Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 1 Post By chan
  • 1 Post By jv_66

Fibroid -யூட்ரஸில் நார்க்கட்டிகள் (ஃபைப்ராய்ட்


Discussions on "Fibroid -யூட்ரஸில் நார்க்கட்டிகள் (ஃபைப்ராய்ட்" in "Gynaecology Problems" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Fibroid -யூட்ரஸில் நார்க்கட்டிகள் (ஃபைப்ராய்ட்

    யூட்ரஸில் நார்க்கட்டிகள் (ஃபைப்ராய்ட்ஸ்)

    டாக்டர் கீதா அர்ஜூன்

    கருப்பையில் ஃபைப்ராய்ட்ஸ் (நார்க்கட்டிகள்) என்றால் என்ன?

    இந்த கருப்பை ஃபைப்ராய்ட்ஸ் (லியோமயோமா அல்லது மயோமா -Myoma என்றும் அழைக்கப்படுபவை) கேன்சர் கட்டிகள் அல்ல. இந்த ஃபைப்ராய்ட்ஸ், கருப்பையின் தசைகளில் உருவாகின்றது. ஃபைப்ராய்ட்ஸ் கருப்பையின் சுவற்றுடனோ அல்லது கருப்பையின் சுவற்றில் ஒட்டியபடியோ மெதுவாக வளரும்.

    இந்த ஃபைப்ராய்டு (Fibroid) கட்டிகள் பட்டாணி அளவுக்கு மிகச் சிறியதாகவோ அல்லது தேங்காய் அளவுக்கு பெரியதாகவோ இருக்கலாம். ஃபைப்ராய்டுகள் வளரும்போது, கருப்பை அதனுடைய நார்மலான அளவில் இருந்து மாறியோ அல்லது ஒரு புறமாகவோ தள்ளப்படலாம். நிறைய ஃபைப்ராய்டுகள் கேன்சர் கட்டிகள் அல்ல. மிகக் குறைந்த அளவில் மட்டும் (ஆயிரத்தில் ஒருவருக்கு) தான் இவைகள் கேன்சர் கட்டிகளாக மாறும்.

    ஃபைப்ராய்டுகள் எப்படி உருவாகிறது?
    மெதுவாக வளரும் இந்த ஃபைப்ராய்டு (Fibroid) கட்டிகள் பல வருடங்களுக்கு நம்முள் வளர்ந்த பிறகுதான் நம்மால் உணர முடியும். கருத்தரித்தல், கர்ப்பத்தடை மாத்திரைகள் சாப்பிடுதல், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தெரபி எடுத்துக் கொண்டிருப்பது போன்ற விஷயங்கள் ஃபைப்ராய்டுகளின் வளர்ச்சியை துரிதப்படுத்தி விடும். சில பெண்களுக்கு இந்தப் பிரச்னை பரம்பரையாலும் வரலாம்.

    20 வயதுக்கும் குறைவான பெண்களுக்கு ஃபைப்ராய்டுகள் ஏற்படுவது ரொம்பவே அரிது. ஃபைப்ராய்டுகள் அதிகமாக வருவது பெண்களின் கர்ப்பக் காலத்தின் போதுதான். பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்படும் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் குறைவதாலும் இந்த வகை கட்டிகள் சாதாரணமாகவே சுருங்கி விடும்..

    இதன் அறிகுறிகள் என்னென்ன?
    நிறையப் பெண்களுக்கு அவர்களுக்கு ஃபைப்ராய்டுகள் இருப்பது தெரிந்தால் ஆச்சர்யப்படுகிறார்கள். சாதாரணமாக இந்தக் கட்டிகள் மெடிக்கல் செக்கப் செய்து கொள்ளும் போதே கண்டுபிடிக்கப்படும். இந்த கட்டிகள் சாதாரணமாக இருப்பதற்கான அறிகுறிகள் தெரிவதில்லை.

    ஃபைப்ராய்டு (Fibroid) கட்டிகள் ஏற்பட்டால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஒன்றோ அல்லது அதற்கு மேலோ அறிகுறிகள் ஏற்படலாம்!

    வலியுடன் பீரியட்ஸ், அதிகமான ரத்தப்போக்கு, அடிக்கடி யூரின் போகுதல், அல்லது யூரின் போகும் போது அசௌகர்யமாக உணர்வது, அடிவயிற்றில் வலி அல்லது அழுத்தம், மலச்சிக்கல், குழந்தையின்மை.

    ஃபைப்ராய்டு உருவாகி இருப்பதை எப்படி பரிசோதனையில் கண்டறிவது?

    கருப்பையில் ஃபைப்ராய்டு உருவாகி இருப்பதை உள் பரிசோதனையிலேயே (பெல்விக் எக்ஸாமினேஷன் (Pelvic examination) கண்டு பிடித்து விடலாம். உங்களுக்கு பீரியட்ஸின் போது அதிகமான வலி அல்லது உதிரப் போக்கு இருந்தாலோ, அல்லது அடிவயிற்றிலே வேறு ஏதாவது பிரச்னை இருந்தாலோ அதற்கான காரணத்தைக் கண்டறிய உங்களுடைய மகப்பேறு மருத்துவரே அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்ய அறிவுறுத்துவார்.

    எல்லா ஃபைப்ராய்டுகளுக்கும் ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டுமா?
    உள் பரிசோதனையிலோ அல்லது ஸ்கேனிலோ ஃபைப்ராய்டு இருப்பது தெரிந்தால் உடனடியாக கருப்பையை எடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் உங்கள் உடல்நிலையைப் பொறுத்து உங்களுக்கான ட்ரீட்மென்ட்டை கைனகாலஜிஸ்ட் அறிவுறுத்துவார்.

    பீரியட்ஸின் போது அதிகமான ரத்தப் போக்கு மற்றும் தாங்க முடியாத வலி இருந்தால்... ஃபைப்ராய்டின் வளர்ச்சியைப் பொறுத்து... உங்கள் வயது, உடல்நிலை மற்றும் குழந்தை பெற்றுக் கொள்வதைப் பற்றி உங்களுடைய முடிவைப் பொறுத்து...

    ஃபைப்ராய்டுகளுக்கு எப்படி ட்ரீட்மெண்ட் தருவது?

    ஃபைப்ராய்டு கட்டிக்கு ட்ரீட்மெண்ட் தேவையென்று முடிவு செய்த பின்பு, மயோமெக்டமி (Myomectomy) அல்லது ஹிஸ்ட்ரக்டமியை அறிவுறுத்துவார்கள். எல்லா ஃபைப்ராய்டு கட்டிக்கும் ஹிஸ்ட்ரக்டமி தேவையில்லை..


    ஒரு வகை சர்ஜரியான மயோமெக்டமியில் யூட்ரஸ் எடுக்காமல் அதனுள்ளே இருக்கும் ஃபைப்ராய்டுகளை மட்டுமே எடுத்து விடுவார்கள். இந்த சிகிச்சை குழந்தை இல்லாதவர்களுக்கு அல்லது மற்றொரு குழந்தை வேண்டுபவர்களுக்கு செய்யப்படுகிறது.

    தவிர இந்த சர்ஜரியால் யூட்ரஸில் ஆழமான தழும்புகளும் ஏற்படலாம். "மயோமெக்டமி (Myomectomy)" சர்ஜரிக்கு பிறகு நீங்கள் கருத்தரித்தால், இந்த தழும்புகளால் சிசேரியன் செய்ய வேண்டிய சூழ்நிலை வரும்.

    ஹிஸ்ட்ரக்டமியில், ஃபைப்ராய்டுகளுடன் சேர்த்து யூட்ரஸ்ஸையும் உங்கள் மகப்பேறு மருத்துவர் நீக்கி விடுவார்.
    நீங்கள் மெனோபாஸ் கால கட்டத்தை நெருங்குபவராக இருந்தால், உங்கள் கைனகாலஜிஸ்ட் மெனோபாஸ் வரும் வரை ஃபைப்ராய்டுக்கான அறிகுறிகளை கன்ட்ரோல் செய்ய மெடிசன் தருவார். இதனால் உங்களுக்கு சர்ஜரி தேவைப்படாது.

    ஃபைப்ராய்டுகள் நீண்ட காலத்துக்கு இருக்கும் பிரச்னையா?

    சிறிய அளவில் இருக்கும் ஃபைப்ராய்டுகளால் நீண்ட கால பிரச்னைகள் வராது. ஆனால் உங்கள் யூட்ரஸில் வளருகின்ற அல்லது பெரிய ஃபைப்ராய்டுகள் இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தால், அந்த அறிகுறிகள் சர்ஜரி செய்யும் வரையோ அல்லது மெனோபாஸின் போது இந்த ஃபைப்ராய்டுகள் சுருங்கும் வரையோ இருக்கும்.

    ஃபைப்ராய்டுகளை சுருங்க வைக்க ஏதாவது வழி இருக்கிறதா?
    ஊசியின் மூலம் டெம்ப்ரவரியாக சுருங்க வைக்கலாம். ஆனால் இது சில மாதங்களுக்குத் தான். தவிர இதனால் சில சமயங்களில் ஃபைப்ராய்டுகள் ஏற்கெனவே இருந்த அளவை விட பெரிதாகி விடலாம். இதற்கு யூட்ரஸை நீக்குவதற்கு பதிலாக எம்போலைசேஷன் டெக்னிக்கையும் நாடலாம்.

    யூட்ரஸில் ஃபைப்ராய்டு வருவதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
    ஃபைப்ராய்டுகள் உருவாவதைத் தடுக்கவோ அல்லது கன்ட்ரோல் செய்யவோ முடியாது.



    Similar Threads:

    Sponsored Links
    jv_66 likes this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Fibroid -யூட்ரஸில் நார்க்கட்டிகள் (ஃபைப்ராய்ட

    Thanks for sharing.

    chan likes this.
    Jayanthy





  3. #3
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: Fibroid -யூட்ரஸில் நார்க்கட்டிகள் (ஃபைப்ராய்ட

    Thanks for effort of sharing information regarding this forum with Penmai (s).


  4. #4
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Fibroid -யூட்ரஸில் நார்க்கட்டிகள் (ஃபைப்ராய்ட&am

    Quote Originally Posted by Mals View Post
    Thanks for effort of sharing information regarding this forum with Penmai (s).
    Thank u Mals


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter