கறிவேப்பிலைப் பொடி

தேவையானவை:
கறிவேப் பிலை - ஒரு கப், மிளகு - 10, சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு சேர்த்து, நன்கு வறுத்து தனியே எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில், கறிவேப்பிலையைப் போட்டு நன்கு வறுக்கவும். அது ஆறியதும், 'மொறுமொறு'வென ஆகிவிடும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றாக்கி, உப்பு சேர்த்து ஈரமில்லாத மிக்ஸியில் பொடிக்க... சுவையான கறிவேப்பிலைப் பொடி ரெடி!
சூடான சாதத்தில், இந்தப் பொடியுடன் நெய் அல்லது எண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்.
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இளநரை மாறும்.

Similar Threads: