Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By chan

Reasons for White(grey) Hair in younger age-இளம் வயதினருக்கு இருக்கும் &


Discussions on "Reasons for White(grey) Hair in younger age-இளம் வயதினருக்கு இருக்கும் &" in "Hair Care & Hair Removal" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Reasons for White(grey) Hair in younger age-இளம் வயதினருக்கு இருக்கும் &

    இளம் வயதினருக்கு பிரச்சனையாக இருக்கும் வெள்ளை முடி

    தற்போது இளம் வயதிலேயே தலையில் உள்ள முடியானது நரைக்க ஆரம்பித்துவிடுகிறது. இது தற்போதைய இளம் வயதினர் சந்திக்கும் பிரச்சனைகளில் முதன்மையானவை. இப்படி இளம் வயதில் வெள்ளை முடி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.

    பொதுவாக வெள்ளை முடி வருவதற்கு மருத்துவரீதியாக காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான்.

    இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து வெள்ளை முடியை ஏற்படுத்திவிடுகிறது. வெள்ளை முடி வர என்ன காரணம் என்பதை பார்க்கலாம்.

    • மரபணுக்கள் வெள்ளை முடி வருவதற்கு பரம்பரையும் ஒரு முக்கியமான காரணமாகும். உதாரணமாக, உங்கள் வீட்டில் அம்மா அல்லது அப்பாவிற்கு இளம் வயதிலேயே நரைக்க ஆரம்பித்திருந்தால், உங்களுக்கும் வெள்ளை முடியானது இளம் வயதிலேலே வந்துவிடும்.

    • வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், முடிக்கு நிறத்தை வழங்கும் மெலனின் நிறமியும் குறைய ஆரம்பிக்கும். எனவே உடலில் வைட்டமின் பி12 சரியான அளவில் இருந்தால், வெள்ளை முடி வராமல் இருக்கும்.

    • தைராய்டு இருந்தாலும் வெள்ளை முடி வர ஆரம்பிக்கும். அதிலும் தற்போது நிறைய இளம் வயதினர் தைராய்டு பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கமும், வாழ்க்கை முறையும் தான். ஆகவே இவற்றில் சரியாக இருந்தால், தைராய்டு பிரச்சனையுடன், வெள்ளை முடி பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.

    • நிறைய பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் வெள்ளை முடியானது வரும். இதற்கு காரணம் இக்காலத்தில் ஏற்படும் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் தான்.

    • முடியின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பிட்யூட்டரி சுரப்பி தான் முக்கிய பங்கினை வகிக்கிறது. எப்போது இந்த பிட்யூட்டரி சுரப்பியானது சரியாக செயல்படாமல் போகிறதோ, அப்போது முடியானது நரைக்க ஆரம்பிக்கும்.

    • அயோடின் என்னும் கனிமச்சத்து உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. இத்தகைய சத்தானது குறைவாக இருந்தால், வெள்ளை முடி வர ஆரம்பிக்கும்.

    • ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாகவும், வெள்ளை முடியாது வர ஆரம்பிக்கும். ஏனெனில் இதனால் உடலுக்கும், முடிக்கும் வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும். அளவுக்கு அதிகமாக டென்சன் ஆகும் போது, ஸ்கால்ப்பானது பாதிக்கப்பட்டு, மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் போய், முடியை வெள்ளையாக்கிவிடும்.

    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini and jv_66 like this.

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,567

    Re: Reasons for White(grey) Hair in younger age-இளம் வயதினருக்கு இருக்கும் &

    Thanks for the information Lakshmi.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter