பேன் போக்கும் எண்ணெய்

தேவையானவை:

தேங்காய் எண்ணெய் - 1 கிலோ
கருஞ்சீரகம் - 400௦௦ கிராம்
துளசி - 50 கிராம்

செய்முறை:

சுத்தமான தேங்காய் எண்ணெயை அடுப்பில் வைத்து, மிதமான தணலில் காய்ச்ச வேண்டும். எண்ணெய் காய்ந்ததும், கருஞ்சீரகம் போடவும். பொரிந்ததும் துளசியை போட வேண்டும். சடசடப்பு ஒளி கேட்கும். ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து விடவும். இருபத்து நான்கு மனி நேரம் கழித்து எண்ணெயை வடிகட்டி சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.

எப்படி பயன்படுத்துவது?

பெரிய பல் கொண்ட மர சீப்பால் தலை முடியை அழுந்த வாரவும். கைப்பிடி அளவு பேன் போக்கும் எண்ணையை மயிர்கால்களிலும், கூந்தல் முழுக்கவும் தேய்க்கவும். நாற்பது நிமிடம் கழித்து தூய சீயக்காய் கொண்டு அலசவும்.

வெந்நீர் பயன்படுத்தி குளிக்கவும். ஒரு டவலை இறுகக் கட்டிக் கொண்டு, உளறவிட்டுத் தட்டினால், பேன்கள் செத்து விழும்.

வாரத்தில் இரு முறை தொடர்ந்து இவ்வாறு தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், நல்ல பலன் தெரியும்.

இந்த எண்ணையை, பேன்கள் அடியோடு நீங்கும் வரை பயன்படுத்த வேண்டும். பேன்கள் இல்லை என்றால், இந்த எண்ணையை உபயோகிக்கக் கூடாது.

Similar Threads: