Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree3Likes
 • 3 Post By chan

கூந்தல் வளர்க்கும் ரகசியங்கள்!


Discussions on "கூந்தல் வளர்க்கும் ரகசியங்கள்!" in "Hair Care & Hair Removal" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,551

  கூந்தல் வளர்க்கும் ரகசியங்கள்!

  கூந்தல் வளர்க்கும் ரகசியங்கள்!

  ஆறடிக் கூந்தலும், 60ஐ கடந்த பிறகும் நரைக்காத தலையும் அந்தக் காலத்து மனிதர்களுக்கு சர்வ சாதாரணமாக சாத்தியமானது. ஆனால், இன்றோ 15ஐ கடக்கும் முன்பே நரை... 20 பிளஸ்சில் வழுக்கை... 30 பிளஸ்சில் மொத்தமும் சொட்டை என கூந்தல் பிரச்னைகள் ஒருவரையும் விட்டுவைப்பதில்லை.

  ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்

  கற்றாழை உடலுக்கும் கூந்தலுக்கும் குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியது. வெயிலில் அலைவதால் கூந்தல் பாதிக்கப்படுவதைத் தவிர்த்து பட்டு போல மென்மையாக வைக்கக்கூடியது.

  அவர்களுக்கு சாத்தியமானது நமக்கு மட்டும் ஏன் முடிவதில்லை என எப்போதாவது யோசித்திருப்பீர்களா? அவர்களுக்கு கூந்தல் என்பது அவர்களின் ஆளுமையின் அடையாளமாக இருந்தது. அவர்கள் இயற்கையை மதித்தார்கள்... நேசித்தார்கள்... இயற்கை வழி வாழ்ந்தார்கள்... இவையே காரணம். எல்லாவற்றையும்விட முக்கியமாக அவர்கள் கூந்தல் அழகுக்கு எந்த செயற்கையான வழிகளையும் சிகிச்சைகளையும் நாடவில்லை.

  அழகான, அடர்த்தியான, நீளமான கூந்தல் என்பதைப் பெருமைக்குரிய விஷயமாகக் கருதினார்கள். செடிகள், மூலிகைகள் போன்றவற்றைக் கொண்டு அவர்களே கூந்தல் அழகு மற்றும் ஆரோக்கியத்துக்கான அனைத்துப் பொருட்களையும் தயாரித்துக் கொண்டார்கள்.

  அப்படி அவர்கள் கூந்தல் பராமரிப்புக்குப் பின்பற்றிய சில விஷயங்களைத் தெரிந்து கொள்வோமா?

  * நெல்லிக்காய்க்கு இளமையைத் தக்க வைக்கிற குணம் உண்டு என்பதை அறிவோம். இந்தியாவில் வாழ்ந்த மூதாதையர் கூந்தல் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் நெல்லிக்காயில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெயை உபயோகித்திருக்கிறார்கள். இரும்புச்சத்தும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்டும் அதிகமுள்ள அந்த எண்ணெய் அவர்கள் கூந்தலை கருகருவென்றும் அடர்த்தியாகவும் வைத்தது.

  *ஹென்னா என்பதை கூந்தலுக்கு சாயம் ஏற்றுகிற பொருளாகத்தான் நாம் அறிவோம். அந்தக் காலத்தில் அதை பொலிவிழந்த, மெலிந்த கூந்தலுக்கு ஊட்டம் ஏற்றும் பொருளாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

  *வீட்டுக்கு வீடு கற்றாழை வளர்த்து அதன் ஜெல் போன்ற பகுதியை கூந்தலுக்குப் பயன்படுத்தினார்கள். கற்றாழை உடலுக்கும் கூந்தலுக்கும் குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியது. வெயிலில் அலைவதால் கூந்தல் பாதிக்கப்படுவதைத் தவிர்த்து பட்டு போல மென்மையாக வைக்கக்கூடியது.

  *ரோஸ்மெரி என்பதை இன்றைய மாடர்ன் சமையலுக்கு அடிக்கடி பயன்படுத்துகிறோம். மண்டைப் பகுதியில் ரத்த ஓட்டத்தைத் தூண்டி, மயிர்க்கால்கள் நன்கு சுவாசிக்க வழி செய்து, அதன் மூலம் கூந்தல் வளர்ச்சிக்கும் உதவும் தன்மை அதற்கு உண்டு என்பதை அந்தக் காலத்து மனிதர்கள் அறிந்திருந்தனர். ரோஸ்மெரிக்கு இளநரையை விரட்டும் ஆற்றலும் உண்டாம்.

  * மேற்கு ஆப்பிரிக்காவில் கருப்பு சோப்பு என்பதை கூந்தலுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய், கோகோ, வாழைக்காய் தோல் ஆகியவற்றைக் கொண்டு தயாரித்த அந்த பிளாக் சோப்பு, சரும அழகு, கூந்தல் அழகு என இரண்டையும்
  காக்கும் டூ இன் ஒன்னாக இருந்ததாம்.

  * சீனாவில் டீ சீட் ஆயில் (Tea seed oil) என்கிற எண்ணெயைப் பயன்படுத்தினார்களாம். அது ஆலிவ் எண்ணெய்க்கு இணையான அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களைக் கொண்டதாம். இந்த எண்ணெய் கூந்தல் வளர்ச்சியை அதிகரித்ததாகவும், கூந்தலுக்கு கருமை நிறத்தைக் கொடுத்ததாகவும்
  அவர்கள் நம்பினார்கள். இமைகளுக்கு உபயோகிக்கிற மஸ்காராவில் கூட இந்த எண்ணெயை ரகசிய இடுபொருளாக அவர்கள் இப்போதும் பயன்படுத்துவதாகத் தகவல்.

  கூந்தல் வளர்க்கும் ரகசியங்கள்!

  அந்தக் காலத்துப் பெண்கள், தினமும் தலைக்குத் தேங்காய் எண்ணெய் வைக்கத் தவறியதில்லை. அதன் மூலம் அவர்களது கூந்தலை வறண்டு போகாமல் காத்தார்கள். இன்று தலைக்கு எண்ணெய் வைப்பது என்பது ஏதோ செய்யக்கூடாத விஷயம் என்கிற மாதிரி ஆகிவிட்டது. இந்தத் தலைமுறைப் பெண்களுக்கு கூந்தலில் எண்ணெய் பசையே தெரியக்கூடாது.

  அதே நேரம் எந்த ஹேர் ஸ்டைல் செய்தாலும் கூந்தல் அதற்கு வளைந்து கொடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. இளம் தேங்காயிலிருந்து தயாரிக்கப்படுகிற தேங்காய் எண்ணெய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று அவர்கள் நம்பியது மூட நம்பிக்கையாக இருந்தாலும், அப்படி எண்ணெய் வைப்பதன் மூலம் அவர்களது கூந்தலின் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டது.

  தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவுவதன் மூலம், மண்டைப்பகுதி வறண்டு போகாமல் காக்கப்படும். நுனிப் பிளவு இருக்காது. கூந்தல் தேங்காய் நார் போல முரடாக மாறாது. பிரச்னைகள் இல்லாத கூந்தல் இயற்கையாகவே ஆரோக்கியமாக வளரும்தானே?கூந்தல் என்பது ஒரு வருடத்துக்கு 6 இன்ச் அளவு வளரும். அது வறண்டு, உடைந்து, உதிர்ந்து கொண்டிருந்தால் எப்படி வளரும்? எனவே, கூந்தலுக்கு தேங்காய் எண்ணெயோ, ஆலிவ் எண்ணெயோ, பாதாம் எண்ணெயோ உபயோகித்து வறண்டு போகாமல் காக்கும்பட்சத்தில் உங்கள் கூந்தலும் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

  தேங்காய்ப் பாலில் ஊற வைத்து அரைத்த வெந்தயத்தைத் தலைக்குத் தடவிக் குளிப்பதன் மூலம் நீளமான முடியைப் பெறலாம்.கூந்தலுக்கு போதிய ஓய்வு கொடுக்க வேண்டியதும் அவசியம். எந்நேரமும் கூந்தலைக் கோதிக் கொண்டும், வாரிக் கொண்டும் இல்லாமல் வீட்டில் இருக்கும் போது பின்னல் போட்டு தொந்தரவு செய்யாமல் விட்டுவிட வேண்டும்.

  கூந்தல் வளர்ச்சியில் உணவுக்கு மிக முக்கிய பங்குண்டு. கறிவேப்பிலையும் கீரைகளும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.தயிரில் ஊற வைத்த வெந்தயமும் கூந்தலுக்கு நல்லது செய்யும். நட்ஸ், பேரீச்சம்பழம், மீன் மற்றும் வைட்டமின் பி அதிகமுள்ள உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நீளமான கூந்தலுக்கு வழி செய்யும்.

  ஷாம்பு வேண்டாம்... சீயக்காய்க்கு மாறுங்கள்!

  சீயக்காய் பொடி கூந்தலை இயற்கையான முறையில் சுத்தம் செய்து, பாதுகாக்கும். பொடுகும் இளநரையும் வராமல் தடுக்கும். ஷாம்புவில் உள்ளது போல எஸ்.எல்.எஸ், பாரபென், சிலிக்கான் என எந்த கெமிக்கலும் அதில் இல்லை. கெமிக்கல் இல்லாத ெபாருட்கள் நல்லது செய்கின்றனவோ இல்லையோ, கெடுதலை ஏற்படுத்தாது என்பது நிச்சயம். எனவே, முழுக்க சீயக்காய்க்கு மாற முடியாதவர்கள், அவ்வப்போது ஒரு மாறுதலுக்கு சீயக்காய் குளியலை முயற்சி செய்யலாம். மெல்ல மெல்ல மாறலாம்.


  (வளரும்!)  Sponsored Links
  gkarti, ahilanlaks and Naemira like this.

 2. #2
  ahilanlaks's Avatar
  ahilanlaks is offline Ruler's of Penmai
  Real Name
  Athilakshmi Ahilan ( Bhuvana )
  Gender
  Female
  Join Date
  Mar 2015
  Location
  Chennai
  Posts
  12,408

  Re: கூந்தல் வளர்க்கும் ரகசியங்கள்!

  Nice info ji

  ​Bhuvana Ahilan

  Love Makes Life Beautiful

 3. #3
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,456

  Re: கூந்தல் வளர்க்கும் ரகசியங்கள்!

  Semma Lakshmi!


 4. #4
  bhuv is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2012
  Location
  villupuram
  Posts
  331

  Re: கூந்தல் வளர்க்கும் ரகசியங்கள்!

  very nice and useful info


 5. #5
  Naemira's Avatar
  Naemira is offline Penman of Penmai
  Blogger
  Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Oct 2015
  Location
  tuticorin
  Posts
  1,109

 6. #6
  arcmppa1 is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2013
  Location
  chennai
  Posts
  288

  Re: கூந்தல் வளர்க்கும் ரகசியங்கள்!

  HI,

  nice and useful info


 7. #7
  kanikadugal011 is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jan 2016
  Location
  Ludhiana
  Posts
  146

  Re: கூந்தல் வளர்க்கும் ரகசியங்கள்!

  very Nice information. Thanks ji.


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter