Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

ஸ்போர்ட் கட்டும், பாப் கட்டும்


Discussions on "ஸ்போர்ட் கட்டும், பாப் கட்டும்" in "Hair Care & Hair Removal" forum.


  1. #1
    sudhar's Avatar
    sudhar is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,044

    ஸ்போர்ட் கட்டும், பாப் கட்டும்

    விதவிதமான ஆடை அணியும்போது, அதற்கு பொருத்தமான ஹேர் ஸ்டைல் செய்து கொண்டால்தானே நன்றாக இருக்கும்.


    ஸ்போர்ட் கட்: நீளமான முகம், பெரிய கண்கள் கொண்ட பெண்களுக்கு, இந்த வகை முடியலங்காரம் நன்றாக இருக்கும். இந்த அலங்காரம் உங்களின் நீண்ட முகத்தை வட்டமாகக் காட்ட உதவும். முதலில் முடியை நாலாபுறமும் சிறுசிறு லேயராக எடுத்து வெட்டவும். நெற்றி பகுதியிலும் சிறிய லேயராக எடுத்து வெட்டவும். இதனால், பெரிய காதுகளாக இருந்தாலும், அவை மறைந்தது போலத் தெரியும்; நெற்றியும் சிறியதாகத் தெரியும்.


    இன்வெர்ட்டட் லேயர் கட்: இந்த வகை முடியலங்காரம், சதுர வடிவ முகம் கொண்ட பெண்களுக்கு ஏற் றது. முதலில் கழுத்துப் பகுதியில் இருக்கும் முடியை சிறிதாக வெட்ட வேண்டும். கழுத்துப் பகுதியை மறைக்க, நீள முடிகளையும் கத்தரிக்கவும். இப்போது சதுர முகம், வட்ட முகமாய்க் காட்சி அளிக்கும்.


    ஷார்ட் பாப் கட்: வட்ட முகம் கொண்ட பெண்களுக்கு, இவ்வகை முடியலங்காரம் பொருத்தமாக இருக்கும். இதில் தலையின் நடுவில் உள்ள முடிகளை மட்டும் விட்டு விட்டு, இருபுறமும் உள்ள முடிகளை வெட்ட வேண்டும். அதே போல், நெற்றியின் மேல் உள்ள முடிகளையும் சீராக வெட்டிக் குறைக்கவும்.

    Similar Threads:

    Sponsored Links
    In reality there is only Now. If you know how to handle this moment you know how to handle the whole eternity-Jaggi vasudev .

    regards
    Sudha.R

  2. #2
    sudhar's Avatar
    sudhar is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,044

    Re: ஸ்போர்ட் கட்டும், பாப் கட்டும்

    ஸ்பைக் கட்: எல்லாருக்கும் ஏற்றது. தலையின் நாலாபுறமும் சிறு சிறு லேயர்களாக முடியை எடுத்து வெட்டவும். பின்னர் தலையின் நடுவிலும், முன்புறமும் வெட்டவும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இவ்வகை ஹேர் கட் அழகாகவும், வசதியாகவும் இருக்கும். இந்த முடி அலங்காரம் செய்து கொண்டவர்கள் முடியை, "ப்ளீச்' செய்தால் இன்னும் அழகாகத் தெரியும்.


    லேயர் பிளான்டட் கட்: இந்த வகை முடியலங்காரத்தில் பலவிதம் உண்டு. ஹேர் டிரையர் மூலம் பல பிளான்டட் கட் செய்யலாம். நெற்றியில் முடிக்கற்றைகள் வந்து விழுமாறு அலங்காரம் செய்யப்படும். எல்லா வகை முகத்துக்கும் ஏற்றது இந்த முடியலங்காரம்.


    ஒற்றைச் சடை போட்டால்...: ஒற்றைச் சடை போட்டுக் கொள்ளும் பெண்கள், கழுத்தில் மெல்லிய சங்கிலியும், காதுகளில் அகலமில்லாத கம்மலும் அணிந்து கொண்டால், எடுப்பாக இருக்கும்.


    இரட்டைப் பின்னல் போட்டால்...: பெண்கள் இரட்டைப் பின்னல் போட்டு தொங்க விட்டுக் கொண்டால், காதுகளில் ஜிமிக்கி போன்ற தொங்கும் கம்மல் அணிந்து கொண்டால், தோற்றத்தில் எழில் தவழும்.


    குதிரைவால் கொண்டை...: குதிரை வால் பின்னல் போட்டுக் கொள்ளும் பெண்கள், காதுகளில் வளையங்கள் அணிந்து கொண்டால், கவர்ச்சியாக இருக்கும்.


    நடுத்தர வயது பெண்களுக்கு கூந்தல் அலங்காரம்...: ஏறத்தாழ, 30 வயதைத் தாண்டி விட்ட பெண்கள். பின்னல் போட்டுக் கொள்வதுதான் பொருத்தமான அழகைத் தரும். பன் கொண்டை அல்லது ரிங் கொண்டை அந்த வயதுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.


    சுருள் சுருளாக கூந்தல் இருந்தால்...: கூந்தல் சுருள் சுருளாக அமைந்திருக்கக் கூடிய பெண்கள், பின்னல் போட்டுக் கொண்டால், முனையை அப்படியே விட்டு விடலாம்; அப்போதுதான், அவர்களுக்கு அழகாக இருக்கும்.

    In reality there is only Now. If you know how to handle this moment you know how to handle the whole eternity-Jaggi vasudev .

    regards
    Sudha.R

  3. #3
    a_hat's Avatar
    a_hat is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    சிங்கார சென்னை
    Posts
    2,047
    Blog Entries
    29

    Re: ஸ்போர்ட் கட்டும், பாப் கட்டும்

    இவ்வளவு இருக்கா நன்றி பகிர்தமைக்கு

    Everything is "Pre-Written " .Nothing Can "Re-Written "
    Live The Best & Leave The Rest To God

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter