Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree46Likes

MenoPause - A Guide


Discussions on "MenoPause - A Guide" in "Gynaecology Problems" forum.


  1. #11
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: MenoPause - A Guide

    very useful info Lakshmi.


    Sponsored Links

  2. #12
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: MenoPause - A Guide

    very good sharing friend.


  3. #13
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  4. #14
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    மாதவிடாய் நிறுத்தத்தின் போது தவிர்க்க வ&

    மாதவிடாய் நிறுத்தத்தின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்!

    பெண்கள் வெறுப்பது எது என்று கேட்டால் உடனே வரும் மாதவிடாய் காலமே. உடல் ரீதியாக மட்டுமல்லாது, மன ரீதியாகவும் அவர்கள் இந்நேரத்தில் அவதிப்படுகிறார்கள். அதுவும் கடைசி மாதவிடாயான, அது நிற்கும் நேரத்தில் அவர்களுக்கு உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படும். கண்டிப்பாக பல பெண்களும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

    இது தவிர்க்க முடியாத இயற்கை செயல்முறை தான் என்றாலும், அதனால் ஏற்படக்கூடிய உடல் மற்றும் மன உளைச்சலை குறைக்க சில வழிகளை கையாளலாம் அல்லவா? அது எப்படி என்று தானே கேட்கிறீர்கள்? அதற்கு பல வழிகள் உள்ளது. அதில் ஒன்று, மாதவிடாய் நிற்கப் போகும் காலத்தில் நீங்கள் சில வகையான உணவுகளை தவிர்க்க வேண்டியது.
    மாதவிடாய் நிற்கப் போகும் போது சோர்வு, எடை அதிகரிப்பு, மன உளைச்சல், அமைதியின்மை போன்றவைகள் ஏற்படும்.

    இப்படிப்பட்ட நேரத்தில் கேக் அல்லது மதுபானம் போன்றவற்றை உண்ணவோ பருகவோ தோன்றும். ஆனால் அது உங்கள் மாதவிடாய் நிறுத்தத்தை இன்னமும் மோசமடையத் தான் செய்யும். ஏற்கனவே கூறியதைப் போல் மாதவிடாய் நிறுத்தத்தின் போது ஏற்பட போகும் தாக்கத்தை குறைக்க நல்ல உணவு உட்கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபடலாம். சர்க்கரை நிறைந்த டெசர்ட் உணவுகளுக்கு பதில் பழங்களை உண்ணுங்கள். கண்டிப்பாக இதனால் உங்கள் மனநிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

    கொழுப்பு நிறைந்த இறைச்சி
    மாதவிடாய் நிறுத்தத்தின் போது, பெண்கள் கவனமாக இல்லையென்றால் முதல் இரண்டு வருடங்களில் 3.5 – 5 கிலோ வரை எடை அதிகரிக்கலாம். உங்களின் மாதவிடாய் நிறுத்தம் உணவில் கொழுப்பின் அளவு 20%-க்கும் குறைவாகவே இருக்க வேண்டும். உங்களது தினசரி கலோரிகளில் கொழுப்பின் பங்கு 25-35% மட்டுமே இருக்க வேண்டும். மேலும் தினசரி கலோரிகளில் கரைகின்ற கொழுப்புகளின் அளவை 7%-க்கும் குறைவாக சேர்த்துக் கொள்ளுங்கள். கரைகின்ற கொழுப்பு உங்கள் கொலஸ்ட்ராலை அதிகரித்து, இதய நோய்களுக்கான இடர்பாட்டை அதிகரிக்கும். உங்களுக்கு கொஞ்சம் பரிசோதனை கண்டிப்பாக அவசியம். உதாரணத்திற்கு, மாட்டிறைச்சிக்கு பதில் கிரில் செய்யப்பட்ட கோழி நெஞ்சுக்கறியை உண்ணுங்கள்.

    சர்க்கரை
    மாதவிடாய் முடிவு காலத்தினால் ஏற்படும் சோர்வு மற்றும் உடல் எடை அதிகரிப்பை எதிர்த்து போராட இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கவும். தினமும் 10 கிராமிற்கு குறைவான அளவிலேயே சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள். சின்னதாக ஒரு பிஸ்கட் போன்றவற்றை எல்லாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும் பெர்ரி வகையிலான பழங்கள் மற்றும் காய்கறிகளே மாதவிடாய் முடிவு காலத்தின் போது பரிந்துரைகக்ப்படுகிறது.

    சோடியம்
    உங்கள் உணவில் அளவுக்கு அதிகமாக சோடியம் சேரும் போது இரத்த கொதிப்பு அதிகரிக்கும். அதனால் உப்பு குறைவான, வாட்டிய உணவுகளை உண்ணுங்கள். இவ்வகை உணவுகளில் நைட்ரேட்ஸ் அளவு அதிகமாக இருக்கும். இது புற்று நோயுடன் சம்பந்தப்பட்டதாகும்.

    சுத்தரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்ஸ்
    வெண்ணிற ரொட்டி, பாஸ்தா, அரிசி சாதம், உருளைக்கிழங்கு, சோளம் போன்ற கார்போஹைட்ரேட்ஸ் அதிகமாக உள்ள உணவினால் கூட மாதவிடாய் முடிவு காலத்தின் பொதுவான அறிகுறிகளான சோர்வும் மன அமைதியின்மையும் ஏற்படும். முழு தானியங்கள் அல்லது உணவின் அளவை குறைத்து கொள்ளுதல் அல்லது கார்போஹைட்ரேட்ஸ் அளவை குறைத்துக் கொள்ளுதல் ஆகியவைகளே இதற்கு மாற்றாகும்.

    காப்ஃபைன்
    காப்ஃபைன் உங்களை மந்தமாக வைப்பதுடன் சோர்வடையவும் செய்யும். அதற்கு காரணம் உங்களின் தூக்கத்தை காப்ஃபைன் கெடுக்கும்; முக்கியமாக அதனை மதிய நேரத்தில் பருகினால் தான். இதனால் ஏற்படும் மற்றொரு பிரச்சனை – காப்ஃபைனை நாம் தனியாக குடிப்பதில்லை. அதனுடன் சேர்த்து சர்க்கரை, நுரை போன்றவற்றை சேர்த்து குடிப்போம். இதனால் உங்கள் ஆரோக்கியம் இன்னும் பாதிக்கப்படும். அதனால் இந்த மாதிரியான நேரத்தில் மூலிகை கலந்த புதினா தேநீர் அல்லது காப்ஃபைன் கலக்காத தேநீரை முயற்சி செய்து பாருங்களேன்.

    மதுபானம்
    நண்பர்களுடன் சேர்ந்து எப்போதாவது ஒரு டம்ளர் ஒயின் குடித்தால் அது உங்கள் மாதவிடாய் முடிவு காலத்தை வெகுவாக பாதிக்காது. இருப்பினும் தினமும் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் மதுபானத்தை தொடர்ச்சியாக குடித்து வந்தால், அது உங்கள் மாதவிடாய் முடிவு காலத்தை வெகுவாக பாதிக்கும். இதனால் சோர்வு மற்றும் மந்த நிலையை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க ஒயின் மற்றும் தண்ணீர் அதிகம் சேர்க்கப்பட்ட மதுபானத்தை அளவாக குடியுங்கள்.

    காரசாரமான உணவுகள்
    காரசாரமான உணவுகளை உட்கொண்டால், ஹாட் ஃப்ளாஷ் இன்னும் மோசமடையத் தான் செய்யும். இல்லையென்றால் உங்களை சுகவீனம் அடையச் செய்யும். காரமான உணவுகளை உண்ணும் போது, உங்கள் உடலின் வெப்பநிலை அதிகரித்து உங்களுக்கு வியர்க்க தொடங்கும். ஹாட் ஃப்ளாஷின் போதும் இதே தான் நடக்கிறது. இருப்பினும் உங்களுக்கு காரமான உணவுகளின் மீது விருப்பம் இருந்தால், அதனை கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் உடலின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை மறந்து விடாதீர்கள்.

    சூடான உணவுகள்
    நீங்கள் உண்மையிலேயே ஹாட் ஃப்ளாஷால் அவதிப்பட்டு வந்தால், சூடான சூப் போன்ற சூடான உணவு வகைகளை தொடர்ச்சியாக சாப்பிடாதீர்கள். அதனால் உணவருந்தும் முன் சூப்பிற்கு பதிலாக சாலட் போன்றவற்றை உண்ணுங்கள். குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் அல்லது குளிர்ந்த நீரை குடிப்பதால் ஹாட் ஃப்ளாஷ் சற்று குறையும்.

    jv_66 and rosei like this.

  5. #15
    kiruthividhya's Avatar
    kiruthividhya is offline Friends's of Penmai
    Real Name
    KIRUTHIGA
    Gender
    Female
    Join Date
    Apr 2013
    Location
    chennai
    Posts
    362

    Re: மாதவிடாய் நிறுத்தத்தின் போது தவிர்க்க 

    Thanks for the message.


  6. #16
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: மாதவிடாய் நிறுத்தத்தின் போது தவிர்க்க 

    good sharing..


  7. #17
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    மாதவிடாய் நிற்கும் சமயத்தில் பெண்களுக்&#

    மாதவிடாய் நிற்கும் சமயத்தில் பெண்களுக்கு தேவைப்படும் வைட்டமின்கள்

    வயது அதிகரிக்கும் போது, ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக 35 வயதை நெருங்கும்

    பெண்கள் சாப்பிட வேண்டும். அதிலும் இறுதி மாதவிடாய் நெருங்க நெருங்க உடலின் செயல்பாடுகள் குறைவதோடு,

    ஊட்டச்சத்துக்களும் குறைய ஆரம்பித்து, மூட்டு வலி, கால் வலி மற்றும் பல உடல்நல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

    ஆகவே

    இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

    வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை 40 வயதிற்கு மேல் தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது தவறாமல் சேர்த்துக்

    கொள்ள வேண்டும். இதனால் உடலை நன்கு ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள முடியும்.

    40 வயதான பெண்களுக்கு வைட்டமின் பி12 மிகவும் இன்றியமையாத வைட்டமின்களில் ஒன்றாகும். அதிலும் சர்ஜரி நடந்திருந்த

    அல்லது இதயத்தில் பிரச்சனை உள்ள பெண்களுக்கு, இச்சத்து மிகவும் முக்கியமானது. ஆகவே வைட்டமின் பி12 அதிகம்

    நிறைந்த மாட்டிறைச்சி, கானாங்கெளுத்தி மற்றும் முட்டைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வைட்டமின் பி முக்கியமானதாகும். ஏனெனில் இவை தான் ஒரு நாளைக்கு வேண்டிய

    எனர்ஜியைக் கொடுக்கிறது. எனவே பசலைக்கீரை, சால்மன், உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு வகைகளை தவறாமல் எடுத்துக்

    கொண்டால், இச்சத்துக்களைப் பெறலாம்.

    உடலில் ஏற்படும் சோர்வை நீக்க தினமும் காலையில் 15 நிமிடம் சூரிய ஒளி உடலில் படுமாறு நிற்க வேண்டும்.

    அதுமட்டுமல்லாமல், சால்மன் அல்லது பாலை அதிகம் குடித்தால், அது உடலில் வைட்டமின் டி-யின் அளவை அதிகரிக்கும்.

    இறுதி மாதிவிடாயினால் பெண்கள் அதிகப்படியான இரும்புச்சத்துக்களை இழக்க நேரிடும்.

    இதனால் ஏற்படும் இரத்தசோகையை

    தவிர்க்க பெண்கள் கீரைகளையும், ப்ராக்கோலியையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    நட்ஸ், டோஃபு மற்றும் ப்ராக்கோலியில் வைட்டமின் ஈ அளவுக்கு அதிகம் இருப்பதால், இதனை வாரம் ஒரு முறை பெண்கள்

    உணவில் சேர்த்து வந்தால், வயதாவதால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறையும்.

    jv_66 and rosei like this.

  8. #18
    anitprab is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    madurai
    Posts
    419

    Re: மாதவிடாய் நிற்கும் சமயத்தில் பெண்களுகĮ

    chan,

    பகிர்வுக்கு நன்றி..............


  9. #19
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    மெனோபாஸ் - Menopause

    மெனோபாஸ்

    பெண்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து, அவர்களை உடலளவிலும் மனத்தளவிலும் பல வீனமாக உணர வைக்கிற பருவம் மெனோபாஸ். எத்தனை அன்பான, அமைதியான, இனிமையான பெண்களையும் ஆக்ரோஷமும் ஆத்திரமும் கொள்ளச் செய்கிற மெனோபாஸ் பருவத்தை எல்லாப் பெண்களும் கடந்தே ஆக வேண்டும்.



    அதுநாள் வரை மாதவிலக்கு என்பதை ஒரு சுமையாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள், அது நின்று போனதும், ஏதோ தன் பெண்மையே தன்னிடமிருந்து பறி போன மாதிரி உணர்வார்கள். இனி தான் எதற்கும் யாருக்கும் லாயக்கற்றவள் என்கிற தாழ்வு மனப்பான்மையில் தவிப்பார்கள். கணவர் தன்னை விட்டு ஒதுங்கி விடுவாரோ என்பது போன்ற தேவையற்ற பயங்கள் தலைதூக்கும்.


    மனது ஒரு பக்கம் பாடாகப்படுத்த, உடலும் தன் பங்குக்கு ஏகப்பட்ட மாற்றங்களைக் காட்டும். அளவுக்கு அதிக ரத்தப்போக்கு அல்லது அவ்வப்போது தென்படுகிற குறைந்த அளவு ரத்தப்போக்கு, மாதத்தில் எப்போது வேண்டு மானாலும் வருகிற ரத்தப்போக்கு, வேலையே செய்யாத போதும் அசதி, கை, கால் வலி, குடைச்சல், எலும்புத் தேய்மானம், மயக்கம், அதிக வியர்வை, உடல் சூடாவது என நிறைய மாற்றங்களை உணர்வார்கள்.

    அதுநாள் வரை அனுபவித்திராத புதிய உபாதைகள் ஒரு பக்கமும், பாதுகாப்பற்ற மனநிலை இன்னொரு பக்கமுமாக மெனோபாஸ் என்பது கிட்டத்தட்ட நரக அனுபவத்தையே தரும். இந்த அத்தனை அறிகுறிகளின் உச்சக்கட்டமாக தூக்கம் ஒரேயடியாக பறிபோகும். தூக்கமே இல்லாதது, தூக்கத்தில் திடுக்கிட்டு விழிப்பது, மறுபடி தூக்கத்துக்குள் போக முடியாதது என ஆழ்ந்த, அமைதியான தூக்கம் என்பது இவர்களிடமிருந்து விடைபெறும். தூக்கமில்லாவிட்டால் எந்த மனிதரின் மனநிலையும் மிருகத் தன்மை கொள்ளும். ஏற்கனவே ஹார்மோன் மாற்றங்களினால் உடல் மற்றும் மன அவதிகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு, தூக்கமின்மையும் சேர்ந்து கொண்டால் கேட்கவா வேண்டும்?

    மெனோபாஸ் நெருங்குவதற்கு முன்பிருந்தே சில விஷயங்களை முறையாகப் பின்பற்றினால், வரப் போகிற பிரச்னைகளில் இருந்து ஓரளவு தம்மைக் காப்பாற்றிக்
    கொள்ளலாம். தூக்க முறையும் ஒழுங்குபடும். தூக்கமின்மை சிகிச்சையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிற அரோமாதெரபியில், மெனோபாஸ் பருவத்துத் தூக்கமின்மைக்கும் தீர்வுகள் இருப்பதைச் சொல்கிறார் அரோமா தெரபிஸ்ட் கீதா அஷோக்.

    * இரவில் தினமும் குளித்துவிட்டு, தளர்வான உடை அணிந்து படுக்கவும்.

    * ஒரு மஸ்லின் துணியில் 4 சொட்டுகள்

    ஃபிரான்கின்சென்ஸ் ஆயில், 4 சொட்டுகள் லேவண்டர் ஆயில், 4 சொட்டுகள் லெமன் கிராஸ் ஆயில் மூன்றையும் தெளித்து, உங்கள் தலையணை உறைக்குள் வைத்துக் கொள்ளவும். பத்மாசனத்தில் உட்கார்ந்து கொண்டு, இரண்டு கால் கட்டை விரல்களையும் 50 முறைகள் அழுத்திப் பிடித்து விட்டுப் படுத்தால் ஆழ்ந்த தூக்கம் வரும். இதில் லேவண்டர் ஆயிலுக்கு பயத்தையும் பதற்றத்தையும் போக்கும் தன்மை உண்டு. ஃபிரான்கின்சென்ஸ் ஆயிலானது மனதை அமைதிப்படுத்தும். லெமன் கிராஸ் ஆயில் மூளையைப் புத்துணர்வுடன் வைக்கும்.

    * மெனோபாஸ் பருவத்தில் இருக்கும் பெண்களில் 90 சதவிகிதம் பேருக்கு இடுப்பு வலியும் முதுகு வலியும் தவிர்க்க முடியாதது. ரத்தப் பரிசோதனை செய்து, கால்சியம் மற்றும் துத்தநாகக் குறைபாடு இருக்கிறதா என அறிந்து, அதற்கேற்ற உணவுகளையும் சப்ளிமென்ட்டுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * கடைகளில் பாரஃபின் வாக்ஸ் அல்லது பீஸ் வாக்ஸ் எனக் கிடைக்கும். 10 கிராம் வாக்ஸை எடுத்து டபுள் பாயில் முறையில் உருக்கவும். உருகியதும் அதில் பிளாக் பெப்பர் ஆயில், கேம்ஃபர் ஆயில், யூகலிப்டஸ் ஆயில் மூன்றிலும் தலா 10 சொட்டுகள் சேர்க்கவும். குப்புறப் படுத்துக் கொள்ளவும். உருகிய மெழுகில் தட்டையான பிரஷ்ஷை தொட்டு, இடுப்பில் வலி இருக்கும் பகுதிகளில் பொறுக்கும் சூட்டில் யாரையாவது தடவிவிடச் சொல்லவும். 10 நிமிடங்கள் கழித்து எடுத்து விடலாம். உடனடியாக வலி குறையும். மெழுகில் கலந்த அரோமா ஆயில்களின் கலவையும் மெழுகின் சூடும் சேர்ந்து இதமான உணர்வைத் தரும். தூக்கம் தழுவும்.

    * மார்பகங்கள் கனத்துப் போவதும் வலிப்பதும் கூட இந்தப் பருவத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. காஸ் துணி (பேண்டேஜ் துணி) எனக் கடையில் கேட்டு வாங்கவும். இது கிடைக்காதவர்கள் மஸ்லின் துணியையும் உபயோகிக்கலாம். கால் லிட்டர் தண்ணீரை நன்கு சூடாக்கி எடுத்துக் கொள்ளவும். அதில் ஜாஸ்மின் ஆயில், சைப்ரஸ் ஆயில் மற்றும் லேவண்டர் ஆயில் மூன்றையும் தலா 25 சொட்டுகள் விட்டு, துணியை அதில் முக்கிப் பிழியவும். சூடு இருக்கும் போதே, அந்தத் துணியை மார்பகங்களின் மேல் வைத்திருந்து எடுக்கவும். 10 முறை இப்படிச் செய்தால், கனத்த மார்பகங்கள் லேசான மாதிரி உணர்வீர்கள். வலி குறைந்து தூக்கம் வரும்.

    * சாதாரண தலைவலியும் ஒற்றைத் தலைவலியும் இந்த நாட்களில் மிகவும் சகஜம். ஆரம்பத்தில் தலைவலிக்காக தைலம் தடவிப் பழகியவர்கள், ஒரு கட்டத்தில் வலி இருக்கிறதோ, இல்லையோ தைலம் தடவினால்தான் தூக்கம் வரும் என்கிற நிலைக்கு வருவார்கள். காரணம், அத்தைலங்களில் உள்ள மென்தால், டீ ட்ரீ மற்றும் கேம்ஃபர்
    கலவையும் அவற்றின் மணமும். அரோமா தெரபியில் இந்த மூன்றையும் பேஸ் நோட்ஸ் ஆயில் என்கிறோம்.

    * அதாவது, இவற்றின் மணத்தை நுகரும் போது, குறிப்பிட்ட நேரம் தாண்டியும் அவை நம் உடலுக்குள் வேலை செய்யும்.

    * நொச்சி இலையை எடுத்து சுத்தம் செய்து துவையல் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். அதில் பைன் ஆயில், காம்ஃபர் ஆயில் இரண்டை யும் தலா 25 சொட்டுகள் விட்டுக் கலந்து, நெற்றியில் பற்று போட்டு, அதன் மேல் ஒரு மெல்லிய துணியைக் கட்டிக் கொண்டு 10 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். இது மண்டையில் நீர்கோர்ப்பு இருந்தால் சரி செய்து, உடனடியாக தலைவலியை விரட்டி விடும். நொச்சி இலையை மொத்தமாக அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு அவ்வப்போது அரோமா ஆயில் கலந்தும் உபயோகிக்கலாம்.

    * இரவுச் சாப்பாடு எளிதில் செரிக்கக் கூடியதாகவும் சற்றே சூடானதாகவும் இருக்கட்டும். 7:30 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். இரவு உணவுக்கும் தூக்கத்துக்கும் இடையில் குறைந்தது 2 மணி நேரமாவது இடைவெளி இருக்கட்டும்.

    * தினம் ஒரு ஆப்பிள், கூடவே ஒரே ஒரு கிராம்பு போட்டுக் காய்ச்சிய பாலும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஃப்ரெஷ்ஷான அத்திப்பழம் 3ம் வெது
    வெதுப்பான பாலும் எடுத்துக் கொள்ளலாம்.

    மெனோபாஸ் பருவத்தில் இருக்கும் பெண்களில் 90 சதவிகிதம் பேருக்கு இடுப்பு வலியும் முதுகு வலியும்தவிர்க்க முடியாதது...

    jv_66 and rosei like this.

  10. #20
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: மெனோபாஸ் - Menopause

    good info.thanks for sharing.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter