய் காலத்தில் மென்மையான எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.
    எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.
    அதிக நார்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும். பழங்கள் மலச்சிக்கலைப் போக்குவதுடன் உடலுக்கு வலுவைத் தரும்.
    அதிக உதிரப்போக்குள்ள காலத்தில் தலைக்கு தண்*ணீர் ஊற்றி குளிப்பதை தவிர்க்க வேண்டும். பருத்தியினால் ஆன உடைகளை அணியவேண்டும்.
    ஓய்வு மிகவும் அவசியம். உதிரப்போக்கு காரணமாக சிலருக்கு களைப்பு ஏற்படும். ஓய்வும், உறக்கமும் நல்லது. தலைவலி, எரிச்சல், இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளோ, மாத்திரைகளையோ உபயோகிக்கக் கூடாது.
    டீ, காபி, குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். குளிரூட்டப்பட்ட உணவுகளை சாப்பிடக் கூடாது.
    காய்ச்சி ஆறவைத்த நீரை அருந்துவது நல்லது.
    வாசனை திரவியங்களை உபயோகப்படுத்த வேண்டாம்.

    மாதவிலக்கின் போது வயிற்று வலியிருந்தால்:
    பத்து கிராம் சீரகத்துடன் 50 மி.லி. தண்ணீ*ர் சேர்த்து நன்கு காய்ச்சி அது பாதியாக வந்தவுடன் வடிகட்டி அதனுடன் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து காலை, மாலை அருந்தி வந்தால் வயிற்று வலி நீங்கும். இந்தக் காலங்களில் உணவில் அதிக அளவு பெருங்காயம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகள் மற்றும் மூளையின் செயல்பாட்டை புத்துணர்வு பெறச் செய்யும்.
    மாதவிலக்கின் போது ஓழுங்கற்ற உதிரப்போக்கு இருந்தால் இரண்டு ஸ்பூன் கருப்பு எள்ளைக் கழுவி எடுத்துக்கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் பனைவெல்லம் கலந்து தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி அந்த தண்*ணீரை ஆறவைத்து குடித்து வந்தால் உதிரப்போக்கு சீராக இருக்கும்.
    மாதவிலக்கின்போது கடுமையான உபாதைகள் தோன்றினால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.



    Sponsored Links
    Last edited by chan; 2nd Feb 2015 at 12:21 PM.

  2. #12
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,010
    Blog Entries
    18

    Re: மாதவிலக்கு காலங்களில் கடைபிடிக்க வேண்ĩ

    Hi Chan, really very useful information you have presented regarding மாதவிலக்கு காலங்களில் கடைபிடிக்க வேண்டியவைகள்! Thank you!!!!!!


  3. #13
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,283

    மாதவிடாய் காலத்தில் அரிப்பு ஏற்படாமல் இ&

    மாதவிடாய் காலத்தில் அரிப்பு ஏற்படாமல் இருக்க சில அட்வைஸ்

    மாதவிடாய் காலம் பெண்களுக்கு மிகுந்த வேதனையை தரும் காலமாக அமைகின்றது. உடலில் வலி, வயிறு மற்றும் கீழ் வயிற்று வலி, இடுப்பு மற்றும் கால் வலி ஆகியவை ஏற்படும். பிறப்புறுப்பு பகுதியில் எப்போதும் ஈரமாக இருக்கும். இரத்தப் போக்கும் சராசரியாக மூன்று நாட்களுக்கு தொடர்ந்து இருக்கும். இந்த ஈரத்தன்மையினால் தொடைப்பகுதி மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் உள்ள தோல் உரிந்து அரிப்பு, சொறி ஆகியவை ஏற்படலாம். சிவப்பு நிற புண்களும் வர வாய்ப்புகள் உள்ளன. அவை

    வீக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. இவை மிகுந்த வலியை தருவதாக அமைகின்றது. இதுப்போன்று வேறு ஏதாவது படிக்க: மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!! சொறி மற்றும் புண்களால் மிகுந்த அரிப்பு ஏற்படுகின்றது. இதனால் அந்த இடங்களில் இறுக்கமான ஆடைகளை அணியமுடிவதில்லை. நாம் பயன்படுத்தும் சானிட்டரி பேட் நல்ல நிறுவனத்தின் தயாரிப்பாக இல்லாவிட்டாலும் இத்தகைய பிரச்னைகள் வருவது இயல்பு.

    ஒரு வேளை நாம் துணியை பயன்படுத்தினால் கூட இந்த பிரச்சனை வரக்கூடும். மாதவிடாய் காலம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதமும் வரக்கூடியது தான். இந்த பருவத்தில் தோன்றும் சொறி மற்றும் காயங்களை நாம் குணப்படுத்த முயற்சி எடுக்காவிட்டால் அந்த மாதம் முழுதும் இவை நமக்கு அரிப்பை ஏற்படுத்தும். இத்தகைய சொறியை குணப்படுத்தவும் மற்றும் அவை மீண்டும் வராமல் தடுக்கவும் நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி இந்த பகுதியில் பார்பபோம். சுத்தமாக வைத்திருங்கள்: சுத்தமாக நமது பிறப்புறுப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை நாம் பராமரித்தால் எந்த ஒரு சொறியும் அரிப்பும் அண்ட முடியாது. இதுவே முதல் குறிப்பாகும். அவ்வப்போது அந்த இடங்களை கழுவி சுத்தமாக வைக்க வேண்டியது அவசியமாகும். நிறைய தண்ணீரைப் பயன்படுத்துங்கள். இவை நுண் கிருமிகளிலிருந்து உங்களை பாதுகாக்கும். அந்த இடத்தை கழுவி மற்றும் சுத்தமாக துடைத்த பின், சானிட்டரி பேடை பயன்படுத்தினால் நீன்ட நேரம் உலர்வாக இருப்பதையும் சுகமாக இருப்பதையும் நீங்கள் உணர்வீர்கள். சானிட்டரி பேடை மாற்றுங்கள்:

    சானிட்டரி பேட் அல்லது துணி என எதுவாக இருந்தாலும் அவ்வப்போது அதை மாற்றுவது சிறந்தது. ஒரே சானிட்டரி பேட் அல்லது துணியை 8-9 மணி நேரத்திற்குப் பயன்படுத்துவது சுகாதாரமற்றதாகும். இப்படி நாம் பயன்படுத்தும் போது தான் சொறி மற்றும் புண் ஆகியவை ஏற்படுகின்றன. ஆகையால் அவ்வப்போது அவற்றை மாற்ற மறந்து விடாதீர்கள். அதை மாற்றும் போதும், நன்கு கழுவி துடைத்த பின்னும் புதிய சானிட்டரி பேடை பயன்படுத்தினால் சிறந்த பலனைப் பெற முடியும். இந்த சானிட்டரி பேட் அல்லது நாப்கின்களை குறித்த காலத்தில் தவறாமல் மாற்றி அரிப்புகள் ஏற்படாத பீரியட்களை எதிர்கொள்ளுங்கள்.

    ஆன்டி-செப்டிக் பயன்படுத்துங்கள்: சொறி மற்றும் அரிப்புகளை ஆற்றிட நமது அங்காடிகளில் கிடைக்கும் நல்ல ஆன்டி-செப்டிக் அல்லது கிருமிகளை கொல்லும் மருந்துகள் திரவ வடிவிலும், பாதியளவு திரவமாகவும் கிடைக்கின்றது. அதை பயன்படுத்தலாம். ஆனால் இவற்றைப் பயன்படுத்தும் முன் மருத்துவரின் ஆலோசனைகளை கேட்பது சிறந்தது. ஒரு வேளை இதை பயன்படுத்தி எரிச்சல் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக கழுவிட வேண்டும். மீண்டும் பயன்படுத்த வேண்டாம். பாராஃபின் எண்ணையும் சிறந்த குணமளிக்கும் திரவமாக உள்ளது. இதை பாதிக்கப்பட்ட பகுதியில் பயன்படுத்தும் போது மிகுந்த ஆறுதல் கிடைக்கும்.


    அதனால் தொடை மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் காயங்கள் உண்டாகின்றன. ஆகையால் சானிட்டரி பேட் தேர்ந்தெடுக்கும் போது மென்மையான மற்றும் சிறந்த தரம் கொண்ட பொருட்களை பயன்படுத்துவது நல்லதாகும். சானிட்டரி பேட் ஜெல் மற்றும் பருத்தியால் செய்யப்பட்டு வினியோகமாகி வருகின்றன. பருத்தியால் செய்யப்பட்டதை பயன்படுத்தும் போது அதை நீண்ட நேரத்திற்கு பயன்படுத்த முடியாது. ஆனால் அவை சிறந்ததாகும். நல்ல தரமான பேட்கள் உங்களுக்கு அரிப்புகள் இல்லாத பீரியட்களை கொடுக்கும். பவுடரின் பயன்பாடுகள்: கழுவி சுத்தமாக துடைத்து விட்டு. பவுடரை அந்த இடத்தில் போட்ட பின் சானிட்டரி பேடை பயன்படுத்துவது உகந்தது. இது பிறப்புறுப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை உலர்வாகவும், சுகமாகவும் வைக்க உதவும். இத்தகைய வழிகளை பயன்படுத்தினாலே போதும் சொறி, வெடிப்பு, புண்கள் ஆகியவற்றை தவிர்க்கமுடியும். ஆன்டி-செப்டிக் பவுடர்களை பயன்படுத்துவது மிகுந்த பலனை அளிக்கும். ஆன்டி-செப்டிக் கிரீமின் மேல் இந்த பவுடரையும் பயன்படுத்தலாம்.

    jv_66 likes this.

  4. #14
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,283

    மாதவிடாய் கோளாறுகள்



    Attached Thumbnails Attached Thumbnails Details about Menstrual problems, Sanitary napkins and others-mensses.jpg   Details about Menstrual problems, Sanitary napkins and others-mensses1.jpg  
    Last edited by chan; 2nd Mar 2015 at 04:03 PM.
    jv_66 likes this.

  5. #15
    bharathi saravanan's Avatar
    bharathi saravanan is offline Commander's of Penmai
    Real Name
    Dhivya Bharathi
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    Chennai
    Posts
    1,603

    Re: Details about Menstrual problems, Sanitary napkins and others

    thanks for sharing these useful info......

    chan likes this.
    Very little is needed to make a happy life; it is all within yourself, in your way of thinking.


    எனது வரிகள்

  6. #16
    Brodie111 is offline Newbie
    Real Name
    Brodie Loureiro
    Gender
    Male
    Join Date
    Dec 2015
    Location
    Alaska
    Posts
    1

    Re: Details about Menstrual problems, Sanitary napkins and others

    Nice info. Pregnancy cure is necessary for all women.They should take proper medicines for their health.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter