Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree9Likes
  • 4 Post By chan
  • 1 Post By jv_66
  • 1 Post By porkodit
  • 1 Post By gkarti
  • 1 Post By saidevi
  • 1 Post By Mals

Fibroid affect Young girls too-இப்போ இளம்பெண்களையும் தாக்குது ஃபை


Discussions on "Fibroid affect Young girls too-இப்போ இளம்பெண்களையும் தாக்குது ஃபை" in "Gynaecology Problems" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Fibroid affect Young girls too-இப்போ இளம்பெண்களையும் தாக்குது ஃபை

    இப்போ இளம்பெண்களையும் தாக்குது ஃபைப்ராய்டு!

    ஃபைப்ராய்டு கட்டிகள் குழந்தையின் மைக்குக் காரணமாகலாம். மிக அரிதாக இந்தக் கட்டிகள், சினைக் குழாய்களையும் பாதிக்கலாம்.



    ‘‘ஃபைப்ராய்டு எனப்படுகிற கர்ப்பப்பையில் வரும் கட்டியானது, சமீப காலம் வரை நடுத்தர மற்றும் அதற்கடுத்த வயதுப் பெண்களை மட்டுமே தாக்கிக் கொண்டிருந்தது. நோய்கள் தாக்கும் வயது குறைந்து வருவதை அடுத்து, ஃபைப்ராய்டு கட்டியும், இப்போது இளம் பெண்களுக்கும் வருகிறது. சரியான நேரத்துக் கண்டுபிடிப்பும் சிகிச்சையும் மட்டுமே பாதிப்பு பெரிதாகாமல் தடுக்கும் ஒரே வழி’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.

    ‘‘கர்ப்பப்பையில் வருகிற ஒருவித தசைக் கட்டியே ஃபைப்ராய்டு. இதில் 3 வகைகள் உள்ளன. Submucosal fibroids என்பது கர்ப்பப்பையின் உள்புற குழிவுப் பகுதியில் ஏற்படுவது. Subserosal fibroids என்பது கர்ப்பப்பையின் வெளியில் வளர்வது. Intramural fibroids என்பது கர்ப்பப்பையின் தசைச் சுவர் இடுக்கில் வளர்வது.

    காரணங்கள்

    *ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிக மாவதே இதற்கு முக்கிய காரணம். பருமனுக்கும் இதற்கும் நெருங்கிய தொடர்புண்டு. உடலின் அதிகப்படியான கொழுப்பிலிருந்தும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கும். அதன் விளைவாக ஃபைப்ராய்டு வரலாம்.

    *அசைவ உணவுகளை அதிகம் உண்கிற பெண்களுக்கும் வரலாம். பால் முதல் அசைவ உணவுகள் வரை அனைத்தையும் கொடுக்கும் விலங்குகளுக்கு இன்று ஹார்மோன் ஊசிகள் போடுவது சகஜமாகி விட்டது. அவற்றை உண்ணுவோருக்கும் அந்த ஹார்மோன்களின் தாக்கம் நிச்சயம் இருக்கும்.

    *பரம்பரையாகவும் இது தாக்கலாம். பாட்டி, அம்மா, சித்தி வழியில் அந்தக் குடும்பத்துப் பெண்ணுக்கு வரலாம்.

    அறிகுறிகள்

    *மாதவிலக்கு நாட்களில் அளவுக்கு அதிக ரத்தப் போக்கு. நிறைய நாட்கள் நீடிப்பது.

    *மாதவிலக்கே வராமல் இருப்பது.

    *மாதவிலக்கு நாட்களில் உருண்டு, புரண்டு அழுது துடிக்கிற அளவுக்கு வலி.

    *5 மாதக் கர்ப்பம் மாதிரி வயிறு பெருத்துக் காணப்படுவது.

    *மலச்சிக்கல் மற்றும் முதுகு, கால்களில் கடுமையான வலி.

    பாதிப்புகள்

    ஃபைப்ராய்டு கட்டிகள், குழந்தையின்மைக்குக் காரணமாகலாம். Submucosal fibroids வகையிலான ஃபைப்ராய்டு, கருவானது பதிந்து, வளர்வதைத் தடுக்கக்கூடியது. எனவே இந்த வகைக் கட்டிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், கருத்தரிப்பதற்கு முன்பே இவற்றை அகற்ற மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். மிக அரிதாக இந்தக் கட்டிகள், சினைக் குழாய்களையும் பாதிக்கலாம்.

    பரிசோதனைகள்


    அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கட்டியின் இருப்பிடம் மற்றும் அளவு கண்டு பிடிக்கப்படும்.

    தீர்வுகள்

    * மாதவிலக்கின் போது கடுமையான வலியோ, அதீத ரத்தப் போக்கோ இருந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. உடனடியாக மருத்துவரைப் பார்த்து ஃபைப்ராய்டு சோதனையை மேற்கொள்ள வேண்டும். பெரும் பாலான பெண்கள் ஆரம்பத்திலேயே வராமல், வயிறு பெருத்து, தொப்பை விழுந்த மாதிரித் தோற்றம் வந்த பிறகு, அதற்கான காரணம் அறிய வேண்டி தான் மருத்துவரை சந்திக்கிறார்கள். மற்ற அறிகுறிகளைக் கேட்டு, சோதனை செய்கிற போது, அவர்களது ஃபைப்ராய்டு கட்டி பெரிதாக வளர்ந்திருக்கும்.

    *4 அல்லது 5 செ.மீ. அளவுள்ள கட்டிகள் என்றால் லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலமே சரி செய்து விடலாம். அதன் மூலம் கர்ப்பப்பையையும் பாதுகாக்கலாம். அதுவே கட்டி வளர்ந்து பெரிதாகி விட்டால் (சில பெண்களுக்கு 15 செ.மீ. அளவுக்குக் கூட வளர்வதைப் பார்க்கலாம்) சிகிச்சையளிப்பது சிரமம். கர்ப்பப்பையும் பாதிக்கப்படும்.

    *இந்தப் பிரச்னையை குணப்படுத்த மருந்துகள் கிடையாது. GnRH analogues என்கிற ஒரு ஊசி போடப்படும். அதை மாதம் ஒரு முறை என 3 மாதங்களுக்குப் போட வேண்டும். அதுவும் கட்டியைக் கரைக்காது. தற்காலிகமாகச் சுருக்கும். மறுபடி கட்டி வளரும். அதனால், அறிகுறிகளை உணர்ந்து சீக்கிரமே சோதித்து, எளிய சிகிச்சையில் சரி செய்து கொள்வதுதான் புத்திசாலித்தனம்...’’


    Similar Threads:

    Sponsored Links
    porkodit, jv_66, gkarti and 1 others like this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Fibroid affect Young girls too-இப்போ இளம்பெண்களையும் தாக்குது ஃப&a

    Thanks for the awareness

    chan likes this.
    Jayanthy





  3. #3
    porkodit's Avatar
    porkodit is offline Minister's of Penmai
    Real Name
    Porkodi
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Tiruvannamalai
    Posts
    3,162

    Re: Fibroid affect Young girls too-இப்போ இளம்பெண்களையும் தாக்குது ஃப&a

    Pakiruvkku Nandri........

    chan likes this.
    என்றும் அன்புடன் ,
    பொற்கொடி

  4. #4
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,116

    Re: Fibroid affect Young girls too-இப்போ இளம்பெண்களையும் தாக்குது ஃப&a

    Useful Sharing Lakshmi

    chan likes this.

  5. #5
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Fibroid affect Young girls too-இப்போ இளம்பெண்களையும் தாக்குது ஃப&a

    Useful sharing.

    chan likes this.

  6. #6
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: Fibroid affect Young girls too-இப்போ இளம்பெண்களையும் தாக்குது ஃப&a

    Thanks for effort of sharing information regarding this forum with Penmai (s).

    chan likes this.

  7. #7
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Fibroid affect Young girls too-இப்போ இளம்பெண்களையும் தாக்குது ஃப&a

    Quote Originally Posted by saidevi View Post
    Useful sharing.
    thank you friend


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter