Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree20Likes

கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair


Discussions on "கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair" in "Hair Care & Hair Removal" forum.


 1. #21
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair

  ஹேர் டிப்ஸ்...

  பொடுகு, பேன் தொல்லை இருப்பவர்கள், தலைக்கு எண்ணெய் தேய்க்கும்போது, சற்று கவனமாக இருக்க வேண்டும். சரியான முறையில் தேய்க்கவில்லை எனில், எளிதில் முடி உடைந்துவிடக்கூடும்.

  தலைக்குக் குளித்ததும் துவட்டாமல் ஈரத் தலையுடன் இருப்பது முடிக்கான பாதிப்பை அதிகரிக்கும். துவட்டி, நன்றாகக் காயவைப்பதே முடிக்கான பாதுகாப்பு.

  இரவு படுக்கைக்குப் போகும்போது, எண்ணெய் தடவி, தலையை நன்றாக வாரி, சற்றே தளர்வாக பின்னல் போட்டுக்கொள்வது, முடி வளர்ச்சியை அதிகரிக்கச்செய்யும்.

  நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் கலந்து வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து மசாஜ்செய்யுங்கள். பிறகு சீயக்காய்போட்டு அலசினால், முடி நன்றாக வளரும்.

  தலையில் சீப்புப்போட்டு வாரும்போது, முன் நெற்றியில் படும்படி வாரக் கூடாது. இதனால், முன் நெற்றிப் பகுதியில் முடி உதிர்ந்து வழுக்கைக்கு வித்திடுவதுடன், பருக்கள் போல் பொரிப்பொரியாக வரவும் வாய்ப்புகள் அதிகம்.

  தலைமுடியை தூக்கி வாராதீர்கள். இதனால், முன் நெற்றி பகுதி பெரிதாகக்கூடும். தழைத்து வாருவது நல்லது.
  Sponsored Links
  spmeyyammaisp06 likes this.

 2. #22
  Vaisri02 is offline Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  May 2013
  Location
  Dindigul
  Posts
  2,012

  Re: கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair

  Thank you Chan

  chan likes this.

 3. #23
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair

  அதென்ன ஆண்ட்ரோஜெனிக்அலோபேஷியா?

  ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்


  முடி உதிர்வு அல்லது முடி மெலிவுப் பிரச்னைக்காக சிகிச்சைக்கு வருகிறவர்களில் 100ல் 80 பேருக்கு ஆண்ட்ரோஜெனிக் அலோபேஷியா பிரச்னை இருப்பதைப் பார்க்க முடிகிறது. முடி உதிர்வு என்பது சிலருக்குப் பரம்பரையாகத் தொடரும். இது ஆண்ட்ரோஜெனிக் அலோபேஷியா என்கிற பிரச்னையின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். இந்தப் பிரச்னை உறுதி செய்யப்பட்டால் தீவிரமான, தொடர்ந்த சிகிச்சையின் மூலம் சரி செய்ய முடியும். இது ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் ஏற்படக்கூடிய பிரச்னை.

  இந்தப் பிரச்னை உள்ள பெண்களுக்கு முன்னந்தலை நெற்றிப் பகுதியில் வழுக்கை விழ ஆரம்பிக்கும். கூந்தலின் வேர்க்கால்கள் சுருங்கி, அதிலிருந்து வெளிக் கிளம்பும் முடியானது மெலிந்து, உயிரே இல்லாமல் இருக்கும். நமக்கு தலையில் உள்ள முடிகளை டெர்மினல் ஹேர் (Terminal hair) என்றும், உடலின் மற்ற பகுதிகளில் உள்ள முடிகளை வெலஸ் ஹேர் (Vellus hair) என்றும் சொல்கிறோம்.

  தலையில் உள்ள முடியானது அடர்த்தியாகவும், உடல் ரோமங்கள் மெலிந்தும் காணப்படுவது இயற்கை. மேலே குறிப்பிட்டபடி கூந்தலின் வேர்க்கால்கள் சுருங்கி, முடி மெலியத் தொடங்கும் போது தலையில் உள்ள முடியும் உடல் ரோமங்களைப் போலவே மெலிய ஆரம்பிக்கும்.

  கூந்தல் உதிர்வுக்கான காரணங்களை சீக்கிரமே கண்டுபிடிப்பதும், முறையான சிகிச்சைகளைத் தொடங்குவதும் கூந்தல் உதிர்வைத் தீவிரமாக்காமல் தடுக்கும். முடி உதிரும் அளவு, அதற்கான சிகிச்சையைத் தொடரக்கூடிய மனநிலை ஆகியவற்றைப் பொறுத்தே அதன் வெற்றி அமையும்.

  ஆண்ட்ரோஜெனிக் அலோபேஷியாவை பொறுத்தவரை வெளிப்புற சிகிச்சை எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும். வைட்டமின், பயோடின், அமினோ அமிலங்கள், கஃபைன், மெலட்டோனின், தாதுச் சத்துகள், ஆன்ட்டி ஆண்ட்ரோ ஜெனிக் அல்லது ஈஸ்ட்ரோஜெனை தூண்டும் மூலிகைகள் போன்றவற்றை உள்ளுக்கு எடுத்துக் கொள்ளச் சொல்வதே முதல் கட்ட சிகிச்சையாக இருக்கும்.

  மினாக்சிடில், ஃபினாஸ்டெரைட் போன்ற மருந்துகள் இந்தப் பிரச்னைக்கு ஓரளவுக்குப் பலன் தரும். ஃபினாஸ்டெரைட் எடுத்துக் கொள்ளும் போது சில பக்க விளைவுகளையும் தவிர்க்க முடியாது.

  கிரேப் சீட் எனப்படுகிற திராட்சை விதைகளில் இருந்து எடுக்கப்படும் சாரத்துக்கு ஆண்ட்ரோஜெனிக் அலோபேஷியாவுக்கு எதிராகப் போராடும் குணம் உண்டு. நாம் திராட்சை சாப்பிடும் போது அதன் விதைகளைத் துப்பிவிடுவோம். அப்படித் துப்பும் விதைகளுக்குத் தான் எத்தனை மகத்துவம் எனப் பாருங்கள்...

  அடுத்தது கிரீன் டீ வைட்டமின் சியில் உள்ளதைவிட 20 மடங்கு அதிக ஆன்ட்டி ஆக்சிடேஷன் சக்தி கொண்டது கிரீன் டீ. இதில் உள்ள ணிநிசிநி (Epi Gallo Catechin Gallate) and ECG (Epi Catechin Gallate) ஆகிய என்சைம்களுக்கு முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் குணம் உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.

  இது கூந்தலின் வேர்க்கால்கள் சுருங்குவதைத் தவிர்த்து, உள்ளிருந்து கிளம்பும் முடியையும் அடர்த்தியாக வளர வைக்கும்.மினாக்சிடில் மற்றும் புரோட்டின் சீரம் போன்றவற்றை வெளிப்புறமாக தடவிக் கொள்வதும் பலனளிக்கும். மீசோதெரபி போன்ற சிகிச்சைகளில் மருந்து மற்றும் வைட்ட மின்கள் கன் போன்ற ஒரு கருவியின் மூலம் அல்லது டெர்மா ரோலர்கள் மூலம் மண்டைப் பகுதிக்குள் செலுத்தப்படும். இந்த சிகிச்சையும் மிகப் பெரிய பலனைக் காட்டும்.

  சமீப காலமாக மிகவும் பிரபலமாகி வருகிற பிஆர்பி (பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா) சிகிச்சையும் கூந்தல் உதிர்வுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம். ட்ரைகாலஜிஸ்ட் ஆலோசனையின் பேரில் அதையும் முயற்சி செய்யலாம்.ஊசி மூலம் ஸ்டெம் செல்களைச் செலுத்தி கூந்தலின் வேர்க்கால்களுக்கு ஊட்டம் அளிக்கிற சிகிச்சையும் ரொம்பவே லேட்டஸ்ட்.லோ இன்டென்சிட்டி டியோட் லேசர், லைட் எமிட்டிங் டியோட் மற்றும் ஹை ஃப்ரீக்வன்சி சிகிச்சைகளும் இந்தப் பிரச்னையில் ஓரளவு உதவும்.

  லோ லெவல் லேசர் ஸ்டிமுலேஷன் எனப்படுகிற சிகிச்சையில் உமிழப்படுகிற ஒளியானது மண்டைப் பகுதியைப் பாதிக்காதது. அதனாலேயே அதற்கு ‘கோல்ட் லேசர்’ என்கிற பெயரும் உண்டு. இதிலிருந்து வெளியேறுகிற கண்களுக்குத் தெரியாத சிவப்பு ஒளியானது திசுக்களின் பல அடுக்குகள் வரை ஊடுருவக்கூடியது.

  அது சருமத்தை எந்த வகையிலும் பாதிக்காதது. அதிலிருந்து வெளியேறுகிற ஒளியானது செல்களால் கிரகிக்கப்பட்டு, பழுதடைந்த செல்கள் சீரடையும் வேலை தூண்டப்படும். இந்த சிகிச்சையானது செல்களின் ஆற்றலைத் தூண்டி, அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்தும். இத்துடன் கூடவே சில ஊட்டங்களும் ஆக்சிஜனும் சேர்த்துக் கொடுக்கப்படும். லேசர் சிகிச்சை கொடுக்கும் போது ஒட்டுமொத்த கூந்தல் ஆரோக்கியமும் மேம்படும். கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.

  காலையில் எழுந்ததும் நீங்கள் முதலில் கண்ணாடியில் உங்கள் தோற்றத்தைப் பார்க்கும் போது உங்களுக்கு கவலையோ, வருத்தமோ மேலிடக் கூடாது. புத்துணர்வுடனும் உற்சாகத்துடனும் உணர வேண்டும். அப்போது தான் உங்கள் மனம் கவலையின்றி, பதற்றமின்றி ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தம். மன அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க மண்டைப் பகுதி முடியற்ற மைதானமாக மாறிவிடும். எனவே DON’T WORRY, BE HAPPY.

  மன அழுத்தம் அதிகரிக்கஅதிகரிக்க மண்டைப் பகுதி முடியற்ற மைதானமாக மாறிவிடும்!

  spmeyyammaisp06 likes this.

 4. #24
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair


  முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை

  அழகுக்கலை நிபுணரும் அரோமா தெரபிஸ்ட்டுமான கீதா அஷோக்

  மன அழுத்தம் மண்டையை பாதிக்கும். ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் அதிகமாக இருந்தால் முடி உதிரும். மன அழுத்தத்துக்கும் முடி உதிர்வுக்கும் என்ன சம்பந்தம் என நினைக்கலாம். மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது நமது எண்ணெய் சுரப்பிகள் சீபம் என்கிற எண்ணெயை அதிகமாகச் சுரக்கும்.

  அதே போல மன அழுத்தமும் கோபமும் அதிகமாக இருக்கும் போது ரத்த நாளங்கள் சுருங்கி விடும். அப்போது முடியின் வேர்களுக்குப் போகிற ரத்த ஓட்டம் தடைப்படும். வெறும் 5, 10 நிமிடங்கள் தடைப்பட்டாலே அது முடி உதிர்வுக்குக் காரணமாகும். முதல்நாள் அளவுக்கதிக மன அழுத்தத்தில் இருந்து விட்டு, மறுநாள் தலை வாரும் போது முடி கொட்டலாம்.

  *முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் முறையான பராமரிப்பின்மை. தினசரி தலைக்குக் குளிப்பது மிக முக்கியம். இன்று சுற்றுப்புற சூழல் மாசு எக்கச்சக்கம். வீட்டை விட்டு வெளியே போகிற எல்லோரும் தினசரி தலைக்குக் குளித்தாக வேண்டும்.

  வீட்டுக்குள்ளேயே இருப்பவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் தலை குளித்தால் போதுமானது. வேலைச் சுமை, டென்ஷன் காரணமாக தலையில் எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக வேலை செய்யும். தூசும் மாசும் அத்துடன் சேர்ந்து கொள்ள இரண்டும் கலந்து மண்டையின் துவாரங்களை அடைத்துக் கொள்ளும். காலையில் குளிக்க நேரமில்லாவிட்டாலும், இரவிலாவது குளிக்க வேண்டும்.

  * நீளமான கூந்தல் அழகுதான். ஆனால், அதைப் பராமரிக்க நேரமும் பொறுமையும் இல்லாதவர்களுக்கு அது அனாவசியமானது. பரபரப்பான லைஃப் ஸ்டைலில் இருப்பவர்கள் நீளமான கூந்தலைத் தவிர்த்து, அளவோடு வெட்டிக் கொள்வதே சிறந்தது.

  நீளக் கூந்தலைப் பராமரிக்க முடியாமல் அப்படியே கட்டிக் கொண்டோ, கொண்டை போட்டுக் கொண்டோ போவார்கள். உள்ளே சிடுக்கு அப்படியே நிற்கும். ஒரு முடியில் உள்ள ஒரு சிடுக்கானது நல்லவிதமாக இருக்கும் பத்து முடிகளை சேர்த்து இழுத்துக் கொண்டு வரும். வீட்டில் வந்து தலையை வாரும் போது பார்த்தால் கொத்துக் கொத்தாக முடி கொட்டுவதைப் பார்க்கலாம்.

  * எண்ணெய் பசையான மண்டைப் பகுதியைக் கொண்டவர்கள் தினசரி தலைக் குளிக்க கெமிக்கல் தவிர்த்து சீயக்காய் அல்லது முட்டை கலந்த ஷாம்பு உகந்தது. வறண்ட மண்டைப் பகுதி உடையவர்கள் மாயிச்சரைசிங் ஷாம்பு உபயோகிக்கலாம். எடுக்கவே கூடாத ஷாம்பு என்றால் கூந்தலை அடர்த்தியாகக் காட்டக் கூடிய வால்யூமைசர் ஷாம்பு.

  * தினசரி குளிக்கும் தண்ணீரில் 3 சொட்டு லேவண்டர் ஆயிலும், 3 சொட்டு லெமன் கிராஸ் ஆயிலும் கலந்து தலைக்குக் குளித்தால் உங்கள் கூந்தலில் சிடுக்கு உண்டாகாது. இயற்கையான பளபளப்பு வரும்.

  * 100 மி.லி. ஆலிவ் ஆயில், 100 மி.லி. விளக்கெண்ணெய், 100 மி.லி. பாதாம் எண்ணெய் மூன்றையும் கலந்து கொள்ளவும். இதில் 50 சொட்டு ரோஸ்மெர்ரி ஆயில், 50 சொட்டு லேவண்டர் ஆயில், 25 சொட்டு பே ஆயில் (பிரிஞ்சி இலையில் இருந்து எடுக்கப்படுகிற எண்ணெய்), 50 சொட்டு சிடர்வுட் ஆயில் ஆகியவற்றைக் கலக்கவும். 1 வாரம் இந்தக் கலவையை அப்படியே வைக்கவும்.

  1வாரம் கழித்து இந்தக் கலவை எண்ணெயை தினமும் இரவில் தடவிக் கொண்டு மறுநாள் காலையில் தலைக்குக் குளிக்கவும். இப்படிச் செய்தால் முடி உதிர்வது உடனடியாக நிற்கும். 1 மாதம் தினம் இப்படிச் செய்தால் கூந்தல் நன்கு வளர ஆரம்பிக்கும்.

  * மருந்துக் கடைகளில் ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் எனக் கிடைக்கும். 50 மி.லி. கெட்டியான தேங்காய் பாலில், 3 ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் கேப்ஸ்யூலை உடைத்துக் கலக்கவும். நாட்டு மருந்துக் கடைகளில் பொடுதலைப் பொடி மற்றும் வில்வம் பொடி எனக் கிடைக்கும். இது இரண்டையும் அந்தக் கலவையில் சேர்த்துக் குழைக்கவும். முதல் நாள் இரவே தலையில் எண்ணெய் தேய்த்திருக்கிறீர்கள்.

  மறுநாள் காலையில் இந்தக் கலவையை தலையில் தடவி பெரிய பல் கொண்ட சீப்பால் நன்கு வாரி விடவும். 1 முதல் ஒன்றரை மணி நேரம் வைத்திருந்து, நீர்க்கச் செய்த மைல்டான ஷாம்பு கொண்டு அலசவும். தினமும் தலைக்கு எண்ணெய் தடவவும். இந்த பேக் தடவுவதை மட்டும் வாரத்தில் 2 நாட்களுக்குச் செய்யவும்.

  இது முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வளரச் செய்யும். தினசரி குளிக்கும் தண்ணீரில் 3 சொட்டு லேவண்டர் ஆயிலும் 3 சொட்டு லெமன் கிராஸ் ஆயிலும் கலந்து தலைக்குக் குளித்தால் உங்கள் கூந்தலில் சிடுக்கு உண்டாகாது. இயற்கையான பளபளப்பு வரும்!

  spmeyyammaisp06 likes this.

 5. #25
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair

  எலிவால் கூந்தலுக்கு எளிய சிகிச்சை

  ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்

  கூந்தல் உதிர்வு என்பது ஒருவருக்கு எத்தனை கவலைக்குரிய விஷயமோ, அதைவிட அதிக கவலை தரக்கூடியது கூந்தல் மெலிவு. அடர்த்தியான கூந்தல்தான் அழகு. எலிவால் போன்ற மெலிந்த கூந்தல் ஒருவரது தோற்ற அழகையே பாதிக்கக்கூடியது.

  கூந்தல் என்பது பல்வேறு சத்துகளால் ஆனது. இந்தச் சத்துகள் புதுப்பிக்கப்பட்டால்தான் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக மாறும்.

  ஒரு மாதத்தில் அரை இஞ்ச் அளவுக்குக் கூந்தல் வளர்வது இயல்பான கூந்தல் வளர்ச்சி சுழற்சி. வயதாக ஆக இது குறையும். கூந்தலுக்கு வயதாக ஆக, ஒரு கட்டத்தில் அது ஓய்வெடுக்கிற நிலைக்கு வந்து விடும். ரெஸ்ட்டிங் ஸ்டேஜ் எனப்படுகிற இதில், கூந்தலானது வளராமல் அப்படியே இருக்கும். இதன் விளைவாக கூந்தல் சீக்கிரமே உதிரும். மறுபடி வளராது. கூந்தல் மெலிவின் தீவிரத்தைப் பொறுத்தே கூந்தல் உதிர்வின் தன்மையைக் கணிக்க முடியும்.

  வயதாகிற காரணத்தால் மட்டுமின்றி, கர்ப்ப காலம், ஊட்டமில்லாத உணவு, மண்டைப் பகுதியில் ஏற்படுகிற தொற்று, மருத்துவக் காரணங்கள், மன அழுத்தம், ஹார்மோன் மாறுதல்கள், பரம்பரைத் தன்மை மற்றும் சில வகை மருந்துகள் போன்றவற்றாலும் முடி உதிர்வும் மெலிவும் ஏற்படலாம்.ஃபீமேல் பேட்டர்ன் ஹேர் லாஸ் (Female pattern hair loss) Di hydro testosterone (DHT) என்கிற ஹார்மோன் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்னை பாரம்பரியமாகத் தொடரக்கூடியது.

  ஃபாலிக்கிள் என சொல்லப்படுகிற கூந்தலின் நுண்ணறைப் பகுதி வரை ஊடுருவி, கூந்தலை மெலியச் செய்து, புதிதாக வளர்வதையும் தடுக்கக்கூடியது. சில பெண்களுக்கு இது மிக மிக மெதுவாக நடைபெறும். வேறு சிலரோ மிக வேகமாக மாற்றத்தை உணர்வார்கள். 35 வயதுக்கு மேலான 40 சதவிகிதப் பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது.

  கூந்தல் மெலிவுக்கான வேறு சில காரணங்கள்..Telogen Effluvium... மன அழுத்தம், மருத்துவ சிகிச்சை, பூப்படைதல் அல்லது கர்ப்பம் போன்ற நிகழ்வுகளால் உண்டாகிற ஹார்மோன் மாற்றம் என எல்லாம் இதில் அடக்கம்.Diffuse Hair loss... இரும்புச்சத்துக் குறைபாடு, ரத்தம் தொடர்பான பிரச்னைகள், ஹார்மோன் கோளாறுகள், மன அழுத்தம் போன்றவற்றால் ஏற்படுவது.

  டெலோஜன் எஃப்லுவியம் (Telogen Effluvium) என்பது பெண்களின் முடி உதிர்வுப் பிரச்னைக்கான மிகப் பரவலான காரணம். இதில் மண்டைப் பகுதியில் பரவலாக முடி உதிர்வு தென்படும். தீவிர மன அழுத்தம் அல்லது ஹார்மோன் மாறுதல்கள் மற்றும் உட்கொள்ளும் மருந்துகளின் விளைவு பலருக்கும் இந்த அறிகுறியைக் காட்டும்.

  எந்த வயதிலும் ஏற்படலாம். திடீரென ஆரம்பிக்கிற இந்தப் பிரச்னை சிலருக்கு ஆறு மாதங்களில் தானாகச் சரியாகலாம் அல்லது சிலருக்கு மிக மோசமான நிலைக்கும் மாறலாம். பெரும்பாலும் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுவோருக்கு சொட்டை, வழுக்கை போன்ற அறிகுறிகள் ஏற்படுவதற்கு பதில் கூந்தல் மெலிவே அதிகமாக இருக்கும். இந்தப் பிரச்னை உள்ள பெண்கள் அதிக மனப்பதற்றம் கொண்டவர்களாகவோ, நரம்புக் கோளாறுகள் உள்ளவர்களாகவோ இருப்பதைக் கண்டுபிடிக்கலாம்.

  டெலோஜன் எஃப்லுவியம் பிரச்னைக்கும் கூந்தல் வளர்ச்சி சுழற்சி நிலைகளுக்கும் தொடர்புண்டு. கூந்தலின் வளர்ச்சி நிலையை ‘அனாஜன்’ என்கிறோம். இது 3 வருடங்களுக்கு நீடிக்கும். கூந்தல் வளராமல் அப்படியே இருக்கும் நிலையை ‘டெலோஜன்’ என்கிறோம். இது 3 மாதங்களுக்கு நீடிக்கும். இந்த டெலோஜன் ஸ்டேஜில் கூந்தலானது அதன் ஃபாலிக்கிளில் அப்படியே ஒட்டிக் கொண்டிருக்கும். புதிதாக அந்த இடத்தில் இன்னொரு கூந்தல் முளைத்து, பழைய கூந்தலை வெளியே தள்ளினால்தான் உதிரும்.

  நம் ஒவ்வொருவருக்கும் எப்போதும் 15 சதவிகித முடியானது டெலோஜன் ஸ்டேஜில் இருக்கும். அளவுக்கதிகமான மன அழுத்தமானது, இந்த 15 சதவிகிதத்துக்கும் அதிகமான முடியை டெலோஜன் ஸ்டேஜுக்கு வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வந்து விடும். மூன்றே மாதங்களில் இப்படி டெலோஜன் நிலைக்கு வந்த அத்தனை முடியும் கொட்டிப் போகும். புதிய முடி வளரத் தொடங்கினால் மெலிந்த கூந்தலானது மறுபடி அடர்த்தியாக மாறும். மன அழுத்தம் மற்றும் உடல்நலமின்மை காரணமாக பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்க்கையில் டெலோஜன் எஃப்லுவியம் பிரச்னையை நிச்சயம் எப்போதாவது கடந்திருப்பார்கள்.

  ஆண்ட்ரோஜெனிடிக் அலோபேசியா (Androgenetic alopecia) என்பது 40 வயதுக்கு மேலான 50 சதவிகிதப் பெண்களை பாதிக்கக் கூடியது. மெனோபாஸ் காலத்துக்கு முன்பு 13 சதவிகிதப் பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரச்னைக்குக் காரணம் Di Hydro Testosterone (DHT) எனப்படுகிற ஒருவித ரசாயனம். இது ஆண் ஹார்மோனான ஆன்ட்ரோஜனில் இருந்து தயாராவது. 5 ஆல்ஃபா ரெடக்டேஸ் எனப்படுகிற ஒருவித என்சைமின் செயல்பாட்டினால் ஆண்கள், பெண்கள் என எல்லோருக்குமே இது உற்பத்தியாகும். இந்த என்சைம் அதிகமுள்ளவர்களுக்கு ஞிபிஜி ரசாயனமும் அதிகம் உருவாகும்.

  இது அதிகமானால் கூந்தல் மெலிவுக்கு வழிவகுக்கும்.பெண்களுக்கு ஏற்படுகிற கூந்தல் உதிர்வானது, ஆண்களுக்கு ஏற்படுவதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஒரு நபர் ஒரு நாளைக்கு 100 முடிகள் வரை இழக்கலாம். கூந்தல் என்பது பல்வேறு சத்துகளால் ஆனது. இந்தச் சத்துகள் புதுப்பிக்கப்பட்டால்தான் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக மாறும். கூந்தலில் புரதம், கொழுப்பு, நீர் மற்றும் கார்போஹைட்ரேட் எல்லாம் உண்டு. ஓட்ஸ், வெல்லம், ஈரல் மற்றும் முழு தானியங்கள் போன்றவை கூந்தல் உதிர்வைத் தடுக்கும் உணவுகள்.

  வயதின் காரணமாக கூந்தல் உதிர்வும், மெலிவும் சகஜம் என்றாலும், சரியான ஊட்டம் நிறைந்த உணவுகள் கூந்தல் உதிர்வு மெலிவு மற்றும் வழுக்கைப் பிரச்னைகளைத் தவிர்க்கும்.
  காரணமே தெரியாமல் முடி உதிர்வு அல்லது முடி மெலிவு பிரச்னைகளை உணர்பவர்கள் உடனடியாக ஒரு ட்ரைகாலஜிஸ்டை அணுகிக் காரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். மினாக்சிடில் என்கிற ஒரு தயாரிப்பின் மூலம் மிகப் பாதுகாப்பான முறையில் பெண்களின் முடி உதிர்வுப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது.

  2. கூந்தல் மெலிவுக்கான வீட்டு சிகிச்சை

  அழகுக்கலை நிபுணர் உஷா

  தேங்காய்ப்பால் மண்டைப் பகுதிக்கு ஊட்டம் அளித்து, வேர்க்கால்களைப் பலப்படுத்தி, முடி வளர்ச்சியைத் தூண்டும்

  நெல்லிக்காய் சிகிச்சை
  2 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியை 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் குழைத்து, முடி உதிர்வு அதிகமுள்ள இடங்களில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து அலசவும். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி சத்தானது கூந்தல் உதிர்வைக் கட்டுப்படுத்துவதுடன், இளநரை வராமலும் காக்கும்.

  தேங்காய்ப்பால் சிகிச்சை
  வெறும் தேங்காய்ப்பாலில், கற்றாழையைக் கலந்து கொள்ளவும். முடியை பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும், இந்தக் கலவையைத் தடவி, வட்டமாக மசாஜ் செய்யவும். தேங்காய்ப்பால் மண்டைப் பகுதிக்கு ஊட்டம் அளித்து, வேர்க்கால்களைப் பலப்படுத்தி, முடி வளர்ச்சியைத் தூண்டும்.
  முக்கலப்பு எண்ணெய் சிகிச்சைதேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்து லேசாக சூடாக்கவும். கறிவேப்பிலைப் பொடி, நெல்லிக்காய்பொடி, ஹென்னா மூன்றையும் தலா 1 டீஸ்பூன் எடுத்து, சூடான எண்ணெயில் போட்டு, அடுப்பை அணைத்து விடவும். இந்த எண்ணெயை தலையில் தடவி, விரல் நுனிகளால் மசாஜ் செய்யவும். பிறகு வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் தலையைச் சுற்றிக் கட்டவும். நான்கைந்து முறைகள் இப்படிச் செய்த பிறகு, சாதம் வடித்த
  கஞ்சியில், சீயக்காயைக் குழைத்து, தலையை அலசவும்.

  தயிர் சிகிச்சை
  தயிர் - 1 கப், ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்
  ஸ்பூன், கறிவேப்பிலை பொடி - 2 டீஸ்பூன்.
  - இந்த மூன்றையும் கலந்து, முடியை சிறிய பாகங்களாகப் பிரித்து, இந்த கலவையைத் தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். முடியின் வேர்களைத் தவிர்த்து, முடியின் கீழ் பாகங்களில் மட்டும் பூசவும். பிறகு சீயக்காய் உபயோகித்து, கூந்தலை அலசவும்.

  மூலிகை சிகிச்சை

  பூந்திக்காய், வெந்தயம், வேப்பிலை, ரோஜா இதழ், ஆரஞ்சுப் பழத்தோல், மல்லிகைப் பூ, வெட்டிவேர், செண்பக மொட்டு, நெல்லிக்காய் எல்லாம் சேர்த்து - 100 கிராம்.
  எல்லாப் பொருட்களையும் காய வைத்து, அரைக்கவும். 50 கிராம் பொடியை 100 மி.லி. தயிரில் கலந்து தலையில் தடவி, 45 நிமிடங்கள் ஊற வைத்து, பிறகு அலசவும்.
  முதலில் தலையில் சிறிது நல்லெண்ணெய் தடவவும். பிறகு இந்த ஹேர் பேக்கை தடவி, 45 நிமிடங்கள் ஊற வைத்து அலசவும். வாரம் ஒரு முறை இந்த சிகிச்சையைத் தொடர்ந்து வந்தால், கூந்தல் உதிர்வும் மெலிவும் கட்டுப்பட்டு, அடர்த்தியாக வளரும்.

  Last edited by chan; 7th Apr 2015 at 01:36 PM.
  spmeyyammaisp06 likes this.

 6. #26
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair

  கலர் ஹேர்... ப்ளீஸ் கேர்!

  சோபியா, அழகுக்கலை நிபுணர்


  கறுப்பான முடி இப்போது ஓல்டு ஃபேஷனாகிவிட்டது. பச்சை, மஞ்சள், ஆரஞ்சு என வாரத்துக்கு ஒரு கலரில் முடியை மாற்றுவது தான் இப்போதைய ஃபேஷன். இயற்கைக்கு மாறாக, தலைமுடியை செயற்கையான நிறத்துக்கு மாற்றுவது சரிதானா?

  அழகுக்கலை நிபுணர் சோபியா என்ன சொல்கிறார்?

  ''பொதுவாக, ஹேர் கலரிங் என்பதே ஆபத்தானதுதான். பல்வேறு விதமான பக்க விளைவுகள் வர வாய்ப்பு உண்டு. முன்பெல்லாம், தலைமுடியில் நரை விழுந்தவர்கள் மட்டும்தான் ஹேர் கலரிங் செய்துகொள்வார்கள். ஆனால், இன்று டீன் ஏஜிலேயே கலரிங் செய்துகொள்கிறார்கள்.

  சிலர் கொஞ்ச நேரத்துக்கு மட்டும் முடியின் நிறத்தை மாற்றிக் கேட்பார்கள். ஒருநாள், ஒரு வாரம், ஒரு மாதம் செய்துகொள்ளும் தற்காலிக ஹேர் கலரிங் முதல் நிரந்தர ஹேர் கலரிங் வரை, பல வகைகளில் இது செய்யப்படுகிறது. எத்தனை முறை சாயம் ஏற்றுகிறோம் என்பதைப் பொறுத்தே ஹேர் கலரிங்கின் கால அளவு அமைகிறது. எவ்வளவு கால அளவுக்கு ஹேர் கலரிங் செய்கிறோம் என்பதைப் பொறுத்து, அதற்காக சேர்க்கப்படும் க்ரீம்கள் மாறுபடும்.

  ஹேர் கலரிங் எப்படிச் செய்கிறார்கள்?


  முதலில் தலைமுடியை நன்றாக அலசி, தலைமுடியில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் நீக்கி டிரையர் மூலம் காயவைக்கிறோம். பிறகு அவர்கள் விரும்பும் வண்ணத்தில், விரும்பும் கால அளவுக்கு ஏற்ப, அதற்குரிய சாயம் முடியில் அடிக்கப்படும்.

  இந்த முறையில் தலைமுடியை நான்கு பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவாக தலையில் இருந்து 2 செ.மீ அளவுக்கு முடியை விட்டுவிட்டு, அதற்கு மேல் பகுதியில்தான் சாயம் ஏற்றப்படுகிறது. தலைமுடி முழுவதும் நரைத்திருந்தால் மட்டும், தலைமுடியின் அடிப்பாகத்தில் இருந்து முழுவதுமாக சாயம் ஏற்றப்படும். தற்காலிகமாக ஹேர் கலரிங் செய்துகொள்பவர்கள் என்றால், எத்தனை நாட்களுக்கு கலரிங் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அத்தனை நாட்களுக்கு தலைக்குக் குளிக்கக் கூடாது.

  நிரந்தரமாக ஹேர் கலரிங் செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு, ஹேர் கலரிங் செய்தவுடன் 40 நிமிடங்கள் முடியை நன்றாகக் காயவைத்து, பின்னர் ஷாம்பூ, கண்டிஷனர், முடிக்கான மாஸ்க் (Hair Mask) ஆகியவை கலந்த 'ஹேர் ஸ்பா’ செய்யப்படுகிறது. இதுதான் ஹேர் கலரிங் செய்யப்படும் முறை.


  டை அடிப்பதும் ஹேர் கலரிங் செய்வதும் ஒன்று தான். தலைமுடி முழுவதும் நரைத்தவர்கள் வீட்டில் டை அடித்துக்கொள்ளலாம். ஆனால் சில முடிகள் மட்டும் நரைத்திருந்தால், தாங்களாகவே டை அடித்துக்கொள்வது தவறு. தலை வழுக்கையான பகுதியில் டை பட்டுவிட்டால், பல்வேறு தோல் அலர்ஜி பிரச்னைகள் வரலாம். மேலும், நிரந்தரமாக முடி நரைத்துவிடும். எனவே தரமான பொருட்களைப் பயன்படுத்தும் அனுபவமிக்க பார்லர்களில் மட்டும் ஹேர் கலரிங் செய்து கொள்வது நல்லது.  ஹேர் கலரிங் செய்தவர்கள் அதன் பிறகு, கண்டிஷனர் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். மாதம் ஒருமுறையேனும் ஹேர் ஸ்பா செய்துகொள்ள வேண்டும். இவையெல்லாம் கலரிங் செய்துகொண்டவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள். அதிக ரசாயனம் சேர்த்த தரமற்ற ஷாம்பூ, கிரீம்களைப் பயன்படுத்தினால், முடி சீக்கிரம் வலுவிழந்து கொட்ட ஆரம்பித்துவிடும். எனவே, கவனம் தேவை!

  ஹேர் கலரிங் செய்து கொள்வதால்வேறு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா?

  மாயா வேதமூர்த்தி, தோல் மருத்துவர்

  பொதுவாக நமது முடி என்ன நிறத்தில் இருக்கிறதோ, அதில் இருந்து மிகச்சிறிதளவு வேறுபடும் கலரில் மட்டுமே கலரிங் செய்துகொள்ளலாம். உதாரணத்துக்கு, கருமை நிறத்தில் முடி இருப்பவர்கள் மெல்லிய பிரவுன் நிறத்தில் கலரிங் செய்துகொள்ளலாம். அதை விடுத்து கிரே, ஆரஞ்சு என வித்தியாசமான கலரில், கலரிங் செய்துகொள்வது தலைமுடிக்கு ஆபத்து.

  ஹேர் கலரிங் செய்வதால் அலர்ஜி, முடி உதிர்தல், உடைதல் போன்ற பிரச்னைகள் வரலாம். ஹேர் கலரிங் செய்துகொள்வதால் முடிக்கு மட்டுமின்றி சில சமயங்களில் கண்களும் பாதிக்கப்படும். களையான முகமும் கறுத்துப்போகும். கண்களைப் பாதிக்கும் கிளக்கோமா மற்றும் வெண்புள்ளிகள் போன்ற தோல் பிரச்னைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இதுவே, மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தி, நிம்மதியைக் குலைத்துவிடும்.  ஃபேஷனுக்காகச் செய்யும் இந்த கலரிங் முறை, உடலுக்கு உகந்தது அல்ல. மேலும் நிரந்தரமாக ஹேர் கலரிங் செய்துகொண்டவர்கள், மீண்டும் விரும்பினாலும், பழைய கருமை நிற முடியைப் பெற இயலாது. முடி முழுவதையும் எடுத்துவிட்டு, பிறகு மீண்டும் இயற்கையாக முடி முளைத்தால் மட்டுமே பழைய நிறம் சாத்தியம்.

  இல்லையெனில், ஏற்கனவே கலரிங் செய்யப்பட்ட முடியை மீண்டும் இயற்கையான முடியின் நிறத்துக்கு கலரிங் செய்துகொள்ளவேண்டும். பார்லர்களில் பயன்படுத்தும் க்ரீம்களில் 'லெட் அசிட்டேட்’ கலந்திருக்கலாம். அவ்வாறு 'லெட் அசிட்டேட்’ கலக்கப்பட்ட க்ரீம்களை தலைமுடியில் பூசினால், அது தோல் புற்றுநோயை வரவழைக்கக் கூடும். எனவே, தரமான க்ரீம்களைப் பயன்படுத்தும் பார்லர்களில் மட்டும் ஹேர் கலரிங் செய்துகொள்ளவும்'.
  Last edited by chan; 7th Apr 2015 at 04:02 PM.
  spmeyyammaisp06 likes this.

 7. #27
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair

  அழகு+ஆபத்து = ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்

  ராதா, ஹேர் டிரஸ்ஸிங் நிபுணர்

  ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வது, 19 ஆம் நூற்றாண்டிலிருந்தே நடைமுறையில் இருந்து வரும் வழக்கம். மேலை நாடுகளில் பெரும்பாலான பெண்களுக்கு சுருள் முடி இருந்தது. சுருள் முடியை ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வதன் மூலம் கூந்தல் நீளம் அதிகரித்து, தோற்றத்தையும் அழகாகக் காட்டும் என்பதால் அவர்கள் இதை விரும்புகின்றனர்். தலை முடியை, ஏற்கனவே கலரிங் அல்லது ஸ்ட்ரெய்ட்டனிங் செய்யப்பட்ட தலைமுடி (sensidised hair) (இதை உணர்வுத் திறன் அதிகம் உள்ள முடி என்றும் சொல்லலாம்), இயற்கையான தலைமுடி (Natural hair), சுருள் முடி (curl hair) என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

  இந்த மூன்று வகை தலைமுடிகளுக்கும் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்துகொள்வதற்கு வெவ்வேறு கிரீம்கள் இருக்கின்றன. அவற்றைத்தான் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

  ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் எடுத்துக்கொள்வதற்கான தேவை இருக்கிறதா, இதன் பின்விளைவுகளை முடி தாங்குமா, இந்த சிகிச்சைக்கென உள்ள கிரீம்கள் நம் தலைமுடிக்கு ஒத்துவருமா, என்பவற்றை முதலில் யோசித்து, சோதனை செய்த பிறகு தலையைக் கொடுப்பது நல்லது. ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்யப்படும் முறை: முதலில் தலைமுடியை நன்றாகத் தண்ணீரில் அலசிக் காயவைத்து, பிரத்யேகமான கிரீம்களைத் தடவ வேண்டும்.

  அதன் பிறகு, தலையில் இருக்கும் முடிகளைப் பகுதி பகுதியாகப் பிரித்து அயன் செய்யப்படும். சுருள் முடி இருப்பவர்களுக்கு அயனிங் செய்யும்போது இன்ச் பை இன்ச் கவனித்து செய்ய வேண்டும். பிறகு, 40 நிமிடங்கள் கழித்து மாய்ஸ்ச்சரைஸர் தடவப்படும். இதே செய்முறையைத் தொடர்ந்து மேலும் இரண்டுமுறை செய்ய வேண்டும். ஒரு முறை ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்துகொள்ளக் குறைந்தது நான்கு மணி நேரம் ஆகும். ஆறு செ.மீக்கு மேலே முடி வளர்ந்தவர்களுக்கு மட்டுமே இது
  மேற்கொள்ளப்படுகிறது.கவனிக்கவேண்டியவை:


  ஒரு முறை ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்துகொண்டவர்கள், 8 மாதம் முதல் ஒரு வருடத்துக்குப் பிறகுதான் மீண்டும் செய்துகொள்ள வேண்டும். தலையின் அடிப்பகுதியில் இருந்து 2 செ.மீ நீளம் வரை கிரீம்களைத் தடவக் கூடாது. குறிப்பாக தலையின் மேற்புறம் கிரீம் படவே கூடாது. தகுதியான பிராண்டட் பொருட்களைப் பயன்படுத்தும் அனுபவமிக்க பார்லர்களில் மட்டுமே ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்துகொள்ள வேண்டும். விலை குறைவு என்பதற்காக, தரமற்ற பொருட்களை உபயோகப்படுத்தும் அழகு நிலையங்களில் செய்துகொண்டால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.

  தோலில் அலர்ஜியும் ஏற்படலாம். பியூட்டீஷியன்கள், தகுதிவாய்ந்த ஹேர் டிரஸ்ஸர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் எங்கு செய்துகொள்கிறீர்களோ தொடர்ந்து அந்த ஸ்பாவுக்கு சென்று, ஆலோசனை பெறவேண்டும். அவர்கள் பரிந்துரைக்கும் கிரீம்
  களை மட்டும் தடவி பராமரிப்பதன் மூலம் முடி நிலைத்தன்மையுடன் அதிக நாட்களுக்கு நீடிக்கும்.


  முடி உடைந்து வலுவிழக்கலாம்
  மாயா வேதமூர்த்தி, தோல் மருத்துவர்: பொதுவாக நமது உடலில் முளைக்கும் முடிகள் வளைந்துதான் இருக்கும். முடியை நேராக நிமிர்த்துவதற்கு முடியில் இருக்கும் ஹைட்ரஜன் பாண்ட்களை உடைத்தால்தான் சுருள் முடியை நேராக்க முடியும். இந்த முறைகளில் பயன்படுத்தப்படும் கிரீம்களில் தயோகிளைக்கோலைட் இருக்கிறது. இதுவே, முடியில் இருக்கும் ஹைட்ரஜன் பாண்ட்களை உடைத்து முடியை நேராக்க உதவுகிறது. இவ்வாறு ஹைட்ரஜன் இணைப்புகளை செயற்கையான கிரீம்களைக் கொண்டு உடைக்கும்போது வலுவான முடி இலகுவாக மாறிவிடுகிறது.

  ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்துகொண்ட பலருக்கும் சில நாட்களிலேயே முடி உடைந்து கீழே விழுவதைக் காணலாம். ஏனெனில் இவர்களின் தலைமுடியில் இருக்கும் உறுதித்தன்மை நீங்கிவிடுகிறது எனவே வெயில் நேரங்களில் வெளியே சென்றாலோ, வெந்நீரில் குளித்தாலோகூட முடி உடைய ஆரம்பித்துவிடும். எனவே அழகுக்காக ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் தேவைதானா என்பதை மீண்டும் மீண்டும் யோசித்த பிறகே முடிவெடுங்கள்.

  ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்துகொள்பவர்களின் கவனத்துக்கு:

  1. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்தச் சிகிச்சையை எடுத்துக் கொள்ளவேண்டும்.

  2. இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்பவர்கள் மென்மையான ஷாம்பூக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கட்டாயம் கண்டிஷனர் போட வேண்டும்.

  3. ஒரு முறை ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்துகொண்ட பிறகு, முடி மிக மென்மையாக மாறிவிடும். எனவே, வெளியே செல்லும்போது சூரிய ஒளி படாதவாறு கேப் அணிந்து செல்ல வேண்டும். தலை குளிக்க, வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தக் கூடாது.  Last edited by chan; 9th Apr 2015 at 02:39 PM.
  spmeyyammaisp06 likes this.

 8. #28
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair

  இயற்கை முறையில் நரையை மறைக்கலாம்!
  ஹேர் கலரிங் சீக்ரெட்ஸ்


  நரைத்த கூந்தலுக்கு சாயம் பூசிய காலம் மாறி, இன்று கருத்த கூந்தலைக் கூட கலர் கலராக மாற்றிக் கொள்வதே ஃபேஷன் என்றாகிவிட்டது. இது ஒரு பக்கமிருக்க, 10 வயதுப் பிள்ளைகளுக்குக் கூட அங்கொன்றும், இங்கொன்றுமாக நரை எட்டிப் பார்ப்பதும் சகஜமாகி விட்டது. நரையை எப்படித் தவிர்ப்பது என்பதைவிட, அதை எப்படி மறைப்பது என்பதுதான் எல்லோரின் கவலையும்.  எட்டிப் பார்க்கிற ஒன்றிரண்டு வெள்ளை முடிகளை மறைக்க டை அடிக்க ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் டை அடிக்காமல் வெளியே தலையே காட்ட முடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள். கூந்தலைக் கருப்பாக்குகிற வேலையுடன் சேர்த்து, கூடுதலாக அலர்ஜி முதல் புற்றுநோய் வரை பல பயங்கரங்களையும் போனஸாக கொடுக்கத் தவறுவதில்லை இந்தச் சாயங்கள். எந்த ஹேர் கலர் நல்லது? ஆபத்தில்லாதது? இயற்கையான முறையில் நரையை மறைக்க என்ன செய்யலாம்? எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி.

  ‘‘அரைகுறை விழிப்புணர் வின் காரணமாக, சமீப காலமாக அமோனியா ஃப்ரீ எனக் குறிப்பிடப்பட்ட ஹேர் டைதான் சிறந்தது என நினைத்து அதைத் தேடி வாங்கி உபயோகிக்கிறார்கள் மக்கள். ஹேர் கலர்களில் உள்ள அமோனியா மட்டும் ஆபத்தானதல்ல.. அதைவிட பயங்கரமான சோடியம் கார்பனேட் ஹைட்ர ஜன் பெராக்சைடு, பெட்ரோலியம் ஜெல்லி, மெதைல் பினால், நெஃப்தால் போன்ற ரசாயனங்களும் அவற்றில் உள்ளன. இவற்றை உபயோகிப்பதால் ரத்த புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்று நோய், தோல் எரிச்சல், ஒவ்வாமை, முடி உடைதல், சரும நிறமாற்றம், ஆஸ்துமா, நுரையீரல் வீக்கம் போன்ற பிரச்னைகள் வரலாம்!

  எப்படித் தேர்ந்தெடுப்பது?

  மருத்துவர் அல்லது அழகுக்கலை நிபுணரிடம் உங்கள் கூந்தல் மற்றும் மண்டைப் பகுதி யின் தன்மைக்கேற்ற சரியான ஹேர் கலரிங்கை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஹெர்பல் டை அல்லது ஹேர் கலர் என்கிற விளம்பரத்துடன் விற்பனையாகிற அனைத்தும் முழுக்க முழுக்க மூலிகைகள் கலப்பால் தயாரிக்கப்பட்டவை அல்ல, அவற்றிலும் ஆபத்தான கெமிக்கல்களின் கலப்பு உண்டு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

  தற்காலிக ஹேர் கலர், நிரந்தர ஹேர் கலர், அரை நிரந்தர ஹேர் கலர் என கலரிங்கில் பல வகை உண்டு. தற்காலிக ஹேர் கலர் என்பது 15 முதல் 20 நாட்கள் வரை இருக்கும். செமி பர்மனென்ட் எனப்படுகிற அரை நிரந்தர கலர்கள் அதைவிட இன்னும் சில வாரங்கள் கூடுதலாக இருக்கும். நிரந்தர ஹேர் கலர் என்பதால் அதை ஒரு முறை போட்டுக் கொண்டால் பிறகு காலத்துக்கும் அப்படியே இருக்கும் என நினைக்க வேண்டாம். இது வேர்க்கால்கள் வரை சென்றா லும் 20-28 ஷாம்பு வாஷ் கொடுத்ததும் போய்விடும்.

  ஹேர் கலரிங் செய்வதற்கு முன்... அலர்ஜி வருமா? இல்லையா என்பதை முதலில் பரிசோதனை செய்ய வேண்டும். ஹேர் கலர் கொஞ்சம் எடுத்து டெவலப்பருடன் சேர்த்துக் கலக்குங்கள். காது ஓரத்தில் கொஞ்சம் முடிக்கு மட்டும் அப்ளை செய்து வாஷ் பண்ணுங்கள். 48 மணி நேரத்துக்குப் பிறகு அந்த இடத்தில் எரிச்சல், தடிப்பு, அலர்ஜி எதுவும் இல்லை என்றால் உபயோகிக்கலாம்.

  ஹேர் கலர் உபயோகிப்பதற்கு முன்பு ஹேர் வாஷ் அவசியம். நீண்ட நேரம் ஹேர் கலரை தலையில் வைக்கக் கூடாது. ரசாயனப் பொருட்கள் உடலினுள் இறங்கும் என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் கூந்தலை அலசி விட வேண்டும்.

  ஹேர் கலரிங் செய்து 3 நாட்கள் ஆன பிறகு எண்ணெய் உபயோகிக்கலாம். கண் புருவத்தின் மேல் கலரிங்கை உபயோகிக்கக் கூடாது.

  ஹென்னா உபயோகிக்கலாமா?

  பச்சை மருதாணியை அரைத்து அப்படியே தலையில் பூசுவது, கருப்பு ஹென்னா என்கிற பெயரில் வருகிற கலர்களை உபயோகிப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். தரமான மருதாணிப் பொடியுடன், கூந்தலை வறண்டு போகாமல் காக்கும் கண்டிஷனர்களும் சேர்த்துக் கலந்தே உபயோகிக்க வேண்டும். மருதாணிப் பொடி ஒரு கப், தேயிலை நீர், எலுமிச்சைச் சாறு இவற்றை முதல் நாளே கலந்து வைத்து 1 மணி நேரம் தலையில் ஊறவைத்து குளிக்க வேண்டும்.

  வேறு என்ன செய்யலாம்?

  * வெந்தயம், வால்மிளகு, சீரகம் மூன்றையும் சம அளவு பொடி செய்து
  தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்து வரவும்.
  * மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை இவை முன்றையும் பொடி
  செய்து எண்ணெயில் போட்டு உபயோகித்தால் நரைமுடி தடுக்கப்
  படுவதுடன் முடி நன்றாக கருப்பாக வளரும்.
  * மரிக்கொழுந்து, நில ஆவாரை இரண்டையும் அரைத்து அரைமணி
  நேரம் தலையில் ஊறவைத்து குளித்தால் செம்பட்டை மாறி முடி
  கருப்பாகும்.
  * ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம
  அளவு கலந்து தடவலாம்.
  * கறிவேப்பிலை, பீட்ரூட், பீன்ஸ், நாவல்பழம், வெல்லம், சுண்டைக்
  காய், முருங்கைக்கீரை, முட்டை, பேரீச்சம்பழம், செம்பருத்தி பூ,
  திரிபலா சூரணம் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவும்.

  ரசாயனங்கள் கலந்த ஹேர் டை உபயோகிப்பதால் ரத்த புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்று நோய், தோல் எரிச்சல்,
  ஒவ்வாமை, முடி உடைதல், சரும நிறமாற்றம், ஆஸ்துமா, நுரையீரல் வீக்கம் போன்ற பிரச்னைகள் வரலாம்!  Last edited by chan; 13th Apr 2015 at 07:21 PM.
  spmeyyammaisp06 likes this.

 9. #29
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair

  1. கோடையில் கூந்தல் பராமரிப்பு

  கூந்தல் நிபுணர் லலிதா ஃபெர்னாண்டஸ்

  ஆறடிக் கூந்தலை ஆசை ஆசையாக வளர்க்கிறவர்களுக்குக் கூட கோடை வந்துவிட்டால், ஒட்ட வெட்டி எறிந்து விடலாமா என நினைக்க வைக்கும். வெயில் என்றதுமே எல்லோரின் கவனமும் சருமம் கருத்துப் போகாமல் காப்பதில்தான் இருக்குமே தவிர, கூந்தலைப் பராமரிப்பதில் இருக்காது. ஆனால், சருமத்தைப் போலவே கூந்தலையும் பாதிக்கக்கூடியது கோடையின் கடுமை என்பது பலருக்கும் தெரிவதில்லை.

  கோடைக் காலத்தில் கூந்தலில் ஏற்படக் கூடிய பிரச்னைகள், பராமரிப்பு முறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் கூந்தல் நிபுணர் லலிதா ஃபெர்னாண்டஸ்.‘‘வெயிலில் இருந்து கிளம்புகிற சூடானது, கூந்தலுக்குப் பாதுகாப்பு அளிக்கக்கூடிய புரதச் சத்தைக் குறைத்து, கூந்தலின் நிறத்தை மாற்றி, பளபளப்பை மறையச் செய்து, கூந்தலை உடையவும் வைக்கும். தவிர சூரியனின் யுவி கதிர்களின் தாக்கமானது, ஃபாலிக்கிள் எனப்படுகிற கூந்தல் நுண்ணறைகளை பாதித்து, கூந்தலின் ஈரப்பதத்தை முற்றிலும் இழக்க வைக்கும்.

  வெயிலில் இயல்பாகவே அதிகரிக்கிற வியர்வையின் விளைவாக மண்டைப் பகுதியில் Seborrheic Dermatitis என்கிற இன்ஃபெக்ஷன் பிரச்னை ஏற்படும். வியர்வை சுரப்பியின் தூண்டலால் சீபம் என்கிற திரவச் சுரப்பும் அதிகமாகி, அதன் விளைவால் Malassezia furfur என்கிற பூஞ்சையின் வளர்ச்சியும் பெருக்கமும் தீவிரமாகி, பொடுகுத் தொல்லை உண்டாகும். இது வேறு சில தொற்றுகளுக்கும் வழிவகுக்கும்.

  எண்ணெய் பசையான சருமத்தைப் போலவே எண்ணெய் பசையான கூந்தலும் கோடையில் பிரச்னைகளை சந்திக்கும். வெயிலின் அதிகரிப்பால், எண்ணெய் சுரப்பிகள் அதிகமாகத் தூண்டப்பட்டு வியர்வை பெருகி, கூந்தலில் பிசுபிசுப்பும், அழுக்கும் சேரும்.வெயிலின் தாக்கத்திலிருந்து கூந்தலைக் காப்பாற்ற, ஒருநாள் விட்டு ஒருநாள் மைல்டான ஷாம்பு உபயோகித்து அலச வேண்டியது அடிப்படையான சிகிச்சை. கூந்தலை பலப்படுத்தும் மைல்டான பாதுகாப்பு சீரம் உபயோகிக்கலாம்.

  நீச்சல் பழக்கமுள்ளவர்கள் கோடையில் கூந்தல் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். நீச்சல் குளத் தண்ணீரில் கலந்துள்ள குளோரின் கூந்தலை வெகுவாகப் பாதிக்கும். எனவே நீச்சலுக்குத் தயாராவதற்கு முன்பாக கூந்தலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வறண்டு போன ஸ்பாஞ்சானது தண்ணீர் பட்டதும் மொத்த தண்ணீரையும் இழுத்துக் கொள்வது போலத்தான் கூந்தலும். நீச்சல் குளத்தில் இறங்கியதும், முதலில் கூந்தலில் படும் தண்ணீரை கிரகித்துக் கொள்ளும்.

  அந்தத் தண்ணீரில் உள்ள குளோரின் கூந்தலில் படிந்து அதை வறளச் செய்வது, நிறம் மாற்றுவது என எல்லா பாதிப்புகளுக்கும் காரணமாகும். எனவே நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு முன்பாக நல்ல தண்ணீரில் தலையை நனைத்துக் கொள்வதன் மூலம், நீச்சல் குளத்துத் தண்ணீர் கிரகிக்கப்படுவதைத் தவிர்க்கலாம். கூந்தலில் லீவ் ஆன் ( Leave on ) கண்டிஷனர் தடவிக் கொண்டும் நீச்சலடிக்கலாம். நீச்சலுக்கு முன்பாக கூந்தலை குதிரைவாலாகக் கட்டிக் கொள்ளலாம்.

  வெளியில் தொங்கக் கூடிய பகுதி மட்டுமே தண்ணீரில் படும் என்பதால் பாதிப்பு குறைவாக இருக்கும்.கடைகளில் க்ளாரிஃபையிங் ஷாம்பு எனக் கிடைக்கும். இது கூந்தலில் படிந்துள்ள தேவையற்ற படிவுகளை அகற்றி சுத்தப்படுத்தக்கூடியது. கால் கப் சிடார் வினிகரில் சிறிது தண்ணீர் கலந்து கூந்தலை அலசினாலும் கூந்தல் நிறம் மாறுவதும், பொலிவிழப்பதும் தவிர்க்கப்படும்.

  வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க கூந்தலை இறுக்கக் கட்டிக் கொள்வது பலரது வழக்கம். ஆனால், ஹேர் பேண்ட் அல்லது மெட்டல் கிளிப் போட்டு கூந்தலை இறுக்கமாகக் கட்டாமல், சற்றே தளர்வாக விடுவதுதான் சிறந்தது.குளோரின் கலந்த தண்ணீரில்தான் தலைக்குக் குளிக்க வேண்டும் என்கிற கட்டாயம் சிலருக்கு இருக்கும். கூடியவரையில் அதைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. கூந்தலை அலச மட்டுமாவது நல்ல தண்ணீர் பயன்படுத்துவதே சிறந்தது.

  கோடையில் கூந்தல் ஆரோக்கியம் காப்பதில் உட்கொள்கிற உணவுகளுக்கும் பங்குண்டு. தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது, ஒருநாள் விட்டு ஒருநாள் இளநீர் குடிப்பது, தினமும் 2 முதல் 3 வேளைகள் பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக் கொள்வது, பால் பொருட்களை சேர்த்துக் கொள்வது, முளைகட்டிய பயறுகள் சாப்பிடுவது போன்றவற்றின் மூலம் கூந்தல் ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.

  வறண்டு போனஸ்பாஞ்சானது தண்ணீர் பட்டதும் மொத்த தண்ணீரையும் இழுத்துக் கொள்வது போலத்தான் கூந்தலும். நீச்சல் குளத்தில் இறங்கியதும், முதலில் கூந்தலில் படும் தண்ணீரை கிரகித்துக் கொள்ளும். அந்தத் தண்ணீரில் உள்ள குளோரின் கூந்தலில் படிந்து அதை வறளச் செய்வது, நிறம் மாற்றுவது என எல்லா பாதிப்புகளுக்கும் காரணமாகும்.

  2. கோடை பாதிப்புக்கான வீட்டு சிகிச்சை

  அழகுக்கலை ஆலோசகர் ராஜம் முரளி

  செம்பருத்தி இலை 1 கைப்பிடி, வேப்பந்தளிர் 5 - இரண்டையும் அரைத்து அப்படியே தலையில் தடவி 5 நிமிடங்கள் வைத்திருந்து அலசினால், வெயிலின் பாதிப்பால் மண்டைப் பகுதியில் உண்டாகிற வியர்க்குரு, அரிப்பு போன்றவை நீங்கி, கூந்தல் சுத்தமாகும். இதையே இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாக செய்ய வேண்டும் என்பவர்கள், அரைத்த விழுதுடன் 3 டீஸ்பூன் பூந்திக்கொட்டை தூள் சேர்த்துக் கலந்து குளிக்கலாம். அது கூந்தலுக்குக் கூடுதல் பளபளப்பைத் தரும்.

  *தேங்காய்ப் பால் அரை கப், பயத்த மாவு அரை கப், வெந்தயத் தூள் 2 டீஸ்பூன் முன்றையும் கரைசலாகக் கலக்கவும். அதை அப்படியே தலைக்கு ஷாம்பு போல உபயோகித்து அலசவும். வாரம் 2 அல்லது 3 முறை இப்படிச் செய்யலாம். தலைக்கு எண்ணெய் வைப்பதை விரும்பாதவர்களுக்கு ஏற்ற சிகிச்சை இது. எண்ணெய் வைக்காமலேயே எண்ணெய் வைத்த மாதிரியான தோற்றத்தைத் தரும். அதிகப் பயணம் செய்கிறவர்களுக்கும், ஏ.சி. அறையிலேயே இருப்பவர்களுக்கும் கூந்தல் சீக்கிரமே வறண்டு போகும். எண்ணெய் வைத்தால் கூந்தலில் பிசுக்கும் வியர்வையும் சேர்ந்து கொள்ளும் என்பதால் அதைத் தவிர்க்க நினைப்பார்கள். அதையும் இந்த சிகிச்சை தவிர்க்கும்.

  *ஒரு டீஸ்பூன் வெந்தயம், 1 டீஸ்பூன் துவரம் பருப்பு, 2 புங்கங்காய் மூன்றையும் முதல் நாள் இரவே வெந்நீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலை அரைத்து பேக் மாதிரி போட்டு, 10 நிமிடங்கள் வைத்திருந்து அலசினால் கோடையின் பாதிப்புகளில் இருந்து கூந்தல் பாதுகாக்கப்படும்.எ ஒரு இளநீரின் வழுக்கையுடன் 3 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். க்ரீம் மாதிரியான இதைத் தலையில் தடவி, 10 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும்.

  * ஓமம், மிளகு, வெந்தயம் மூன்றையும்தலா 1 டீஸ்பூன் எடுத்து ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். 100 மி.லி. நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி ஆற வைத்து, வாரம் ஒரு முறை தலையில் தடவி, எண்ணெய் தேய்த்துக் குளிக்கிற மாதிரி அலசினால், உடல் சூடு தணியும். கூந்தல் பொலிவடையும்.

  அதிகப் பயணம் செய்கிறவர்களுக்கும், ஏ.சி. அறையிலேயே இருப்பவர்களுக்கும் கூந்தல் சீக்கிரமே வறண்டு போகும். எண்ணெய் வைத்தால் கூந்தலில் பிசுக்கும் வியர்வையும் சேர்ந்து கொள்ளும்.


 10. #30
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: கூந்தல்-என்சைக்ளோபீடியா - Encyclopedia of Hair

  ‘அலோபேஷியா ஆரியாட்டா’ (Alopecia Areata)


  புழுவெட்டு

  புழுவெட்டு என்கிற ‘அலோபேஷியா ஆரியாட்டா’ (Alopecia Areata) தலையில் ஆங்காங்கே சொட்டை மாதிரி வட்டவட்டமாகத் தோன்றுகிற ஒரு பிரச்னை. முடி கொட்டுகிற பிரச்னைதான் இதுவும் என்றாலும், அலோபேஷியாஆரியாட்டா என்பது கோரமான ஒரு தோற்றத்தைக் கொடுக்கக் கூடியது. மண்டையின் பின்பக்கத்திலோ, பக்கவாட்டிலோ வந்தால் பிரச்னை இல்லை. முன்பக்கத்தில் வரும்போது சம்பந்தப்பட்டவரின் தோற்றத்தையே பாதிக்கும். அதனால் அவர்கள் யாரையும் எதிர்கொள்ளவே தர்மசங்கடப்படுவார்கள்.  இந்தப் பிரச்னை ஏற்பட முக்கியகாரணம் நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்படுகிற குறைபாடு. நம் உடலில் உற்பத்தியாகிற செல்கள், அப்படி உற்பத்தியாகிற செல்களுக்கு எதிரான ஆன்ட்டிபாடி செல்களாக மாறி வேலை செய்யும். முடி வளர்ச்சிக்கென நம் தலையில் சில செல்கள் இருக்கும். ஆன்ட்டிபாடி செல்கள், முடி வளர்ச்சிக்குக் காரணமான செல்களை பாதித்து விடும்.

  இதன் விளைவால், ‘ஹேர் ஃபாலிக்கிள்ஸ்’ எனப்படுகிற மயிர் புடைப்புப் பகுதிகள் உதிர்ந்துவிடும். தலையில் முடியானது நீடித்து நிற்காமல் உதிரும். இந்த ஆட்டோ இம்யூன் சிஸ்டமானது, முடியின் வேர்க்கால்களின் புடைப்புப் பகுதிகளை ஏன் பாதிக்கிறது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

  அலோபேஷியா ஆரியாட்டா பிரச்னையானது 20 வயதுக்குள்ளானவர்களுக்குத்தான் பொதுவாக வரும். ஆனால், அவர்களுக்குத்தான் வரும் என்றில்லாமல் எந்த வயதிலுள்ள ஆண், பெண்களுக்கும் வரலாம். இது அலோபேஷியா ஆரியாட்டா வகையைச் சேர்ந்த சொட்டைதானா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? தலையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் கொத்துக் கொத்தாக முடி கொட்டும். அந்தக் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் வட்ட வடிவத்தில் வழுக்கையாக முடியே இல்லாமல் காணப்படும். அந்த இடத்தைத் தொட்டுப் பார்த்தால் மிக மென்மையாக இருக்கும். இது அலோபேஷியா ஆரியாட்டாவின் அறிகுறிதான்.

  இதில் இன்னொரு வகையும் உண்டு. கொத்துக் கொத்தாக முடி விழுந்த இடங்களில் மென்மையாக இல்லாமல் மிக மிக மெல்லிய முடிகள் இருக்கும். அந்த இடத்தில் உள்ள முடிகளை, பக்கத்தில் உள்ள மற்ற முடிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலே வித்தியாசமாகத் தெரியும். அலோபேஷியா ஆரியாட்டா பாதித்த பகுதிகளில் மெலிதான முடிகளாக வளர்ந்து, சின்னத் துண்டுகளாக உடைந்து விழும்.

  இந்த முடிகளை Exclamation point hair என்று சொல்வார்கள். அதாவது ‘ஆச்சரியக்குறி முடி’ என்பார்கள். சின்னச் சின்ன துண்டு முடிகளை விட்டு உதிர்வதாலும், பார்ப்பதற்கு ஆச்சர்யக் குறி போலத் தோற்றமளிப்பதாலும் இப்படியொரு பெயர்.இன்னொரு வகை அலோபேஷியா ஆரியாட்டாவும் உண்டு. அதாவது தலையில் உள்ள முடிகளும் உதிரும். உடம்பில் உள்ள முடிகளும் கொட்டி விடும். இதை அலோபேஷியா டோட்டலிஸ் (Alopecia totalis) என்று சொல்கிறோம்.

  இந்தப் பிரச்னையால் தலையில் ஆங்காங்கே வட்ட வட்டமாக சொட்டை விழுந்து முடி கொட்டினாலும் அந்த இடத்தில் மறுபடி முடி வளரும். ஆனாலும், பக்கத்தில் உள்ள இடத்தில் மறுபடி சொட்டை விழும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கும் சொட்டை விழுந்த இடத்தில் முடி வளரும். ஆனால், அந்த முடிகள் வெள்ளை முடிகளாக வரும். இள வயதுக்கார்களாக இருந்தாலும் இப்படித்தான் வெள்ளை முடிகள் தோன்றும்.

  அலோபேஷியா ஆரியாட்டா பிரச்னை உள்ளவர்களில் 10 சதவிகிதம் பேர் மறுபடி இழந்த முடியைப் பெற முடியாதவர்களாக இருப்பார்கள்.

  யாருக்கெல்லாம் பாதிப்பு அதிகம்?

  * பரம்பரையாக அலோபேஷியாகுறைபாடு உள்ளவர்கள்.

  * பூப்படையும் வயதுக்கு முன்பே இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுகிற பெண்
  குழந்தைகளுக்கு மறுபடி தலையில் முடி வளரச் செய்வது சிரமம்.

  * வேறு ஏதேனும் ஆட்டோ இம்யூன் டிஸ் ஆர்டர் இருப்பவர்கள்.

  * அலர்ஜி உள்ளவர்கள்... ‘அட்டாபி’ என்கிற அலர்ஜி, அதாவது Atopic dermatitis எனச் சொல்லக் கூடிய ஒவ்வாமைப் பிரச்னை உள்ளவர்கள்.

  * கைகள் மற்றும் கால் விரல் நகங்களின் நிறம், வடிவம் வித்தியாசமாக இருப்பவர்களுக்கும் நகங்கள் வழக்கத்தைவிட மிக தடிமனாக இருப்பவர்களுக்கும் தலையில் சொட்டை விழுந்தால் திரும்ப முடி வளராது. இப்படி வித்தியாசமான அமைப்பு கொண்டவர்களுக்கு நகங்கள் குழிக்குழியாக இருக்கும். ஒரு ஊசியை வைத்துக் குத்தினது போல மேடு, பள்ளங்களுடன் இருக்கும். நகங்கள் சொத்தையானது போலக் காட்சியளிக்கும். இவர்களுக்கு அலோபேஷியா ஆரியாட்டாவினால் வருகிற பிரச்னைகளைத் தீர்ப்பது சிரமம்.

  * தலையில் நாள்பட்ட பொடுகு உள்ளவர்களுக்கும், அந்தப் பொடுகு பூஞ்சைத் தொற்றாக மாறி, அதனால் ஏற்படுகிற புழுவெட்டு, அதன் ெதாடர்ச்சியான முடி உதிர்வு போன்றவற்றை அத்தனை சுலபமாக குணப் படுத்த முடியாது. நீண்ட சிகிச்சைக்குப் பிறகே சொட்டையான இடத்தில் முடி வளரச் செய்ய முடியும்.

  எப்படிக் கண்டுபிடிப்பது?

  * தலையில் எந்த இடத்தில், எப்போதிலிருந்து முடி கொட்ட ஆரம்பித்தது, அதன் தீவிரம் எப்படி இருந்தது என நிறைய கேள்வி களைக் கேட்டுத்தான் பாதிக்கப்பட்டவருக்கு அலோபேஷியா ஆரியாட்டா இருப்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கு சரியாக சொல்லத் தெரியாத பட்சத்தில் ேஹர் அனாலிசிஸ் டெஸ்ட் மற்றும் ஸ்கேன் செய்து உறுதிப்படுத்தலாம்.

  தலையின் டெர்மிஸ் (Dermis) எனப்படுகிற இரண்டாவது அடுக்கில் என்ன பிரச்னை என்பதை முறையான ஸ்கேனிங் மூலம் தெள்ளத் தெளிவாகக் கண்டுபிடிக்கலாம். அதுவே அலோபேஷியா ஆரியாட்டா இருப்பதைக் காட்டிக் கொடுக்கும்.ஒரு ரத்தப் பரிசோதனையின் மூலம் தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். ஹைப்போ தைராய்டு அல்லது ஹைப்பர் தைராய்டு இரண்டையும் சரிபார்த்து தேவைப்பட்டால் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதும் அவசியம்.

  புழுவெட்டுக்கான வீட்டு சிகிச்சை

  *அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்கிற கடைகளில் டெர்மா ரோலர் எனக் கிடைக்கும். அதை வாங்கிக் கொள்ளவும். லேவண்டர் ஆயில், தைம் ஆயில், பே ஆயில் மூன்றிலும் தலா4 சொட்டுகள் எடுத்துக் கலந்துத் தலையில் தேய்த்து, அதன் மேல் டெர்மா ரோலரால் மென்மையாக உருட்டினால் முடி வளரும்.

  *ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம், 50 கிராம் கருப்பு மிளகு, எலுமிச்சை விதைகள் 100 மூன்றையும் கொரகொரப்பாக அரைத்து, புழுவெட்டு இருக்கும் இடத்தில் அழுத்தித் தேய்க்கவும். தினமும் தேய்த்து வந்தால் புழுவெட்டு மறையும். திரும்பவும் அந்த இடத்தில் முடி வளரும்.

  *நாட்டு மருந்துக் கடைகளில் நவச்சாரம் எனக் கிடைக்கும். அதில் சிறிது எடுத்து தேன் கலந்து புழுவெட்டு உள்ள இடத்தில் தடவி வரலாம்.

  *வெங்காயச் சாற்றில் பொட்டாசியம், ெமக்னீசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி இருக்கின்றன. எனவே வெங்காயச் சாற்றில் சிறிது தூள் உப்பும் சிட்டிகை சமையல் சோடாவும் கலந்து, பாதிப்புள்ள பகுதிகளில் தேய்க்கலாம்.

  *சோயா பீன்ஸில் கூந்தலுக்குத் தேவையான கரோட்டின் என்கிற புரதம் மிகுதியாக உள்ளது. சோயா பீன்ஸ் பொடியுடன், ஆலம் விழுதுப் பொடியும், கீழாநெல்லிப் பொடியும் சேர்த்து ஆப்பிள் செடார் வினிகர் கலந்து புழுவெட்டுள்ள பகுதிகளில் தேய்த்துக் குளிக்கலாம்.

  *கிராமங்களில் குமுட்டிக்காய் எனக் கிடைக்கும். அதைப் பறித்து வெட்டிக் காய வைத்துப் பொடிக்கவும். அத்துடன் கொடுவேலிப் பொடி கலந்து, வேப்பெண்ணெய் சேர்த்துத் தேய்ப்பதும் நிவாரணம் தரும்.

  *பரங்கிச் சக்கைப் பொடியுடன் பொடுதலைப் பொடி கலந்து, வெங்காயச் சாற்றில் 2 மணி நேரம் ஊற வைத்து, தலையில் தேய்த்தால் முடி வளரும்.

  அலோபேஷியா ஆரியாட்டா பிரச்னை உள்ளவர்களில் 10 சதவிகிதம் பேர் மறுபடி இழந்த முடியைப் பெற முடியாதவர்களாக இருப்பார்கள்.

  Last edited by chan; 1st May 2015 at 04:30 PM.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter