தேங்காய்ப் பாலை தலையில் தேய்த்துவந்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். தேங்காயை அரைத்து பால் எடுத்து தலையில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்த பின், குளிக்க வேண்டும். இவ்வாறு, தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் நல்ல பலன் கிடைக்கும்.

தலை முடி வளர, அரை லிட்டர் நல்லெண்ணெய்யை காய்ச்சி இறக்கி அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைப் போட்டு மூடி வைக்கவும். இந்த எண்ணெயை அடிக்கடி தலையில் தேய்த்துக் குளித்து வரவும். தலையில் தேய்க்கு முன் இலேசாக சூடு படுத்தித் தேய்க்கவும்.

முடி கொட்டுவதை நிறுத்த, தலை குளிக்கப் போகுமுன் பாதாம் எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை சம அளவில் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து தலை குளிக்கவும்.


Similar Threads: