சினைப்பை கட்டிகள் எப்படி உருவாகிறது? தடுக்கும் வழிமுறைகள்கர்ப்பப்பையின் வலது, இடது பக்கங்களில் நெல்லிக்காய் அளவில் முட்டை உற்பத்தி செய்யும் பகுதிதான் சினைப்பை. மாதவிடாய் முடிந்த ஒரு வாரத்தில் இருந்து, இந்த சினைப்பை பகுதியில் நீர்க்கட்டிகள் உற்பத்தியாகும். இரண்டாவது வாரத்தில், இவைகள் வெடித்து, கருமுட்டையை வெளியேற்றும். இம்முட்டைகள் கருக்குழாய் வழியாக கர்ப்பப்பையை அடையும். சில சமயங்களில், ஹார்மோன் சுரப்பிகளின் வேறுபாட்டால், இந்த நீர்க்கட்டி வெடிக்காமல் 25 செ.மீ.,க்கும் மேல் வளர்ந்து விடும்.

சினைப்பை கட்டிகளுக்கான சிகிச்சை முறைகள் :

15 வயது முதல் 25 வயது திருமணம் ஆகாத பெண் வரை ஹார்மோன் சிகிச்சை; குழந்தைப்பேறு இல்லாதவருக்கு நீர்க்கட்டி உடைந்து போக மருந்துகள்; குழந்தைகள் பெற்ற பெண் என்றால் மாதவிடாய் சீராக நடைபெற மாத்திரைகள் அல்லது கட்டியின் அளவைப் பொறுத்து சிகிச்சைகள்; கட்டிகளை நீக்க வேண்டும் என்றால், நுண்துளை அறுவை சிகிச்சை!

சினைப்பையில் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள் :

அபூர்வமாக பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வரும் அல்லது மாதவிடாய் சில மாதங்களுக்கு வராமலே இருக்கும். உடல் பருத்து விடும். முகத்தில் ரோமங்கள் முளைக்கும். தோலின் நிறம் மாறும். உடலில் பல்வேறு இடங்களில் கருமை அதிகரிக்கும். ஆண்தன்மை ஏற்படும்.

சினைப்பை நீர்க்கட்டிகள் வராமல் தடுக்கும் முறைகள் :

அதிக அளவு எடை உள்ளவராக இருந்தால் எடை குறைக்க வேண்டும். நாள் தவறாத உடற்பயிற்சியும், உணவுக்கட்டுப்பாடும் அவசியம். அதிக கொழுப்பு மிக்க பால் பொருட்கள், சாக்லெட், ஐஸ்கிரீம், ஆட்டிறைச்சி, எண்ணெய் பலகாரம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

Similar Threads: