Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree109Likes

Hair Care - Hair Problems & Solutions/Remedies, Hair Care Products & Reviews, Home Made Recipes, Hair Styles & Makeup, Straightening & Colouring...


Discussions on "Hair Care - Hair Problems & Solutions/Remedies, Hair Care Products & Reviews, Home Made Recipes, Hair Styles & Makeup, Straightening & Colouring..." in "Hair Care & Hair Removal" forum.


  1. #21
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Hair Care - Hair Problems & Solutions/Remedies, Hair Care Products & Reviews, Home Made Recipes, Hair Styles & Makeup, Straightening & Colouring.

    முடி கொட்டக் காரணம் என்ன?


    பரம்பரைத் தன்மை, ஹார்மோன்கள் சரிவர சுரக்காமலிருப்பது, சுகாதாரமற்ற முறையில் தலை முடியை வைத்திருப்பது, தைராய்டு நோய், குழந்தை பிறப்பு, நோய்களுக்குச் சாப்பிடும் மருந்துகள், நோய்த் தொற்று, புற்று நோய், ரத்த சோகை, இரும்புச் சத்துக் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முடி கொட்டலாம்.


    Sponsored Links
    vijivedachalam likes this.

  2. #22
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Hair Care - Hair Problems & Solutions/Remedies, Hair Care Products & Reviews, Home Made Recipes, Hair Styles & Makeup, Straightening & Colouring.

    முடி கொட்டுவதைத் தடுக்க சிகிச்சை என்ன?


    காரணத்தைக் கண்டுபிடித்து விடும் நிலையில் சிகிச்சை அளிப்பது எளிதானது. மருந்துகள் காரணமாக முடி கொட்டினால், மாற்று மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார். நோய்த் தொற்றைப் போக்க சிகிச்சை அளிக்கும் நிலையில், முடி கொட்டுவது நின்று விடும். ஹார்மோன் சமச்சீரற்ற தன்மையைச் சரி செய்யும் நிலையிலும் முடி கொட்டுவது நின்று விடும்.


    முடி கொட்டுவதைத் தடுக்கவும், வழுக்கையை தாமதப்படுத்தவும் ஒளிக் கதிர் சிகிச்சை முறை உள்ளது. இந்த ஒளிக் கதிர் சிகிச்சையை 20 முதல் 30 நிமிஷம் அளிக்க வேண்டும்.

    vijivedachalam likes this.

  3. #23
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Hair Care - Hair Problems & Solutions/Remedies, Hair Care Products & Reviews, Home Made Recipes, Hair Styles & Makeup, Straightening & Colouring.

    அழுகின தேங்காயைத் தூக்கி எறியாமல் சிறிது சுடு நீருடன் அரைத்துத் தலையில் தடவி ஊறவைக்கவும். பிறகு நன்றாக 'மசாஜ்' செய்யவும். மயிர்க்கால்கள் வலுப்பெற சரியான வழி இது.


    இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை போயே போச்சு.


    நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பூவுடன் சில துளிகள் கிளிசரின் சேர்த்துக் கொண்டால் முடி அறுந்து போகாது.


  4. #24
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Hair Care - Hair Problems & Solutions/Remedies, Hair Care Products & Reviews, Home Made Recipes, Hair Styles & Makeup, Straightening & Colouring.

    சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும்.


    தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.


    நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால் மயிர்க் கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.

    vijivedachalam likes this.

  5. #25
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Hair Care - Hair Problems & Solutions/Remedies, Hair Care Products & Reviews, Home Made Recipes, Hair Styles & Makeup, Straightening & Colouring.

    விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணைய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது.


    கூந்தல் வறண்டு இருந்தால ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.


    அங்கங்கே தலையில் சிறு பொட்டல் இருந்தால் சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துத் தடவி ஊற வைத்தால் மீண்டும் முடி வளரும்.

    Bhavani Senthil likes this.

  6. #26
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Hair Care - Hair Problems & Solutions/Remedies, Hair Care Products & Reviews, Home Made Recipes, Hair Styles & Makeup, Straightening & Colouring.

    தலை முடிக்குப் போஷாக்குத் தரும் ஷாம்பூ பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப்பயறு அரைப்பங்கு, புங்கங்காய் கைப் பிடி எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். ரசாயனப் பொருள்கள் இல்லாத பொடி, எந்த விதத் தீங்கும் ஏற்படுத்தாது. முடியும் வளரும். சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊற வைத்து தேய்த்துக்கொள்ளலாம்.


    பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் விரைவில் குணம் தெரியும்.


  7. #27
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Hair Care - Hair Problems & Solutions/Remedies, Hair Care Products & Reviews, Home Made Recipes, Hair Styles & Makeup, Straightening & Colouring.

    தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்தத் தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களையும் பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் முடி கறுப்பாக வளரும்.


    தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீ*ருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.


  8. #28
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Hair Care - Hair Problems & Solutions/Remedies, Hair Care Products & Reviews, Home Made Recipes, Hair Styles & Makeup, Straightening & Colouring.

    வெங்காயத்தையும், முட்டைக் கோசையும் பொடிப் பொடியாக நறுக்கி (ஒரு கப்) அதை இரவு முழுவதும் ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும். காலையில் சிறிது யூடிகோலன் சேர்த்தால் வெங்காய வாசனை போய்விடும். இந்தச் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து மயிர்க் கால்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்யவும். சீயக்காய்ப் பொடி போட்டுக் குளித்தால் முடி பளபளப்பாக மென்மையாக மாறும்.


  9. #29
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Hair Care - Hair Problems & Solutions/Remedies, Hair Care Products & Reviews, Home Made Recipes, Hair Styles & Makeup, Straightening & Colouring.

    இரவில் எண்ணைய் தேய்த்துவிட்டுக் காலையில் ஷாம்பு தேய்த்துக் குளித்தால் முடிக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் தண்*ணீரைக் கொதிக்க வைத்து அந்தப் பாத்திரத்தின் உள்ளே ஒரு சிறிய அளவிலான பாத்திரத்தில் எண்ணெயை (ஆலிவ் ஆயில், ஆல்மண்ட் ஆயில் அல்லது சாதாரண தேங்காய் எண்ணெய்) எடுத்துக் கொண்டு சூடு படுத்த வேண்டும். லேசான சூடு போதுமானது. அவ்வாறு சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும்.


  10. #30
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Hair Care - Hair Problems & Solutions/Remedies, Hair Care Products & Reviews, Home Made Recipes, Hair Styles & Makeup, Straightening & Colouring.

    முடி ஏன் உதிர்கிறது?


    முடி கொட்டுவது என்பது நாம் எண்ணுவதை விட மிகச் சாதாரணமானது. பல நேரங்களில் அது தற்காலிகமானதாகவும், சில நேரங்களில் நிரந்தரமானதாகவும் இருக்கலாம்.


    முடி கொட்டுவது பெண்களிடையே இயல்பாக ஏற்படக்கூடிய ஒன்று தான். முடி கொட்டுவதும் மறுபடி முளைப்பதும் நடைமுறைச் செயல்கள். நாம் ஒவ்வொருவரும் தினமும் 50 முதல் 300 முடிவரை இழக்கிறோம். இதில் வேதனைப்பட எதுவுமில்லை.


    கொட்டுகின்ற முடிகளில் ஒன்றிரண்டை எடுத்து முடியின் வேர்ப்பகுதியை உற்று நோக்குங்கள். மிக மெலிதான நுண்ணிய வெள்ளை உருண்டை ஒன்று இருக்கிறதா என்று பாருங்கள். அவ்வாறு ஒரு சிறிய வெள்ளை உருண்டை இருந்தால் உங்கள் முடி இயல்பாகவே இருக்கிறது. அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவ்வாறு இல்லாமல் போனாலோ அல்லது முடி இழப்பு மட்டுக்கு மீறி இருப்பதுடன் அது தொடர்ந்தாலோ நீங்கள் சரும நோயியலார் அல்லது முடியியலார் ஒருவரைக் கண்டு ஆலோசனை பெறுவது நல்லது.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter