Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 1 Post By vijivedachalam
  • 1 Post By sumitra

Coconut Milk Hair Pack - தேங்காய் பால் ஹேர் பேக்குகள்:


Discussions on "Coconut Milk Hair Pack - தேங்காய் பால் ஹேர் பேக்குகள்:" in "Hair Care & Hair Removal" forum.


  1. #1
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Coconut Milk Hair Pack - தேங்காய் பால் ஹேர் பேக்குகள்:

    தேங்காய் பால்:

    தேங்காய் பால் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள். இந்த தேங்காய் பால் கடைகளிலும் கிடைக்கும் அல்லது வீட்டிலேயே செய்யலாம். அதற்கு ஒரு தேங்காயை நன்கு அரைத்து, அதில் வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை தலைக்கு குளிக்கும் போது தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படியாக தடவி, 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளித்தால், கூந்தலுக்கு கண்டிஷனர் போட்டது போல் இருக்கும. வேண்டுமெனில் இதனை ஷாம்பு போட்டு குளித்தப் பின்னரும் போடலாம். இதனால் கூந்தல் நன்கு மென்மையுடன் இருக்கும்.

    தேங்காய் பால் மற்றும் தேன்:

    இந்த முறையில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, தேங்காயை நறுக்கி போட்டு, நீரை நன்கு 5-10 நிமிடம் கொதிக்கவிட்டு, பின் அதனை குளிர வைத்து, அதில் தேன் சேர்த்து கலந்து, கூந்தலில் தடவி, 40 நிமிடம் ஊற வைத்து, பின் கூலுந்தலை அலசினால், கூந்தல் உதிர்வது நின்றுவிடும்.

    தேங்காய் பால், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு:

    தேங்காயை அரைத்து பால் எடுத்துக் கொண்டு, அத்துடன் தயிர் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, கூந்தலில் தடவி, ஊற வைத்து குளித்தால், அதில் உள்ள எலுமிச்சை சாறு கூந்தல் உதிர்தலை தடுத்து, ஸ்கால்ப்பில் இருக்கும் பாக்டீரியாவை அழித்துவிடும். அதுமட்டுமின்றி எலுமிச்சை சாறு பொடுகுத் தொல்லையை போக்கும். மேலும் இதில் உள்ள தயிரும் கூந்தலுக்கு ஏற்ற ஒரு பொருள். எனவே இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், கூந்தல் உதிர்தலோடு, பொடுகுத் தொல்லையும் நீங்கும்.

    தேங்காய் பால் மற்றும் நெல்லிக்காய் எண்ணெய்:

    இயற்கையாகவே கூந்தல் உதிர்தலை தடுப்பதற்கு இந்த ஹேர் பேக்கை ட்ரை செய்து பார்க்கலாம். இதற்கு தேங்காய் பாலை எடுத்துக் கொண்டு, அதில் சிறிது வெதுவெதுப்பான நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து, தலைக்கு மசாஜ் செய்து, 25 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் ஷாம்பு போட்டு குளித்தால், சிறந்ததாக இருக்கும்.

    தேங்காய் பால் மற்றும் வெந்தயம்:

    இந்த ஹேர் பேக்கில் வெந்தயப் பொடியில் தேங்காய் பால் ஊற்றி, பேஸ்ட் செய்து, கூந்தலில் தடவி, 4-5 நிமிடம் மசாஜ் செய்து, பின் ஷாம்பு போட்டு குளித்தால், கூந்தலுக்கு கண்டிஷனர் போட்டது போன்று மென்மையாக, பட்டுப் போன்று மின்னும். இவையே கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் தேங்காய் பால் ஹேர் பேக்குகள். வேறு ஏதாவது தேங்காய் பாலை வைத்து செய்யக்கூடிய ஹேர் பேக்குகள் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    Similar Threads:

    Sponsored Links
    rifan likes this.
    life is so beautiful....

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Coconut Milk Hair Pack - தேங்காய் பால் ஹேர் பேக்குகள்:

    Very nice and useful hair pack ideas using coconut milk as main ingredient you have shared Viji. thanks

    rifan likes this.

  3. #3
    rifan's Avatar
    rifan is offline Registered User
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Nathasaa Shiyan
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Sri Lanka
    Posts
    8,176
    Blog Entries
    140

    Re: Coconut Milk Hair Pack - தேங்காய் பால் ஹேர் பேக்குகள்:

    Hi Viji
    Realy very easy one and and useful Good Work dear



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter