Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree24Likes

Hair Care Tips in Summer


Discussions on "Hair Care Tips in Summer" in "Hair Care & Hair Removal" forum.


  1. #1
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Hair Care Tips in Summer

    கோடை கால குறிப்பு - 3
    -----------------------------------

    கூந்தல் பராமரிப்பு - பயனுள்ள டிப்ஸ்
    -----------------------------------------------------

    * எண்ணெய், ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்தலாம் ஆனால் தினமும் வேண்டாம்.

    * ஹேர் கலரிங், கெமிக்கல் ட்ரீட்மென்ட் அடிக்கடி எடுக்க வேண்டாம்.

    * நிறைய பழங்கள், காய்கறிகள் சாப்பிடவும். தண்ணீர் நிறைய பருகவும். புரதச் சத்துள்ள உணவுகளை சாப்பிடவேண்டும்.

    * தூசி, அழுக்கு மற்றும் நேரடி சூரியக் கதிரிலிருந்து முடியைப் பாதுகாத்துக் கொள்ளவும்.

    * தேங்காய் எண்ணெய் அரை லிட்டர், நல்லெண்ணை அரை லிட்டர் எடுத்து அதனுடன் நெல்லிக்காய் சாறு கால் லிட்டர் சேர்த்து நெல்லிக்காய் நீர் வற்றும் வரை காய்ச்சவும். அதன் பின் இதை வடிகட்டி எடுக்கவும். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த எண்ணெயைத் தேய்த்து வர, இளநரை வருவதை தவிர்க்கலாம்.

    * நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் மூன்றையும் நன்றாக* அரைத்து தேங்காய்ப் பாலுடன் கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி நன்கு வளரும்.

    * சோற்றுக் கற்றாழையை கீறி அதன் நடுவில் வெந்தயம் வைத்து இரண்டு பக்கமும் கயிறால் மூடி கட்டி விட வேண்டும். கறுப்பு உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் ஊறவைத்த கறுப்பு உளுந்து, முளை கட்டிய வெந்தயம், சோற்றுக் கற்றாழை கூழ் இவை மூன்றையும் அரைத்து அதனுடன் செம்பருத்தி இலையையும் சேர்த்து பேக் போல தலையில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் குளித்தால் வெயிலின் கடுமையால் வரும் நுனி முடியின் வெடிப்பை சரி செய்யலாம்.

    * பொடுதலைக்கீரை, முருங்கைக்கீரை, பாலக்கீரை இந்த மூன்றையும் அரைத்து, அதனுடன் சோயா பவுடர், நன்னாரி பவுடர், நெல்லிக்காய் பவுடர் ஆகியவற்றை கலக்க வேண்டும். கொஞ்சம் எலுமிச்சைச்சாறு, மற்றும் தண்ணீர் கலந்து தலையில் பேக் போட்டு ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு போயே போச்சு!


    Similar Threads:

    Sponsored Links


    நளினி



  2. #2
    Tamil16's Avatar
    Tamil16 is offline Commander's of Penmai
    Real Name
    Dhivya
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    Tanjore
    Posts
    1,033

    Re: Health Care Tips during Summer


    Nice share Nals.... Nan try panni paakuren...


    @ Dhivya.... @

  3. #3
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Hair Care Tips in Summer

    Good tips nalini... Thanks for sharing.

    sumitra and naliniselva like this.

  4. #4
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,563

    Re: Hair Care Tips in Summer

    Useful tips for hair care, thanks Nalini.


  5. #5
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Hair Care Tips in Summer

    Summer Hair care tips are simply very nice. thanks Naliniselva

    Parasakthi and naliniselva like this.

  6. #6
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Hair Care Tips in Summer

    Thanks friends.....
    (yaaravathu naan podura post ta azhaga thani thread da
    potuduranga.......yaar pottingalo....thanks pa...

    Parasakthi likes this.


    நளினி



  7. #7
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Hair Care Tips in Summer

    'தலை'யாய பிரச்னை - தவறான கற்பிதங்களில் இருந்து தெளிவாக மூன்று டிப்ஸ்!

    1) தலைமுடியை எந்த அளவுக்கு அதிகமாக பிரஷ் செய்கிறோமோ, அந்த அளவுக்கு தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். தலைமுடியை பிரஷ் செய்வதினால் தலையில் ரத்த ஓட்டம் அதிகமாகும். தலையில் இருக்கும் எண்ணெய்ப் பசை எல்லா இடத்துக்கும் சீராக பரவும் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அளவுக்கு அதிகமாக பிரஷ் செய்தால், தலைமுடி பிரஷோடு சேர்ந்து வந்துவிடும். அல்லது பாதியிலேயே உடைந்துவிடும்.

    2) ஷாம்பு பயன்படுத்தினால் முடி உதிர்ந்துவிடும் என்று சிலர் நினைக்கிறார்கள். அடிப்படையில் ஷாம்பு என்பது தலைமுடியை சுத்தம் செய்ய உதவும் ஒரு பொருள். இப்போது மூலிகை அடிப்படையிலான ஷாம்புக்கள் வந்துவிட்டதால் அந்த பயம் தேவையில்லை. கண்டிஷனர் பயன்படுத்துவதால், கேசம் பொலிவு பெறும். ஆனால் அதை ஸ்கால்பில் அப்ளை செய்தால் அங்கே இருக்கும் சிறிய துவாரங்கள் அடைப்பட்டு அழுக்கு சேரும். பொடுகு பிரச்னை வரும். அதனால் அதைத் தலையில் தேய்க்காமல், முடியின் நுனி பாகத்தில் துவங்கி, மேல் நோக்கி தேய்த்து, கதகதப்பான அல்லது குளிர்ந்த நீரால் சுத்தமாக 'வாஷ்' செய்துவிட வேண்டும்.

    3) அடிக்கடி முடியை வெட்டினால், முடி வேகமாக வளரும் என்று சிலர் நினைக்கிறார்கள். அது தவறு. 'ஸ்ப்ளிட் எண்ட்ஸ்' எனப்படும் உடைந்திருக்கும் முடிகளின் முனைகளை நீக்குவதற்காக மூன்று மாதத்துக்கு ஒருமுறை முடியை வெட்டிக் கொள்ளலாம்.

    செய்யக் கூடாத*வை...

    * உலோகத்தினால் ஆன சீப்பு மற்றும் பிரஷ் ஆகியவற்றை பயன்படுத்தினால் முடி பாதிப்புக்களாகும்.
    * அடுத்தவர் பயன்படுத்தும் சீப்பு மற்றும் துண்டு போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.


    PriyagauthamH likes this.


    நளினி



  8. #8
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Hair Care Tips in Summer

    கூந்தல் பராமரிப்பில் வெங்காயத்தையும் சேத்துக்கோங்க..
    Hair Care Tips in Summer-149490_322109321249461_480049650_n.jpg


    கூந்தல் பற்றிய பிரச்சனைகள் நிறைய உள்ளன. குறிப்பாக கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை, கூந்தல் வறட்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிறைய முயற்சிகளை, இதுவரை செய்திருப்போம். அதுவும் மார்க்கெட்டில் விற்கப்படும் கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தியிருப்போம். இருப்பினும், அதற்கான சரியான தீர்வை யாரும் பெற்றதில்லை. மேலும் இதனால் கூந்தலுக்கு இருக்கும் பிரச்சனைகள் தான் அதிகமாகியுள்ளதே தவிர, ஒரு முடிவு கிடைக்கவில்லை. எனவே எப்போதும் செயற்கை முறைகளை விட, இயற்கை முறைகளான வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கூந்தலை பராமரித்தால், நிச்சயம் அத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

    மேலும் கூந்தலைப் பராமரிப்பதற்கு நிறைய வீட்டுப் பொருட்கள் உள்ளன. உதாரணமாக, முட்டை, தேன், தயிர், பேக்கிங் சோடா, வினிகர், எலுமிச்சை சாறு மற்றும் வெங்காயம் போன்ற பொருட்கள் கூந்தல் பராமரிப்பில் பெரிதும் உறுதுணையாக உள்ளன. ஆம், அனைத்து சமையலிலும் பயன்படும் வெங்காயம் கூந்தல் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் உதவியாக உள்ளது. அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள். * கூந்தல் உதிர்தல்: வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. பொதுவாக சல்பர் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு, கூந்தலையும் வலுவுடன் வைத்துக் கொள்ளும்.

    எனவே அதற்கு வெங்காயத்தை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தேய்த்து, ஊற வைத்து குளிக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு முன் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெங்காய பேஸ்ட்டை தலைக்கு தடவி மசாஜ் செய்து, சுடு நீரில் நனைத்த ஈரமான துண்டை, தலைக்கு சுற்றி, ஊற வைத்து பின்னர் குளிக்க வேண்டும். * கூந்தல் வளர்ச்சி: உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளரும். இத்தகைய இரத்த ஓட்டத்தை வெங்காயம் செய்வதால், வெங்காயத்தை சாறு எடுத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படியாக தடவி, மசாஜ் செய்து, 40 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க, கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.

    * ஸ்கால்ப் பிரச்சனை:

    வெங்காயச் சாற்றை ஸ்கால்ப்பில் படும்படியாக தடவினால், ஸ்காப்பில் தங்கி கூந்தல் வளர்ச்சியைத் தடுக்கும் தொற்றுகள் நீங்கி, கூந்தல் மற்றும் ஸ்கால்ப் நன்கு ஆரோக்கியமானதாகவும், சுத்தமாகவும் இருக்கும். * பொடுகுத் தொல்லை: தலையில் உள்ள அதிகப்படியான வறட்சியினால் பொடுகு வந்துவிடும். பொடுகானது தலையில் அதிகம் இருந்தால், கூந்தல் உதிர்தல் அதிகரித்து, அதன் வளர்ச்சி தடைப்படும். எனவே பொடுகுத் தொல்லையை நீக்குவதற்கு, வெங்காயச் சாற்றுடன், எலுமிச்சை சாறு, தயிர் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, தலையில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இவையே கூந்தல் பராமரிப்பில் வெங்காயத்தின் நன்மைகள். இதுவரை நீங்கள் கூந்தலைப் பராமரிக்க வெங்காயத்தை பயன்படுத்தியுள்ளீர்களா? இல்லையெனில் உடனே ஆரம்பியுங்கள்.


    PriyagauthamH likes this.


    நளினி



  9. #9
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Hair Care Tips in Summer

    பொடுகு, தலைமுடி பிசுபிசுப்பு, வறண்ட கேசம், எண்ணெய்ப்பசை... என்று பெண்களின் தலையைக் குடையும் பிரச்னைகள் பல. அதேபோல்... கரும்புள்ளிகள், பிக்மென்ட்ஸ், சீபம் லெவல், ஆய்லி ஸ்கின், வொயிட் ஹெட், டிரைனஸ் என்று முகத்தில் தோன்றும் பிரச்னைகளோடும் போராடுகிறார்கள் பெண்கள்.

    ஸ்கால்ப்பில் இருக்கும் பொடுகை அகற்ற தலையில் 'பீலிங் ப்யூரிஃபியன்ட்' (Peeling Purifiant) க்ரீம் அப்ளை செய்ய வேண்டும். அடுத்ததாக பிளெய்ன் ஷாம்பு தேய்த்து பத்து நிமிடங்கள் விட்டு, பின்னர் தண்ணீரில் கூந்தலை நன்றாக அலச வேண்டும். ஈரத்தை உலர்த்த வொயிட் டவல் கொண்டு கவர் செய்து, நன்றாக* தலைமுடியை உலர்த்த வேண்டும்.. இப்போது கேசத்தில் பொடுகு நீங்கிவிடும். ஸ்கால்ப் டிரைனஸும் சரியாகி விடும்.

    அடுத்தது,'டிரை ஹேர்’ இருப்பவர்களுக்கு கூந்தலின் வேர் பகுதியில் அடர்த்தியாக தொடங்கி, முடியும் இடத்தில் அடர்த்தி குறைவதுடன், கேசம் உடைந்தும் இருக்கும். கூந்தலில் 'ட்ரீட்மென்ட் டோஸ்' ஜெல்லை அப்ளை செய்து, வொயிட் டவல் கொண்டு கவர் செய்யவேண்டும். சில நிமிடங்களுக்குப் பின் டவலை அகற்றி ஹேர் டிரையர் மூலம் தலைமுடியை நன்றாக உலர்த்த, வறண்டு போயிருந்த கேசம்... இப்போது சாஃப்ட்டாக, சில்கியாக மாறியிருக்கும்.

    இந்த ஹேர் - கேர், செய்முறைகளை... மாதம் ஒருமுறையோ, இருமுறையோ முடிந்தால் தாங்களாகவே அல்லது பார்லருக்குச் சென்றுசெய்துகொண்டால், கேச ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். உங்களுக்கு நீங்களே ரசிகையாவீர்கள்!


    PriyagauthamH likes this.


    நளினி



  10. #10
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Hair Care Tips in Summer

    இயற்கை முறையில் கருமையான முடியை பெற ஆசையா?முடிக்கு அழகே கருப்பு நிறம் தான். அத்தகைய கருமையான முடி தற்போது பலருக்கு கிடையாது, ஏனெனில் நமது வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பதால், உடலுக்கே போதிய சக்துக்கள் கிடைக்காத நிலையில், முடிக்கு மட்டும் எப்படி சத்துக்கள் கிடைக்கும். அதுமட்டுமின்றி அதிக நேரம் வெயிலில் சுற்றுவதால், முடியின் நிறம் மாறாமல் இருப்பதற்கு தடவிய எண்ணெய் சூரியனால் உறிஞ்சப்பட்டு, கருமை நிறமானது மங்கிவிடுகிறது.

    சிலருக்கு இளமையிலேயே நரை முடியானது வர ஆரம்பிக்கிறது. அதற்கு பரம்பரை அல்லது ஊட்டச்சத்தின்மை தான் காரணமாக இருக்கும். எனவே கூந்தலின் நிறம் மாறாமல் கருமையாக இருப்பதற்கு, நல்ல ஆரோக்கியமான உணவுகளையும், கூந்தலுக்கு அவ்வப்போது போதிய பராமரிப்புக்களையும் கொடுக்க வேண்டும். அதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று பராமரிப்பு கொடுக்க வேண்டுமென்பதில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முடியை பராமரித்து, கருமையான முடியை நிலைக்க வைக்கலாம்.

    சரி, இப்போது கூந்தலின் கருமை மாறாமல் இருப்பதற்கும், இருக்கும் கருமையை தக்க வைக்கவும், என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் பின்பற்றி வந்தால், இயற்கையாக கருமை கூந்தலைப் பெறலாம்.

    1) முடிக்கு ஒரு மாத காலமாக எண்ணெய் தடவாமல் இருந்தால், கூந்தல் ப்ரௌன் நிறத்தில் மாற ஆரம்பிக்கும். எனவே கூந்தலுக்கு தினமும் எண்ணெய் தடவுவது மிகவும் இன்றியமையாதது. மேலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் கூந்தல் ஆரோக்கியமாகவும், கருமை நிறத்துடனும் இருக்கும்.

    2)கருப்பான முடியைப் பெறுவதற்கு பயன்படும் மூலிகைகளில் கறிவேப்பிலை முக்கியமானது. ஆகவே கறிவேப்பிலையை வெயிலில் காய வைத்து, சூடான எண்ணெயில் சேர்த்து, ஒரு வாரத்திற்கு குளிர வைத்து, பின் அதனை கொண்டு மசாஜ் செய்தால், கருமையான முடியைப் பெறலாம்.

    3) முடிக்கு நிறமூட்டுவதற்கு செம்பருத்தி எண்ணெய் மிகவும் சிறந்தது. அதற்கு செம்பருத்தி எண்ணெயையோ அல்லது சூடான எண்ணெயில் செம்பருத்தி பூக்களை போட்டு ஊற வைத்தோ, தினமும் முடிக்கு தடவ வேண்டும்.

    4)வெளியே வெயிலில் செல்லும் போது, முடியின் மேல் சூரியக்கதிர்கள் நேரடியாக படும்படி வைத்துக் கொள்ளக் கூடாது. ஆகவே வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பி அல்லது ஸ்கார்ப் அணிந்து கொண்டு செல்ல வேண்டும். இதனால் சூரியக்கதிர்களின் தாக்குதலால் முடியில் ஏற்படும் நிற மாற்றத்தைத் தடுக்கலாம்.

    5)நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை. கருமையான கூந்தலைப் பெறவும் தான் உதவியாக உள்ளது. எனவே நெல்லிக்காய் எண்ணெய் அல்லது நெல்லிக்காய் சாறு கொண்டு, வாரத்திற்கு இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால், கூந்தல் கருமையோடும், அடர்த்தியோடும் வளரும்.

    6)ஆயுர்வேத மருத்துவத்தில் கூந்தல் வளர்ச்சிக்கு அஸ்வகந்தா மூலிகை தான் உதவியாக உள்ளது. எனவே இந்த அஸ்வகந்தா பொடியை எண்ணெயில் சேர்த்து ஊற வைத்து முடிக்கு தடவி வந்தால், முடி நன்கு அடர்த்தியாக, கருமையாக மற்றும் நீளமாக வளரும்.

    7)அனைவருக்குமே நல்லெண்ணெய் கூந்தலுக்கு கருமை நிறத்தை தரும் என்பது தெரியும். எனவே இந்த எண்ணெய் முடிக்கு பயன்படுத்தினால், அது முடியில் இருக்கும் கருமை நிறத்தை தங்க வைக்கும்.

    8)கேரட் சாப்பிட்டால், அதில் உள்ள கரோட்டினாய்டுகள் முடிக்கு கருமை நிறத்தை தரும். அதற்காக அதன் சாற்றை முடிக்கு பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக, கேரட் சாற்றை அதிகம் குடிப்பது மிகவும் நல்லது.

    9)எலுமிச்சை கூந்தலுக்கு பல வழிகளில் பயன்படுகிறது. அவற்றில் பொடுகுத் தொல்லையை நீக்கும் என்பது தான் பிரபலமானது. ஆனால் இந்த சாற்றினைக் கொண்டு, கூந்தலுக்கு தடவி ஊற வைத்து குளித்தால், முடியானது கருமையாக இருக்கும்.

    10)முடிக்கு கெமிக்கல் கலந்த ஷாம்புக்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, சீகைக்காய் பயன்படுத்தி குளித்தால், முடி நன்கு ஆரோக்கியமாக கருமை நிறத்துடன் வளரும்


    PriyagauthamH likes this.


    நளினி



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter