Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree7Likes
 • 2 Post By chan
 • 2 Post By chan
 • 2 Post By chan
 • 1 Post By jv_66

ப்ளீடிங்... எது நார்மல்? - Menstruation bleeding


Discussions on "ப்ளீடிங்... எது நார்மல்? - Menstruation bleeding" in "Gynaecology Problems" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  ப்ளீடிங்... எது நார்மல்? - Menstruation bleeding

  அதீத ரத்தப்போக்கு அபாயமா?
  பெண்களில் 30 சதவிகிதம் பேருக்கு அளவுக்கதிக ரத்தப் போக்கு பிரச்னை இருக்கிறது என அதிர வைக்கிறது புள்ளி விவரம் ஒன்று. எது சாதாரணம், எது அசாதாரணம் என்கிற விழிப்புணர்வு பல பெண்களுக்கு இருப்பதில்லை. பூப்படைந்த ஆரம்ப காலத்தில் அப்படித்தான் இருக்கும் என்றோ... பிரசவத்துக்குப் பிறகு அப்படித் தான் இருக்கும் என்றோ... மாதவிடாய் நிற்கப் போகிற காலத்தில் அது சகஜம் என்றோ...  ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒரு சுய சமாதானத்தை சொல்லிக் கொண்டு, சமாளிக்கிறவர்களே பெரும்பான்மை. அதீத ரத்தப்போக்கு என்பது அனீமியா வில் தொடங்கி, புற்றுநோய் வரை பலதின் அறிகுறியாக இருக்கலாம் என்பது தெரியுமா?அதீத ரத்தப் போக்கின் காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சைகள் என சகலத்தையும் பற்றிப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் மீரா ராகவன்.

  மெனரேஜியா (Menorrhagia)... அதீத ரத்தப் போக்கினை மருத்துவ ஆங்கிலம் இப்படித்தான் குறிப்பிடுகிறது. டீன் ஏஜ் பெண்கள் முதல் மெனோபாஸை எட்டிவிட்டவர்கள் வரை இந்தப் பிரச்னை எந்த வயதிலும், யாருக்கும் வரலாம்.

  எது அதீத ரத்தப் போக்கு?

  மாதவிலக்கு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவம். ஒருவருக்கு கூடுதலாகத் தெரிகிற ரத்தப்போக்கு, இன்னொருவருக்கு நார்மலாக இருக்கலாம். ஆனாலும்,
  சில பொது விதிகளை வைத்து இதைக் கணக்கிடலாம்.

  * பொதுவாக 23 முதல் 35 நாட்களுக்கு ஒரு முறை வரும் மாதவிலக்கு, 23 நாட்களுக்கு முன்னர் வந்தாலோ, 7 நாட்களுக்கு மேல் நீடித்தாலோ, மாதவிலக்கின் போதான ரத்த இழப்பு 80 மி.லிக்கு மேல் போனாலோ, அதாவது, ஒரு நாளைக்கு 6 முதல் 7 நாப்கின்கள் மாற்றும் நிலை. ஒரே மாதத்தில் இரண்டு, மூன்று முறை மாதவிலக் காவது, 15 முதல் 1 மாதம் வரை நீடிப்பது.

  * கட்டிக் கட்டியாக ரத்தம் வெளியேறுவது.

  * அளவுக்கதிக களைப்பாக உணர்வது. இந்த அறிகுறிகள் இருந்தால் மெனரேஜியா என உறுதிப்படுத்திக் கொள்ளலாம். மெனரேஜியாவுக்கான காரணங்கள் வயதைப் பொறுத்து வேறுபடும்.

  * டீன் ஏஜில் இருப்பவர்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை, பருமன் போன்றவை காரணங்களாக இருக்கலாம்.

  * நடுத்தர வயதில் இருப்பவர்களுக்கு கர்ப்பப்பையின் உற்புறத்தில் தசைத்தடிப்பு இருப்பதோ, ஃபைப்ராய்டு கட்டியோ காரணமாக இருக்கலாம். இந்தத் தசைத்தடிப்பானது 4 மி.மீக்கு மேல் இருந்தால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

  * சுமார் 1 வருட காலத்துக்கு மாதவிலக்கு நின்று, மெனோபாஸ் உறுதியான பிறகு, மறுபடி திடீரென ரத்தப்போக்கு ஏற்பட்டால் அலட்சியப்படுத்தக் கூடாது. இது கர்ப்பப்பையிலோ, கர்ப்பப்பை வாயிலோ புற்றுநோய் உண்டானதன் அறிகுறியாக இருக்கலாம்.

  என்ன செய்ய வேண்டும்?

  * கூடுதலான எடை இதற்கொரு காரணமா என்பதை முதலில் பார்க்க வேண்டும். அப்படி இருப்பின் பி.எம்.ஐ. அளவீட்டின் படி சரியான எடைக்குத் திரும்பும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

  * ரத்தப் பரிசோதனை மேற்கொண்டு, ஹீமோகுளோபின் அளவு கணக்கிடப்பட வேண்டும்.

  * ரத்தத்தில் பிளேட்லெட்டுகளின் அளவு குறைவதும் இதற்கொரு காரணம் என்பதால் அதுவும் சரிபார்க்கப்பட வேண்டும்.

  * தேவைப்பட்டால் கர்ப்பப்பை வாயில் செய்யப்படுகிற பாப் டெஸ்ட் மற்றும் கர்ப்பப்பையின் உள்புற சவ்விலிருந்து மாதிரி எடுத்து ஆராய்கிற கர்ப்பப்பை சவ்வு திசுப் பரிசோதனை போன்றவையும் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும்.

  * இவையெல்லாம் போக, கர்ப்பப்பையில் கட்டியோ, வேறு பிரச்னைகளோ இருக்கிறதா எனப் பார்ப்பதற்கு ஒரு அல்ட்ரா சவுண்டு சோதனையும் அறிவுறுத்தப்படும்.
  சிகிச்சைகள்...

  * மாதவிடாய் நாட்களில் மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடிய மாத்திரைகள் உள்ளன. 3 முதல் 6 மாதங்களுக்கு எடுத்துக் கொண்டால் அதிகப்படியான ரத்தப் போக்கு கட்டுப்படும்.

  * திருமணமாகி, குழந்தை பெற்ற பெண்களுக்கு கர்ப்பப்பையின் உள்சுவர் தடிப்பின் காரணமாக ஏற்பட்ட ரத்தப் போக்கு என்றால் மெரீனா என்கிற கருத்தடை சாதனம் பெரியளவில் உதவும். காப்பர் டியை போன்று இதுவும் ஒரு கருத்தடைச் சாதனம்தான்.

  ஹார்மோன்களை ரிலீஸ் செய்யும். ‘காப்பர் டி’ பொருத்திக் கொண்டவர்களுக்கு மாதவிடாய் நாட்களில் ரத்தப் போக்கு அதிகமாக இருக்கும். ஆனால், மெரீனாவில் அந்தப் பிரச்னை இருக்காது. இது தேவையற்ற கர்ப்பத்தையும் தடை செய்யும். அதீத ரத்தப் போக்கையும் கட்டுப்படுத்தும். கருக்குழாயில் கர்ப்பம் தங்குவதைத் தடுத்து, கர்ப்பப் பை புற்றுநோய் வராமலும் பாதுகாக்கும். இன்ஃபெக்ஷன் வராமலும் காக்கும். இதை 5 வருடங்கள் வரை வைத்திருக்கலாம்.

  * கேவடெர்ம் எண்டோமெட்ரியல் அப்லேஷன் என்கிற நவீன சிகிச்சையும் பலனளிக்கும். கர்ப்பப்பையின் உள்பகுதியில் வெந்நீர் பலூனை செலுத்தி, உள்பகுதித் தசையைச் செயலிழக்கச் செய்வதன் மூலம் அதிகப்படியான ரத்தப் போக்கு நிறுத்தப்படும். வெறும் பத்தே நிமிடங்களில் செய்து கொள்ளக் கூடிய சிகிச்சை. மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. 10 நாட்களுக்கு மேல் ரத்தப் போக்கு நீடிப்பவர்களுக்கு இந்த சிகிச்சையின் மூலம் ரத்தப் போக்கின் நீட்டிப்பையும் அளவையும் குறைக்கலாம்.

  பிற ஆலோசனைகள்...


  * சுறுசுறுப்பான உடலியக்கம் அவசியம். தினசரி அரை மணி நேரம் வேகமாக நடக்க வேண்டும்.

  * ஒருவருக்கு நாளொன்றுக்கு 2 ஆயிரம் கலோரிகள் மட்டுமே போதும். அதைவிட அதிக ஆற்றல் உள்ளே செல்லாமல் உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

  * பருமன் கண்காணிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றிய பகுதிகளில் கொழுப்பு அதிகம் சேரும். அப்படிச் சேரவிடாமல் தடுப்பதன்
  மூலம் இந்தப் பிரச்னையிலிருந்தும் விலகி இருக்கலாம்.

  * அதிக சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு சேர்த்த உணவுகள், துரித உணவுகள் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.
  அதீத ரத்தப்போக்கைத் தவிர்க்க சுறுசுறுப்பான உடலியக்கம் அவசியம். தினசரி அரை மணி நேரம் வேகமாக நடக்க வேண்டும்.


  Similar Threads:

  Sponsored Links
  jv_66 and sarjana ul like this.

 2. #2
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  ப்ளீடிங்... எது நார்மல்? - Menstruation bleeding

  மாதவிடாய்


  மாதவிடாய் நாட்களில் ஒரு நாளைக்கு எத்தனை நாப்கின் மாற்றுவது சாதாரணம்? 3க்கு மேல் போனாலே, அதிக ரத்தப்போக்கு இருப்பதாகச் சொல்கிறார்களே... நாப்கின் மாற்றுவது என்பது அவரவர் வசதியைப் பொறுத்ததுதானே? அதை வைத்து ரத்தப்போக்கின் அளவைக் கணக்கிடுவது சரியா? ஒருவருக்கு அதிக ரத்தப்போக்கு இருப்பதை வேறு எப்படித் தெரிந்து கொள்ளலாம்?

  மருத்துவர் நிவேதிதா

  மாதவிலக்கின்போது வெளியேறும் ரத்தத்தின் அளவானது பெண்ணுக்கு பெண் வேறுபடும். ஒருவருக்கு நார்மலாக தெரிவது இன்னொருவருக்கு அதிக ரத்தப்போக்காக தெரியலாம். சில பெண்களுக்கு ஒரே ஒருநாள் மட்டும் அதிக ரத்தப்போக்கு இருக்கும். சிலருக்கு மாதவிலக்கு முடிகிற வரை அப்படியே இருக்கலாம். 3 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி உதிரப்போக்கு நீடிக்கலாம். மாதவிலக்கின்போது வெளியேறுகிற ரத்தமானது முழுக்க முழுக்க ரத்தம் இல்லை.

  அது வியர்வை உள்ளிட்ட வேறு சில திரவக் கசிவுகளும் சேர்ந்தது. வெளியேறும் ரத்த அளவை பலவகைகளில் கணக்கிடலாம். உபயோகிப்பதற்கு முன்பான நாப்கினின் எடையுடன் உபயோகித்த நாப்கினின் எடையை ஒப்பிட்டு கணக்கிடுவது ஒருமுறை. ஆல்கலைன் ஹெமட்டின் என்கிற டெஸ்ட்டின் மூலம் உண்மையான ரத்த இழப்பை கணக்கிடுவது இன்னொரு முறை. ஒரு முழு நாப்கின் நனைகிற அளவுக்கு உதிரப்போக்கு இருந்தால் அதை 10 முதல் 15 மி.லி. என எடுத்துக்கொள்ளலாம்.

  அப்படி பார்த்தால் ஒரு சுழற்சியில் 30 முதல் 50 மி.லி. வரை சராசரியாக உதிரப்போக்கு இருக்கும். இது 80 மி.லி.யை தாண்டினால் ரத்தசோகை ஏற்படுவதற்கான அபாய அறிகுறியாக கொள்ளலாம். நாப்கினின் தன்மையைப் பொறுத்தும் இந்த அளவு வேறுபடலாம். டபுள் பேடு, எக்ஸ்ட்ரா லார்ஜ் என்கிற பெயர்களில் வருகிற நவீனமான நாப்கின்களுக்கு இந்த அளவு பொருந்தாது.


  jv_66 and sarjana ul like this.

 3. #3
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  ப்ளீடிங்... எது நார்மல்? - Menstruation bleeding

  ப்ளீடிங்... எது நார்மல்?

  மாத விலக்கின் போது வெளியேறும் ரத்தத்தின் அளவு குறித்து அனேகப் பெண்களுக்கு குழப்பம் உண்டு. ஒருவருக்கு நார்மலாக இருக்கிற ப்ளீடிங், இன்னொரு பெண்ணுக்கு அதிகமானதாகத் தெரியலாம். அளவுக்கதிகமான ரத்தப்போக்கை, அறியாமையின் காரணமாக நார்மல் என நினைத்து அலட்சியம் செய்கிற பெண்களுக்கு அதன் தொடர்ச்சியாக பல பிரச்னைகள் வரலாம்...’’ என்கிறார் மருத்துவர் நிவேதிதா. மாதவிலக்கின் போதான ரத்தப்போக்கின் அளவைத் தெரிந்து கொள்ளும் வழிகளை விளக்குகிறார் அவர்.

  ஒரு பெண்ணுக்கு ஒரே நாளில் ஆகும் ரத்தப்போக்கு வேறு சில பெண்களுக்கு மாத விலக்கு நாட்கள் முழுவதும் வெளியேறும் ரத்தப்போக்காக இருக்கலாம். ரத்தப்போக்கானது 3 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். மாதவிலக்கின் போது ஏற்படும் ரத்தப் போக்கு எல்லாம் முழுவதுமே ரத்தம் அல்ல. அதில் பாதி அளவே ரத்தம். ஒவ்வொரு பெண்ணுக்கும் சரியான அளவு ரத்த இழப்பு எவ்வளவு என்பதை கணக்கிடுவது கடினம். மாதவிடாயின் போது ஏற்படும் ரத்த இழப்பின் சராசரி அளவு 30-40 மி.லி.

  சரியான அளவு என்பது 10 மி.லி. முதல் 80 மி.லி. வரை. 80 மி.லி.யை தாண்டினால் அது அதிக ரத்தப்போக்கு. அது ரத்த சோகைக்குக் காரணமாகலாம். நாப்கின் உபயோகிப்பதை வைத்து மட்டுமே ரத்தப்போக்கின் அளவை சரியாக கணக்கிட முடியாது. சில நாப்கின்கள், மேலுள்ள ஈரத்தை மட்டும் உள்ளிழுக்கும் தன்மை உடையதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். கையடக்கமான நாப்கின் நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அதிக ரத்தத்தை உறிஞ்சலாம்.

  சில மாதிரி நாப்கின்களை எடுத்துக் கொண்டு, அதில் குறிப்பிட்ட அளவு ஏதேனும் திரவத்தை ஊற்றி அந்த நாப்கின் எவ்வளவு திரவத்தை உள்ளிழுக்கும் என்று ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு நாப்கினின் ஈரத்தை உறிஞ்சும் தன்மையும் மாறுபடுவதை அறியலாம். எனவே, சரியான அளவைத் தெரிந்து கொள்ள ஒரே மாதிரியான நாப்கினை கொடுத்துப் பரிசோதிக்க வேண்டும்.

  நாப்கின்களை எடை எடுத்து ரத்தப்போக்கின் அளவை அறிவது நேரத்தை மிச்சப்படுத்தும். சரியான அளவைக் காட்டும். மேலும் நாப்கினில் ரத்தம் மட்டுமின்றி நமது வியர்வை, வெள்ளைப்படுதல் உள்ளிட்ட திரவங்களும் கலந்தே இருக்கும். இது ரத்தப்போக்கின் எடையை பாதிக்கும். சில நேரம் ரத்தம் உறையலாம். உலர்ந்த ரத்தத்தின் எடை ஈர ரத்தத்தின் எடையை விட குறைவாகவே இருக்கும்.


  மாதவிலக்கின் போது ஏற்படும் ரத்தப்போக்கை 3 வழிகளில் கண்டறியலாம்

  1. நாப்கினின் எடையை பரிசோதித்தல்

  ஒரு உபயோகப்படுத்தாத நாப்கின் அல்லது டாம்பூன் (உறுப்பின் உள்ளே சொருகிக் கொள்கிற ஒருவித நாப்கின்) எடையை அளந்து கொள்ள வேண்டும். பிறகு உபயோகித்த நாப்கின்கள் அல்லது டாம்பூனின் எடையை சோதிக்க வேண்டும். இரண்டுக்குமான வித்தியாசமே மாதவிலக்கின் போது ஆகும் ரத்தப்போக்கின் எடையாகும்.

  2. உபயோகப்படுத்திய பின்

  தூக்கி எறியக்கூடிய நாப்கின்களில் திட்டுதிட்டாக உள்ள ரத்தத்தையும், முழுவதுமாக நனைந்த நிலையில் உள்ள நாப்கினில் உள்ள ரத்தத்தையும் கொண்டும் கணக்கிடலாம். (உதாரணத்துக்கு முழுவதும் நனைந்த நாப்கினின் எடை 10 மி.லி. எனக் கணக்கிடப்படலாம். இதன் மூலம் பெண்கள் உபயோகப்படுத்தும் நாப்கின்களின் எண்ணிக்கையை வைத்து ரத்தப்போக்கின் அளவை (மி.லி.) அறியலாம்.)

  3. அல்கலைன் ஹிமடின்

  வேதியியல் சோதனை மூலமும் சரியான ரத்தப்போக்கின் அளவை அறியலாம். இது பெரும்பாலும் மருத்துவமனைகளில் மட்டுமே சாத்தியம்.


  jv_66 and sarjana ul like this.

 4. #4
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: ப்ளீடிங்... எது நார்மல்? - Menstruation bleeding

  Thanks for sharing the useful info.

  chan likes this.
  Jayanthy

 5. #5
  Mals's Avatar
  Mals is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2013
  Location
  Navi Mumbai
  Posts
  5,286

  Re: ப்ளீடிங்... எது நார்மல்? - Menstruation bleeding

  Thanks for sharing


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter