User Tag List

Hair Care Tips in Summer - கோடையில் கூந்தல் காப்போம்!


Discussions on "Hair Care Tips in Summer - கோடையில் கூந்தல் காப்போம்!" in "Hair Care & Hair Removal" forum.


 1. #1
  chan's Avatar
  chan is online now Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,617

  Hair Care Tips in Summer - கோடையில் கூந்தல் காப்போம்!

  கோடையில் கூந்தல் காப்போம்!

  ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்

  1. வெயிலில் எங்கே சென்றாலும் உங்கள் தலைமுடி முழுவதும் மூடும் படியாக தலைக்குத் துணி கட்டிக் கொள்ளுங்கள். இது உங்கள் கூந்தலுக்கு வெயிலின் புறஊதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு தருவதுடன், கூந்தல் தன் ஈரப்பதத்தை இழக்காமலிருக்கவும் உதவும். தொப்பி அணிவதன் மூலம் சூடான காற்றினால் கூந்தல் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். குறிப்பாக அடிக்கடி சிக்காகும் கூந்தலுக்கும் கலரிங் செய்யப்பட்ட கூந்தலுக்கும் இது பாதுகாப்பு தரும்.

  2.அடிக்கிற வெயிலுக்கு அள்ளி முடிந்து கொண்டு கல்லூரிக்கோ, அலுவலகத்துக்கோ செல்வோமா என்றுதான் தோன்றும். ஒற்றை முடி உடலில் பட்டால் கூட உறுத்தும். ஆனால், கோடையில் கூந்தலை இறுகக் கட்டிக் கொள்வதோ, பின்னிக் கொள்வதோ கூடாது. தளர்வான ஹேர் ஸ்டைல்களே சிறந்தவை.

  3.தினசரி தலைக்குக் குளிப்பதன் மூலம் உங்கள் மண்டைப் பகுதியின் இயற்கையான எண்ணெய் பசை முற்றிலும் நீங்கிவிடும். எனவே, தினமும் தலைக்குக் குளிப்பதைத் தவிர்த்து, கடற்கரை பக்கம் போய் வந்தாலோ, நீச்சலடித்தாலோ உடனே தலையை அலசலாம். கூடியவரையில் கெமிக்கல் கலந்த ஷாம்புவை தவிர்த்து வீட்டிலேயே தயாரித்த மைல்டான ஷாம்புவால் கூந்தலை அலசுவது சிறந்தது.

  4. சிலருக்கு எப்போது தலைக்குக் குளித்தாலும் உடனே ட்ரையர் உபயோகித்து காய வைப்பது வழக்கம். வெயில் காலத்தில் ஏற்கனவே அதிக சூட்டை சந்திக்கிற கூந்தலுக்கு செயற்கையாகவும் ப்ளோ ட்ரையர் மூலம் சூட்டைத் தர வேண்டாம். அதே போல கூந்தலை அயர்ன் செய்வதையும் தவிர்க்கவும்.

  5.ஒரு பாட்டில் தண்ணீரில், 1 டீஸ்பூன் கற்றாழை ஜூஸ் மற்றும் 1 டீஸ்பூன் அவகடோ ஆயில் கலந்த கலவையை எப்போதும் கைவசம் வைத்திருங்கள். உங்கள் கூந்தல் ரொம்பவும் வறண்டது போல உணர்ந்தால் இந்தக் கலவையை கூந்தலில் ஸ்பிரே செய்து கொள்ளுங்கள்.

  6.தலைக்குக் குளிக்கும்போது ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீரில் நீர்க்கக் கரைத்து இயற்கையான கண்டிஷனராக உபயோகிக்கலாம். வாரம் ஒருமுறை உங்கள் கூந்தலுக்கு டீப் கண்டிஷனிங் சிகிச்சை மேற்கொள்ளுங்கள். அது உங்கள் கூந்தலை வறண்டு போகாமலும் பளபளப்புடனும் வைத்திருக்க உதவும்.

  7. நீச்சல் பழக்கம் உள்ளவரா? நீச்சலடித்து முடித்து வெளியே வந்ததும் 2 கப் தண்ணீரில் கால் கப் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து கூந்தலை அலசுங்கள். இது நீச்சல் குளத்தின் தண்ணீரால் உங்கள் கூந்தல் பொலிவிழப்பதைத் தவிர்க்கும். இதே சிகிச்சையை நீச்சலுக்கு முன் செய்வதன் மூலம், குளத்துத் தண்ணீரில் உள்ள அதிகப்படியான குளோரின் உங்கள் கூந்தலில் படியாமல் காக்கப்படும்.

  8. யுவி பாதுகாப்புடன் இன்று நிறைய ஷாம்புகள் வருகின்றன. ஆனால், அவையெல்லாம் கெமிக்கல் கலந்தவை என்பதால் கூந்தலை பாதிக்கும். எனவே, உங்கள் முகம் மற்றும் உடல் பகுதிகளுக்கு சன் ஸ்கிரீன் தடவி முடித்ததும் அந்தக் கைகளை கழுவாமல் அப்படியே கூந்தலுக்குள் விட்டு எடுப்பது சின்ன அளவில் யுவி கதிர்களிடமிருந்து பாதுகாப்பளிக்கும்.

  9. வழக்கம்போல தலைக்கு ஷாம்பு குளியல் எடுக்கவும். பிறகு சம அளவு தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் அவகடோ எண்ணெய் கலவையால் (மிகக் குறைந்த அளவு) நுனி முதல் வேர்க்கால் வரை மசாஜ் செய்யவும். (பொதுவாக எண்ணெய் தடவும் போது மேலிருந்து கீழாகத் தடவுவோம். அப்படிச் செய்ய வேண்டாம்) பிறகு தலையை அலசவும். இது உங்கள் கூந்தலுக்கு அற்புதமான ஈரப்பதத்தைக் கொடுக்கும். அதே நேரம் பிசுபிசுப்பின்றியும் வைக்கும்.

  10.கூடிய வரையில் வெயில் முடிகிற வரை கெமிக்கல் சிகிச்சைகளைத் தவிர்க்கவும். குறிப்பாக கலரிங் செய்வதைத் தவிர்க்கவும்.

  11. கோடைக்காலத்தில் இரவிலும் உங்கள் கூந்தலுக்குப் பாதுகாப்பு அவசியம். வறண்டு, நுனிகள் வெடித்திருக்கும் கூந்தல் பகுதிகளில் லீவ் ஆன் கண்டிஷனரை தடவி, காட்டன் துணியால் கட்டிக் கொண்டு தூங்கவும். காலையில் வறட்சியோ, சிக்கோ இல்லாத, ஈரப்பதமுள்ள கூந்தலுடன் எழுவீர்கள்.

  12. ஷாம்புகளில் சேர்க்கப்படுகிற சல்ஃபேட்தான் அதை நுரைக்கச் செய்கிறது. அதுவும், ஷாம்புவில் சேர்க்கப்படுகிற பாரபெனும் கூந்தலுக்கு உகந்தவை அல்ல. இவை இல்லாத ஷாம்புவாக தேர்ந்தெடுங்கள். காலங்காலமாக உபயோகிக்கிற ஷாம்புதான் சிறந்தது என்கிற எண்ணத்தைத் தவிர்த்து உங்கள் கூந்தலுக்கு ஏற்ற ஷாம்புவை தேர்ந்தெடுங்கள்.

  உதாரணத்துக்கு சுருட்டையானதும் வறண்டதுமான கூந்தலுக்கு Softening ஷாம்புவும், அதிக எண்ணெய் பசையான கூந்தலுக்கு தினசரி உபயோகத்துக்கானது எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஷாம்புவும், கலரிங் அல்லது கெமிக்கல் சிகிச்சை செய்யப்பட்ட கூந்தலுக்கு அமினோ ஆசிட் செறிவூட்டப்பட்ட ஷாம்புவும் உகந்தவை. மிகவும் வறண்ட கூந்தலுக்கு கிளிசரின் மற்றும் கொலாஜன் கலந்த ஷாம்பு சரியானது.

  அடிக்கிற வெயிலுக்கு அள்ளி முடிந்து கொண்டு கல்லூரிக்கோ, அலுவலகத்துக்கோ செல்வோமா என்றுதான் தோன்றும். ஒற்றை முடி உடலில் பட்டால் கூட உறுத்தும். ஆனால், கோடையில் கூந்தலை இறுகக் கட்டிக் கொள்வதோ, பின்னிக் கொள்வதோ கூடாது. தளர்வான ஹேர் ஸ்டைல்களே சிறந்தவை.

  2. கோடைக் கூந்தலுக்கு குளுகுளு வீட்டு சிகிச்சை

  அழகுக் கலை ஆலோசகர் ராஜம் முரளி

  *கொட்டை நீக்கிய நெல்லிக்காய் - 4, ஆய்ந்து சுத்தப்படுத்திய வெந்தயக்கீரை - 1 கப். இரண்டையும் அரைத்து, 100 மி.லி. நல்லெண்ணெயில் சேர்த்து குறைந்த தணலில் கொதிக்க வைக்கவும். தெளிந்து வந்ததும் இறக்கி, வடிகட்டி வைத்துக் கொண்டு வாரம் 2 முறை தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும். வியர்வையால் கூந்தலில் ஏற்படுகிற பிசுபிசுப்பு, வாடை நீங்கி, தலை முதல் பாதம் வரை குளிர்ச்சியாக்கும் இந்த எண்ணெய்.

  *ஒரு கப் துளசி, நான்கு வேப்பந்தளிர், விதை நீக்கிய நெல்லிக்காய் 2 ஆகியவற்றை அரைத்து, ெகட்டி யான சாறு எடுத்துக் கொள்ளவும். தலையை நன்கு வாரிவிடவும். பிறகு அரைத்ததை அப்படியே தலையில் தடவிக் கொண்டு, 15 நிமிடங்கள் கழித்து அலசவும். இது தலைப்பகுதியில் வியர்வையைக் கட்டுப்படுத்தும். கூந்தலை மிருதுவாக்கும். கெட்ட வாடை இல்லாமல் வைக்கும். குளிர்ச்சியையும் கொடுக்கும்.

  ஓர் இளநீரின் தண்ணீர் மற்றும் வழுக்கையை அரைத்து, அதில் 2 டீஸ்பூன் வெந்தயத் தூள் சேர்த்து தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும். இளநீர் சூட்டைத் தணித்து, கூந்தல் வளர்ச்சியைத் தூண்டும். வெந்தயத் தூள், சுற்றுப்புற மாசினால் கூந்தலின் மெருகு குறையாமல் காக்கும்.

  2 பூந்திக்கொட்டையை விதை நீக்கி, 2 டீஸ்பூன் வெந்தயம் மற்றும் 2 டீஸ்பூன் தயிருடன் முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் அரைத்து வடிகட்டி, ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறு சேர்த்துக் கலக்கவும். இதை அப்படியே தலையில் தடவிக் கொண்டு அலசவும். தயிரில் உள்ள ஈஸ்ட் கண்டிஷனராக செயல்பட்டு பொடுகை நீக்கும். பூந்திக் கொட்டை ஷாம்பு போல நுரைத்து வந்து, கூந்தலை சுத்தப்படுத்தும்.

  2 சின்ன வெங்காயத்துடன், 1 கப் செம்பருத்தி இலை சேர்த்து அரைத்து வடிகட்டிய சாற்றில் 2 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து தலையில் பேக் போல தடவி, சிறிது நேரம் ஊறி அலசவும். கோடையில் ஏற்படுகிற கூந்தல் பிசுபிசுப்பை நீக்கி, முடி உதிர்வுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்.
  கூந்தல் பட்டு போல மென்மையாக மாறும்.

  ஓர் இளநீரின் தண்ணீர் மற்றும் வழுக்கையை அரைத்து, அதில் 2 டீஸ்பூன் வெந்தயத் தூள் சேர்த்து தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும். இளநீர் சூட்டைத் தணித்து, கூந்தல் வளர்ச்சியைத் தூண்டும். வெந்தயத் தூள், சுற்றுப்புற மாசினால் கூந்தலின் மெருகு குறையாமல் காக்கும்.


  (வளரும்!)


  Similar Threads:

  Sponsored Links

 2. #2
  kanikadugal011 is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jan 2016
  Location
  Ludhiana
  Posts
  146

  Re: Hair Care Tips in Summer - கோடையில் கூந்தல் காப்போம்!

  Valuable information. Thanks


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter