Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree242Likes

Your Way of Shikakai Preparation?!


Discussions on "Your Way of Shikakai Preparation?!" in "Hair Care & Hair Removal" forum.


  1. #21
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: Your Way of Shikakai Preparation?!

    உபயோகமான திரி கார்த்தி, நன்றி.

    நன்றி மக்களே, சிகக்காய் தூள் தயாரிப்பு பற்றி அவரவர்களின் முறைகளைப் பகிர்ந்தமைக்கு.

    கார்த்தி வீட்டுத் தயாரிப்பு எல்லாம் பள்ளிப் பருவத்தோடயே போச்சு. இப்ப எல்லாம் நீங்க சொல்ற மாதிரி ஷாம்ப்பூ தான் .



    Sponsored Links

  2. #22
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,137

    Re: Your Way of Shikakai Preparation?!

    Kaa Kaa... Damalllll..

    Antha thayarippai Konjam Solungalen..
    Quote Originally Posted by sumathisrini View Post
    உபயோகமான திரி கார்த்தி, நன்றி.

    நன்றி மக்களே, சிகக்காய் தூள் தயாரிப்பு பற்றி அவரவர்களின் முறைகளைப் பகிர்ந்தமைக்கு.

    கார்த்தி வீட்டுத் தயாரிப்பு எல்லாம் பள்ளிப் பருவத்தோடயே போச்சு. இப்ப எல்லாம் நீங்க சொல்ற மாதிரி ஷாம்ப்பூ தான் .



  3. #23
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: Your Way of Shikakai Preparation?!

    Quote Originally Posted by gkarti View Post
    Kaa Kaa... Damalllll..

    Antha thayarippai Konjam Solungalen..
    அம்மா தான் செய்வாங்க டா... Measurement எல்லாம் தெரியாது. Ingredeints மட்டும் தான் தெரியும்... அதைச் சொல்றேன்.

    • சீயக்காய்
    • முழு பாசிப் பயறு
    • வெந்தயம்
    • காய வெச்ச செம்பருத்தி இலை மற்றும் எலுமிச்சை மூடி

    இதையெல்லாம் ஒண்ணா மிஷினில் அரைத்து சாதம் வடிச்ச கஞ்சித் தண்ணில சீயக்காய் பொடியைக் கலந்து தேய்த்து முடியை அலசுவோம். அந்த வாசனையே அலாதி சுகமா இருக்கும்.



  4. #24
    Strawberry's Avatar
    Strawberry is offline Citizen's of Penmai
    Real Name
    ishu
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    656

    Re: Your Way of Shikakai Preparation?!

    Tfs for thread n tips.
    Before marriage nanum meera pwd than.
    After marriage shampoo than.I've long hair.


    Ishu..
    Ur Dream Is Ur Signature..

  5. #25
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,137

    Re: Your Way of Shikakai Preparation?!

    Heavy ah Likeren Kkow.. Naanum Try Panna Poren..


    Quote Originally Posted by sumathisrini View Post


    அம்மா தான் செய்வாங்க டா... Measurement எல்லாம் தெரியாது. Ingredeints மட்டும் தான் தெரியும்... அதைச் சொல்றேன்.

    • சீயக்காய்
    • முழு பாசிப் பயறு
    • வெந்தயம்
    • காய வெச்ச செம்பருத்தி இலை மற்றும் எலுமிச்சை மூடி

    இதையெல்லாம் ஒண்ணா மிஷினில் அரைத்து சாதம் வடிச்ச கஞ்சித் தண்ணில சீயக்காய் பொடியைக் கலந்து தேய்த்து முடியை அலசுவோம். அந்த வாசனையே அலாதி சுகமா இருக்கும்.



  6. #26
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,137

    Re: Your Way of Shikakai Preparation?!

    Nice to Know, Ishu!

    Quote Originally Posted by Strawberry View Post
    Tfs for thread n tips.
    Before marriage nanum meera pwd than.
    After marriage shampoo than.I've long hair.


    sumathisrini and naanathithi like this.

  7. #27
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Your Way of Shikakai Preparation?!

    நாம் கல்லூரி படித்து முடிக்கும் வரை அரப்பு,சீகக்காய் போட்டு தான் குளிப்பேன்.எனக்கு இடுப்பு வரை அடத்தியான நல்ல முடி இருந்தது.என் 25 வயது வரை நான் ஷாம்பூ use செய்தது இல்லை.

    எங்கள் பெற்றோர்கள் கிராமத்தில் இருந்ததால் தோட்டத்தில் இருந்த அரப்பு மரத்தில் இருந்து இலை பறித்து வந்து உலர்த்தி,நன்றாக காய்ந்ததும் உரலில் ஆள்களை வைத்து இடித்து வைத்து கொள்வோம்.

    அரப்பு குளிச்சி, சீகக்காய் சூடு ,அதனால் இரண்டையும் கலந்து use செய்வோம் .அதனால் குளிர்ச்சி ஒத்து கொகொள்ளாதவர்களுக்கு சீகக்காய் கலந்து use செய்யும் போது,சமன் பட்டுவிடும்,அது போல் சீகக்காய் சூடு ஒத்து கொகொள்ளாதவர்களுக்கு அரப்பு குளிர்ச்சி தரும்

    அரப்பு முக்கால் பங்கு எடுத்து கொண்டாள்,2 டேபிள்ஸ்பூன் அளவு சீகக்காய் எடுத்து சாதம் வடித்த கஞ்சி இருந்தால் அதில் கலந்து கொள்வோம்,இல்லை என்றால் வெறும் நீரில் கலந்து தேய்ப்போம்.

    அரப்பு போட்டு தலைக்கு குளிப்பது அவ்வளவு கடினம் இல்லை.அது ஷாம்பூ போல் நுரைத்து வரும்,அதில் சீகக்காய் கலந்து தேய்த்தால் மிகவும் எளிதாக தேய்த்து விடலாம் ,குனிந்து முடியை முன்னாள் போட்டு தேய்த்தால்,கண்ணில் படாமல் ,நன்றாக இருமுறை தேய்த்து குளித்தால்,குளிர்ச்சியாக இருக்கும்.

    சீகக்காய் எங்கள் வீட்டில்,பாசி பயறு,எலுமிச்சை தோல்,வெந்தயம் ,செம்பருத்தி பூ உலர்ந்தது இருந்தால் (அளவு எல்லாம் கையில் எடுத்து போடுவது தான்.) அனைத்தையும் கலந்து மெஷினில் தந்து அரைப்பார்கள்.

    நாங்கள் அரப்பு உடன் கலந்து use செய்வதால் சீகக்காய் அரைக்கும் போது பூந்தி கொட்டை (soap nut)சேர்ப்பது இல்லை.வெறும் சீகக்காய் மட்டும் use செய்பவர்கள் soap nut சேர்த்து அரைத்தால் தேய்பதற்கு ஈஸி ஆக இருக்கும்.

    அந்த காலம் முதல் சீகக்காய் அரைக்க மெஷின் தேடுவது பெரும் பிரச்சினை தான் ,அவர்கள் சொல்லும் நாள் ,நேரம் கொண்டு செல்ல வேண்டும்.இந்த பிரச்சனையால் சில சமயம் அரைக்க முடியாமல் போய்விட்டால், சீகக்காய் பொடிக்கு பதிலாக, சிறிது சீகக்காய்யை அம்மியில் வைத்து வீட்டில் அரைத்து தருவார்கள்,அப்போது டிவி அவ்வளவு பிரபலம் இல்லை, அதனால் எல்லோருக்கும் நேரம் இருந்தது ,வேலை செய்தார்கள்,இப்போது கண்ட விளம்பரம் பார்த்து,எல்லோருக்கும் வேலை செய்வதற்கு சோம்பல்,அது தான் கடையில் கிடைகிறது என்று அனைத்தையும் வெளியில் வாங்க ஆரம்பித்து விட்டோம்.

    சில சமயம் சீகக்காய் அரைக்கும் போது மணத்துக்காக உலர்ந்த பன்னிர் ரோஜா,மரிகொழுந்து சேர்ப்பது உண்டு

    @ahilanlaks பூலங்கிழங்கு சேர்ப்போம் என்று கூறி இருக்கிறார் . பூலங்கிழங்கு குளிக்க அரைக்கும் நலங்கு மாவில் சேர்ப்பது ,நல்ல மணத்தை தரும்.பூந்தி கொட்டைக்கு பதிலாக பூலங்கிழங்கு என்று கூறி விட்டாரா ,pls புவனா தெளிவு படுத்தவும்.

    நான் இப்போது ஷாம்பூ use செய்கிறேன்.முடியை என் மூட் க்கு ஏற்ப நீளமாக,சில சமயம் குட்டையாக கட் செய்வேன்.இப்போது தோள் வரை தான் இருக்கிறது.

    நான் சிறு வயது முதல் தலைக்கு மருதாணி பேக் மாதம் ஒரு முறை போடுவதால் நாங்கள் சீகக்காய் அரைக்கும் போது மருதாணி போடுவது இல்லை.

    என் கணவர் இப்போதும் தலைக்கு எண்ணை வைத்து வார வாரம் குளிக்கும் போது சீகக்காய் போட்டு தான் குளிப்பார்.அவருக்காக நான் சர்வோதயாவில் சீகக்காய் பவுடர் வாங்கி வருவேன்.இந்த முறை அங்கு அரப்பு இருந்ததை பார்த்தேன் ,2 kg அரப்பு வாங்கி வந்தேன் நானும் use செய்யலாம் என்று ,இன்னும் use செய்யவில்லை.

    இப்போது கிராமத்தில் கூட ஷாம்பு விற்கு மாறி விட்டார்கள்.


  8. #28
    druchita is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2015
    Location
    chennai
    Posts
    1,045

    Re: Your Way of Shikakai Preparation?!

    hii
    this is my shikakai powder preaparation at home itself . It is good for hair also and i am using it for past few month . Let me see for the good changes hopefully.

    Ingredients which i used

    1. Shikakai 1 full packet
    2.fenugreek 1 packet ( for coolness)
    3.pasipayaru 1 "
    4.rose petals
    5.Hibiscus flowers and leaves .
    6.Kadla paruppu some
    7.Arisi some
    8. From flower shop , the remaing of the flowers like thulsi , marikolundu etc were dried
    9. black pepper some ( to avoid dandruff)

    My mom has prepared it for one year actually .


    All the ingredients were dried and powdered.

    I will apply gingelly oil before some 15 minutes on hair . Then mix this powder with water in sufficient quantity and apply on hair . rinse . You wont get effect foam like shampoo but proper drying after washing the hair helps .


    another imp thing is that u can also mix dry neem leaves for dandruff. We can dry some neem leaves. Even it is good to avoid dandruff as i have heard. It cures many burns in our head also and thats why during pox , we use it to apply the neem paste on heads.

    Last edited by druchita; 31st Aug 2016 at 01:24 PM.

  9. #29
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Your Way of Shikakai Preparation?!

    @gkarti

    வீட்டில் சீயக்காய் எந்த முறையில் அரைப்போம்னு கேட்டிருக்கீங்க.

    சின்ன வயசிலிருந்தே என் தலைக்கு பச்சை அரப்புதான் போட்டுத் தேச்சு விடுவாங்க.
    அந்த மரம் எங்க தெருவிலேயே இருந்ததா நினைவு. ஒரு ஆயா வந்து அரைச்சுத் தந்தால் அம்மா தேய்ப்பாங்க. நிறைய தண்ணீ விட்டு அலச வேண்டும். அரப்பு போக அலசணும்னா ஒரு டேம் காலியாயிடும்னு அம்மா சொல்லுவாங்க.

    அப்புறம் வேற ஊர் போனதும் அரப்புத் தூள் வாங்குவாங்க. சீயக்காய் பொடியுடன் கலந்து தேய்ப்பது வழக்கம். எங்க ஊரில் காந்தி ஆஸ்ரமத்தில் தரமான (பச்சை)அரப்பு பொடி கிடைக்கும். கல்யாணம் ஆகும்வரை சீயக்காயை விட அரப்புதான் நிறைய use பண்ணினேன்.

    (அதே போல கிணற்றுத் தண்ணிதான் தலைமுடிக்கு நல்லா இருந்தது. குழாய் தண்ணியெல்லாம் தலைக்கு காட்டவே மாட்டாங்க. இப்போ நிலைமை ரொம்ப மோசமா போச்சு, குளிக்க, குடிக்க RO வாடெர்னு ஆய்போச்சு. இன்னும் அம்மா வீடு போனால் கிணத்து தண்ணிதான். தலைக்கு வைக்கும் எண்ணையில் ஒரு மளிகைக் கடையே போட்டு காய்ச்சுவாங்க. தரையெல்லாம் எண்ணெய் கையால் புள்ளி வைச்சு ஸ்லோகம் சொல்லி தலைக்கு எண்ணெய் வைச்சு குளிச்ச சுகமான காலம் அது.)


    சீயக்கா அரைக்கனும்னா தனி மிஷின் போகணும். போனா அடுக்குத் தும்மல் வந்து படுத்தும். வேலையாள் இருந்தாத்தான் போகமுடியும்னு நிலைமை அப்போ.

    அரைக்க மிஷின் தேடுவது ஒரு பிரச்சனைன்னா, சீயக்காய் காய வைக்கறது ஒரு வேலை.

    சீயக்காய் ஒரு கிலோவுக்கு ஒரு ஆழாக்கு (200 gms) வெந்தயம், ஒரு ஆழாக்கு பச்சைப் பயறு, ஒரு பிடி அரிசி (
    இது என் மாமியார் போடுவது, என் அம்மா அரிசி சேர்த்தா முடி கொத்து கொத்தா உதிரும்னு போடவே மாட்டாங்க) சேர்த்து அரைப்பது பேசிக் மெதட்.

    அதுக்கு Improvisationன்னா, கை நிறைய காய்ஞ்ச மரிக்கொழுந்து (தவனம்), காய்ஞ்ச எலுமிச்சை தோலிகள், வீட்டில் பூத்த செம்பருத்தி பூக்கள், இலைகள்னு நிறைய காய வைச்சு சேர்ப்பது என் மாமியார் வழக்கம். சில சமயம் ரோஜா பூ காஞ்சது கூட போடுவோம்.

    shampoo, சோப்பு, மீரா ஹெர்பல் பவுடர் எல்லாம் நான் use பண்ணவே மாட்டேன். எண்ணெய் குளியல் இல்லைன்னா, வெறும் தலைக்கு சில சமயம் அரிசி கஞ்சி போட்டு குளிப்பது வழக்கம்.

    அப்புறம் சீயக்காய்ன்னா என்னன்னே தெரியாத ஆந்திராவில் வாசம். அங்கே அரை mug வெந்நீரில்
    கொட்டை நீக்கின புங்கங்கா (இதை பூந்தி கொட்டைன்னும் சொல்லுவாங்க)
    கை நிறைய அள்ளிபோட்டு ஊற வைச்சு சூடு கை பொறுக்கும் அளவுக்கு வந்ததும் கையால் கசக்கி தலையில் தேய்ச்சிப்பாங்க.
    அது ஸ்மெல் எனக்கு பயங்கர உவ்வே...யா இருக்கும்.

    ஆனா வேற வழியில்லாம அதைதான் use பண்ணியிருக்கேன்.

    ஊரிலிருந்து 5 kgs போல சீயக்கா அரைச்சு எடுத்துட்டுப் போனா கட்டி தட்டி ஸ்மெல் போயிடும். அப்புறம் மீரா பவுடர் கலந்து சீயக்காய் பொடி போட்டிருக்கேன்.


    கொஞ்ச நாள் கேரளாவில் வாசம். அங்கத்திய தண்ணிக்கு தலை முடி கருகரு, பளபள...வெறும் தண்ணியில் குளிக்கவே இப்படி. சீக்காய் போட்டு பாங்கா பார்த்துக்கிட்டா நல்லா இருந்தது.


    இங்கே புலி மார்க் சீயக்காய் தூள் கிடைக்குது, அது சீயக்காய்ன்னு சத்தியம் பண்ணா கூட நம்ப முடியலை. நல்ல வேளை, என்னோட அண்ணன் நல்ல தரமான காதி கிராப்ட் சீக்காய் பொடின்னு வருஷா வருஷம் வாங்கித்தரதால் பொழப்பு ஓடுது.


    ஊரில் இருந்தால் அதிக அளவு அரைக்காமல் மாதம் ஒரு கிலோ பொடி அரைச்சு வைக்கலாம். பூக்கள், இலைகள் இல்லாமல் basic சீக்காய் தூள் பெஸ்ட் ன்னு என் அபிப்பிராயம்.


    - Chitra

  10. #30
    rosei's Avatar
    rosei is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Nederland
    Posts
    6,454

    Re: Your Way of Shikakai Preparation?!

    ஹ்ம்ம் ஊரில் அதுவும் ஒரு பதினைந்து வயதுக்கு முதல் சீயாக்காய் தான் தலைக்கு ..அதுக்குப் பிறகு..

    அம்மாதான் செய்து தருவார் கார்த்தி.

    சீயாக்காய் வெந்தயம் இரெண்டையும் தண்ணியில கொஞ்ச நேரம் ஊற வைத்துவிட்டு பிறகு அவிப்பார் .

    நல்லா அவிந்ததும் கையாலேயே பிசைந்து கூழ் போலவரும்(அல்லது அம்மியில் அரைதிருப்பாங்க்களோ..ச்சே..ச்சே..சரியாய் நினைவில்லை யம்மா ...அப்போ எல்லாம் நான் சரியான வேலைக் கள்ளி ) அதுக்குள்ள வடித்த குத்தரிச்க் கஞ்சிதான் எப்போதும் கலந்து தருவார் . தலைமயிர் பட்டுப் போல இருக்கும் .

    செவ்வரத்தையும் அப்பப்போ சேர்த்துக் கொள்வோம் . பவுடராக்கி பாவித்ததில்லை ..பிறகு ஷாம்போ தான் .


    Last edited by rosei; 31st Aug 2016 at 02:39 PM. Reason: அதெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க &
    With love,
    Rosei.



    Stories of Rosei!

    Downlord My Stories Here! (eBOOKS )

    Viemen's drawings.
    Suriyan's drawings.

    Use your smile to change this world, don't let this world change your smile !



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter